Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree22Likes

Benefits of drinking hot water - வெந்நீர் பயன்கள்


Discussions on "Benefits of drinking hot water - வெந்நீர் பயன்கள்" in "Health" forum.


  1. #1
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Benefits of drinking hot water - வெந்நீர் பயன்கள்

    வெந்நீர் பயன்கள் :-

    ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!

    வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

    காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல
    ் பண்ணுகிறீர்களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள் என்று புலம்புவது கேட்கிறது!)

    உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.

    எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள்.

    காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.

    மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி!

    வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

    வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி.

    ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள். அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாவதையும் என் அனுபவத்திலேயே உணர்ந்திருக்கிறேன்.

    இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.

    அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்!

    வெந்நீரின் மஹாத்மியம் லிஸ்ட் போட்டு மாளாது என்னது?! வெந்நீருக்கு இனி உங்கள் வீட்டில் தனியாக ஒரு பெரிய பாத்திரமே போடப் போகிறீர்களா? குட் குட்!


    Similar Threads:

    Sponsored Links


    நளினி



  2. #2
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    re: Benefits of drinking hot water - வெந்நீர் பயன்கள்

    Useful info Nalin .......unmai dhaan......naan yeppozhdhumey venner dhaan kudippen..... Benefits of drinking hot water - வெந்நீர் பயன்கள்-hot-drink.gif

    naliniselva and SBS like this.





    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




  3. #3
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    re: Benefits of drinking hot water - வெந்நீர் பயன்கள்

    thanx for the useful tips nalini sis

    naliniselva likes this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  4. #4
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,545

    Re: Benefits of drinking hot water - வெந்நீர் பயன்கள்

    Really it is effective one Nalini, thanks for sharing.

    naliniselva likes this.

  5. #5
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,097

    Re: Benefits of drinking hot water - வெந்நீர் பயன்கள்

    Useful Sharing Kaa.......

    naliniselva likes this.

  6. #6
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Benefits of drinking hot water - வெந்நீர் பயன்கள்

    உண்மைதான் நளினி

    naliniselva likes this.
    Jayanthy





  7. #7
    veenashankar is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Singapore
    Posts
    163

    Re: Benefits of drinking hot water - வெந்நீர் பயன்கள்

    nice compilation of hot water benefits Nalini

    naliniselva likes this.

  8. #8
    shivasaran is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    gurgaon
    Posts
    319

    Re: Benefits of drinking hot water - வெந்நீர் பயன்கள்

    Hi nice to share the benefits of hot water and it's useful to all penmai frns.

    naliniselva likes this.

  9. #9
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Benefits of drinking hot water - வெந்நீர் பயன்கள்

    Useful share nalin......

    naliniselva likes this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  10. #10
    sarojinis's Avatar
    sarojinis is offline Commander's of Penmai
    Real Name
    sarojini sureshkumar
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    chennai
    Posts
    1,108

    Re: Benefits of drinking hot water - வெந்நீர் பயன்கள்

    thanks for sharing this useful info

    naliniselva likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter