Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree41Likes

வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?


Discussions on "வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?" in "Health" forum.


  1. #21
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    வைட்டமின் ‘B’ குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்

    வைட்டமின் ‘B1’
    வைட்டமின் ‘B1’ குறைபாட்டால் பெரி பெரி என்ற நோய் உண்டாகிறது.

    உடலின் எடை குறைந்து போகும். நரம்புகளின் செயலிழப்பு காரணமாக கை, கால் மறத்துப் போகும். உடலெங்கும் வலி உண்டாகும். ஞாபக மறதி அதிகரிக்கும். மூளை அடிக்கடி சோர்வாகும். உடல் எப்போதும் சோர்வுடனேயே இருக்கும்.

    இரத்தச் சோகை ஏற்படும். சருமத்தில் அதிக சுருக்கங்கள் தோன்றும். நகங்கள் வெளுத்து காணப்படும். விரல், மணிக்கட்டுப் பகுதிகளில் வலி ஏற்படும். இதய துடிப்பானது சில நேரங்களில் அதிகரித்தும், சில நேரங்களில் குறைந்தும் ஒழுங்கற்ற நிலையில் இருக்கும்.

    வைட்டமின் ‘B2’
    வைட்டமின் ‘B2’ குறைந்தால் நாக்கு வெடித்து காணப்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அடிக்கடி ஜலதோஷம், தும்மல் உண்டாகும்.

    வைட்டமின் ‘B3’
    வைட்டமின் ‘B3’ குறைந்தால் வயிற்றுப்போக்கு உண்டாகும். நினைவாற்றல் குறையும். சில நேரங்களில் வாந்தி, மயக்கம் ஏற்படும். பெல்லகரா (Pellgra) என்ற நோயின் பாதிப்பு உண்டாகும்.

    வைட்டமின் ‘B5’
    வைட்டமின் ‘B5’ குறைந்தால் சரும பாதிப்பு உண்டாகி,சருமத்தில் புண்கள் ஏற்படும். தோலில் சுருக்கம் உண்டாகும். தலைமுடி உதிர்தலும் இதன் குறைபாடுதான். சர்க்கரை வியாதி உண்டாக வாய்ப்புள்ளது.

    வைட்டமின் ‘B6’
    வைட்டமின் ‘B6’ குறைந்தால் இரத்தச் சோகை ஏற்படும். பற்கள் உறுதியிழக்கும். மன அழுத்தம் உண்டாகும். அதிக தாகம், இரத்த அழுத்தம் உண்டாகும்.

    வைட்டமின் ‘B7’
    வைட்டமின் ‘B7’ குறைந்தால் கருவில் இருக்கும் குழந்தைகள் முதல் சிறுகுழந்தைகள் வரை வளர்ச்சி பாதிக்கப்படும்.

    வைட்டமின் ‘B9’
    வைட்டமின் ‘B9’ போலிக் அமிலக் குறைபாட்டில் தாய்க்கும் கருவிலிருக்கும் குழந்தைக்கும் இரத்த சோகை உண்டாக்கும். மூளை அதிக சோர்வடைந்து ஞாபக சக்தியைக் குன்றச் செய்யும்.

    வைட்டமின் ‘B12’
    வைட்டமின் ‘B12’ குறைபாட்டால் இரத்தசோகை உண்டாகும், நரம்புத் தளர்வு உண்டாகும். நினைவாற்றல் குறையும். பெரும்பாலும் இந்நோய் முதியவர்களை அதிகம் தாக்கும். சில சமயங்களில் பக்கவாதம் கூட ஏற்பட வாய்ப்புண்டு.
    வைட்டமின் ‘B’ சத்து குறைவு சோதனை மூலம் கண்டறியப்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று இயற்கை முறையில் உணவு முறையைக் கடைப்பிடித்து வந்தால் ஆரோக்கியம் பெறலாம்


    Sponsored Links

  2. #22
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    வைட்டமின் A

    வைட்டமின் என்பவை நம் உடலுக்கு தேவையான மிக அத்தியாவசியமான அமின் என்ற வேதிப்பொருட்கள் இனத்த சேர்ந்தவை. (Vital+Amin). அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல ஒரு நாளைக்கு தேவையான அலவைவிட அதிகமாக உட்கொள்ளும்போது அது நச்சுப்பொருளாக மாறும்.

    வைட்டமின்களில் தண்ணீரில் கரைபவை, கொழுப்பில் கரையக்கூடியவை என்று இரு வகை உண்டு. இதில் வைட்டமின் A, D, E, K இவை கொழுப்பில் மட்டுமே கரையக்கூடியவை. C, B, ஃபோலிக் அமிலம், நியாசின், பிரிடாக்சின், கோபாலமின் எனப்படும் பி12 இவை தண்ணீரில் கரையக்கூடியதாகும்.

    நிறைய வகையான உணவுகளை உட்கொள்பவர்களுக்கு வைட்டமின் குறைபாடுகள் வருவதில்லை. ஆனால் அதிகம் காய்கறிகள் உண்ணாதவர்களுக்கு b12 குறைபாடு வரும். தாவர உண வுகளை உண்பவர்கள் இதற்காக தனியாக மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல பழங்கள், காய்கறிகள் சேர்த்து கொள்ளாதவர்களுக்கும் குறைபாடுகள் வருவதுண்டு.

    உடலில் வைட்டமின்களை சேர்த்து வைத்துக்கொள்ள முடியாது. எனவே தினமும் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம் ஆகும். நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் அளவு அதிகமானால், சிறுநீரில் அவற்றை வெளியேற்றிவிடும். ஆனால் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் நச்சாகி உடலுக்கு கெடுதல் விளைவிக்கும்.

    எனவே இவற்றை அதிகம் சேர்த்து கொள்வது தவறாகும். அதேபோல குடலில் புண், மற்றும் எதிர்ப்பு சக்தி அதிகமான க்ரான் நோய் இருப்பின் இத்தகைய வைட்டமின்கள் உறிஞ்ச படுவதில்லை. இதனாலும் வைட்டமின் குறைபாடுகள் வரலாம்.

    வைட்டமின் A என்பது என்ன?

    இவை கண் பார்வைக்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் இன்றியமையாத பல அமின்கள் சேர்ந்த ஒரு தொகுப்பு. உடலின் வெள்ளை அணுக்கள் உற்பத்திக்கும் உதவுவதால், உடலின் எதிர்ப்பு சக்திக்கும் அவசியம். திசுக்களின் வளர்ச்சி, செல்கள் மேலும் பெருக , உடல் வளர்ச்சிக்கும் அவசியமான கொழுப்பில் மட்டுமே கரைய கூடிய அமின்களின் கூட்டு ரெடினால் என அழைக்கப்படும் வைட்டமின் A ஆகும்.

    கண்களின் மேலே உள்ள படலம், மூச்சுகுழாய், மற்றும் சிறுநீர்க்குழாய், குடல் இவற்றின் திசுக்களின் மேலே உள்ள மெல்லிய திசுப்படலம் உருவாவதில் வைட்டமின் A அ வ சியம் அதிகம். அதேபோல மியுக்கஸ் படலம் சேர்ந்திருப்பதற்கு இவ்வைட்டமின் அத்தியாவசியமானது. இத்தகைய திசுப்படலம் இல்லை எனில் நுண்ணுயிர் கிருமிகள் உள்ளே நுழைந்து மேலும் பல நோய்கள் ஏற்பட வழிவகுக்கும்.

    ரெடினால் பால், மிருகங்களின் கல்லீரல் இவற்றில் மிகுந்து காணப்படுகிறது. ரெடினாயிக் அமிலமாக இன்னும் சில வேறு ரெடினால் வேதிப்பொருளாக இயற்கையில் மாற்றம் அடைகிறது.

    ரெடினால் அல்லது வைட்டமின் A ஆ க மாறும் முன் உள்ள வடிவம் (pre vitamin A) நிறம் அதிகம் உள்ள ஒரு பொருள். இது உடலில் வைட்டமின் A ஆ க மாற்றப்படுகிறது. அமெரிக்காவில் 25% ஆண்களாலும் 34% பெண்களாலும் உட்கொள்ளப்படும் வைட்டமின் இந்த முன் வடிவத்தை (pre form) கொண்டிருக்கிறது.

    உணவில் சாதாரணமாக காணப்படுபவை காரட்டின், க்ரிப்டோசாந்தீன், காரட்டின், லைகோபீன் போன்ற வேதிப்பொருட்கள் ஆகும். இதில் காட்டின்எளிதாக வைட்டமின் A ஆக உடலில் மாற்றமடைகிறது.

    இவை கண்பார்வைக்கும் மட்டும் அன்றி உடலின் உள்ள சில ஆக்சிஜன் அயனிகளின் எதிர்வினையை போக்கி உடல் சருமம் மற்றும் செல்களை காக்கவும் பயனாகிறது.


  3. #23
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    எந்த உணவுப்பொருட்களில் வைட்டமின் A இருக்கிறது?

    பொதுவாக பால், மிருகங்களின் கல்லீரல் இவற்றில் அதிகம்.முட்டை, காரட் போன்றவற்றிலும் செயற்கையாக செய்யப்பட்ட சில காலை உனவு செரியல்களிலும் இவை அதிகம். கீழே உள்ள அட்டவணை சில பொருட்களையும் அவற்றில்

    வைட்டமின் A யின் அளவையும் காட்டுகிறது.

    புலால் உணவில் வைட்டமின் A அதிகம் உள்ளவை :

    உணவு Vitamin A (IU)* %DV**
    கல்லீரல் மாட்டிறைச்சி சமைத்தது, 3 அவுன்ஸ் 27,185 545
    கல்லீரல், கோழி சமைத்தது 3 அவுன்ஸ் 12,325 245
    பால் கொழுப்பு நீக்கியது, 1 கோப்பை 500 10
    சீஸ், 1 அவுன்ஸ் 284 6
    முழு பால் கொழுப்பு 4% 1 கோப்பை 249 5
    முட்டை 1 226 5


    வைட்டமின் A உள்ள சில தாவர உணவுகள் :

    உணவு Vitamin A (IU)* %DV**
    1 கோப்பை காரட் சாறு 22,567 450
    வேகவைத்த காரட் ˝ கோப்பை 13,418 270
    உறையவைத்த கீரை ˝ கோப்பை 11,458 230
    Kale, frozen, boiled, 1/2cup 9,558 190
    பச்சை காரட் (71/2 inches) 8,666 175
    காய்கறி சூப் 1 கோப்பை 5,820 115
    காண்டிலோப் 1 கோப்பை நறுக்கியது 5,411 110
    பச்சை கீரை 1 கோப்பை 2,813 55
    தோலுடன் உள்ள ஆப்ரிகாட் பழம் 1/2 கோப்பை 2,063 40
    ஆப்ரிகாட் சாறு 1/2 கோப்பை 1,651 35
    பப்பாளித் துண்டுகள் 1 கோப்பை 1,532 30
    மாம்பழத் துண்டங்கள் 1 கோப்பை 1,262 25
    ஓட்ஸ் 1 கோப்பை 1,252 25
    பட்டாணி உறைய வைத்தது 1/2 கோப்பை 1,050 20
    தக்காளி பழச்சாறு 1/2 கோப்பை 819 15
    பீச் பழங்கள் நறுக்கியது 1/2 கோப்பை 473 10
    முழு பீச் 1 319 6
    இனிப்புச்சுவை உள்ள சிவப்பு மிளகாய் 1 துண்டு 313 6




    IU = International Units.


    ** DV = Daily Value.

    தினமும் தேவையான அளவு ஒருநாளைக்கு குறிப்பிடப்பட்டுள்லது. %Dv என்பது ஒரு வேளை உனவில் எத்தனன சதவிகிதம் வைட்டமின் A இருக்க வேண்டும் என்பதாகும். சில உணவுகள் குறைந்த சடஹ்விகிதம் இருப்பினும் வைட்டமினுக்கு சிறந்த மூலப்பொருளாகும்கீழே உள்ள அட்டவணை நமக்கு ஒருநாளைக்கு எவ்வளவு வைட்டமின் A தேவை என்பதை குறிக்கும்வைட்டமின்



    வயது ஆண்டுகள்) குழந்தைகள்(mcg RAE) ஆண்கள்(mcg RAE) பெண்கள்(mcg RAE) கருவுற்ற பெண்கள் (mcg RAE) பால் கொடுக்கும் அன்னையர்(mcg RAE)
    1-3 300 (1,000 IU) - - - -
    4-8 400 (1,320 IU) - - - -
    9-13 600 (2,000 IU) - - - -
    14-18 - 900 (3,000 IU) 700 (2,310 IU) 750 (2,500 IU) 1200 (4,000 IU)
    19+ - 900 (3,000 IU) 700 (2,310 IU) 770 (2,565 IU) 1,300 ()4,300 IU)


    Last edited by chan; 16th Feb 2015 at 08:55 PM.

  4. #24
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    விட்டமின் பயன்பாடுகள்

    கண்பார்வை தரும் ‘ஏ’

    முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ’ அதிகம் காணப்படுகிறது. கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். இந்த உயிர்சத்து குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

    இதய பாதிப்பை நீக்கும் ‘பி’
    கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. வைட்டமின் `பி’ குறைந்தால் வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும்.

    மன அமைதி தரும் ‘ சி ‘
    ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த பழங்களை வாங்கி உண்பதன் மூலம் வைட்டமின் சி சத்தினை உடலில் தக்கவைக்கலாம்.

    வைட்டமின் `சி’ குறைந்தவர்கள் மன அமைதி இழந்து காணப்படுவர். அவர்களின் முகத்தில் சிடு சிடுப்பு வந்துவிடும். இவர்களின் எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.

    எலும்புகளுக்கு பலம் தரும் ‘டி’
    வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதிவிடும். வைட்டமின் `டி’ இல்லாவிட்டால் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கொட்டிவிடும்.

    போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் `டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி’ அதிகம் உள்ளது.

    மலட்டு தன்மையை நீக்கும் `ஈ’
    கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும். வைட்டமின் `ஈ’ குறைந்தால் தசைகள் பலவீனமடையும்.

    மலட்டுத்தன்மையையும் உண்டாக்கும்.

    நம் உடல் ஆரோக்கியத்திற்கு அனைத்து வைட்டமின்களும் தேவை எனவே, ஆரோக்கியமான உணவை உண்ணவேண்டும் என்பதே உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்


  5. #25
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    வைட்டமின் - E


    மனித உடலுக்கு சக்தியைக் கொடுப்பது வைட்டமின்கள்தான். உணவின் மூலமே இந்தவைட்டமின்கள் அதிகளவு உடலுக்குக் கிடைக்கிறது. வைட்டமின்கள் மொத்தம்பதின்மூன்று உள்ளன. இவற்றில் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள், நீரில்கரையும் வைட்டமின்கள் என இரு வகைகள் உள்ளன.

    கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் உடலின் தேவைக்கு ஏற்பஉபயோகப்படுத்தப்பட்டு, மீதமுள்ளவை கொழுப்பு பொருட்களாக கல்லீரலில்சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் நீரில் கரையும் வைட்டமின்கள் உடலின்தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளப்பட்டு மீதி கழிவுகள் மூலம்வெளியேற்றப்படுகிறது.

    கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்

    1. வைட்டமின் ஏ

    2. வைட்டமின் டி

    3. வைட்டமின் இ

    4. வைட்டமின் கே

    இந்த இதழில் வைட்டமின் உ பற்றி அறிந்து கொள்வோம்.

    வைட்டமின் E உடலில் கலக்கும் முறை

    வைட்டமின் E உள்ள உணவுப் பொருட்களை உண்ணும் போது, அவை சிறுகுடலில் உள்ளஉறிஞ்சிகள் மூலம் உறிஞ்சப்பட்டு அடிபோஸ் திசுக்களில் சேகரிக்கப்படுகிறது.பின் அவை தேவைக்கேற்ப உபயோகிக்கப்படுகிறது.

    வைட்டமின் E அதிகமுள்ள உணவுப் பொருட்கள்

    · பருத்தி விதை எண்ணெய்

    · சோள எண்ணெய்

    · சூரியகாந்தி எண்ணெய்

    · சோயாபீன்ஸ்

    · முட்டைகோஸ்

    · சிறுகீரை

    · ஆப்பிள் விதைகள்

    · பட்டாணி கடலை

    · ஈஸ்ட்

    வைட்டமின் E-ன் உபயோகத்தால் விளையும் நன்மைகள்

    · இரவில் கண்டதசையில் எற்படும் தசைப்பிடிப்பு (Nocturnal Muscle cramps) - இது வைட்டமின் உ சத்துள்ள உணவுகளை உட்கொள்வதால் குறையும்.

    · ரத்த நாளத்தில் கொழுப்பினால் ஏற்படும் அடைப்புகளை கரைக்கும் தன்மை (Atherosclerosis) வைட்டமின் உ க்கு உண்டு.

    · மார்பகத்தில் ஏற்படும் நார்த்திசுக் கட்டிகளை (Fibrocystic breast disease) கரைக்கும் தன்மை வைட்டமின் உ க்கு உண்டு.

    வைட்டமின் உ குறைவினால் உண்டாகும் நோய்கள்

    தசைவாதம் (Muscular dystrophy)

    இன்றைய உலகில் பெரும்பாலான குழந்தைகள் தசைவாதம் என்னும் நோயால் அதிகம்பாதிக்கப்பட்டுள்ளனர். வைட்டமின் E சத்து குறைவதால் தசைகளில் உள்ளகொழுப்புச் சத்து குறைந்து போகிறது. இதனால் தசைவாதம் உண்டாகிறது. இந்நோய் தீருவது மிகவும் அரிதாகும்.

    இரத்தச் சோகை (Haemolytic anaemia)

    வைட்டமின் E சத்து குறைவதால் இரத்த சிவப்பணுக்கள் அழிந்துபோகின்றன. இதனால் இரத்தச் சோகை உருவாகிறது. இரத்தச் சோகையைப் போக்க வைட்டமின் E சத்து அதிகமுள்ள பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    கல்லீரல் தாபிதம் (Dietary Hepatic necrosis)

    கல்லீரலில் உள்ள திசுக்கள் அழிவதால் இந்நோய் வரக்கூடும். எனவே இவ்வகைநோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள வைட்டமின் E கலந்த உணவை உட்கொள்ளவேண்டும்.

    வைட்டமின் E சத்தானது மலட்டுத்தன்மையை குறைத்து மகப்பேறு ஏற்படச் செய்யும். இந்த சத்து குறையுமானால் மலட்டுத்தன்மை உண்டாகும்.

    அண்மையில் அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் மூளையில் உண்டாகும் திடீர் அதிர்வை தடுக்கவும் நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கவும் வைட்டமின் உ மிகவும் தேவையென கண்டறிந்துள்ளனர்.


  6. #26
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    வைட்டமின் டி, இ, கே வின்… நன்மை, தீமைகள் என்னென்ன?


    வைட்டமின் டி:
    எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் சக்தியை, உடல் உறிஞ்சிக் கொள்ள, வைட்டமின் டி மிக முக்கியம். ஆனால் இது அதிகமாகும் போது, சிறுநீரகத்தில் படிந்து, கற்களை உண்டாக்கி விடும். இதனால் அடி வயிற்றில் வலி, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு, கடைசியில் சிறுநீரகமே செயலிழக்க நேரிடும். மாதவிடாய் நின்ற பெண்கள் கூட, மிகவும் அவசியமெனில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில், அதிகபட்சம் வாரத்துக்கு 60,000 யூனிட்ஸ் என்ற அளவில், எட்டு வாரங்களுக்கு மட்டுமே இம்மாத்திரைகளைத் தொடர்ந்து எடுக்கலாம். இதன் அளவு அதிகமானால், ‘ஹைப்பர் பாராதைராய்டிசம்’ என்ற ஹார்மோன் பாதிப்பு ஏற்படும் என்பது, நினைவில் இருக்கட்டும்.

    வைட்டமின் இ:
    இப்போது கடைகளில் கிடைக்கும் காஸ்மெட்டிக் பொருட்கள் பலவற்றிலும், வைட்டமின் இ நிறைந்திருக்கிறது. இன்றைய இளம் பெண்கள், முகப்பரு பிரச்சனை வந்தால், தாங்களாகவே வைட்டமின் இ மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். இது நல்லதல்ல. வைட்டமின் இ அளவு அதிகமாகும்போது, ரத்த இழப்பு பாதிப்பு ஏற்படலாம். பெண்கள் மாதவிடாய் மற்றும் கர்ப்பக் காலங்களில், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், இம்மாத்திரைகளை கண்டிப்பாக எடுக்கக் கூடாது. மேலும், வைட்டமின் இ மாத்திரைகள் ஆண் தன்மைக்கான இனப்பெருக்க செயல்பாட்டை அதிகரித்தாலும், தொடர்ச்சியாக எடுக்கும்போது அரிதாக புராஸ்டேட் கேன்சரை உண்டாக்கிவிடலாம்.

    வைட்டமின் கே:
    ரத்தம் உறைதலுக்கு இவ்வைட்டமின் ரொம்பவும் தேவை
    . ஆனால் இது உடலில் அதிகமாகும்போது, “ஹைப்பர் த்ராம்போனீமியா” என்ற பாதிப்பு ஏற்படுவதால், அளவுக்கு அதிகமாக ரத்தம் உறைந்து ரத்தக் கட்டிகளை உண்டாக்கி விடும்.

    இந்த ரத்தக் கட்டிகள், நம் ரத்த ஓட்டத்தில் கலந்து, உடலின் மற்ற பகுதிகளுக்குச் செல்லும் போது, மூளை மற்றும் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்திவிடும். இதனால், திடீர் பக்கவாதம் மாரடைப்பு ஆகியவை ஏற்படலாம்.

    மேலும், இதய நோய்களுக்காக ஆன்டி கோயாகுலன்ட்ஸ் மாத்திரைகளான வார்ஃபாரின் மற்றும் ஆஸ்பிரின் எடுத்துக் கொள்பவர்கள், மருத்துவரை கேட்காமல் வைட்டமின் கே மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவே கூடாது.


  7. #27
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    குழந்தைகளுக்கு வைட்டமின்கள் அவசியம்

    குழந்தைகள் நோய்நொடியின்றி நலமுடன் வளர உணவில் காணப்படும் அல்லது சேர்க்கப்படும் வைட்டமின்கள் பெரிதும் உதவுகின்றன. வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை சத்துகளும் தேவைக்கேற்ப உணவில் அடங்கியிறந்தால் அதை நாம் சமநிலை உணவு என அழைக்கின்றோம். நாம் அளிக்கும் உணவில் எல்லா வைட்டமின்களையுமே சேர்க்க வேண்டியுள்ளது. எந்த ஒரு வைட்டமினாவது குறைந்தால் குழந்தையின் வளர்ச்சி அதனால் தடைப்படுகின்றது.

    வைட்டமின்களை இருவகைகளாகப் பிரிக்கலாம். 1, நீரில் கரைபவை உதாரணம் பி, சி, பி. 2, எண்ணெயில் கரைபவை, உதாரணம் ஏ. டி. இ. கே. இவற்றில் எண்ணெயில் கரைவது தண்ணீரில் களரவது இல்லை. நீரில் களரவது எண்ணெயில் களரவது இல்லை.

    இனி குழந்தைகளுக்கு தேவைப்படும் சில வைட்டமின்கள் பற்றி பார்க்கலாம்.

    வைட்டமின் ஏ. இந்த வைட்டமின் குறைந்தால் குழந்தைகளுக்கு மாலைக்கண், ஒளியிழந்த கண், கண்ணில் சதை வளருதல், கருவிழி பாதிப்பு மற்றும் உடலில் தோல் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எல்லா வகை கீரை வகைகள் முருங்கைக்காய், காரட், பச்சை மிளகாய், பப்பாளி, செவ்வாழை, ஆரஞ்சு, பலாப்பழம், சப்போட்டா பழம், மாம்பழம், தக்காளிப் பழம், முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டு ஈரல், நண்டு, மீன், தாய்ப்பால், வெண்ணெய், நெய், சிவப்பு பனை எண்ணெய் போன்றவற்றில் வைட்டமின் ஏ உள்ளது.

    குழந்தை வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ மிகவும் தேவையானதாகும். எனவே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் வைட்டமின் ஏ போதுமான அளவிற்கு கிடைக்கும். முதல் 3 திங்களுக்குப் பின் தாய்ப்பால் கொடுப்பது தடைப்பட்டால் வைட்டமின் ஏ கொண்ட சொட்டு மருந்துகளில் ஏதாவதொன்றை பசும்பாலுடன் கலந்து கொடுக்கலாம்.

    வைட்டமின் பி, வைட்டமின் பியில் சில பிரிவுகள் உண்டு. அவை அனைத்தும் ஒருந்கிணைந்தே உணவுப் பொருட்களில் காணப்படுகின்றன. தானிய வகைகள், ஈஸ்ட் பால் முட்டை பன்று இறைச்சி, மீன் வேர்க்கடலை, தீட்டப்படாத அரிசி போன்றவற்றில் இது அதிகம் உள்ளது. இனி வைட்டமின் பியின் வகைகள் பற்றியும் அவை குறைந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் பார்க்கலாம்.

    வைட்டநின் பி1, இதற்கு "தையமின்" என்று பெயர். இதன் மூலம் உண்ணும் உணவிலுள்ள மாவுச் சத்து செரிக்கப்பட்டு அது குளுக்கோளாசாக மாற்றப்பட்டு, உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் தசைகளுக்கும் நரம்புகளுக்கும் அளிக்கப்படுகின்றது.

    இந்த வைட்டமினை உட்கொண்ட ஒரு சில நிமிடங்களிலேயே இதனை மூளை ஈரல் இதயம் போன்ற பகுதிகளில் காணமுடிகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வைட்டமின் பி 1 குறைவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் குறை நோய்க்கு பெரிபெரி என்று பெயர்.

    குழந்தைக்கு மூன்று திங்கள் காலத்திலிருந்து தாய்ப்பாலுடன் அல்லது மற்ற பாலுடன் தானிய உணவும் சேர்த்தளிக்க விட்டால் இக்குறை ஏற்படுகின்றது. இந்நோய் கண்டால் குழந்தையின் உடல் முழுதும் வீக்கம் ஏற்படும். தசைகள் வளர்ச்சியின்றி வலுவிழந்து காணப்படும்.

    உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு அவற்றின் வலுவின்மையால் காசநோய் போன்ற பல நோய்கள் வரக் கூடும்.
    வைட்டமின் பி 2. இதற்கு "ரிபாப்ளேவின்" என்று பெயர். இந்த வைட்டமின் குறைந்தால் குழந்தைக்கு தொடர்ந்து வயிற்றுப் போக்கு ஏற்படுகின்றது.

    குழந்தையின் வாயின் இரு ஓரங்களிலும் வெடிப்புகளுடன் கூடிய காயங்கள் உருவாகும். நாக்கு சிவந்து வழுவழுப்புடன் வெடிப்புக்கள் தோன்றும். எனவே உணவுகளை உட்கொள்ள குழந்தை சிரமப்படும். நாக்கில் மட்டுமல்லாது இந்த வைட்டமின் குறைவால் குடலிலும் இவ்வாறான காயம் ஏற்பட்டு உணவு உட்கொள்ள இயலாமையும் வயிற்றுப் போக்கும் ஏற்படக் கூடும்.


    வைட்டபின் பி 2 இதில் ரிபாப்பிளேவினுடன் நியாசின் என்ற மற்றொரு சத்தும் சேர்ந்து காணப்படுகின்றது. இதை நிக்கோடினிக் அமிலம் என்றும் எழைப்பதுண்டு. இந்த வைட்டமின் குறைவால் பெலாக்ரா என்ற நோய் உண்டாகின்றது. அதனால் சூரிய ஒளிபடுகின்ற இடங்களில் எல்லாம் தோல் கருமையுற்று உலர்ந்து பளபளப்பு மங்கிவிடும். குழந்தையின் நாக்கு தடித்து வீங்கி சிவந்து காணப்படும்.

    Last edited by chan; 17th Feb 2015 at 10:15 AM.

  8. #28
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    அழகை அதிகரிக்கும் வைட்டமின்

    ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் இன்றியமையாதவை குறிப்பாக சர்மத்திற்கு விட்டமின் 'இ' ஆரேக்கியத்தையும், அழகையும் தருகிறது. விட்டமின் 'இ' ஒரு ஆன்டி - ஆக்சிடன்ட். புற ஊதா கதிர்வீச்சு, சுற்றுப்புற மாசுகள், மருந்துகள் இவற்றால் உண்டாகும் செல்களை அழிக்கும் ப்ரீ - ரேடிகல்களின் (Free Radicals) தாக்குதலிலிருந்து சர்மத்தை காக்கும். வைட்டமின் 'இ' தரும்.

    வைட்டமின் '' தரும் பயன்கள்

    1. பலவகை சர்ம அழகு மற்றும் பாதுகாப்பு சாதனங்களில் விட்டமின் 'இ' சேர்க்கப்படுகிறது. இவற்றை உபயோகிப்பதால் சர்மம் இளமையாக இருக்கும். தோல் சுருக்கங்கள், கோடுகள் ஏற்படாது. ப்ரீ ரேடிகல்கள் சர்மத்தை விரைவாக முதுமையடச் செய்யும். இவற்றை அழிப்பதாலும் விட்டமின் 'இ' சர்மத்தின் இளமையை காக்கிறது.

    2. விட்டமின் 'ஏ' வும் சர்ம ஆரோக்கியத்திற்கு தேவையான ஒரு விட்டமின் இதை உடலில் வழிப்படுத்துவதும் விட்டமின் 'இ' தான்.

    3. சர்மத்தின் எதிரி சூரியன். வெய்யிலின் வெப்பத்தால் சருமம் கருத்து வாடி விடும். சூரிய வெப்பத்தில் இருக்கும் புறஊதாகதிர்கள் ((Ultra violet rays) தோலில் ஊடுருவி, ஆக்சிஜன் அணுமூலக்கூறுகளை சிதைத்து ப்ரீரேடிகல்களாக ஆக்கி விடும். இந்த ரேடிகல்கள் நல்ல செல்களை அழிக்கத் தொடங்கி விடும். லிபிடுகள் (கொழுப்பு), புரதங்கள், மரபணுக்கள் (DNA) இவைகளெல்லாம் தாக்கப்படுவதால் சருமம் பொலிவை மட்டுமல்ல, மீளும் தன்மை (Elasticity) யையும் இழந்து விடும். சுருக்கங்கள், வயது முதிர்ந்து வரும் தோலில் களங்ககள் உண்டாகும். ஏன், சரும புற்றுநோய் கூட வரலாம். விட்டமின் 'இ' யை உபயோகிப்பதால் சூரிய வெப்பத்திலிருந்து சருமம் பாதுகாக்கப்படும். ஃப்ரீரேடிகல்கள் அழிக்கப்படுகின்றன. சருமத்தின் இளமை காக்கப்படுகிறது.

    4. பல சர்ம நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு விட்டமின் 'இ' உதவுகிறது. 'சோரியாசிஸ்' சிகிச்சைக்கு தரப்படும் மருந்துகளில் விட்டமின் 'இ' சேர்க்கப்படுகிறது. 'எரித்துமா' (Erythema) என்ற தோல் அழற்சிக்கு நல்லது.

    5. சருமத்திற்கு விட்டமின் 'இ' யின் முக்கிய பங்கு தோல் புற்று நோயை தடுப்பது. சூரிய வெப்ப பாதிப்பிலிருந்தும், ஃப்ரீரேடிகல் பாதிப்பிலிருந்தும் காப்பதால் புற்றுநோய் தவிர்க்கப்படுகிறது.

    6. சருமத்தின் எண்ணைப் பசையை சரி சமமான நிலையில் வைத்திருக்கிறது.

    7. தோலின் நோய் தடுப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. தோலிலிருந்து நீர் இழப்பை குறைக்கிறது.

    விட்டமின் 'இ' தைலமாக, களிம்புகளாக தோல் பூச்சாக பயன்படுத்துவது,

    அதை உள்ளுக்கு சாப்பிடுவதை விட சிறந்தது. தோல் சுலபமாக விட்டமின் 'இ' எண்ணையை உட்கிரகித்துதுக் கொள்ளும். தோலில் சில பாகங்களில் விட்டமின் 'இ' தைலத்தை தடவ முடியாமல் போனால், அப்போது விட்டமின் 'இ' காப்சூல்களை உட்கொள்ளலாம்.

    விட்டமின் 'இ' இரண்டு ரூபங்களில் கிடைக்கும். ஆல்கஹால் ரூபத்திலும் (Alpha - tocopherol) மற்றும் அசிடேட் ரூபத்திலும் (Alpha - tocopherol) கிடைக்கும். இதில் அசிடேட் ரூபம் முழுமையாக தோலில் ஊடுருவாது. எனவே ஆல்கஹால் டைப் விட்டமின் 'இ' சிறந்தது. விட்டமின் 'இ' உள்ள உணவுகள்



  9. #29
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    பாக்டீரியாவை எதிர்க்கும் வைட்டமின்

    வைட்டமின் பி-5 பாக்டீரியாவை அழிப்பதற்கென ரத்தத்தில் ஏற்கனவே உள்ள பொருளான களை தொகுத்து கூட்டுப்பொருள்களாக செய்யும்.

    நரம்பு மண்டலம், நார்மல் ஜீரணம் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்களுக்கு உதவும்.

    கார்போ - ஹைடிரேட், புரதம், கொழுப்பு சத்துக்கள் ஜீரணமாக உதவுகிறது.
    உடல் வளர்ச்சியை உண்டாக்கும்.

    முக்கியமாக மன அழுத்தம், மனத்தளர்ச்சிகளை போக்கும். அட்ரீனல் சுரப்பிகளை தூண்டி விடுவதால் மன அழுத்தத்தை குறைக்கிறது.

    உடலின் ஆற்றலை, தெம்பை அதிகரிக்கும்.
    காயங்கள் குணமாக உதவுகிறது.
    உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
    சரும அலர்ஜிகளை போக்க உதவுகிறது.

    இருக்கும் உணவுகள்


    முழுக்கோதுமை, பருப்புகள், இதர தானியங்கள், வேர்கடலை, பால், பால் சார்ந்த பொருட்கள், வெண்ணெய், சீஸ், காய்கறிகள், பட்டாணி, பீன்ஸ், சூர்யகாந்தி விதைகள், பரங்கிக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ஆரஞ்ச், வாழைப்பழம், சிக்கன், மாட்டிறைச்சி, மீன், லிவர் முதலியன.

    தினசரி தேவை

    ஆண்கள் - 10 மி.கி., பெண்கள் - 5 மி.கி., கர்ப்பிணிகள் - 5 மி.கி., பாலூட்டும் பெண்மணிகள் - 5 மி.கி.

    12 வயதுக்கு குறைந்த சிறுவர், சிறுமிகளுக்கு வைட்டமின் பி 5 மருந்தாக கொடுக்க வேண்டாம்.

    குறைந்தால் வரும் பாதிப்புகள்

    களைப்பு, தலைவலி, தூக்கமின்மை, மனஅழுத்தம், பசியின்மை, தலைவலி, நரம்புத்தளர்ச்சி, காலில் எரிவது போன்ற உணர்ச்சி, அஜீரணம், வளர்ச்சிக்குறைவு முதலியன.

    எதனால் வைட்டமின் பி 5 இழப்பு ஏற்படுகிறது

    சமைக்கும் போது உணவை சூடாக்கினால் வைட்டமின் பி 5 அழிகிறது. பச்சை காய்கறிகளை உண்பது நல்லது. உணவை பல நாள் கெடாமல் வைக்கும் ரசாயன பொருட்களான களாலும் அழிந்து விடும். எனவே "டின்களில்" அடைத்து விற்கப்படும் உணவுப்பொருட்களில் வைட்டமின் பி 5 குறைவாக இருக்கும்.


    Attached Thumbnails Attached Thumbnails வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?-b5.jpg  

  10. #30
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    நீரில் கரையும் வைட்டமின்

    நீரில் கரையும் வைட்டமின்களான 'பி' குடும்பத்தை சேர்ந்தது வைட்டமின் பி-5 Calcium Pantho thenate என்றும் சொல்லப்படுகிறது.

    பயன்கள்

    பாக்டீரியாவை அழிப்பதற்கென ரத்தத்தில் ஏற்கனவே உள்ள பொருளான Anti - bodies களை தொகுத்து கூட்டுப்பொருள்களாக செய்யும்.
    நரம்பு மண்டலம், நார்மல் ஜீரணம் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்களுக்கு உதவும்.

    கார்போ - ஹைடிரேட், புரதம், கொழுப்பு சத்துக்கள் ஜீரணமாக உதவுகிறது.
    உடல் வளர்ச்சியை உண்டாக்கும்.

    முக்கியமாக மன அழுத்தம், மனத்தளர்ச்சிகளை போக்கும். அட்ரீனல் சுரப்பிகளை தூண்டி விடுவதால் மன அழுத்தத்தை குறைக்கிறது.
    உடலின் ஆற்றலை, தெம்பை அதிகரிக்கும்.

    காயங்கள் குணமாக உதவுகிறது.
    உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
    சரும அலர்ஜிகளை போக்க உதவுகிறது.

    இருக்கும் உணவுகள்

    முழுக்கோதுமை, பருப்புகள், இதர தானியங்கள், வேர்கடலை, பால், பால் சார்ந்த பொருட்கள், வெண்ணெய், சீஸ், காய்கறிகள், பட்டாணி, பீன்ஸ், சூர்யகாந்தி விதைகள், பரங்கிக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ஆரஞ்ச், வாழைப்பழம், சிக்கன், மாட்டிறைச்சி, மீன், லிவர் முதலியன.

    தினசரி தேவை

    ஆண்கள் - 10 மி.கி., பெண்கள் - 5 மி.கி., கர்ப்பிணிகள் - 5 மி.கி., பாலூட்டும் பெண்மணிகள் - 5 மி.கி.
    12 வயதுக்கு குறைந்த சிறுவர், சிறுமிகளுக்கு வைட்டமின் பி 5 மருந்தாக கொடுக்க வேண்டாம்.

    குறைந்தால் வரும் பாதிப்புகள்

    களைப்பு, தலைவலி, தூக்கமின்மை, மனஅழுத்தம், பசியின்மை, தலைவலி, நரம்புத்தளர்ச்சி, காலில் எரிவது போன்ற உணர்ச்சி, அஜீரணம், வளர்ச்சிக்குறைவு முதலியன.

    எதனால் வைட்டமின் பி 5 இழப்பு ஏற்படுகிறது

    சமைக்கும் போது உணவை சூடாக்கினால் வைட்டமின் பி 5 அழிகிறது. பச்சை காய்கறிகளை உண்பது நல்லது. உணவை பல நாள் கெடாமல் வைக்கும் ரசாயன பொருட்களான Preservatives களாலும் அழிந்து விடும். எனவே "டின்களில்" அடைத்து விற்கப்படும் உணவுப்பொருட்களில் வைட்டமின் பி 5 குறைவாக இருக்கும்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter