Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree41Likes

வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?


Discussions on "வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?" in "Health" forum.


  1. #41
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    மன அழுத்தத்தையும் உருவாக்குது வைட்டமின் குறைபாடு!

    சோர்வாக உணர்கிறீர்களா?
    அடிக்கடி கை கால்களில் வலியா?
    சிறிய வேலையில் கூட கவனம் செலுத்த முடியவில்லையா?
    உடல் பலவீனமாக இருப்பது போல தோன்றுகிறதா?
    உங்களுக்கு இந்த நோயா? அந்த நோயா?
    என்று விளம்பரங்கள் பயமுறுத்துகின்றனவா?
    பயப்படாதீர்கள்...
    வைட்டமின் குறைபாடு கூட உடல் சோர்வையும் மன அழுத்தத்தையும் உருவாக்கும் என்கிறார் சென்னை மெட்ரோபோலிஸ் லேப் தலைவர் டாக்டர் அனிதா சூர்யநாராயணன். குறிப்பாக வைட்டமின் பி12 குறைபாடு என்னென்ன பிரச்னைகளை உருவாக்கும் என விளக்குகிறார் அவர்.

    இன்றைய இளைஞர்களின் ஃலைப்ஸ்டைல் பெருமளவில் மாறிவிட்டது. பலர் சரியான நேரத்துக்கு சாப்பிடுவதில்லை. இளம்பெண்களோ டயட் என்ற பெயரில் உணவின் அளவையே குறைத்துவிடுகிறார்கள். இதெல்லாம் தவறான அணுகுமுறை. உடற்பயிற்சிகள் மூலம் மட்டுமே படிப்படியாக எடையை குறைக்க வேண்டும். அதுவே உடல்நலத்துக்கு நல்லது. சாப்பிடாமலே இருந்து திடீரென 10 கிலோ எடை குறைப்பதென்பது சத்துக் குறைபாட்டை ஏற்படுத்திவிடும். துரித உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கும் வைட்டமின் குறைபாடு ஏற்படும். காலை உணவை தவறவிடாமல் 9 மணிக்குள் சாப்பிடுவது அவசியம்.

    சரியாக காலை உணவை சாப்பிடாதவர்களுக்கு நீரிழிவு பிரச்னை வர வாய்ப்பிருக்கிறது. வைட்டமின், இரும்புச்சத்துகள் உடலில் குறைந்தால் சோர்வாகக் காணப்படுவார்கள். ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு குறையும். இதனால் வேலையில் கவனம் செலுத்த முடியாது. சில இளம்பெண்கள் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வலி என்பார்கள். சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமல் இருப்பதால் ஏற்படும் நெஞ்செரிச்சலே இதற்கான காரணம். குறிப்பாக... பச்சைக்காய்கறிகள், பழங்கள், பசலைக்கீரை, பருப்பு வகைகள், உலர் பழங்கள் ஆகிய வைட்டமின் நிறைந்த பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

    எங்கள் பரிசோதனைக்கூடத்துக்கு பல பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து ஃப்ரீ எம்ப்ளாய்மென்ட் செக்கப்புக்கு இளைஞர்கள் வருகிறார்கள். இதில் ஆண்கள் பலருக்கு வைட்டமின் பி12 குறைபாடு உள்ளது. இளம்பெண்கள் பலரும் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்து அனீமியா குறைபாட்டுடன் காணப்படுகிறார்கள். காபி நிறையக் குடிப்பவர்களுக்கும் உடலில் வைட்டமின்கள் உறிஞ்சப்படுவது குறையும். உடல் சோர்வாக காணப்பட்டாலோ, மன அழுத்தம் ஏற்பட்டாலோ, ஏதேனும் நோயாக இருக்குமோ என நாமே கற்பனை செய்ய வேண்டிய அவசியமில்லை. உரிய மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.

    பரிசோதனைக்கு வருகிறவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தி வைட்டமின்களில் எது குறைவாக உள்ளது என்பதைக் கண்டுபிடிக்கலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் 12-14 கிராம்கள் இருக்க வேண்டும். இதற்குக் குறைவாக இருந்தால் அவருக்கு ரத்தசோகை இருக்கிறது என்று அர்த்தம். வைட்டமின் குறைபாடு என்று வைட்டமின் பி12 மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவார்கள். இதுவும் கூடாது. இதிலுள்ள சத்து சிறிதளவே உடலால் உறிஞ்சப்படும். இயற்கையான உணவு களில் வைட்டமின்கள் கொட்டிக்கிடக்கின்றன.
    மீன், முட்டை, ஈரல், பால் போன்ற உணவுப்பொருட்களில் தேவையான அளவு வைட்டமின் பி12 உள்ளது.

    தோல் நீக்கப்படாத சிவப்பரிசியிலும் வைட்டமின் பி12 உண்டு... என வைட்டமின்களின் அவசியம் குறித்துப் பேசும் டாக்டர் அனிதா, மன அழுத்தத்தையும் சோர்வையும் உருவாக்குவதில் வைட்டமின் பி12 குறைபாட்டின் பங்கு குறித்தும் விளக்குகிறார். நமது நரம்புகளுக்கும் மூளைக்கும் தேவையான செல்களை இயங்க வைப்பதில் வைட்டமின் பி12க்கு முக்கிய பங்குண்டு.

    அதனால் வைட்டமின் பி12 குறைபாடானது உடல் சோர்வு, மன அழுத்தம், மறதி நோய் போன்ற மூளை மற்றும் நரம்பு சார்ந்த நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது.
    குடல் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கும் கேஸ்டரைடிஸ் எனப்படும் வாயுப் பிரச்னை உள்ளவர்களுக்கும், பெர்னிஸியஸ் அனீமியா எனப்படும் ரத்தசோகை நோய் உள்ளவர்களுக்கும், எடை குறைய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் வைட்டமின் பி12 சத்து உடலில் உறிஞ்சப்படும் அளவு குறையும் குறைபாடு ஏற்படும்.

    அதிகமாக மது அருந்துபவர்கள், நோய் எதிர்ப்புத் திறனில் பிரச்னை உள்ளவர்கள், நீண்ட காலமாக மருந்து, மாத்திரைகள் எடுத்து வருபவர்களுக்கும் வைட்டமின் பி12 குறைபாடு உருவாகும். சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடும் தாய்மார்களின் குழந்தைகளுக்கும் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு.

    வைட்டமின் பி12 குறைபாடு அதிகமாவதால் ஏற்படும் ரத்தசோகைக்கு வைட்டமின் பி12 டெஃபிஷியன்சி அனீமியா என்று பெயர். இதற்கு சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் இன்னும் பல பிரச்னைகள் உருவாகும். சோர்வு, பலவீனமாக உணர்தல், சருமம் வெளிரிப் போதல், நாக்கு அடிக்கடி உலர்தல், பல் துலக்கும் போது ஈறுகளில் ரத்தம் வருதல், எடை திடீரெனக் குறைவது, மலச்சிக்கல், பசி எடுக்காமல் இருக்கும் நிலை ஆகியவை இதன் அறிகுறிகளாகும். வைட்டமின் பி12 குறைபாட்டினை நீக்க பல எளிய சிகிச்சைகள் உள்ளன.

    அனீமியா உள்ளவர்கள் வைட்டமின் பி12 ஊசி எடுத்துக்கொள்வதன் மூலம் இதனை சரிசெய்யலாம். அசைவ உணவு சாப்பிடாதவர்கள் இயற்கையான காய்கறிகளில் எதில் வைட்டமின் பி12 அதிகமாக உள்ளது என தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். கடல் உணவுகளான மீன், இறால், நண்டு, நத்தை போன்றவற்றில் வைட்டமின் பி12 போதுமான அளவு உள்ளது. ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனைப் பெற்று சாப்பிடுவதும் நல்ல பலன் தரும்...




    Sponsored Links
    spmeyyammaisp06 likes this.

  2. #42
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின்

    வைட்டமின் பி நிறைந்த வாழைப்பூ

    1. தினமும் வாழை இலையில் உணவு சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பாகும். மந்தம், இளைப்பு போன்றவை நீங்குவதுடன் பித்தம் தணியும்.

    2. வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இதை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் குடல் புண், ரத்தபேதி, மூலநோய், பெண்களுக்கு மாத விடாய் வயிற்றுவலி ஆகியவை குணமாகும்.

    3. வாழை தண்டுசாறுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே இதை நீர் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும் தேவையற்ற உடல் பருமனைகுறைக்கும் இதை உலர்த்திபொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாவதுடன்கல்லீரல் வலுப்பெறும்.

    4. வாழை பிஞ்சு, காயினால் ரத்த மூலம், ரத்தக்கடுப்பு, வயிற்றுப்புண் நீரழிவு நோய்நீங்குவதுடன் உமிழ்நீர் அதிகம் சுரத்தல், உடல்வெப்பம், இருமல் தணியும்.

    5. அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புண் வராது. உடல் தோல் பளபளப்பாகும். பெண்களுக்கு மாத விலக்கு சீராகும். அறிவு விருத்தியாகும். இத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட பெரும்பாடு குணமாகும். வாழை பழத்துடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும்.




  3. #43
    spmeyyammaisp06 is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    663

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    very useful infos,
    THANK YOU friend.


    chan likes this.

  4. #44
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின்

    சூரியனின் ஒளி தருமே சூப்பரான வைட்டமின்!

    சூரியன் உதிக்கையில் துயில் கலைந்து ஏர் கலப்பையுடன் கழனிக்கு சென்ற காலமெல்லாம் மலையேறி விட்டது. காலை 9 மணிக்கு அலுவலகம் சென்று ஏ.சி. அறையில் அமர்ந்து பணிபுரிந்து விட்டு, இருள் கமழ்ந்த மாலையில் வீடு திரும்பும் இந்த நவீன யுகத்தில் சூரியனுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பே அற்றுப்போய் விட்டது. சூரிய ஒளி பட்டாலே கருப்பாகி விடுவோம் என்று முகத்தைப் போர்த்திக் கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி இது!

    மனித உடலைக் கட்டமைக்கும் கம்பிகளாக விளங்கும் எலும்புகளின் வலிமைக்கு வைட்டமின் டி அத்தியாவசியம். இந்த வைட்டமினின் 90 சதவிகித அளவு சூரிய ஒளியிலிருந்தே கிடைக்கிறது. வைட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் இதனை களைவதற்கான ஆலோசனைகளையும் பொது மருத்துவர் வினோத் பிரேம் ஆனந்திடம் கேட்டோம்.பி, சி போன்ற வைட்டமின்கள் பற்றி அறிந்த அளவு டி வைட்டமின் குறித்து பலருக்கும் தெரியாது. வைட்டமின் டிக்கு சன்ஷைன் வைட்டமின் என்கிற பெயரும் இருக்கிறது.

    ஏனெனில், சூரிய ஒளி இதற்கு மிகமிக அவசியம். மனித உடலுக்கு நாளொன்றுக்கு 400-600 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் டி தேவைப்படுகிறது. இது குறைபடும்போது எலும்பு வலுவிழந்து ஆஸ்டியோ பொரோசிஸ், ஆஸ்டியோமலாசியா ஆகிய பிரச்னைகள் ஏற்படு கின்றன. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியோர் களுக்கு வைட்டமின் டி மிக மிக அவசியம். மற்ற வைட்டமின்களை போல வைட்டமின் டிக்கு மாத்திரைகள் எதுவும் தேவையில்லை. சூரிய ஒளியை உள்வாங்குதல் மட்டுமே இதற்கு தீர்வாக அமையும்.

    சூரிய வெளிச்சமே படாத குளிர்பிரதேச மக்களுக்கு வைட்டமின் டி குறைபாடு பெருமளவில் இருக்கும். இந்தியா வெப்ப மண்டல நாடு என்பதால் நம்மால் இயன்ற வரையிலும் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அதற்காக உச்சி வெயிலில் நிற்கும் அவசியமெல்லாம் இல்லை. அலுவலகமோ, வீடோ - சூரிய ஒளி உட்புகும் அளவு சூழலை உருவக்கினாலே போதும். வாகனம் ஓட்டிச் செல்லும்போது கைக்கு உறையணிந்து, முகத்தையும் முழுதாக போர்த்திக் கொண்டு செல்வதால் சூரிய ஒளி கிடைப்பது தடைபடும். சில சமூகத்தினர் உடல் முழுக்க மூடும் கருப்பு உடை அணிந்து செல்வதால், தேவையான அளவு சூரிய ஒளி கிடைக்காமல் போகும்.

    சூரியன் உதிக்கும் நேரத்திலோ, சூரியன் மறைவதற்கு முன்போ நடைப்பயிற்சி மேற்கொள்வது வைட்டமின் டியை பெற வசதியாக இருக்கும் என்கிற டாக்டர், வைட்டமின் டி லேப் ரிப்போர்ட் குறித்தும் கூறுகிறார்.உலகிலேயே ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் எலும்பு மிகவும் வலிமையானது. ஆனால், லேப் ரிப்போர்ட்டின் அடிப்படையில் அவர்களில் பலருக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கிறது. எப்படி என்கிறீர்களா? வைட்டமின் டி யின் ஒரு பிரிவான Free Bio Available Vitamin D தான் எலும்புக்கான வலிமையைக் கொடுக்கக் கூடியது.

    இதன் அளவு 0.03க்கும் குறைவாக இருந்தால்தான் வைட்டமின் டி குறைபாடு என்றாகி விடும். இத்தனை ஆண்டுகளாக உலகளவில் அனைத்து நாடுகளிலும் வைட்டமின் டி குறித்த ரத்தப் பரிசோதனையில் 85 சதவிகிதம் Attached With Vitamin D Protein, 15 சதவிகிதம் Attached With Vitamin D Albumin என்று இந்த அளவுகளுக்கு குறைவாக இருத்தலே வைட்டமின் டி குறைபாடாக கணக்கிடப்பட்டு வருகிறது. இது தவறு என்பது குறித்து உலக மருத்துவக் கருத்தரங்குகளில் விவாதம் நடைபெற்று வருகிறது. அதனால், லேப் ரிப்போர்ட்டை அடிப்படையாக வைத்து ஒருவருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதாக கணக்கிடக் கூடாது. எலும்பு வலிமையை சோதித்த பின்னரே முடிவு செய்ய வேண்டும் என்கிறார்.

    வைட்டமின் டி சத்து கிடைக்க எந்தெந்த உணவுகளை உட்கொள்ளலாம் என உணவியல் நிபுணர் வினிதா கிருஷ்ணனிடம் கேட்டோம்.கடல் உணவுகளில் Herring, Salmon ஆகிய மீன்களை தினமும் 90 முதல் 95 கிராம் வரை சேர்த்துக் கொள்ளும்போது 400 International Unit வைட்டமின் டி கிடைக்கிறது. மற்றபடி அனைத்து வகையான மீன்களிலும் குறிப்பாக ஆழ்கடல் மீன்களில் அதிகளவில் வைட்டமின் டி கிடைக்கிறது. முட்டை, ஈரல், பன்றிக்குடல், பால் ஆகியவற்றிலிருந்தும் கிடைக்கிறது. கர்ப்பிணிகள் நாளொன்றுக்கு 800 மி.லி. பால் எடுத்துக்கொள்வது அவசியம்.

    சைவம் உண்பவர்கள் சோயா பனீர், சோயா மில்க், காளான் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். மீன் எண்ணெய் மாத்திரைகளிலிருந்தும் வைட்டமின் டி கிடைக்கிறது. வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு தேன் கலந்து குடித்து விட்டு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். தேன் உடலிலுள்ள கொழுப்பை உருக்கி விடும். சூரிய ஒளி படும்போது அந்தக் கொழுப்பு வைட்டமின் டி ஆக உருமாறும் என்கிறார் வினிதா.


  5. #45
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    வைட்டமின் நிறைந்த உணவு பொருட்கள்

    வைட்டமின் ஏ- பால், முட்டை, கேரட், மீன், பப்பாளி, பி1- ஈஸ்ட், முழு தானியங்கள், பயறுகள், ஈரல் பி2- கோதுமை, முட்டை, பால், ஈரல், ஈஸ்ட் பி6- ஈஸ்ட், மாமிசம், ரொட்டி, பட்டாணி

    பி12- ஈஸ்ட், பால், முட்டை

    சி- புளித்த பழங்கள்

    டி- சூரிய ஒளி, வெண்ணெய்

    ஈ- முளைவரும் கோதுமை, கீரை, பால்

    கே- முட்டைகோஸ், பச்சை பட்டாணி, காய்கறிகள்

    நெல்லிக்காயில் அதிகம் காணப்படும் வைட்டமின் சி கேரட், மீன், எண்ணெயில் உள்ள வைட்டமின் ஏ வடிகஞ்சி கரைசலில் உள்ளது ஸ்டார்ச் முட்டையின் வெள்ளைக்கருவில் காணப்படும் உணவுச்சத்து புரோட்டின் எண்ணெய் பொருட்களில் அதிகம் காணப்படுவது கொழுப்பு கீரைகளில் இரும்புசத்து அடங்கியுள்ளது. வெல்லத்தில் இரும்புசத்து அதிகமாக உள்ளது.

    இரும்பு சத்து நிறைந்த உணவுகள்: முருங்கை கீரை மற்றும் மூளைக்கீரை அகத்திகீரை, புளிச்சகீரை, மற்றும் அரைக்கீரை முள்ளங்கிக்கீரை மற்றும் காலிபிளவர் கீரை

    காய்கள்: பாகற்காய், சுண்டக்காய், கொத்தவரை, பீன்ஸ் போன்ற காய்கள்

    பழங்கள்: மாதுளம் பழம், சப்போட்டா, தர்பூசணி, அன்னாசிப்பழம் போன்ற கனிகள் உலர்ந்த திராட்சை, பேரீச்சம் பழம் உலர்ந்த பழ வகைகள்.


  6. #46
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின்

    ஊனம் தவிர்க்கும் வைட்டமின்-- வைட்டமின் "ஹெச்(H)"

    உங்களுக்கு செல்போன் "ஹச்" தெரிந்திருக்கும். வைட்டமின் "ஹெச்" தெரியுமா? தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் மருத்துவ உலகமே இப்போதுதான் இந்த வைட்டமினின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளது.


    இத்தனைக்கும் இந்த வைட்டமின் கண்டுபிடிக்கப்பட்டது 1916-ம் ஆண்டில்! ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பேட்மேன் எனும் அறிவியலாளர்தான் இதனைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பில் ஒரு சுவாரசியம் உண்டு. ஜெர்மன் நாட்டில் 1900-ம் ஆண்டு வாக்கில் நாடு முழுவதும் கோழிக்குஞ்சுகளுக்கும் எலிகளுக்கும் திடீரென்று தோலில் பல்வேறு அழற்சி நோய்கள் உண்டாயின. இது ஒரு சத்துக்குறைவு நோய் என்று மட்டும் ஆரம்பத்தில் புரிந்தது. அவற்றுக்குப் பல சத்துணவுகளைக் கொடுத்துப் பார்த்தார், பேட்மேன். இறுதியில் வேகவைத்த கோழிமுட்டைகளைக் கொடுத்ததும் அந்தத் தோல் நோய்கள் சரியாயின. உடனே கோழிமுட்டையை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். கோழிமுட்டையின் வெள்ளைக் கருவில் உள்ள ஒரு வகை வைட்டமின்தான் இதற்குக் காரணம் என்பதை பேட்மேன் உறுதி செய்தார்.

    ஜெர்மன் மொழியில் ஏஹன்ற் என்றால் "தோல்" என்று பொருள். ஆகவே, அந்த வார்த்தையின் முதல் எழுத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இதற்கு "வைட்டமின்-ஹெச்" என்று பெயரிட்டார். நோய்வாய்ப்பட்ட கோழிக்குஞ்சுகளுக்கு முட்டை தந்து நோயைக் குணப்படுத்துவதற்குச் செலவு அதிகமானதால் இந்த வைட்டமினைத் தனியாகப் பிரிக்க முடியுமா என யோசித்தார் பேட்மேன். அவரால் இயலவில்லை. அவரைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்த கோர்க் எனும் அறிவியலாளர் 1930-ல் முட்டையின் கருவிலிருந்து இந்த வைட்டமினைப் பிரித்தெடுத்து வெற்றி கண்டார்.

    இதனைத் தொடர்ந்து 1940-ல் மனிதனின் கல்லீரலில் இது உள்ளது என்பதும் தெரியவந்தது. இறுதியாக 1943-ம் ஆண்டில் அமெரிக்காவில் இந்த வைட்டமினைச் செயற்கையாகவும் தயாரிக்கத் தொடங்கினர். காலப்போக்கில் ஆங்கில அகரவரிசையில் இருந்த எல்லா வைட்டமின்களுக்கும் புதிய பெயர்கள் சூட்டப்பட்டபோது, வைட்டமின்-ஏ "ரெட்டினால்" என்றும் வைட்டமின்-சி "அஸ்கார்பிக் அமிலம்" என்றும் புதிய பெயர்களைப் பெற்றபோது, வைட்டமின்-ஹெச் "பயாட்டின்" என்ற நாமகரணத்தைப் பெற்றது.

    பயாட்டின் விலங்குகளுக்கு மட்டுமன்றி மனித இனத்திற்கும் தேவைப்படுகின்ற முக்கியமான வைட்டமின் என்பது இருபதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில்தான் மருத்துவர்களுக்குப் புரிந்தது. தண்ணீரில் கரையும் வைட்டமின் வகையைச் சேர்ந்த இது, வைட்டமின் "பி" தொகுப்பில் உள்ள எட்டு முக்கிய வைட்டமின்களில் ஒன்று. உடலில் கார்பாக்சிலேஸ் நொதிகளுடன் இணைந்து இது செயலாற்றுகிறது. உணவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்துகள் உடலில் பல்வேறு வேதிமாற்றங்களை அடைவதற்கு இந்த வைட்டமின் அவசியம். கார்போஹைட்ரேட்டிலிருந்து கிளைக்கோஜனைத் தயாரிப்பதற்கும், இரும்புச்சத்தும் புரதச்சத்தும் இணைந்து "ஹீமோகுளோபின்" எனும் நிறமிப் பொருள் உருவாவதற்கும் இது தேவைப்படுகிறது.

    புரதச்சத்திலிருந்து அமினோ அமிலங்களைத் தயாரிக்கவும், கொழுப்பிலிருந்து கொழுப்பு அமிலங்களைத் தயாரித்து, உடலின் எலும்பு வளர்ச்சிக்கும் தசை வளர்ச்சிக்கும் முறைப்படி விநியோகிக்கவும் துணைபுரிவது இந்த வைட்டமின்தான். ஆரோக்கியமான முடி வளர்ச்சி மற்றும் நக வளர்ச்சிக்குத் தேவையான நொதிகளைத் தருவதும், ரத்தத்திலும் பிற உடல் அணுக்களிலும் வேதிவினைகள் நடக்கும்போது அங்கு தேவைப்படுகின்ற கரியமில வாயுவைச் சுமந்து செல்வதும் இதுவே. உணவின் வளர்சிதைமாற்றப் பணிகள் பலவற்றில் இது துணைநொதியாகச் செயலாற்றி உடலுக்குச் சக்தியைத் தருகிறது; அது மட்டுமல்லாமல் அதிகப்படியாக உள்ள சக்தியைத் தசைகளில் சேமித்து வைக்கிறது. இவை அனைத்தும் முன்பே கண்டறியப்பட்ட உண்மைகள்.

    அண்மைக்கால ஆராய்ச்சியின்படி கர்ப்பிணிகளுக்கு பயாட்டின் வைட்டமின் மிகவும் அத்தியாவசியமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. "சாதாரணமாக நடுத்தர வயதில் உள்ளோருக்கு இந்த வைட்டமின் நாளொன்றுக்கு 150 முதல் 200 மைக்ரோகிராம் வரை தேவைப்படுகிறது. கர்ப்ப காலத்தில் இதன் தேவை நாளொன்றுக்கு 300 மைக்ரோகிராம் என்று அதிகரிக்கிறது. இந்த அளவு கண்டிப்பாகக் குறையக் கூடாது. அப்படிக் குறைந்தால் கருவில் வளரும் குழந்தைக்குப் பிறவியிலேயே ஊனம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டாகிவிடும்" என்று "அமெரிக்கன் ஜெர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன்" ஓர் ஆய்வு அறிக்கையில் உறுதிபடக் கூறியுள்ளது.

    குறிப்பாக, குழந்தைகளுக்குப் பிறவியிலேயே உதடு, அண்ணம் ஆகியவற்றில் பிளவு ஏற்படுவதற்கு இந்த வைட்டமின் பற்றாக்குறை முக்கியக் காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது. அடுத்து, வளர்ச்சி குறைந்த கை, கால்களுடன் குழந்தை பிறப்பதற்கும் முதுகுத்தண்டின் அடிப்பாகத்தில் முதுகெலும்பு பிளவுபடுவதற்கும் இந்த வைட்டமின் பற்றாக்குறை ஒரு காரணமாக இருக்கலாம் என்பதும் அமெரிக்காவில் ஓர் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்ட முடிவாகும். கர்ப்ப காலத்தில் பயாட்டின் மருந்து சாப்பிட்டவர்களின் குழந்தைகளுக்கு இந்த ஊனம் ஏற்படுகின்ற வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளது என்பதும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    சரி, பயாட்டின் அளவு குறைவாக உள்ளது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? இதற்கு ஒரு சிறுநீர்ப் பரிசோதனை உள்ளது. கர்ப்பிணியின் சிறுநீரில் 3-ஹைட்ராக்சி ஐசோவெளிரிக் அமிலம் அளவுக்கு மீறி வெளியேறுகிறது என்றால் அவருக்கு பயாட்டின் அளவு குறைந்துள்ளது என்று பொருள். மேலும் பயாட்டின் பற்றாக்குறை உள்ள கர்ப்பிணிகளுக்கு கடுமையான தசைவலி உண்டாகும்; அடிக்கடி உடல் களைப்படையும்; உளச்சோர்வு உண்டாகும்; ரத்தசோகை ஏற்படும்; தலைமுடி உதிரும்; நகத்தில் வெள்ளைக்கோடுகள் காணப்படும்.

    நாம் சாதாரணமாக உண்கின்ற அரிசி, கோதுமை, ஓட்ஸ் போன்ற தானியங்களிலும், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, சோயா, வேர்க்கடலை போன்ற பருப்பு வகையிலும், பால், இறைச்சி, முட்டை, கல்லீரல், காளான், காலிஃபிளவர் ஆகியவற்றிலும் பயாட்டின் நமக்குத் தேவையான அளவுக்கு உள்ளது. ஆகவே சரிவிகித உணவைச் சரியான அளவில் சாப்பிடும் கர்ப்பிணிகளுக்கு இந்தப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.

    வழக்கமாக கர்ப்பிணிகள் தாய்க்கும் சேய்க்குமாகச் சேர்த்து இரண்டு மடங்கு உணவு உண்ண வேண்டும். ஆனால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் மசக்கை காரணமாக வாந்தி மற்றும் தலைச்சுற்றல் வருமென்பதால் 50 விழுக்காடு கர்ப்பிணிகள் சத்துள்ள உணவுகளைத் தேவையான அளவுக்கு உண்பதில்லை. இதனால் இவர்களுக்குப் பயாட்டின் அளவு குறைந்துவிடுகிறது.
    இன்னொன்று, நம் சிறுகுடலில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்கள் இந்த வைட்டமினைச் சிறிதளவு தயாரிக்கின்றன.

    அதே வேளையில் கர்ப்பிணிகள் சளி, இருமல், தடுமம் போன்ற தொல்லைகளுக்கு மருத்துவரை ஆலோசிக்காமல் தாங்களாவே நுண்ணுயிர்கொல்லி மருந்துகளை வாங்கி அடிக்கடி சாப்பிட்டால் சிறுகுடலில் உள்ள இந்த பாக்டீரியங்கள் அழிந்துவிடும். பயாட்டின் வைட்டமின் இவர்களுக்குக் கிடைக்காமல் போகும்.
    இறுதியாக ஒன்று, பச்சை முட்டை சாப்பிட்டால் உடலுக்கு அதிகமாகச் சத்து கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை நம்மிடம் உள்ளது. ஆனால், ஆபத்தும் அதில்தான் உள்ளது. முட்டையின் வெள்ளைக்கருவில் "அவிடின்" எனும் புரதப் பொருள் உள்ளது. இது பயாட்டினோடு இணையும் போது சிறுகுடலில் பயாட்டின் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. அதேநேரத்தில் முட்டையை வேகவைத்துவிட்டால் அந்த வெப்பத்தில் அவிடின் செயலற்றுப் போய்விடும். முட்டையில் உள்ள பயாட்டின் சத்து முழுமையாக உடலில் சேரும். ஆகவே கர்ப்பிணிகள் வேகவைத்த முட்டையைச் சாப்பிடுவதே நல்லது.




    Attached Thumbnails Attached Thumbnails வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?-food_vitamin_spl.jpg  

  7. #47
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின்

    உடல் எடையை குறைக்க உதவும் 9 சிறந்த வைட்டமின்கள்!!!

    உடல் எடையை குறைக்க, கடுமையான உடல் எடை குறையும் முறையை கையாள வேண்டும். அதற்காக தீவிரமான உடற்பயிற்சியையும், ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் உண்ண வேண்டும். இவைகள் மட்டும் போதுமா? வேறு வழிகள் ஒன்றும் இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது!

    உடல் எடையை குறைத்து, ஆற்றல் திறனை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைத்து, கொழுப்பை எரித்து, செரிமானத்தை சீராக்க என பல உதவிகளைப் புரிகிறது வைட்டமின்கள். ஆனால் அதற்காக உடற்பயிற்சியையும், ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் விட்டு விட வேண்டும் என்றில்லை.

    அதனுடன் சேர்த்து முக்கிய வைட்டமின்களையும் சேர்த்துக் கொண்டால், எடையை குறைக்க முயலும் போது சுலபமாக இருக்கும். இதோ உடல் எடையை குறைக்க உதவும் 9 வைட்டமின்கள் பற்றிய ஒரு பார்வை. இதில் ஒருசில கனிமங்களும் அடங்கும்.


    வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்
    வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் என்பது
    8 வகை வைட்டமின் பி-க்களைகொண்டுள்ளதாகும். இது நம் உடலில் பல வகைகளில் வேலை செய்கிறது. உடல் எடையை குறைக்க, அவை தீவிரமாக உதவிபுரிகிறது. அதற்கு காரணம் உடல் கார்போஹைட்ரேட்டை ஆற்றல் திறனாக மாற்ற இது உதவிபுரிகிறது. மேலும் ஈரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, செரிமானத்திற்கு துணை புரிந்து கொழுப்பை குறைக்கவும் இதுஉதவும். அதிகமாக உண்ணுவதால் ஏற்படும் மன அழுத்தத்தை நீக்கவும் இது துணை நிற்கும்.ஆகவே கீரைகளை அதிகம் உட்கொண்டால், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் குறைபாட்டில் இருந்து விடுபடலாம்



    வைட்டமின் டி
    உடல் எடை குறைப்பு ஆய்வுகளில் பங்கேற்றவர்களில் ஆறுதல் மருந்து எடுத்துக் கொண்டவர்களை விட, வைட்டமின் டி கொண்ட உணவுகளை எடுத்து கொண்டவர்கள் தான் அதிக எடையை இழந்தனர். அதே போல் வைட்டமின் டி-யை குறைவாக எடுத்தவர்களை விட அதிகமாக எடுத்தவர்கள் தான் அதிக அளவில் எடை குறைந்துள்ளனர். வைட்டமின் டி கால்சிய ஈர்ப்பை அதிகரிப்பதால், அது உடல் எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது. வைட்டமின் டி சத்தானது மீன், காளான் போன்றவற்றில் அதிகம் நிறைந்துள்ளது.



    Attached Thumbnails Attached Thumbnails வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?-14-1381751472-1-greens-600.jpg   வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?-14-1381751499-2-fish-600.jpg  
    Last edited by chan; 12th Mar 2015 at 02:37 PM.

  8. #48
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    உடல் எடையை குறைக்க உதவும் 9 சிறந்த வைட்டமின்கள்!!!

    வைட்டமின் சி
    உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை குறையும். அதனுடன் சேர்ந்து வைட்டமின் சி-யும் அதற்கு துணை புரியும். அதனால் ஆற்றல் திறன் அதிகரித்து, கலோரிகள் எரிக்க உதவும். அதே சமயம் வைட்டமின் சி-யை அதிகமாக எடுத்துக் கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியாது என்று விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் கூறுகிறது. இருப்பினும் வைட்டமின் சி குறைபாடு இருந்தால், அது மெட்டபாலிச செயல்பாட்டை குறைத்து, உடல் எடையை அதிகரித்துவிடும். சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன.


    கால்சியம்
    கால்சியத்திற்கும் உடல் எடை குறைவுக்கும் சம்பந்தம் உள்ளது என்று ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளது. இதில் சில முரண்பாடுகள் இருந்த போதிலும், கால்சியம் மற்றும் கால்சியம் அடங்கிய பொருட்கள் உடல் எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது என்று பல ஆய்வுகள் கூறுகிறது. மேலும் கொழுப்புகளை உடைத்து அதை சேமித்து வைப்பதில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். கால்சியம் சத்தைப் பெற பால் பொருட்களை அதிகம் உட்கொண்டால், கால்சியம் குறைபாடு நீங்கிவிடும்.



    குரோமியம்

    உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களை செயல்நிறுத்த உதவி புரிவதால்
    , உடல் எடை குறைப்புக்கு குரோமியம் கண்டிப்பாக தேவைப்படுகிறது. மேலும் அதுஇன்சுலினுடன் சேர்ந்து குளுக்கோஸ் மற்றும் ஆற்றல் திறன் உற்பத்திக்கு உதவிபுரிகிறது. இத்தகைய குரோமியம் சோளத்தில் அதிகம் நிறைந்துள்ளது



    கோலின்

    கோலின் என்பது ஒரு வைட்டமின் கிடையாது. ஆனால் இந்த அதிமுக்கியஊட்டச்சத்து வைட்டமின் பி-யுடன் சேர்க்கப்பட்டிருக்கும். கொழுப்புகளை செயலற்றதாகமாற்ற இது உதவுவதால் உடல் எடை குறைவதற்கும் இது உதவும். இது இல்லையென்றால், கல்லீரலில் கொழுப்புகள்தேங்கி, மெட்டபாலிச செயல்பாடுதடைபட்டு போகும். சோயாவில் கோலின் என்னும் சத்தானது அதிகம் நிறைந்துள்ளதால், அதனை உட்கொள்வது நல்லது



    Attached Thumbnails Attached Thumbnails வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?-14-1381751608-6-soya-600.jpg   வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?-14-1381751582-5-corn-12-600.jpg   வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?-14-1381751556-4-milkproductsd-600.jpg   வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?-14-1381751531-3-oranges-6600.jpg  

  9. #49
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின்

    உடல் எடையை குறைக்க உதவும் 9 சிறந்த வைட்டமின்கள்!!!

    ஜிங்க்

    தைராய்டு மற்றும் இன்சுலின் சீரமைப்பு திறம்பட செயல்படுவதற்கு ஜிங்க் அவசியமான ஒன்றாக விளங்குகிறது. இவை இரண்டில் ஏதாவது ஒன்று சரிவர செயல்படவில்லை என்றால் கூட போதும், மெட்டபாலிச செயல்பாடு வெகுவாக தடைபட்டுவிடும். அதனால் ஜிங்க் குறைபாட்டை தவிர்த்தால், தேவையற்ற உடல் எடையை குறைக்கலாம். அனைவருக்குமே ஜிங்க் சத்து கடல் சிப்பியில் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். ஆகவே இதனை தவறாமல் உணவில் சேர்த்து வாருங்கள்.



    மாங்கனீசு
    கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு, மெட்டபாலிசத்தை எரிக்க உதவுவதால், உடல் எடை குறைப்புக்கு மாங்கனீசு பெரிதும் துணையாக நிற்கும். மாங்கனீசு சத்து அன்னாசி பழத்தில் அதிகம் நிறைந்திருக்கிறது.



    மக்னீசியம்
    மக்னீசியம் குறைபாடு இருந்தாலும் கொழுப்பை எரிப்பதிலும், உடல் எடை குறைவதிலும், இயலாமை ஏற்பட்டுவிடும். மேலும் இது உடம்பின் ஹைட்ரேஷன் அமைப்பு மற்றும் ஆற்றல் திறன் உற்பத்தியிலும் கூட முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே சரியான மெட்டபாலிக் அளவை பெற இது கண்டிப்பாக தேவைபடுகிறது. அதனால் இது இல்லாமல் மெட்டபாலிச செயல்பாடு கடினமாக மாறிவிடும். மக்னீசியம் குறைபாடு வராமல் இருக்க வேண்மெனில், பூசணிக்காய் மற்றும் அதன் விதைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.





  10. #50
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின்

    @Dangu sir pls check out this thread


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter