Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree41Likes

வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?


Discussions on "வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?" in "Health" forum.


 1. #31
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

  தங்கமான விட்டமின்

  விட்டமின்களில் தங்கம் போன்றது வைட்டமின் 'சி' நீரில் கரையும் வைட்டமின் 'சி', ஒரு நோய் தடுக்கும் வைட்டமின். உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கும். இதன் பயன்கள் ஏராளமானவை. மேலும் மேலும் ஆராய்ச்சிகளின் மூலம் இதன் புதிய பயன்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த வைட்டமின் 'அஸ்கார்பிக் அமிலம்' (Ascorbic acid) என்று சொல்லப்படுகிறது.
  வைட்டமின் 'சி' யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரைகள் மூலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

  பயன்கள்

  உடல் சீராக வளர உதவும். எலும்புகளும், பற்களும் உருவாக உதவுகிறது. புரதத்துடன் இணைந்து திசுக்களின் வளர்ச்சியிலும் அமைப்பிலும் பங்கேற்கிறது.

  உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. பாக்டீரியா, வைரஸ் கிருமிகளில் உண்டாகும் தொற்று நோய்களை தடுக்கிறது. அடிபட்டதால் ஏற்படும் காயங்கள், தீப்புண்களை விரைவாக குணமாக்குகிறது.

  தசை நார்கள், எலும்புகள், செல், திசுக்கள், பற்கள், ஈறுகள் இவற்றையெல்லாம் இணைக்கும் முக்கியமான பொருள் 'கொல்லாஜென்' (Collagen). இதை தயாரிப்பது வைட்டமின் 'சி'.
  உணவிலிருந்து இரும்புச்சத்தை உடல் கிரகிக்க வைட்டமின் உதவுகிறது. அதே போல் கால்சியத்தை உடல் ஏற்றுக் கொள்ளவும் உதவுகிறது.

  ஜலதோஷத்தை ஓரளவு கட்டுப்படுத்த உதவுகிறது.
  தீவிரமான காய்ச்சல் அல்லது அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு, உடல் ஆற்றல் பெற உதவும் சிறந்த டானிக்.

  வைட்டமின் 'சி' உள்ள உணவுகள்

  முக்கியமானவை சிட்ரஸ் பழங்கள், நெல்லிக்காய்.

  தினசரி தேவை (வைட்டமின் சி)
  · ஆண், பெண்-40 லிருந்து 75 மி.கி.
  · பாலூட்டும் தாய்மார்கள்-80 லிருந்து 95 மி.லி.
  · குழந்தைகள்-25 மி.கி. (0-12 மாதங்கள்)
  · சிறுவர்கள் (1 லிருந்து 18 வரை) 40 மி.கி.

  வைட்டமின் 'சி' தானிய பருப்பு வகைகளில் இல்லையென்றே சொல்லலாம். ஆனால் "முளை கட்டிய" (Sprouted) தானியங்களில் அதிகம் ஏற்படுகிறது. முளை கட்டுவதற்கு தானியங்களை 24 மணி நேரம் நீரில் நனைத்து, வடிகட்டி ஈரத்துணியில் பரப்பி, ஈரத்துணியால் மூடி வைக்க வேண்டும். இரண்டு மூன்று நாட்களில் 1 (அ) 2 செ.மீ. நீளமாக முளை வரும். முளைகட்டிய முழு கடலைப்பருப்பு (கொத்துக்கடலை). பஞ்ச காலங்களில் வைட்டமின் சி குறைபாடுகளை போக்க மிகவும் உதவியது. இந்த பருப்பை விட 3 மடங்கு அதிகம் வைட்டமின் சி நிறைந்த பருப்பு முளைகட்டிய பாசிப்பயறு முளைகட்டிய தானியங்களை பச்சையாகவோ அல்லது குறைவாகவோ சமைத்து உண்பது நல்லது.

  வைட்டமின் 'சி' யின் நற்குணம் அது மலிவான எளிதாக கிடைக்கும் நெல்லிக்காயில் அபரிமிதமாக இருப்பது தான். விலை உயர்ந்த ஆப்பிளில் வைட்டமின் சி இல்லை. சிட்ரஸ் பழங்களில் இருக்கிறது. நெல்லிக்கனியில் உள்ள அளவு வேறெங்கும் இல்லை. ஆரஞ்சு ஜுஸை விட நெல்லிக்காயில் 20 மடங்கு, வைட்டமின் 'சி' அதிகம். நெல்லிக்காயை காய வைத்தாலும், சமைத்தாலும் அதில் உள்ள வைட்டமின் 'சி' குறைவதில்லை.

  வைட்டமின் 'சி' குறைந்தால்

  ஸ்கர்வி - ரத்த நாளங்கள், எளிதில் உடைந்து ரத்தக்கசிவு ஏற்படுதல், பசியின்மை, புண்கள் ஆறாமல் போதல், குழந்தைகளில் கால், தொடைகளில் வலி, வீக்கம், காய்ச்சல், வாந்தி முதலியனவும், ரத்த சோகையும் உண்டாகும். ஆனால் இந்தியாவில் ஸ்கர்வி அதிகமாக தாக்கியதில்லை.

  ஆஸ்டியோ பொரோசிஸ் (Osteo - poresis) எனும் எலும்புச் சிதைவு

  எடை குறைதல், அஜீரணம், தோல் பாதிப்புகள் முதலியன ஏற்படலாம்.

  அதிகம் உட்கொண்டால்

  ஒரு நாளுக்கு 100 மி.கி. அளவை தாண்டினால் - பேதி, வயிற்று வலி, மயக்கம், தலை சுற்றல், தலைவலி, தசைப்பிடிப்பு, வாய்ப்புண்கள், சிறுநீரகத்தில் கற்கள் முதலியன ஏற்படலாம்.

  எதனால் அழியும்
  வைட்டமின் 'சி' முக்கிய குணாதிசயம், அது சீக்கிரமாக குறைந்து போகும். காரணம் காற்றில் சுலபமாக "ஆக்ஸிகரணம்" (Oxidation) ஆகி விடும். எனவே வைட்டமின் 'சி' உள்ள காய்கறிகளை "வெட்டி" வைத்தால் அல்லது உலர வைத்தால், காற்றில் வைட்டமின் 'சி' கரைந்து விடலாம். சூரிய வெளிச்சத்தாலும் வைட்டமின் 'சி' பாதிக்கப்படும். தண்ணீரில் அதிக நேரம் காய்கறிகளை ஊற வைத்தாலும் இல்லை அவற்றை அதிகமாக வேக வைத்தாலும், வைட்டமின் 'சி' அழிந்து விடும். கூடிய வரை வைட்டமின் 'சி' செறிந்த காய்கறிகளை பச்சையாக உண்பது நல்லது.


  Sponsored Links
  jv_66 likes this.

 2. #32
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

  வித்தியாசம் விட்டமின்

  விட்டமின் ஏ ன் முக்கிய பயன் கண்களை பராமரித்து காப்பது. வண்ணங்களை பிரித்தறிய கண்களுக்கு உதவுகிறது. பார்வையை கூர்மையாக்குகிறது. கண்களில் உள்ள ஒளி கூச்சமுடைய நரம்பு செல்களாக விட்டமின் ஏ உருவெடுத்து, கண் பார்வையை சீராக வைத்திருக்க உதவுகிறது. மங்கலான வெளிச்சத்திலும், இருளிலும் பார்வை தெரிய உதவுகிறது.

  விட்டமின் ஏ தரும் பயன்கள்

  சர்மத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. முகப்பரு, கொப்புளங்கள், சில வகை சர்ம புற்றுநோய்கள் முதலியவற்றுக்கான ரெடினாய்டுகள் மருந்துகளில் ரெடினால் முக்கியமான பாகமாக இருக்கிறது.

  நுரையீரல், சிறுநீரகம், சிறுநீரகப் பாதை ஆகியவற்றின் "லைனிங்" (Lining) கை பாதுகாக்கிறது.

  தொற்றுநோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது. உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கிறது.

  உண்ணும் உணவு ஜீரணிக்க உதவுகிறது.

  ரத்தத்தில் கொழுப்பு அளவை கட்டுப்படுத்துகிறது. இதய நோய், பக்கவாதம், போன்ற பாதிப்புகள் வராமல் தடுக்கிறது.

  ஈறுகள், பற்கள், கைகால் நகங்கள், தலைமுடியை வலுவாக்குகிறது. எலும்பு, தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.

  ஒரு நாளுக்கு உட்கொள்ள வேண்டிய அளவு

  ஆண்கள் - 700 லிருந்து 900 மைக்ரோகிராம்

  கர்ப்பிணி பெண்கள் - 1300 மைக்ரோகிராம் உச்சவரம்பு - 3000 மைக்ரோகிராம்.

  விட்டமின் '' குறைந்தால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்


  மாலைக்கண் நோய் (சாயங்காலம் இரவில் கண் சரியாக தெரியாது), கண்கள் வண்ணங்களை பிரித்தெடுக்க முடியாமற்போதல், பார்வை கோளாறுகள் முதலியவை ஏற்படும். Xerophthalmia மற்றும் Keratomalacia என்ற தீவிர கண் பாதிப்புகள் உண்டாகலாம். இவற்றால் கண்பார்வை பறி போகும் அபாயம் ஏற்படும். கண் விழிகள் ஈரப்பசையை இழந்து விடும்.

  பின்னப்பட்ட, குறைந்த உடல் வளர்ச்சி.

  சர்ம பாதிப்புகள், வறண்ட தோல், முடி, பரு, கொப்புளங்கள் உண்டாகும்.

  நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, அடிக்கடி சளி, ஜுரம்.

  பசியின்மை, வயிற்றுப்போக்கு, களைப்பு.

  spmeyyammaisp06 and jv_66 like this.

 3. #33
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

  எதிர்ப்பாற்றலை வளர்க்கும் விட்டமின் உணவுகள்

  விட்டமின் D

  வலுவான எலும்புகளைத் தருவது மட்டும் விட்டமின் D யின் பணி என்று இதுவரை எண்ணி வந்த நமக்கு இப்போது ஒரு புதிய செய்தி. தடுப்பாற்றலை உயர்த்துவதில் விட்டமின் D பெரும் பங்குவகிக்கிறது என்று தற்போது அறிவியலார் நடுவில் பேசப்படுகிறது. உடலில் விட்டமின் D குறைவு பாக்டீரியாக்களை அழித்துண்ணும் செல்களின் செயல்பாட்டை மந்தப் படுத்துகிறது. அதனால்நோய்த் தொற்று எளிதாக ஏற்படுகிறது என்று அண்மைய ஆய்வுகள் குறிப்படுகின்றன. சூரிய ஒளியில் இருந்து விட்டமின் D கிடைக்கிறதெனறாலும் மீன் எண்ணெயிலும் செறிவூட்டப்பட்ட பாலிலும் விட்டமின் D மிகுந்துள்ளது.

  விட்டமின் E
  விட்டமின் E தொடர்பான பல ஆய்வுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. தடுப்பாற்றலை உயர்த்துவதில் விட்டமின் E பெரும் பங்கு வகிக்கிறது என்று பல ஆய்வர்கள் கூறுகின்றனர். 60 வயதுக்கு மேற்பட்ட 120 பேருக்கு கணிசமான அளவில் விட்டமின் E தரப்பட்டுக் கண்காணிக்கப்பட்ட போது அவர்களது தடுப்பாற்றல் சக்தி ஏறக்குறைய 35 அல்லது 40 வயதுடையவர்களின் தடுப்பாற்றல் சக்தியை ஈடு செய்ய வல்லதாக இருந்தது என்கிறார் டாக்டர் விண்டா எட்வர்டு. இளம் வயதுடையோரும் இதனால் பலன் பெறலாம் என்று கூறப்படுகிறது.

  பாதாம், பிஸ்தா, அக்ரூட், நிலக்கடலை போன்ற பருப்புகளிலும் கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய் போன்ற எண்ணெய்களிலும், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட், பச்சைப் பட்டாணி, கீரை வகைகளிலும் விட்டமின் ணி விரவிக் காணப்படுகிறது.

  அயச்சத்து (Iron)

  மனிதர் ஒவ்வொருவருக்கும் தினமும் 10 மி,கி. அயம் அல்லது இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இது உடலின் தடுப்பாற்றல் குறைவுறாதிருக்கும்படி செய்கிறது, இது இறைச்சி, ஈரல், பேரிச்சம்பழம் போன்றவற்றிலுள்ளது. பெரும்பாலும் இரும்புச்சத்துக் குறைவு பெண் மக்களிடையே தான் காணப்படுகிறது.

  மக்னீஷியம் / செலினியம் / துத்தநாகம்

  மினரல்கள் எனப்படும் இந்த மணிச்சத்துக்கள் மூன்றும் மனிதர்களின் தடுப்பாற்றலை மேம்படுத்தி நீடிக்கச் செய்ய வல்லவை. பலவகைப்பட்ட கீரைகள் / கோசுகள், உருளைக்கிழங்கு, தவிடு நீக்காத பல்வகைத் தானியங்கள் கடலுணவுகள் போன்றவற்றில் இம்மணிச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன.

  உடற்பயிற்சி

  தடுப்பாற்றலுக்கும், உடற்பயிற்சிக்கும் என்ன சம்பந்தமென்று பலர் கேட்கக்கூடும். அளவான உடற்பயிற்சிகளினால் உடலின் தடுப்பாற்றல் திறன் ஊக்குவிக்கப்படுகிறதென்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நடைப்பயிற்சி, மெல்லோட்டம், சைக்கிள் விடுதல் போன்ற பயிற்சிகள் தடுப்பாற்றலை உயர்த்துவதோடன்றி, நெடுநாட்களுக்கு அது நிலைக்கும் படியும் செய்கின்றன எடனபதும் ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

  நாளன்றுக்கு 45 நிமிடமும் வாரத்திற்கு 5 நாட்களும் சிலரை நடைப்பயிற்சியில் ஈடுபடச் செய்து பார்த்தபோது ஓடியாடி வேலை செய்யாதவர்களை விடப் பாதி நாட்களே இவர்கள் உடல் நலம் குன்றியிருந்தார்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் போட்டிகள் எதுவுமில்லாத இயல்பான எளிய பயிற்சிகளினால் மட்டுமே ஒருவரது தடுப்பாற்றல் திறன் உயர முடியும் என்கிறார் டாக்டர்.டேவிட் நூமன்.

  எனவே சிறப்பான தடுப்பாற்றலைப் பெற்றிருக்க நாம் ஒவ்வொருவரும் சூப்பர் மேன்களாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. ஓரளவு ஆர்வத்துடன் முயன்றால் எவரும் எளிதாகத் தம்முடைய தடுப்பாற்றலை உயர்த்திக் கொள்ள முடியும். நாம் நமது உடலை எவ்வளவு கருத்தோடு பேணிக் காக்கின்றோமோ அதே அளவு நம் உடலும் நம்மைக் காக்கும்.

  spmeyyammaisp06 and jv_66 like this.

 4. #34
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

  விட்டமின்கள்

  விட்டமின் 'டி'

  Calciferol அதிகமாக உட்கொண்டால் இதர விட்டமின்களை விட பகிரங்கமாக நச்சுப்பொருட்களை உண்டாக்குவது விட்டமின் 'டி'. தினசரி 1.25 மி.கி. (60,000 I.U.) எடுத்துக் கொண்டால் 'ஹைபர்கால்சிமியா' (Hyper calcemia) ஏற்படும். இது ரத்தத்தில் இயற்கைக்கு மாறாக தசை பலவீனம், உணர்ச்சியின்மை, தலைவலி, பசியின்மை, பிரட்டல், வாந்தி, ஹைபர் டென்ஷன், எலும்பு வலி வரும். சிறுநீரக செயல்பாடுகள் விரைவாக பாதிக்கப்படும். இந்த அதிகப்படியான விட்டமின்களை தருவது பெற்றோர்களின் தவறு. குழந்தைக்கு (Hyper calcemia) தாக்கினால் வளர்ச்சி 6 மாதத்திற்கு நின்று விடும்.

  சிகிச்சை

  விட்டமின் 'டி' உட்கொள்வது நிறுத்தப்பட வேண்டும்.

  கால்சியம் குறைந்த உணவு.

  குளூகோகோர்டிசாய்டல் மருந்துகள்.

  விட்டமின் 'சி'

  சாதாரணமாக இந்த விட்டமின்னை உடல் நன்கு ஏற்றுக் கொள்ளும். அதிக அளவு கொடுத்தால் பேதி, களைப்பு, பலவீனத்தை உண்டாக்கலாம். சர்ம நோய்கள் தோன்றலாம்.

  விட்டமின் 'கே'


  இதில் இரு இயற்கை பொருட்கள் உள்ளன. ஒன்று k1- Phytonadione மற்றொன்று k2-Menaquinone- கே1, (Phytonadione) மனிதர்களுக்கு ஊசி மூலம் ஏற்றப்பட்ட போது மார்வலி, டிஸ்பினியா (மூச்சுவிடுவதில் சிரமம்) இதய நோய்கள் உண்டாயின.

  கே2 (Menaquinone) தோலில், சுவாச மண்டல பாதைகளில் எரிச்சலை உண்டாக்கும். சோகையையும் உண்டாக்கும். கல்லீரல் கோளாறுகளை மேலும் தீவிரமாக்கும்.

  தண்ணீரில் கரையும் விட்டமின்கள்


  இந்த வகை விட்டமின்கள் நீரில் கரைவதால், அதிகமாக எடுத்துக் கொண்டால் கூட, அதிகப்படி அளவு, சிறுநீர் மூலம் வெளிவந்து விடும் என்ற கருத்து நிலவி வந்தது. ஆனால் இந்த பிரிவைச் சேர்ந்த விட்டமின் பி6, அதிகமாக எடுத்துக் கொண்டால் எல்லைப்புற நரம்புகள் (Peripheral neuropathy) பாதிக்கப் படும். விட்டமின் பி1 (தியாமின்) அதிகமாக ஊசி மூலம் செலுத்தப்பட்டால் செலுத்தப் பட்டவருக்கு 'அதிர்ச்சி' ஏற்படலாம். விட்டமின் பி3 (நியாசின்) அதிகமானால் தமனிகள் (ரத்தக் குழாய்கள்) விரிவடையும். அரிப்பு ஏற்படலாம். அதிக நாட்கள் கொடுக்கப்பட்டால் கல்லீரல் சேதமடையும்.

  விட்டமின் பி2 (ரிபோஃப்ளாவின்) சிறுநீரை மஞ்சள் நிறமாக்கும் தவிர Methotrexate எனும் செல் மற்றும் புற்றுநோய் மருந்தின் செயல்பாட்டிற்கு இடையூறு விளைவிக்கும்.

  விட்டமின் 'சி' - ஒரு காலத்தில் தீங்கற்ற விட்டமின் என்று கருதப்பட்ட விட்டமின் 'சி' யை தினமும் 1 கிராமுக்கு மேல் உட்கொண்டால் - Hyperoxaluria (சிறுநீரில் கால்சியம் ஆக்ஸலேட் இருப்பது) சிறுநீரகப்பாதைகளில் கற்கள் முதலியன உண்டாகலாம். ஜலதோஷம், கபம், சளி, ஜுரம் இவற்றுக்காக தினம் 4 கிராம் அளவில் விட்டமின் 'சி' கொடுக்கப்பட்டு வந்தவருக்கு சிறுநீரகப்பாதைகளில் 'கற்கள்' உண்டாகின.

  spmeyyammaisp06 and jv_66 like this.

 5. #35
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

  விஷமாகும் விட்டமின்

  விட்டமின்கள் உயிர் சத்துக்கள். உடலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இன்றியமையாதது. விட்டமின், உணவுப் பொருட்களில் காணப்படும் ஒர் இயற்கை ரசாயனப் பொருள். விட்டமின்களில் இரு வகைகள் உண்டு. ஒன்று கொழுப்புச்சத்தில் கரைபவை (விட்டமின் ஏ, டி, இ,கே), மற்றொன்று நீரில் கரையும் விட்டமின்கள் ('பி' பிரிவு விட்டமின்கள், விட்டமின் சி).

  உடலுக்கு சிறிய அளவில் தான் விட்டமின்கள் தேவை. விட்டமின்களெல்லாமே தீங்கற்றவை என்று சொல்ல முடியாது. "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்" என்பது போல, விட்டமின்களும் அதிக அளவில் உட்கொண்டால் அவை விஷமாகும்.

  விட்டமின் ''

  இதன் ரசாயனப் பெயர் Retinol. இதை ஒரு நாள் உட்கொள்ள வேண்டிய அளவு ஆண்கள் - 700 லிருந்து 900 மைக்ரோகிராம் (0.7 முதல் 0.9 மில்லிகிராம்) பெண்கள் - 700 மைக்ரோகிராம் (0.7 மி.கி.) வாரத்தில் 3 (அ) 4 முறை வைட்டமின் 'ஏ' உட்கொண்டால் போதுமானது. அதுவும் டாக்டரின் அனுமதியுடன் உட்கொள்ள வேண்டும்.

  விட்டமின் '' அதிகமானால்

  டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபிக் டி.வி. சேனல்களில், துருவக் கரடி (Polar bear) யை பார்த்திருப்பீர்கள். வெள்ளை, மஞ்சள் நிறத்தில் கொழு கொழுவென்று இருக்கும் பெரிய கரடி அது. இந்த கரடியின் எந்த பாகங்களை அங்குள்ள எஸ்கிமோக்கள் சாப்பிடுகிறார்களோ இல்லையோ, அதன் 'லிவரை' (கல்லீரல் - Liver)மட்டும் அவர்கள் தொடமாட்டார்கள்!

  எஸ்கிமோக்களின் வாகனமான "ஸ்லெட்ஜ்ஜை" (Sledge) இழுக்கும் நாய்கள் கூட இந்த துருவக் கரடியின் கல்லீரலை சாப்பிடாது காரணம் துருவக் கரடியின் லிவரில் உள்ள விட்டமின் 'ஏ' - இதன் அளவு எவ்வளவு தெரியுமா?

  ஒரு கோடி I.U. (International Unit)! (I.U. - 1 மை.கிராம்) ஒரு சராசரி மனிதனின் தினசரி தேவை அதிகபட்சமாக 5000 I.U. துருவ கரடியின் லிவரை உட்கொண்டால், தலை சுற்றல், வாந்தி முதலியவை உண்டாகி, உண்டவரில் புறத்தோல் முழுவதும் உரிந்து போய்விடும். அதிக அளவு விட்டமின் 'ஏ' யை தொடர்ந்து நீடித்த நாட்கள் உட்கொண்டால் உடலில் நச்சப்பொருட்கள் உருவாகும். இது Hypervitaminosis 'n'. எனப்படுகிறது. இரத்த ப்ளாஸ்மா (நிணநீர்) வில் ரெடினால் 100 மி.கி./டெ.லிக்கு அதிகமானால் Hypervitaminosis 'n' தாக்குதல் என்று பொருள்.

  அதிக அளவு விட்டமின் ஏ உட்கொள்வது குழந்தை, சிறுவர் சிறுமிகளை அதிகம் பாதிக்கும். குழந்தைகளுக்கு அதிக அளவு விட்டமின் 'ஏ' சேருவதின் காரணம் - பெற்றோர்கள் தான். குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற பேராவலில் 'மீன் எண்ணெய்'யை அதிகம் கொடுப்பதால் நன்மைகளை விட தீமை அதிகமாகும். குறைந்த அளவில் (7.5லிருந்து 15 மி.கி.) ரெடினால் 30 நாள்கள் கொடுக்கப்பட்ட குழந்தைகள் உடலில் நச்சுப்பொருட்கள் உண்டாகி விடுகிறது.

  தினமும் 500 மி.கி. உட்கொண்ட பெரியவர்களுக்கும், 100 மி.கி. சிறுவர்களுககும், 30 மி.கி. ஒரு குழந்தைக்கும் கொடுக்க, அதுவே விஷத்தை உருவாக்கி விடுவது தெரியவந்துள்ளது.

  அறிகுறிகள்

  தூக்கக் கலக்கம், மயக்கம், தொடர்ந்து தூங்குவது, கடுமையான தலைவலி, கல்லீரல் வீக்கம், 24 மணி நேரம் கழித்து தோல் உரிதல்.

  சருமத்தில் அரிப்பு, தோல் வெடிப்பு, உலர்ந்த அழுகிய சர்மம், தலைமுடி கொட்டுதல், உதட்டில் வெடிப்பு.

  பசியின்மை, எலும்புகள் விகாரமடைதல், எலும்புகளில் வலி, மென்மையாதல், நலிவடைதல், பற்சிதைவு.

  ஆயாசம், எரிச்சல் படுவது, உதிரப்போக்கு.

  முதல் சிகிச்சை ரெநாய்ட் (வைட்டமின் ஏ) உட்கொள்வதை நிறுத்த / குறைக்க வேண்டும். 1 வாரத்தில் அறிகுறிகள் மறையும். தோல் பாதிப்புகள் குறைய சில மாதங்களாகும். கல்லீரல் நிரந்தரமாக பாதிக்கப்படலாம். விட்டமின் ஏ வின் உற்ற தோழன் விட்டமின் 'டி' இரண்டும் சேர்ந்தே உட்கொள்ளப்படுகின்றன.

  இதனால் ஹைபர்விட்டமினோசிஸ் அறிகுறிகளில் சில விட்டமின் 'டி' யால் உண்டாக்கப்பட்டிருக்கலாம். குழந்தைகளை பொருத்த வரையில், குழந்தையின் தாய் கர்ப்பமாக இருக்கும் போது முதல் 3 மாதங்களில் 7.5 லிருந்து 12 மி.கி. ரெடினால் உட்கொண்டு வந்திருந்தால், குழந்தை பிறவிக்கோளாறுகளால் பாதிக்கப்படலாம். எனவே டாக்டரால் பரிந்துரைக்கப்பட்ட அளவை கர்ப்பிணிகள் கடைபிடிக்க வேண்டும்.

  விலங்குகளில் நடத்திய சோதனையில், விட்டமின் 'இ' விட்டமின் 'ஏ' உண்டாக்கிய நச்சுகளை குறைக்கிறது என்பது தெரியவந்துள்ளது. எனவே விட்டமின் ஏ உள்ள மருந்துகள், டானிக்குகளில் விட்டமின் 'இ'. சிறிதளவு சேர்க்கப்படுகிறது. கர்ப்பிணிகள் உடலில் கொழுப்புடன் விட்டமின் 'ஏ' சேர்ந்து தேங்கி விடுகிறது.

  இவர்களின் உடலிலிருந்து நஞ்சான ரெடினாய்டுகளை நீக்கி 2 வருடங்களாவது ஆகலாம். தவிர ஆண்களும் 'சுய மருத்துவம்' செய்து கொண்டு அளவுக்கு மீறி விட்டமின் 'ஏ' உண்பது தவறு.

  jv_66 likes this.

 6. #36
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

  தோழிகளே நான் இனணயத்தில் படித்த வைட்டமின் தொடர்பான கட்டுரைகளை உங்களுடன் பகிர்ந்துளேன் ,உங்களுக்கும் பயனுளதாக இருக்கும் என்று நம்புகிறேன்

  spmeyyammaisp06 and jv_66 like this.

 7. #37
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: வைட்டமின்

  ஏன் கூடுதலாக வைட்டமின் பி தேவை ஏற்படுகிறது.

  1. வைட்டமின் பி குறைபாடு ஆசியர்களிடையே பொதுவானது, ஏழை மக்களின் நிலை பணக்கார்களைவிட நன்றாக உள்ளது.

  2. இன்று, வைட்டமின் பி குறைப்பாடு நமது உணவு பழக்கம் தொடர்பானதாகிறது.

  3. 1970 களில், ஆண்கள் சராசரியாக நாள் ஒன்றுக்கு 6000 கலோரி எரிக்கும் ஆற்றல் தேவைப்பட்டது, பெண்கள் 4000-5000 கலோரி எரிக்கும் ஆற்றல் தேவைப்பட்டது, அதேசமயம், இன்று பல்வேறு தீடீர் உணவு அதிகரித்தமையால், ஆண் சராசரி 2000-2800 கலோரி எரிக்கும் ஆற்றலையும, பெண்கள் 1000-1200 கலோரி எரிக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளனர்.

  4. வைட்டமின் பி, குறைப்பாட்டினால் மக்கள் விரைவில் முதுமை அடைய காரணமாகிறது.

  5. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிக பற்றாக்குறை நீண்ட காலத்திற்கு தொடருமேயானல் மரணம் ஏற்படலாம்.

  6. வைட்டமின் பி குறைபாட்டின் முன் அடையாளம் இருதய பிரச்சனையாக இருக்கிறது.

  7. ஆழ்ந்த தூக்கம் வைட்டமின் பி அழிவை மெதுவாக்க முடியும்.

  8. மன அழுத்தத்தின் போது, வைட்டமின் பி, அதிக அளவில் உடலில் குறையும்.

  9. தண்ணீர், காப்பி அதிகம் குடிக்க வைட்டமின் பி அதிக அளவில் உடலில் குறையும்.

  10. தண்ணீர், பீர் மற்றும் குளிர் பானங்கள் வைட்டமின் பி இழப்பை உண்டுபன்னும்

  11. சல்பாமில்லாமிட் (Sulfamilamide) மற்றும் ஸ்ட்ரெப்டோமைசின் போன்ற மருந்து சிறு
  குடலில் உள்ள பாக்டீரியாவை அழித்துவிடுவதால் வைட்டமின் பி குறைபாடு நோய்
  ஏற்படும்

  12. நாம் ஒரு தனி வைட்டமின் பி சாப்பிடுவதால் மற்ற வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்
  வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

  13. கோலீன் மற்றும் வைட்டமின் B6 கொழுப்பை குழம்பாக மாற்றும்.

  14. வைட்டமின் பி 12 பற்றாக்குறை காரணங்கள் மாதவிடாய் வெளிப்படுதல் குறைக்கப்
  படுகின்றது அல்லது நின்றும்விடலாம், ஆனால் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் (
  ஃபோலிக் அமிலம் ) மாத்திரை துணையுடன் நிவாரணம் கிடைக்கும்.

  15. வைட்டமின் பி1 கொசு கடிப்பதை தடுக்க முடியும். வியட்நாம் யுத்தத்தின் போது
  இந்த கூற்று தெளிவாக நிருபிக்கப்பட்டுள்ளது.

  16. வைட்டமின் B6 பற்றாக்குறை 80% டிரிப்தோபன் இழப்புக்கு காரணம்.

  17. நீரிழிவு நோயிக்கு வைட்டமின் B6 குறைப்பாடு ஏற்படக்கூடாது.

  18. நீரிழிவுக்கு முக்கிய காரணியாக மஞ்சள் யூரிக் அமிலம் இருக்கிறது.

  19. சிறுநீரில் யூரிக் அமிலம் காணப்படுகிறது என்றால், உடலில் கணையம்
  சேதமடைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

  20. பெரும்பாலான மருந்துகள் பென்சிலின் போன்றவை, உடலில் யூரிக் அமிலத்தை
  அதிகரிக்க முடியும்.

  21. அதிக பென்சிலின் மருந்துகள் பயன்பாடு, அதிக மஞ்சள் யூரிக் அமிலம் கூட்டுகிறது.
  இந்த நிலையினை வைட்டமின் பி குறைக்க முடியும்.

  22. நீரிழிவு நோயாளிக்கு ஏற்படும் மஞ்சள் யூரிக் அமிலத்தை கணிசமான அளவில் தினசரி
  15mg B6 வைட்டமின் உட்கொள்வதால் குறைக்கலாம்.

  23. வைட்டமின் B6 குறைபாடு உள்ளதா என்று சிறுநீர் யூரிக் அமிலம் சோதனை வழி
  தீர்மானிக்க முடியும்.

  24. உடலில் போதுமான அளவில் மெக்னீசியம் இருப்பின், வைட்டமின் B6 உட்கொள்ளும்
  அளவை குறைக்கலாம்.

  25. இன்சுலின் பற்றாக்குறை, சர்க்கரை செல்களினால் உறிஞ்சப்பட முடியாது. எனவே நம்
  உடலில் சக்தி உற்பத்திக்கு கொழுப்பையே நம்பியிருக்கிறது. இதனால் இரத்த கொழுப்பு
  அதிகரிக்கும்.

  26. வைட்டமின் B6 கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் முக்கிய மூலப்பொருளாக உள்ளது .

  27. புரதம், பேண்டோதெனிக் அமிலம் மற்றும் வைட்டமின் B2 குறைப்பாடு இன்சுலின்
  உற்பத்தியை பாதிக்கும்.

  28. வைட்டமின் பி குறைப்பாடு இருப்பின், நாக்கில் மாற்றங்கள் தென்படும், குறிப்பாக
  நாக்கில் வெடிப்பாகும்.

  29. நீண்ட கால வைட்டமின் பி குறைப்பாடு இருப்பின், நாக்கில் சுவை மொட்டுகள்
  "உறைந்த நிலை" வெட்டப்பட்டது போன்றும் மற்றும் பிளவு இருக்கும்.

  30. நாக்கின் நிறம் ஊதா அல்லது இளஞ்சிவப்பாக இருப்பின் வைட்டமின் B2
  பற்றாக்குறையின் அறிகுறியாகும், மென்மையான மற்றும் பளபளப்பான நாக்கு இருப்பின்
  வைட்டமின் பி12 அல்லது ஃபோலிக் அமிலம் பற்றாக்குறையை குறிக்கிறது, சிவப்பு
  இரத்த நிறமாகயிருப்பின் நியாஸின் அமிலம் பற்றாக்குறையை குறிக்கிறது, நாக்கு
  பெரியதாகவும் தடித்திருந்தால் பேண்டோதெனிக் அமிலம் பற்றாக்குறையை குறிக்கிறது,
  வாய் உஷ்ணமாக இருப்பின் வைட்டமின் B6 பற்றாக்குறையை குறிக்கிறது,

  31. வைட்டமின் பி மற்றும் மக்னீசியம் குறைபாடு இன்சோம்னியாவை ( இரவில் தூங்க
  முடியாது) ஏற்படுத்தும்.

  32. படை மற்றும் தடித்தல் போன்ற தோல் சம்பந்தமான நோய்கள் வைட்டமின் பி
  குறைபாட்டினால் ஏற்படலாம்.

  33. நமது உடலில் லெசத்தின் உற்பத்திற்கு கோலைன், மெக்னீசியம், பி வைட்டமின்கள்
  மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் அவசியம்.

  34. அதிகமாக மது பானம் அருந்தவோர் அவசியம் வைட்டமின் பி மாத்திரைகள்
  உட்கொள்ள வேண்டும்.

  35. வைட்டமின் பி குறைப்பாடு இரைப்பை அமிலம் மற்றும் என்சைம்கள் குறைக்கும்.

  36. அதே நேரத்தில் சில குறிப்பிட்ட பி வைட்டமின்கள் குறைவாகயிருப்பின், இரத்த சோகை
  ஏற்படும்.

  37. ஒவ்வாமை வைட்டமின் B5 குறைபாட்டால் ஏற்படுகிறது.

  38. பசுவின் பாலில் நியாஸின் இல்லை, ஆதலால் பசுவின் பாலை தாய்ப்பாலாக
  கொடுத்தால் குழந்தை வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.


  39. நியாஸின் பற்றாக்குறை மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவை மாறி மாறி
  ஏற்படுகிறது, இது தொடர்ந்து நீண்ட காலத்திற்கு கவனிக்காமல் விட்டால் இறுதியில்
  வயிற்றுப்போக்காக மாறிவிடும்.

  40. வைட்டமின் பி குறைப்பாட்டினால் வயிற்று உப்பிசம் மற்றும் வயிற்றுப்போக்கு
  ஏற்படுகிறது.

  41. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.

  42. வைட்டமின் பி குறைபாடு, தலைச்சுற்றினை ஏற்படுத்தும், யூரிக் அமிலம் அதிகரிக்கும்
  மற்றும் கீல்வாத தாக்கத்தை மோசமாக்க முடியும். பி வைட்டமின்கள் உடலில் இருந்து
  யூரிக் அமிலத்தை யூரியா மற்றும் அம்மோனியா உப்புக்களாக மாற்றி வெளியேற்ற
  முடியும்.

  43. வைட்டமின் பி குறைப்பாடு கர்ப்பிணி பெண்களுக்கு தீங்கை விளைவிக்கலாம். அவற்றில்
  பசியின்மை, எப்போதும் தலைச்சுற்றல், வாந்தி மற்றும் சில.

  44. வைட்டமின் B6 இரத்த மெக்னீசியத்தை தக்கவைத்துகொள்ள உதவும்.

  45. அதே நேரத்தில் வைட்டமின் பி மற்றும் மக்னீசியம் பற்றாக்குறை பாஸ்பேட் கற்களை
  ஏற்படுத்தும்.
  46. வைட்டமின் பி, குறைப்பாடு ஆக்சலேட் கற்களை ஏற்படுத்துகிறது.

  47. வைட்டமின் பி குறைபாடு மனசஞ்சலத்தை ஏற்படுத்தும்.
  48. வைட்டமின் B2 ( lactoflavin ) கண்புரையினை ஏற்படுத்தும்.

  49. வைட்டமின் B2 இல்லாமை வைட்டமின் ஏ போன்றே போட்டோபோபியாவை ஏற்படுத்தும்.

  50. கடுமையான வைட்டமின் B2 பற்றாக்குறை, பிணிக்கையில் இரத்தம் சூழ்ந்துவிடும்.

  51. வைட்டமின் B2, பற்றாக்குறையால் இரு கன்னங்களின் இரத்த நாளத்தில் இரத்த
  அதிகம் படரும். (கன்னங்கள் சிவப்பாக தோன்றும் ).

  52. வைட்டமின் பி பற்றாக்குறை வளர்சிதைவை குறைப்பதால் இதய மின் வரைபடத்தில
  மாற்றங்கள் தென்படும்.

  53. வைட்டமின் B2 பற்றாக்குறையின் காரணத்தால் வாய், நாக்கில் மாற்றங்கள் ஏற்படும்.

  54. வைட்டமின் B2 குறைவினால் கண்ணில் அதிக கண் மலம் உருவாகும்.

  55. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் பற்றாக்குறையால் எளிதில் நோய்கள் தாக்கும்.

  56. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் பற்றாக்குறை எளிதில் சோர்வாக, ஆற்றல் இல்லாமலும்.
  (லாக்டிக் அமிலம் மற்றும் பயுருவிக் அமிலம் கூடும்).

  57. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் பற்றாக்குறை குழப்பமான எண்ணங்கள், மறதி, தலைவலி,
  குமட்டல் மற்றும் ஒவ்வாமை (லாக்டிக் அமிலம் மூளை செல்கள் உடன் இணைந்து).

  58. வைட்டமின் பி, பற்றாக்குறையால் கொழுப்பு எரிக்கும் திறன் குறையும்.
  59. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் பற்றாக்குறையால் மலச்சிக்கல் மற்றும் நியுரிட்டிஸ் ஏற்படும்.
  60. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் தீவிர பற்றாக்குறை காரணம் நியுரிட்டிஸ், டிஜிமினால் நரம்பு
  வலி, ஜுஸ்டர், இடுப்பு நரம்பு வலி ஏற்படும்.

  61. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் குறைபாடு ஜீரண அவையத்தை பாதிக்கிறது.

  62. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் குறைபாடு கணையத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

  63. மது பி வைட்டமின்கள், கோலைன் மற்றும் அமினோ பன்தோதேனிக்களை
  குறைத்துவிடும், எனவே, கொழுப்பு பன்மடங்கு அதிகரிக்கும்.

  64. வைட்டமின் பி மணிக்கட்டில் ஏற்படும் வலியினை குறைக்கும்.

  65. உடலின் அவசர இழப்பு, அட்ரீனல் சுரப்பிகள் உலர்த்துதல் இதன் காரணத்தால்
  குழுக்கோமா ஏற்படுகிறது. இதனை நிவாரணம் பெற கார்டிசோன், புரதம், வைட்டமின்
  பி, சி, மற்றும் இ யினை அதிகரிக்க வேண்டிய அவசியம்.

  65. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் முதியோர்களின் பார்வையினை மேம்படுத்த முடியும்.

  66. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.

  spmeyyammaisp06 and jv_66 like this.

 8. #38
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

  உங்களுக்கு ஏன் வைட்டமின் பி 12 பற்றாக்குறை ஏற்படுகிறது, அதனை எப்படி நிவர்த்தி செய்வது.
  (NaturalNews) தற்சமயம் வைட்டமின் பி 12 இன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிற்கும் வைட்டமின் பி 12 பயன்படுகிறது. வைட்டமின் பி 12 குறைபாடு முன்பு கருதப்பட்டதை விட மிகவும் அதிகமாக காணப்படுகிறது, மற்றும் குறைந்த வைட்டமின் பி 12 அளவுகள் மற்ற பல நோய்களின் அறிகுறிகள் பிரதிபலிக்கும்.

  பெரும்பாலான தொழில் முறை சுகாதார நிபுணர்கள் தங்கள் நோயாளிகளுக்கு குறைந்த வைட்டமின் பி 12 யால் நேரிடக்கூடிய நோயிக்கான அறிகுறிகளுக்கு ஒரு காரணம் கருதவில்லை. மேலும், பொதுவான குருதிநீர்ப் பாயம் சோதனை போதுமான உயர்குறியீட்டை காட்டலாம், ஆனால் நேரிடக்கூடிய அது அநேகமாக மனித-செயலற்று பி 12, இது உங்கள் செல்கள் அல்லது எதுவும் பாதிப்புஇல்லை. என்று குறிப்பிடப்படுகிறது.

  முழு சைவ மற்றும் சைவ உணவு உண்பவர்கள் பி 12 குறைபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்றாலும், அது இறைச்சி உண்கின்றவர்களிடமும் ஏற்படுகிறது. கொலோரெலா தவிர, மனித-செயலில் பி 12 வைட்டமின் தாவர உணவுகளில் மிக குறைவாகஉள்ளது.

  சிறிய குடல்களில் உள்ள இயற்கையான காரணி கிடைக்கவில்லை என்றால் இறைச்சி, முட்டை, மற்றும் பால் போன்ற அனைத்து வழக்கமான பி 12 வைட்டமின்கள் நிறைந்த உணவுகளும் பயனற்றதாகிவிடும். சிறிய குடல்களில் உள்ள இயற்கையான காரணி உணவுகளில் இருந்து பி 12 பிரித்தெடுக்கும் சிறப்பு புரதம் உள்ளது மற்றும் இரத்த அதை ஜீரணித்து கொள்ளும்.

  இறைச்சி மற்றும் பால் சார்ந்த பொருட்கள் சாப்பிடுவோருக்கும் வைட்டமின் பி 12 குறைபாடு இருந்து விலக்கு இல்லை. அதனால் தான்,சோர்வு, மனச்சோர்வு, மனக்கலக்கம், மற்றும் இரத்த சோகை வழக்கமான அறிகுறிகளாகும். இன்னும் அதிக உடல் மற்றும் நரம்பியல்வெளிப்பாடுகள் பொதுவாக வழக்கமான அறிகுறிகள் விட அறியப்படுகிறது.

  எந்த வகை உணவுகள் சாப்பிட்டாலும், மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதத்திற்கு வைட்டமின் பி 12 குறைபாடு இருப்பதாகமதிப்பிடப்பட்டுள்ளது.


  இந்த அகபக்கத்தில் (Vegalicious - Plant Based Diet Made Easy) பட்டியலிடப்பட்டுள்ள எந்த அறிகுறிகள் தனக்கு இருப்பதாக கண்டறிப்பட்டாலும், அவர்கள்சரியான சோதனை மற்றும் சத்துணவில் கவனம் செலுத்த வேண்டும்.

  jv_66 likes this.

 9. #39
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: வைட்டமின்

  சிறந்த பி 12 சோதனை மற்றும் சத்துணவு பெறுதல்

  குருதிநீர்ப்பாயம் சோதனை பொதுவாக இரண்டு வகையான பி 12, மனித-செயலற்ற மற்றும் மனித-செயலில் எண்ணிக்கையை கண்டறியபயன்படுத்தப்படும். ஒரே மனித-செயலில் பி 12 கணக்கிடப்படும். உங்கள் இரத்த நீர்ப்பாயம் சோதனை சாதாரண அல்லது 150 க்கு 200அல்லது மேல் இருப்பது நல்லது, மற்றும் நீங்கள் இன்னும் குறைந்த ஆற்றல் மற்றும் மோசமான ஆரோக்கிய பாதிப்புகான அறிகுறிகள்இருந்தால் மறைமுக சோதனை மேற் கொள்ள வேண்டும்.

  சிறுநீர் சோதனையில் மெத்தில்மலோனிக் அமிலத்தின் (mma) அதிக அளவில் மிகவும் துல்லியமாக இருக்கும். மெத்தில்மலோனிக் அமிலத்தின் (mma) அளவில் அதிக இருந்தால் பி 12 வளர்சிதை குறைவாக இருக்கும்.

  உயர் ஹோமோசைஸ்டீன் அளவுகள் இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். மறைமுக அறிகுறிகளாக, mma மற்றும்ஹோமோசைஸ்டீன் இரண்டும் பி 12 அளவுகளில் தொடர்புக் கொண்டுள்ளது.

  பி 12 மூன்று வகைகள்
  உள்ளன: சயனோகோபாலமின், ஹட்ரோக்சி கோபாலமின், மற்றும் மெத்தில்கோபாலமின். இந்த மூன்றிலும்,நிபுணர்கள் மெத்தில்கோபாலமின் மிகவும் நன்மை பயக்கும் என்பதை ஒத்துக் கொள்கிறார்கள்.

  எனினும், மிகவும் பொதுவாக சத்துணவாகவும், மருத்துவர்கள் ஊசி வழி பயன்படுத்தப்படும் பி 12 சயனோகோபாலமின் மோசமாகவும்உள்ளது. இது பி 12 உட்கிரகித்து தன்மயமாக்க அவசியமாகும் உடலின் மீத்தைல் குழுக்கள் எதிர்விளைவுண்டாக்கி குறைப்பதாககாணப்பட்டுள்ளது.

  மெத்தில்கோபாலமின் வைட்டமின் பி 12 தேவைப்பட்டால், இரத்த நேரடியாக உறிஞ்சு ஒரு உடல் இணைப்பு அல்லது நாவின் கீழ் அமைந்துள்ள மாத்திரையை எடுத்து கொள்ளலாம். இது பெரும்பாலும் பி 12 ஜீரணம் தாமதப்படுத்துவதற்கு என்று செரிமானசிக்கல்களை தவிர்க்க உதவும்.

  பிரிட்டன் டாக்டர் பி 12 சிகிச்சை உண்மையான வாழ்க்கை முடிவுகளை ஏற்க மருத்துவ அதிகாரிகளை வலியுறுத்துகிறது
  பிரிட்டன் முதன்மை நல மருத்துவர் டாக்டர் ஜோசப் சாண்டி பி 12 ஊசி மூலம் பல நூறு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளார். அவரது நோயாளிகள் இருவர் பிபிசி அறிக்கையில் இடம்பெற்றுள்ளனர். ஒரு செலரோஸில் (எம்எஸ்) இருப்பதாகதவறாக கண்டறியபட்டுள்ளது மற்றவருக்கு சிகிச்சையளிக்கப்படாத நரம்பு கோளாறு காரணமாக முழு வழுக்கை எற்பட்டுள்ளது
  டாக்டர் ஜோசப் சாண்டி இரத்த சீரம் பி 12 அளவு 150 (சாதாரண?) மற்றும் 300 க்கு மேல் உள்ள நோயாளிகளுக்கு மலிவான பி 12 ஊசிமூலம் கொடுத்தது, மருத்துவ அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. இந்த குறிப்பு பி 12 சீரம் சோதனையில் ஏற்படும் பற்றாக் குறைகளாலுக்கு நல்ல உதாரணம் ஆகும்.

  அவரது எளிய சிகிச்சைகள் நம்பிக்கையற்ற நோயாளிகளின் 'வாழ்வை வளப்படுத்த உதவியுள்ளது. ஆனால் பிரிட்டன் மருத்துவ அதிகாரத்துவம் இரட்டை குருட்டு போலி மருந்து சோதனை செய்து முடிவு தெரியும் வரை அவரது பயன்பாடுகளை நிறுத்த வலியுறுத்தினார்.

  டாக்டர் சாண்டி அவரது ஆதாரம் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்ட முடிவுகள் என்று வாதிட்டார். அவர் இரட்டை குருட்டு போலி மருந்து சோதனை செய்து முடிவு வரை அவரது நோயாளிகளுக்கு உதவி செய்வதை நிறுத்த விரும்பவில்லை, அல்லது அவர் குருட்டு போலி மருந்து குழு பி 12 மறுக்கவில்லை. (கீழே உள்ள வீடியோ, மூல)
  பி 12 வைட்டமின் அதன் முக்கியத்துவம் மற்றும் சத்துணவாக கொள்ள சுற்றியுள்ள அறியாமை கருத்தினை களைய, நாமே பொறுப்பு ஏற்க வேண்டும்.

  jv_66 likes this.

 10. #40
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

  Thanks for all these details. very useful

  chan likes this.
  Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter