Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree20Likes
 • 4 Post By Divyakala
 • 4 Post By Divyakala
 • 3 Post By Divyakala
 • 1 Post By Abivenu
 • 3 Post By Divyakala
 • 1 Post By sumathisrini
 • 1 Post By jv_66
 • 1 Post By gkarti
 • 2 Post By Divyakala

Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து பா


Discussions on "Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து பா" in "Health" forum.


 1. #1
  Divyakala is offline Commander's of Penmai
  Real Name
  Divyakala
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  Chennai
  Posts
  1,071

  Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து பா

  அனைத்து போர்களுக்கும் வன்முறை என்பது கட்டாயம் கிடையாது. அதே போல் ஒவ்வொரு சண்டையிலும் இரத்தம் சிந்த வேண்டும் என்றும் அவசியமில்லை. உங்களுடைய எதிராளி புற்றுநோய் போன்ற ஒரு பிடிவாதமான நோயானால், உங்கள் படைக்கலக் கொட்டில் என்ன இருக்க வேண்டும் என்று தெரியுமா? சீரான உடல்நல சோதனை மற்றும் புற்றுநோய்க்கு எதிராக வேலை செய்யும் உணவுகளை உண்ணுவதே ஆகும். நடிகை லிசா ரேவிற்கு எலும்பு ஊனில் ஏற்படும் அறிய வகை புற்றுநோயான மல்டிபிள் மைலோமா இருப்பது கண்டறியப்பட்ட போது அவர் சொன்னதெல்லாம் "நான் புற்றுநோயை வீழ்த்துவேன்" என்பது தான். இந்த நேர்மறையான எண்ணம் இருப்பது அவசியம் தான். ஆனால் அது மட்டும் போதுமா என்ன? அதோடு சேர்த்து சில உணவு முறைகளையும் பின்பற்றினால், புற்றுநோயை எதிர்த்து போராடலாம். முக்கியமாக சில மசாலா பொருட்கள், நம் உடலில் பரவி சமாளிக்க இயலாத புற்று அணுக்களாக மாற்றுவதை தடுக்கும். உதாரணமாக, கீழே விழுந்து முட்டியில் அல்லது முழங்கையில் அடிபட்டால், அடிபட்ட இடத்தில் நொடிப் பொழுதில் தயார் செய்த குங்குமப்பூ கலந்த வெதுவெதுப்பான பாலை காயத்தின் மீது தூவுவார்கள். அதே போல் மஞ்சள் தடவினாலும் சரி, வெட்டு காயங்களும் தோல் சிராய்ப்புகளும் விரைவாக ஆறும். ஆனால் இன்று எத்தனை பேர் இதையெல்லாம் பின்பற்றுகின்றனர்? மஞ்சள் மற்றும் குங்குமப்பூ போன்ற மசாலா பொருட்களில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அவைகளை சிறு வயதிலிருந்தே உணவில் சேர்க்க ஆரம்பித்தால், உடல் திடமாக மாறி, நச்சுத்தன்மை, பாக்டீரியா மற்றும் தொற்றுகளில் இருந்து காக்கும். இப்போது கொடிய நோயான புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் சில மசாலா பொருட்களையும் மற்றும் சில உணவு முறைகளைப் பற்றியும் பார்ப்போம்.

  Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து பா-1.jpg

  மஞ்சள் புற்றுநோய் எதிர்ப்பு குணங்களை மஞ்சள் கொண்டுள்ளதால், அதனை மசாலாப் பொருட்களின் அரசனாக பார்க்கப்படுகிறது. இது போக நம் உணவிற்கு நிறத்தை சேர்க்கவும் இது பயன்படுகிறது. மஞ்சளில் சக்தி வாய்ந்த பாலிஃபீனால் குர்குமின் உள்ளது. இது முன்னிற்குஞ்சுரப்பி புற்று நோய், மெலனோமா, மார்பக புற்றுநோய், மூளை கட்டி, கணையம் புற்றுநோய், வெள்ளையணுப் புற்றுநோய் மற்றும் இதர புற்றுநோய்களை உண்டாக்கும் அணுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குர்குமின் என்னும் பொருள் அணு தற்கொலையை மேம்படுத்தும். அதனால் இது மற்ற ஆரோக்கியமான அணுக்களை எந்த விதத்திலும் பாதிக்காமல், புற்றுநோய் அணுக்கள் பரவுவதை தடுக்கும். ஆனால் பொதுவாக அளிக்கப்படும் புற்றுநோய் சிகிச்சைகளான கதிர்வீச்சு மற்றும் ஹீமோ தெரப்பியால் புற்றுநோய் அணுக்களுக்கு அருகில் இருக்கும் ஆரோக்கியமான அணுக்களும் பாதிக்கப்படும். இதன் பக்க விளைவுகள் உடனுக்குடன் தாக்கத்தை ஏற்படுத்தும்.  Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து பா-2.jpg
  பெருஞ்சீரகம்/சோம்பு பெருஞ்சீரகத்தில் பைட்டோ ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அடங்கியுள்ளது. அதனால் புற்று அணுக்கள் சரணாகதி அடைய வேண்டியதை தவிர வேறு வழியில்லை. பெருஞ்சீரகத்தில் உள்ள மூலக்கூறான 'அனித்தோல்', புற்று அணுக்களின் துளைத்தல் மற்றும் ஒட்டிக் கொள்கிற செயல்களை தடுத்து நிறுத்தும். மேலும் புற்று அணுக்கள் பெருகுவதற்கு, அதன் பின்புலத்தில் நடக்கும் செயல்களை எல்லாம் அடக்கும். பெருஞ்சீரகம் மற்றும் பூண்டு கலந்த தக்காளி சூப் அல்லது பெருஞ்சீரகம் கலந்த நற்பதமான சாலட்களை உணவு உண்ணுவதற்கு முன் எடுத்துக் கொள்ளலாம். வறுத்த பெருஞ்சீரகத்தை சீஸ் உடன் கலந்தும் உண்ணலாம்.  Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து பா-3.jpg
  குங்குமப்பூ குங்குமப்பூவில் க்ரோசெட்டின் என்ற இயற்கை கரோட்டினாய்டு டைகார்போக்ஸில் அமிலம் உள்ளது. இது புற்றுநோய்க்கு எதிராக போராடும் முதன்மையான பொருளாகும். இது நோயின் வளர்ச்சியை மட்டும் தடுக்காமல், கட்டியின் அளவையும் பாதியாக குறைத்துவிடும். அதனால் புற்றுநோய்க்கு நிரந்தரமாக குட்-பை சொல்லலாம். இதனை தயார் செய்ய 2,50,000 சாப்ரன் க்ரோசஸ் பூக்களின் சூல்முடிகள் தேவைப்படும். இவ்வளவு சூல்முடிகள் சேர்த்தாலும் கூட, அது வெறும் அரை கிலோவை தாண்டாது. அதனால் உலகத்திலேயே மிகவும் விலை உயர்ந்த மசாலா பொருளாக இருந்தாலும் கூட, இதன் மருத்துவ குணங்களுக்காக இதனை விலை கொடுத்து வாங்குவது தவறில்லை  Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து பா-4.jpg
  சீரகம் ஆம், செரிமானத்திற்கு பெரிதும் உறுதுணையாக விளங்குகிறது சீரகம். அதனால் உணவு சாப்பிட்ட பிறகு ஒரு கை சீரகத்தை மெல்ல விரும்புவோம். இருப்பினும், அதில் அதையும் தாண்டி பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அடங்கியுள்ள சீரகத்தில் தைமோக்வினோன் என்ற கூட்டுப்பொருள் உள்ளது. இது முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்க்கு காரணமான அணுக்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும். அதனால் எண்ணெய் மற்றும் கலோரிகள் அதிகமுள்ள நொறுக்குத் தீனிகளை உண்ணுவதற்கு பதில் சீரகம் சேர்த்த ரொட்டி, பீன்ஸ் அல்லது சாஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். சுவைமிக்க ஆரோக்கியமான இந்த உணவுகளை உண்ணுவதால் ஆரோக்கியமாக இருக்கலாம். சாதத்தில் பருப்பு ஊற்றி உண்ணுவதால், பருப்பில் கூட சீரகத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.  Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து பா-5.jpg

  லவங்கப்பட்டை தினமும் அரை ஸ்பூன் லவங்கப்பட்டை பவுடரை எடுத்துக் கொண்டால் போதும், புற்றுநோய் இடர்பாட்டில் இருந்து தப்பிக்கலாம். இயற்கை உணவு பதப்பொருளாக விளங்கும் இதில் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் அடங்கியுள்ளது. கட்டி வளர்ச்சியை குறைக்க உதவும் லவங்கப்பட்டை, நம் உடலில் புதிய குழாய்கள் உருவாகாமல் தடுக்கும். அதிலும் லவங்கப்பட்டையை உணவில் கீழ்கூறிய படி பயன்படுத்தலாம்: - காலைப் பொழுதை லவங்கப்பட்டை கலந்த தேனீருடன் தொடங்குங்கள்.- காலை உணவை ஆரோக்கியமானதாக அமைத்துக் கொள்ளுங்கள். அதற்கு இந்த மசாலாவை ஓட்ஸில் கலந்து குடியுங்கள்.- பழங்களின் கலவையிலும் பயன்படுத்தலாம். நறுக்கிய ஆப்பிள், கொஞ்சம் வால்நட் மற்றும் சிறிதளவு லவங்கப்பட்டை பொடியை கலந்து உண்ணலாம்.- இரவு படுக்க போகும் முன்பு ஒரு கப் பாலில் தேன் மற்றும் லவங்கப்பட்டையை கலந்து பருகினால், புற்றுநோய் உங்களை அண்டாது.

  Similar Threads:

  Sponsored Links
  =========================
  அன்புடன்
  திவ்யா

  போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
  கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்!!!

  பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
  தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

 2. #2
  Divyakala is offline Commander's of Penmai
  Real Name
  Divyakala
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  Chennai
  Posts
  1,071

  Re: புற்றுநோய் அபாயத்தில் இருந்து பாதுகாகĮ

  Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து பா-6.jpg

  கற்பூரவள்ளி பிட்சா அல்லது பாஸ்தாவை விட அதன் மேல் தூவும் கற்பூரவள்ளி மிகவும் ஆரோக்கியமானதாகும், முக்கியமாக முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்க்கு எதிராக செயல்படும். கிருமிநாசினி சேர்க்கை கூட்டுகளை இது கொண்டுள்ளதால், ஒரு டீஸ்பூன் கற்பூரவள்ளி இரண்டு கப் திராட்சைக்கு சமமாகும். க்யூயர்சிடின் என்ற பைட்டோ இரசாயனம் இதில் உள்ளதால், நம் உடலில் ஏற்படும் புற்று அணுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும். அதனால் புற்றுநோய்க்கு எதிரான மருந்தாக செயல்படும்
  Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து பா-7.jpg

  குடைமிளகாய் புற்றுநோய்க்கு எதிரான குணங்களை கொண்டுள்ள மசாலாவாக விளங்குகிறது குடைமிளகாய். ஆனால் அதனை அதிகமாக உட்கொள்ள கூடாது. இது அபோப்டோசிஸ் செயல்முறையை தூண்டுவதால் புற்று அணுக்களை அழித்து, மூளையில் உள்ள கட்டியின் அளவை குறைக்கும். மேலும் இது புற்றுநோயை அழிக்கவும் பெரிதளவில் உதவி புரியும்  Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து பா-8.jpg

  இஞ்சி இந்த எளிமையான மசாலாவில் உள்ள பல மருத்துவ குணங்கள் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க, மெட்டபாலிசத்தை ஊக்குவிக்க மற்றும் புற்று அணுக்களை அழிக்க உதவும். இதனை சமைக்கும் போது காய்கறிகள், மீன்கள் மற்றும் சாலட்களில் சேர்த்துக் கொள்ளலாம். இது சுவையையும் அதிகரிக்கும். இதன் சுவை பிடிக்கவில்லை என்றால் வேர்க்கோசுவுடன் சேர்த்து அதனை மெல்லுங்கள்.  Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து பா-9.jpg

  இதர பொருட்கள் கிராம்பு, சோம்பு, துளசி, பூண்டு, சீமைச்சோம்பு, வெந்தயம், கடுகு, புதினா இலைகள், ரோஸ்மேரி இலை, நற்பதமான எலுமிச்சை, வெர்ஜின் ஆலிவ் மற்றும் அவகேடோ என்னும் வெண்ணெய் பழம் ஆகியவைகளும் புற்று அணுக்களுக்கு எதிராக போராடும்  Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து பா-10.jpg


  பழங்கள் மற்றும் காய்கறிகள் பழங்கள், காய்கறிகள், நட்ஸ், தானியங்கள் மற்றும் பீன்ஸ் ஆகியவைகள் புற்று அணுக்களுக்கு எதிராக போராடுவதால் அதனை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  =========================
  அன்புடன்
  திவ்யா

  போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
  கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்!!!

  பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
  தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

 3. #3
  Divyakala is offline Commander's of Penmai
  Real Name
  Divyakala
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  Chennai
  Posts
  1,071

  Re: புற்றுநோய் அபாயத்தில் இருந்து பாதுகாகĮ

  Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து பா-11.jpg
  நார்ச்சத்து தேவை தினமும் வெள்ளை நிற சாதத்திற்கு பதிலாக பழுப்பு நிற அரிசியை உண்ணுங்கள்.
  Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து பா-12.jpg

  கோதுமை பிரட் வெள்ளை நிற பிரட்டிற்கு பதிலாக முழு தானிய பிரட்டை உண்ணுங்கள்  Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து பா-13.jpg

  ஸ்நாக்ஸ் ஸ்நாக்ஸ் நேரத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் உண்ணுவதற்கு பதிலாக பாப்கார்ன் உண்ணுங்கள்.  Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து பா-14.jpg

  பழங்கள் நற்பதமான பழங்களை தோலோடு உண்ணுங்கள்


  Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து பா-15.jpg

  மீன்கள் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். இது அழற்சிக்கு எதிராக போராடும். எனவே மீன், மீன் மாத்திரை போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள்.

  sumathisrini, jv_66 and gkarti like this.
  =========================
  அன்புடன்
  திவ்யா

  போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
  கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்!!!

  பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
  தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

 4. #4
  Abivenu's Avatar
  Abivenu is offline Penman of Penmai
  Blogger
  Commander's of Penmai
  Real Name
  Abi
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  erode
  Posts
  2,337

  Re: புற்றுநோய் அபாயத்தில் இருந்து பாதுகாகĮ

  hi Divya mam ... very useful tips... thanks for sharing

  Divyakala likes this.
  Being a Tube light .. i am too bright..

 5. #5
  Divyakala is offline Commander's of Penmai
  Real Name
  Divyakala
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  Chennai
  Posts
  1,071

  Re: புற்றுநோய் அபாயத்தில் இருந்து பாதுகாகĮ

  Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து பா-16.jpg

  ஆலிவ் ஆயில் சாதாரண சமையல் எண்ணெய்க்கு பதில், ஆலிவ் எண்ணெய்யை கொண்டு சமையுங்கள். இதனால் புற்றுநோய் வருவது குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.  Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து பா-17.jpg
  பதப்படுத்தப்பட்ட உணவுகள் எப்போதும் பதப்படுத்தப்பட்ட அல்லது அடைக்கப்பட்ட உணவுகளையும் காய்ந்த உணவுகளையும் தவிர்த்திடுங்கள்.  Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து பா-18.jpg
  உப்பு பதப்படுத்திய உப்பை தவிர்க்கவும். செல்டிக் கடல் உப்பு அல்லது ஹிமாலய உப்பை பயன்படுத்துங்கள்  Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து பா-19.jpg

  குறிப்பு புற்று நோயாளிகள் மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல், மஞ்சள் கலந்த உணவுகளை உட்கொள்ளாதீர்கள்.

  sumathisrini, jv_66 and gkarti like this.
  =========================
  அன்புடன்
  திவ்யா

  போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
  கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்!!!

  பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
  தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

 6. #6
  Divyakala is offline Commander's of Penmai
  Real Name
  Divyakala
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  Chennai
  Posts
  1,071

  Re: புற்றுநோய் அபாயத்தில் இருந்து பாதுகாக&

  No mam Please..

  Thanks Abi..
  Unga Signature nalla irukku.

  Quote Originally Posted by Abivenu View Post
  hi Divya mam ... very useful tips... thanks for sharing


  =========================
  அன்புடன்
  திவ்யா

  போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
  கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்!!!

  பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
  தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

 7. #7
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,537

  Re: Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து ப&a

  Useful sharing Divya.

  Divyakala likes this.

 8. #8
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து ப&a

  Thanks for the very useful share, Divya

  Divyakala likes this.
  Jayanthy

 9. #9
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,091

  Re: Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து ப&a

  Good Sharing Divii.. Many Thanks!!

  Divyakala likes this.

 10. #10
  Divyakala is offline Commander's of Penmai
  Real Name
  Divyakala
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  Chennai
  Posts
  1,071

  Re: Spicy foods 'could protect against cancer' - புற்றுநோய் அபாயத்தில் இருந்து ப&a

  Thanks Sumathi Sis..
  Quote Originally Posted by sumathisrini View Post
  Useful sharing Divya.
  Thanks JV Sis.
  Quote Originally Posted by jv_66 View Post
  Thanks for the very useful share, Divya
  Thx Karthi ma...
  Quote Originally Posted by gkarti View Post
  Good Sharing Divii.. Many Thanks!!


  sumathisrini and gkarti like this.
  =========================
  அன்புடன்
  திவ்யா

  போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
  கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்!!!

  பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
  தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter