Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree41Likes

வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?


Discussions on "வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?" in "Health" forum.


  1. #51
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    Re: வைட்டமின்

    தோல் புற்றுநோயை தடுக்கும் வைட்டமின் ஏ

    தினசரி வைட்டமின் ஏ எடுத்துக் கொண்டால் தோல் புற்றுநோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



    உலகம் முழுவதும் பல்வேறு புற்றுநோயால் அவதிப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. புற்றுநோயை நிரந்தரமாக தடுக்க மருந்து கண்டுபிடிப்பதில் பல நாடுகளும் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றன.

    வடக்கு கலிபோர்னியாவில் உள்ள கெய்சர் பெர்மனன்ட் என்ற ஆய்வு மையம், புற்றுநோய் தாக்குதல் பெரும்பாலும் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளது.

    இதற்காக 70 ஆயிரம் ஆண், பெண்களை தெரிவு செய்து ஆய்வில் இறங்கியது. அவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் எடுக்கப்பட்டன.

    உணவு முறைகள் மாற்றப்பட்டன. குறிப்பாக பல்வேறு பரிசோதனைகளுக்கு பின்னர் வைட்டமின் ஏ சத்தை உணவாகவும் மருந்தாகவும் கொடுத்து ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தனர்.

    இவர்களில் பலருக்கு ஏ சத்து குறைவாக வழங்கப்பட்டது. இந்த ஆய்வில் அன்றாடம் வைட்டமின் ஏ எடுத்துக் கொண்டவர்களுக்கு தோல் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்தனர்.

    அனைத்து விதமான சத்துகளும் அடங்கிய ஊட்ட சத்துள்ள உணவும் இத்தகைய பாதுகாப்பை அளிப்பது கண்டறியப்பட்டது. வைட்டமின் ஏ சத்துகள் குறைவாக இருந்தால் தோல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தோன்றுவதையும் கண்டுபிடித்தனர்.

    குறிப்பாக பெண்களை எளிதில் தோல் புற்றுநோய் தாக்காமல் இருக்க வைட்டமின் ஏ உள்ளிட்ட சரிவிகித ஊட்ட சத்துணவு அவசியம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், ரெடினால் என்ற வைட்டமின் ஏ மூலப்பொருள் குறையும் போது புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

    இந்த இழப்பை சரிசெய்வதன் மூலம் புற்றுநோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். பால், கேரட், முட்டை உள்ளிட்டவற்றில் வைட்டமின் ஏ மற்றும் ரெடினால் மூலப்பொருள் அதிகம் உள்ளது. இவற்றை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.




    Sponsored Links
    jv_66 likes this.

  2. #52
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    விரைவில் கருத்தரிப்பதை தூண்டும் வைட்டமின்

    திருமணம் ஆன உடனே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தம்பதிகளின் பெற்றோர் விரும்புவர். சில காலம் சந்தோஷமாக இருந்துவிட்டு பின் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று இப்போதுள்ள இளைய தலைமுறையினர் விரும்புகிறார்கள்.

    ஆனால் குழந்தைப்பேறு என்பது நாம் எண்ணிய வண்ணம் நடக்காது. உடல், மனம், சூழல், ஆரோக்கியம், தாது, கரு, கருமுட்டை, எனப் பல்வேறு காரணிகள் கருத்தரிப்பதற்குத் துணை செய்ய வேண்டும். மேலும் தற்போதுள்ள ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், பலர் கருத்தரிக்க முடியாமல் இருக்கின்றனர்.

    ஏனெனில் இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள், வலிமை குறைந்து, மன அழுத்தம் அதிகரித்து, நல்ல இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவாறு இருக்கின்றன. எனவே, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால், சில ஆலோசனைகளை பின்பற்றி வந்தால் போதுமானது. அவை.. சூரிய வெளிச்சமானது, விட்டமின் டி-யை உற்பத்தி செய்யவும், கருத்தரிக்கும் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.

    இது ஆண், பெண் என இருபாலாருக்குமே தான். மேலும் பெண்களுக்கான பாலின ஹார்மோன்களான மாதவிலக்கை நெறிப்படுத்தும், புரோஜெஸ்டிரோன் மற்றும் கருவுறும் திறனைக் கட்டுப்படுத்தும் ஈஸ்டிரோஜென் ஆகியவற்றின் அளவை அதிகரிக்க விட்டமின் டி உதவுகிறது என்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

    குறிப்பாக விட்டமின் டி-யானது, ஆண்களின் விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. பதட்டமும், மன அழுத்தமும், பெண்களின் கருவுறும் தன்மையை வெகுவாகப் பாதிப்பதோடு, ஆண்களின் உயிரணு உற்பத்தி வீதத்தையும் மட்டுப்படுத்துகின்றன. மேலும், பாலியல் இச்சையையும் குறைக்கின்றன.

    முழுக் கொழுப்புள்ள பாலை, பெண்கள் தினமும் பருகி வந்தால், மலட்டுத்தன்மையானது 25% க்கு மேல் குறைந்ததாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பெண்களின் கருமுட்டைப்பைகள் நன்கு வேலை செய்ய, இந்த பால் கொழுப்புக்கள் உதவுகின்றன



    jv_66 likes this.

  3. #53
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    வயதை குறைத்துக் காட்ட வழி இருக்கு!

    வாவ் வைட்டமின்
    ஒவ்வொரு வைட்டமினுக்கும் சில சிறப்பு குணங்கள் உள்ளன. ஆன்டி ஏஜிங் காரணியாக செயல்படும் காரணத்தால் பெண்களிடையே பெருமவுசு பெற்று வரும் வைட்டமின் இயின் சிறப்புகளை இங்கே பார்ப்போம்...



    வைட்டமின் இ கொழுப்பில் கரையக்கூடியது. இது சிறந்த ஆன்டிஆக்சிடன்டாக செயல்பட்டு சருமத்தில் சுருக்கத்தை வரவைக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸ் காரணிகளை தடுக்கிறது. வைட்டமின் இ சத்து போதுமான அளவு உள்ளவர்களின் சருமம் சுருக்கம் ஏற்படாமல் பொலிவாக காணப்படும். வைட்டமின் இ உடலில் சுரக்கும் என்சைம்களை ஊக்குவிக்கிறது.

    ஜீன்களின் செயல்பாடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு களின் செயல்பாடுகளிலும் இதன் பங்கு முக்கியமானது. செல்களுக்கு இடையே தகவல் பரிமாற்றத்துக்கும், வளர்சிதை மாற்றத்துக்கும் உதவுகிறது.

    புரோட்டின் கைனேஸ் என்னும் என்சைமை சரியான முறையில் சுரக்கச் செய்து மிருதுவான தசைகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. காயங்களின் போது ஏற்படும் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தி ரத்தத்தை எளிதில் உறையவைக்கிறது. புண்களை விரைவில் ஆற்றும் செயலைச் செய்கிறது. திசுக்களில் ஏற்படும் சேதாரத்தைத் தடுத்து, புதிய செல்கள் உருவாக உதவுகிறது. நல்ல கொழுப்புகளை உடலில் தங்கவைக்கிறது. உடலுக்கு நன்மை செய்யும் பாலிசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களை ஆக்சிடேசன் ஆகாமல் தடுக்கிறது.

    வைட்டமின் இ குறைந்தால், உடலில் எதிர்ப்பு சக்தி குறையும். நரம்பியல் சார்ந்த நோய்கள் வரும். ரத்தம் உறையும் தன்மையும் குறையும். சருமப் பிரச்னைகள் அதிகரிக்கும். முதுமை நோய்கள் அதிகரிக்கும்.இக்குறைபாட்டை சரிசெய்ய மாத்திரைகளைவிட இயற்கையாக உணவுப் பொருட்கள் மூலம் கிடைக்கும் வைட்டமின் இதான் சிறந்தது.

    கோதுமையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் பருப்பு மற்றும் எண்ணெய், ஹேசல்நட், கிரீன் டீ, பசலைக்கீரை, பீட்ரூட் இலைகள், டர்னிப் இலைகள், பப்பாளி, மாம்பழம், தக்காளி, வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் அவகடோ போன்றவற்றில் வைட்டமின் இ இருப்பதால் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


    jv_66 likes this.

  4. #54
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    வெயிலுக்கு வாங்க! சூரியனுக்கு ஓ போடுங்க..

    டாக்டர் ரவி சுப்பிரமணியம்

    பள்ளிக் காலங்களில் தப்பு செய்தால் தண்டனையாக, வகுப்பறைக்கு வெளியே வெயிலில் முட்டி போடச்சொல்வார்கள். அதே போல இன்னும் சில வருடங்களில் நம்மில் பலர் தினமும் வெயிலில் ஒரு மணி நேரம் நின்றே ஆக வேண்டும் என்ற தண்டனையை நமக்கு நாமே கொடுக்க வேண்டியதிருக்கும். ஏன் என்கிறீர்களா? வைட்டமின்- டி குறைபாடுதான்.


    நமது உடலில் எலும்புகளின் கட்டுமானம் சரியாக இருந்தால்தான் நாம் நிற்க, நடக்க, ஓட என எந்த வேலையையும் செய்ய முடியும். எலும்புகளின் கட்டுமானம் சரியில்லை என்றால் நம்மால் எழுந்திருக்கக்கூட முடியாது. எலும்பின் வளர்ச்சிக்கு கால்சியம் முக்கியமானது.

    இந்த கால்சியத்தை எலும்பு கிரகிக்க உதவுவது வைட்டமின்- டி. ஒருவர் உணவின் மூலம் கால்சியம் சத்தை மட்டும் எடுத்துக்கொண்டிருந்தால் போதாது. வைட்டமின்- டி இல்லையென்றால் கால்சியம் நமது எலும்புகளில் தங்காமல் வெளியேறிவிடும்.

    இன்சுலின் சுரக்க, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, இதய நோய்கள் வராமல் தடுக்க வைட்டமின்- டி கண்டிப்பாகத் தேவை.

    நம் உடலில் தினமும் புதிய செல்கள் உற்பத்தியாகும், பழைய செல்கள் அழியும். எலும்பு செல்களிலும் இது நிகழும். இப்படி தினமும் புதுப்புது எலும்பு செல்கள் உற்பத்தியாவதை ஆஸ்டியோபிளாஸ்ட் (Osteoblast) என்றும், அழிவதை ஆஸ்டியோகிளாஸ்ட் (Osteoclast) என்றும் அழைப்பர்.

    தினமும் எலும்பு உற்பத்தி ஆவதற்கும், வளர்ச்சிக்கும் வைட்டமின்- டி கட்டாயம் தேவை. வைட்டமின் -டி இல்லாதபோது எலும்பு நலிவடையும். சூரிய ஒளியில் இருந்து வரும் பல்வேறு கதிர்களில் புற ஊதாக் கதிர்-பி என்ற கதிர் நமது தோல் வழியாக உடலுக்குள் செல்கிறது.

    பிறகு கல்லீரல் வழியாக சிறுநீரகத்துக்குச் சென்று 1,25 டை-ஹைட்ராக்சி வைட்டமின் -டி
    (1,25 Dihydroxy Vitamin-D) ஆக மாறுகிறது. இது கால்சியத்தைக் கிரகித்து எலும்பின் கட்டுமானத்துக்கு உதவுகிறது. வைட்டமின் -டி கிடைப்பதற்காக மருந்து, மாத்திரைகள், பழங்கள், காய்கறிகள் என எதையும் வாங்கிச் சாப்பிட வேண்டியதது இல்லை.

    தினமும் அரை மணி நேரம் சூரிய ஒளி உடலில் பட்டாலே போதும். காலை 7.30 முதல் 9 மணி வரையிலும் மாலை 4.30 முதல் 5.30 மணி வரையிலும் இருக்கும் சூரிய ஒளிதான் உடலுக்கு நல்லது. இந்தத் தருணத்தில் வாக்கிங், ஜாகிங், சூரிய நமஸ்காரம் போன்ற உடற்பயிற்சிகள், அரை மணி நேரம் செய்வதன் மூலம் வைட்டமின்- டி சத்து உடலுக்குக் கிடைப்பதோடு, தசைகள் வலிமை பெறும், எலும்பு உறுதியாகும். உணவில் மீன், முட்டை ஆகிய பொருட்களில் மிகவும் சிறிதளவு வைட்டமின் -டி உள்ளது.

    குறைபாடு யாருக்கு வரும்?


    அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலியக் கண்டங்களில் வசிப்பவர்கள் உடலில் சூரியஒளி, போதுமான அளவு படாது. இதனால் அங்கே வைட்டமின் -டி குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இந்தியா போன்ற வெப்பம் தகிக்கும் நாட்டில் வைட்டமின்- டி குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டேசெல்கிறது. இரவா, பகலா, வெயிலா, மழையா எனத் தெரியாமல் ஏ.சி அறையில் அமர்ந்து வேலைபார்க்கும் நபர்களுக்குத்தான் அதிக அளவு வைட்டமின் -டி குறைபாடு இருக்கிறது. வயதாகும்போது பலரும் தடுக்கி விழுந்து, படுத்த படுக்கையாகிவிடுவதையும், முதுகில் கூன் விழுவதையும் நாம் பார்க்கிறோம். இதற்கு வைட்டமின் -டி குறைபாடும் முக்கியக் காரணம்.

    வைட்டமின்-டி குறைபாடு இருப்பவர்கள் மீள்வது எப்படி?

    வைட்டமின் -டி ஊசி போட்டுக்கொள்வதன் மூலம் தேவையான வைட்டமின் -டி கிடைக்கும். தினமும் காலை அல்லது மாலை வேளையில் சூரிய ஒளி உடலில்படும்படி குறைந்தபட்சம் அரை மணி நேரம் நிற்க வேண்டும். புகையிலை, ஆல்கஹால், காஃபின், டின் ஜூஸ், புரோட்டீன் ஷேக் போன்ற பானங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கீரை, பாதாம், வால்நட், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    வெயிலில் போகும்போது சன்ஸ்க்ரீன் க்ரீம்களைத் தோலில் தடவுவதைத் தவிர்க்க வேண்டும். அழகுக்காகப் பூசப்படும் இத்தகைய க்ரீம்கள், தோலுக்குக் கிடைக்க வேண்டிய சத்துக்களைத் தடுப்பது மட்டுமின்றி, தோல் புற்றுநோயையும் ஏற்படுத்துகின்றன. ஆரோக்கியம் என்பது அறைக்குள் இல்லை. வெளியே வாங்க பாஸ்!


    வைட்டமின்-டி பரிசோதனை செய்வது எப்படி?

    வைட்டமின்-டி பற்றாக்குறை உள்ளதா என்பதை, ரத்தப் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம். நமது உடலில் வைட்டமின்-டி 30 நேனோ கிராம்.மிலி என்ற அளவைவிட அதிகமாக இருக்க வேண்டும். 10 நே.கி/மி.லி அளவுக்குக் கீழ் இருந்தால், நிலைமை மோசமாகிவிடும். உடல் முழுவதும் வலி இருக்கும். நடக்கவே சிரமப்பட வேண்டியிருக்கும்.

    வைட்டமின்-டி குறைபாட்டால் என்ன நிகழும் ?
    வைட்டமின் -டி குறைபாட்டால் எலும்பு பலவீனம் அடையும். ஆஸ்டியோமலேசியா, ஆஸ்டியோபோரோசிஸ் ஆகிய நோய்கள் தாக்கும். குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் என்ற நோய் வரும். இதனால் குழந்தைகள் வளரும்போது எலும்புகள் விநோதமாக நீட்டிக்கொண்டும், சுருண்டுகொண்டும் இருக்கும். இதனால், குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். இன்சுலினின் சீரான இயக்கத்துக்குக் காரணமான பான்கிரியாடிக்-பீட்டா எனும் செல், வைட்டமின் -டி குறைபாட்டால் பாதிக்கப்படும். இதனால் இன்சுலின் சுரப்பது குறைந்து, சர்க்கரை நோய் வரும். ரத்தக் குழாய்கள் சுருங்கிப்போகும். எனவே, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். மேலும் கல்லீரல், கணையம், பெருங்குடல், மார்பகப் புற்றுநோய் வருவதற்கும் வைட்டமின் -டி குறைபாடு ஒரு காரணம். மேலும் கீல்வாதநோய் ( Arthritis) தாக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

    Last edited by chan; 31st Mar 2015 at 07:44 PM.

  5. #55
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    வைட்டமின் டி



    நமக்கு இலவசமாக கிடைக்கும் விட்டமின் தான் விட்டமின் டி. இதை நாம் நேரடியாக சூரிய ஒளியிலிருந்து பெறலாம். தினமும் காலையில் ஒரு குறிப்பிட்ட நேரம் வெய்யில் குளியல் செய்தால் போதும். இந்த குறிப்பிட்ட நேரம் மனிதருக்கு மனிதர் மாறுபடும்.

    சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா வயலெட் கதிர்கள் நாம் உடலின் கொழுப்பு திசுக்களில் மேல் படியும் போது, இரசாயன மாறுதலால் வைட்டமின் டி தோன்றுகின்றது. எவ்வளவு நேரம் சூரிய ஒளி பட வேண்டும் என்பது பல விஷயங்களை பொருத்தது. நம்முடைய தோல் நிறம், வயது எப்போது வீட்டிலிருந்து வெளியே செல்கின்றோம் முதலியவை அடிப்படை காரணங்கள்.
    வெள்ளை தோல் உள்ளவர்கள், தினமும் 1/2 மணி நேரம் நேரடியாக சூரிய ஒளியில் உலாவினால் அவர்களுக்கு தேவையான விட்டமின் 'டி' உருவாகி விடுகின்றது. குளிர்காலத்தில் சிறிது அதிக நேரம் பிடிக்கும்.

    கருமை நிறமுடையவர்கள் சூரிய ஒளியில் அதிக நேரம் உலாவினால் சர்ம பாதிப்புகள் ஏற்படலாம். கோடையில் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி நேரம் வெளியே போவதை தவிர்ப்பது நல்லது. போக நேர்ந்தால் குடை (அ) தொப்பி, உடல் முழுவதும் மூடும் ஆடைகளுடன் செல்லவும்.

    சூரிய ஒளி நம் மீது படும்போது கிடைகின்றது.

    மேலும் விட்டமின் டி நன்கு பசிக்கும்போது நாம் உண்ணும்

    1. பால்
    2. வெண்ணெய்
    3. தானியங்கள்
    4. கீரைகள்
    5. காய்கறிகள்
    6. முட்டை
    7. மீன்கள்
    போன்றவற்றின் மூலம் கிடைக்கும்.

    விட்டமின் டி யின் பயன்கள்

    1. உணவிலிருந்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்களை உடல் கிரகிக்க உதவுகின்றது.
    2. இதனால் எலும்புகள், பற்கள் வலிவடைகின்றன.

    விட்டமின் டி குறைந்தால்:
    1. பஞ்சு போல் நெகிழ்ந்து வளையும் எலும்பு நோயான ரிக்கெட்ஸ் குழந்தைகளை தாக்குகின்றது.
    2. விட்டமின் டி குறைபாட்டினால் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படும்.
    3. ஆஸ்டியோ பொராசிஸ் ஏற்படலாம்.
    4. காது கேளாமை, வாய் தொண்டை எரிச்சல்.
    எலும்பு, தசை பலவீனமடையும்.


    Last edited by chan; 16th Apr 2015 at 08:11 PM.
    malathimari likes this.

  6. #56
    malathimari is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Vellore
    Posts
    58

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    Useful Information.Nice.

    chan likes this.

  7. #57
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    விந்தணு வலிமை இழக்க காரணம் வைட்டமின் டி



    *இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் எல்லாருக்கும் தந்திருக்கிறது. அலுவலகத்தின் அறைகளுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபடுவதும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது நமது வாழக்கை.

    *இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்று.
    மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

    *விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் வைட்டமின் டி குறைவது என்பது இவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவாகும்.
    தேவையான அளவு வைட்டமின் டி உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றன. தம்பதியர் பெற்றோராகும் வாய்ப்பு பிரகாசமடைகிறது. அதற்கு அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் சட்டையைக் கழற்றி ஓரமாய் வைத்து விட்டு கொஞ்சநேரம் வெயிலில் கால்களுக்கு இதமாக நடந்து வருவது தான் !

    *இந்த ஆய்வை நடத்திய போது இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரண்டு மாதங்களில் விந்தணுக்களின் வலிமையும், எண்ணிக்கையும், உருவமும் பல மடங்கு மேம்பட்டதாகச் சொல்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய மருத்துவர் கிளார்க்.

    *இந்த சோதனையில் மூலம் 35 விழுக்காடு பேர் குழந்தையின்மைச் சிக்கலையும் தீர்த்திருக்கின்றனர் என்பது வியப்பூட்டுகிறது.அலுவலக அறைகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பவர்கள் அவ்வப்போது எழுந்து சாலையோர டீ கடைக்குச் சென்று சுடச்சுட டீயும், வைட்டமின் டீயும் பெற்றுக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்குச் சிறந்தது என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

    *புகை, மது, காபி போன்றவற்றை உட்கொள்ளாமலும் அளவான உடற்பயிற்சி மேற்கொள்வதும் என உடலை ஆரோக்கியமாய் காத்துக் கொள்ளும் ஆண்கள் கொஞ்ச நேரம் வெயிலிலும் நடந்து வந்தால் வாழ்க்கை சந்தோஷமாகவும் அமையும்....


  8. #58
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    வைட்டமின் குறைபாடு உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்

    வைட்டமின்கள் உணவில் கிடைக்கும் ஒரு வகை கூட்டுப் பொருள். உடலின் ஆரோக்யத்திற்கு இவை சிறிய அளவே தேவைப்படுகின்றன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்படுகின்றது. அவை, கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் - ஏ, டி, ஈ, கே. தண்ணீரில் கரையும் வைட்டமின்கள் - பி1, பி6, பி7, பி12 பிரிவுகள், வைட்டமின் சி. வைட்டமின் குறைபாடுகள் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

    வைட்டமின்கள் எரிசக்தி போல் அதிக அளவில் தேவைப்படாது. இருப்பினும், மருத்துவர்கள் சில சமயங்களில் வைட்டமின் மாத்திரைகளை சிபாரிசு செய்கின்றனர். மூன்று விஷயங்களுக்காக இது சிபாரிசு செய்யப்படுகின்றது.

    * உடலில் காணப்படும் வைட்டமின் சத்து குறைபாடு.

    * குறைபாடு ஏற்படக் கூடிய காலங்களை தவிர்க்க. (உ.ம்) கர்ப்ப காலம், அறுவை சிகிச்சை, நோய் பாதிப்பு.

    * சில நோய் பாதிப்புகளை தவிர்ப்பதற்கான முன் நடவடிக்கையாக. மருத்துவரின் அறிவுரையின் பேரிலேயே வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். சைவ உணவு உண்பவர்களுக்கு கண்டிப்பாக வைட்டமின் பி12 சத்து மாத்திரை தேவைப்படும். அன்றாடம் வைட்டமின் சத்து என்பது இன்சூரன்ஸ் பாலிஸி போன்றது. ஆகவேதான் ஒரு மல்டி வைட்டமின் என்பது அதிக சிபாரிசு பெறுகின்றது.

    பொதுவாக :

    * ஆரோக்கியமான உணவிவை உட்கொள்ளுங்கள்.

    * மருத்துவ ஆலோசனையோடு ஒரு சத்து மாத்திரையை எடுத்துக் கொள்ளுங்கள்.

    * வைட்டமின் ‘டி’ சத்து தேவையா என அறிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    * மிக அதிக அளவிலான வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது சரியாகாது.

    நீரில் கரையும் வைட்டமின்கள் :

    9 வகை வைட்டமின்கள் நீரில் கரைபவை.

    * போலேட் எனப்படும் இந்த வைட்டமின் பிறவி குறைபாடுகளை நீக்கும்.

    * தயமின் எனப்படும் பி1 குறைபாட்டால் சோர்வு, நரம்பு பாதிப்பு, மூளை பாதிப்பு ஏற்படும். ஓட்ஸ், கைகுத்தல் அரிசி, காய்கறி, உருளைக்கிழங்கு, முட்டை இவற்றிலிருந்து இந்த வைட்டமின் கிடைக்கும்.

    * ரிபோப்ளேவின் எனப்படும் பி2 குறைபாட்டால் நாக்கு வீக்கம், வாய் ஓரத்தில் புண் ஏற்படும். இந்த வைட்டமின் பால் பொருட்கள், வாழைப்பழம், பச்சை வாழைப்பழம் இவற்றில் கிடைக்கும்.

    * நியாசின் எனப்படும் பி3 சரும பாதுகாப்பு, ஜீரண செயல்பாடுமுறை, கெட்ட கொழுப்பு நீக்குதல் போன்றவற்றை கொடுக்கும். ஆயினும் அதிகம் உட்கொண்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். அசைவம், மீன், முட்டை, காய்கறி இவற்றில் பி3 வைட்டமின் சத்து கிடைக்கும்.

    * பன்டோதினிக் ஆசிட் எனப்படும் பி5 வைட்டமின் உடல் உணவிலிருந்து சத்து எடுத்துக் கொள்ள உதவும். சில ஹார்மோன்கள், கொலஸ்டிரால் உருவாக்கவும் உதவுகின்றது. குறைபாடு ஏற்படும் பொழுது பராஸ்திஷியா என்ற பாதிப்பு ஏற்படும். வைட்டமின் பி5 அதிகமானால் வயிற்றுப் போக்கு, பிரட்டல், நெஞ்நெரிச்சல் பி5 சத்து அசைவ உணவு, மீன், முட்டை, காய்கறி இவற்றிலிருந்து கிடைக்கின்றது.

    * பிரிடாக்ஸின் எனப்படும் பி6 வைட்டமின் சத்து உடலின் ரசாயன மாற்றங்களுக்கு உதவுகின்றது. இரத்த சோகை இதன் குறைபாட்டால் ஏற்படும். இந்த சத்து அதிகமானால் நரம்பு பாதிப்பு ஏற்படும். அசைவம் காய்கறி, கொட்டைகள், வாழைப்பழம் இவற்றில் பி6 வைட்டமின் சத்து கிடைக்கிறது.

    * பயோடின் எனப்படும் பி7 வைட்டமின் சத்தில் குறைபாடு ஏற்பட்டால் சரும பாதிப்பு, குடல் பாதிப்பு ஏற்படும். முட்டை, கடலை, கீரை இவற்றில் எளிதாய் இச்சத்து கிடைக்கும்.

    * சயன கோபாளமின் எனப்படும் வைட்டமின் பி12 ரத்த அணுக்கள் நரம்பு மண்டல செயல்பாடு ஆகியவற்றுக்கு அத்தியாவசமானது. இதன் குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படும். அசைவ உணவிலேயே இது அதிகம் கிடைக்கின்றது.

    * வைட்டமின் சி தான் உடலில் அதிகமாக காணப்படும் கொலாஜன் எனப்படும் புரதம் உருவாக காரணம் ஆகின்றது. பல், சருமம், எலும்பு, ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருக்க இந்த வைட்டமின் மிகவும் அவசியமாகின்றது. பழங்கள், காய்கறிகள், கல்லீரல் இவற்றில் அதிகம் கிடைக்கின்றது. ஆய்வுகள் பி வைட்டமின் பிரிவுகள் ஞாபகத்திறனை காப்பதாகக் கூறுகின்றன.

    இதே போன்று வைட்டமின் சி, ஈ, பீட்டாகரோட்டின் இவைகளும் மூளை நரம்புகளை காத்து வலிவூட்டுகின்றன. ஆயினும் ஆய்வுகள் கீரை, பருப்பு, ஆரஞ்சு, சோயா இந்த மாதிரி உணவுப் பொருட்களின் மூலம் பெறுவதையே வலியுறுத்துகின்றன. வைட்டமின் பி பிரிவு குறைபாடுகளை சோர்வு, அதிக படபடப்பு, வெளிர்ந்த சருமம், வறண்ட நாக்கு, ஈறில் இரத்த கசிவு, வயிறு பாதிப்பு, எடை குறைதல் போன்ற அறிகுறிகளின் மூலம் அறிய முடியும்.

    அதிக வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதும் ஆபத்தே என்பதனை நன்கு உணர வேண்டும். வைட்டமின் ஏ, டி, ஈ, கே ஆகியவை கொழுப்பில் கரையும் வைட்டமின்களாகும். இவை அதிக நாட்கள் உடலில் தங்கும். அதிக அளவு எடுத்துக் கொள்வதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

    வைட்டமின் ஏ :

    ரெடினால் என்றும் சொல்லப்படும். இந்த வைட்டமினுக்கு உடலில் பல வேலைகள் உள்ளன. அதிக வெளிச்சம், குறைந்த வெளிச்சம் இவற்றிக்கு கண் தன்னை சரி செய்து கொள்வது இந்த வைட்டமினால்தான். எலும்பு வளர்ச்சி, பல் வளர்ச்சி, திசுக்களின் வளர்ச்சி நோய் எதிர்ப்பு சக்தி இவை அனைத்திற்கும் இந்த வைட்டமின் பொறுப்பு.

    சருமம், கண், வாய் உள்தசை, மூக்கு, தொண்டை, நுரையீரல் இவை ஈரப்பதத்தோடு இருப்பதும் இந்த வைட்டமினையே சார்ந்துள்ளன. மேலும் ஒரு சில வகை புற்று நோய்களையும் வைட்டமின் ‘ஏ’ தவிர்க்கும். பல வகை உணவுகள் உண்ணும் பொழுது அதாவது பால் பொருட்கள், மீன், கல்லீரல் இவற்றிலிருந்து வைட்டமின் ஏ கிடைக்கின்றது.

    தாவர வகையிலிருந்து அடர்ந்த பச்சை நிறம் கொண்ட இலைகள், காய்கறிகள், காரட், பரங்கிகாய் இவையெல்லாம் வைட்டமின் ‘ஏ’ கிடைக்கும் உணவுப் பொருட்கள். சராசரி தேவையாக ஆணுக்கு 900 மைகி 1 பெண்ணுக்கு 700 மைகி அளவு இது தேவைப்படுகின்றது. வைட்டமின் ‘ஏ’ கல்லீரலில் தேக்கி வைக்கப்படுகின்றது.

    அதனால் தான் இச்சத்து குறைபாடு ஏற்படும் பொழுது 2 வருடம் வரை கூட அறிகுறிகள் தெரிவதில்லை. இரவு கண் தெரியாமை, சொரசொரப்பான வறண்ட சருமம், எளிதில் உடல் நோய் வாய் படுதல், எலும்பு வளர்ச்சி குறைபாடு போன்றவை வைட்டமின் ‘ஏ’ குறைபாட்டால் ஏற்படும் நோய்கள். வைட்டமின் ‘ஏ’ அதிகம் இருந்தால்; அதாவது அன்றாடம் 3000 மைகி மேல் உடல் பெற்றால் வறண்ட சருமம், அறிக்கும் சருமம், தலைவலி, வயிற்றுப் பிரட்டல், பசியின்மை, பார்வை சரியின்மை, தலைசுற்றல், இடுப்பு எலும்பு முறிவு போன்றவை ஏற்படும்.

    வைட்டமின் டி:

    உடல் உபயோகத்திற்கான கால்ஷியம், பாஸ்பரசில் வைட்டமின் டி மிக முக்கிய பங்காற்றுகின்றது. சிறு குடலில் இருந்து நன்கு கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் உருவாகவும், பாதுகாக்கப்படவும் இந்த வைட்டமின் ‘டி’யே காரணமாகின்றது. திசுக்களின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவுகின்றது.

    குழந்தைகளுக்கு நல்ல எலும்பும், பல்லும் பெற வைட்டமின் ‘டி’ மிக அவசியம். பால், பால் பொருட்கள், மீன், மீன் எண்ணெய் இவற்றிலிருந்து வைட்டமின் ‘டி’ கிடைக்கின்றது. இத்தோடு சூரிய ஒளியில் சருமமே வைட்டமின் ‘டி’யை உற்பத்தி செய்கின்றது. ஒரு வயது முதல் ஐம்பது வயது வரை ஒருவருக்கு 15 மைகி வைட்டமின் ‘டி’ தேவைப்படுகின்றது.

    இளம் காலை வெயில், மாலை வெயில் பொழுதில் கை, கால், முகத்தில் வெயில் படும் படி 10 நிமிடங்கள் இருக்கலாம். அதிக நேரம் வெயிலில் இருப்பவர்கள் ‘சன் ஸ்கீரின்’ அவசியம் உபயோகிக்க வேண்டும். வைட்டமின் ‘டி’ குறைபாடு ஏற்படும் பொழுது குழந்தைகளுக்கு ரிக்கட்ஸ் எனப்படும் வளைந்த கால்கள், பெரியோருக்கு எலும்பு அடர்த்தி குறைதல் ஏற்படுகின்றது.

    குழந்தைகளுக்கு பின் தலை தட்டையாகின்றது. புற்று நோய் பாதிக்கும் அபாயம் அதிகமாகின்றன. ரத்தக் கொதிப்பு, நோய் பாதிப்பு எளிதில் ஏற்படுகின்றது.

    * குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் தாய்பால் மட்டும் பெறும் சிறு குழந்தைகள்.
    * அடர்ந்த நிறம் கொண்டோர்
    * முதியோர்
    * நோயாளிகள் ஆகியோருக்கு வைட்டமின் ‘டி’ குறைபாடு ஏற்படுகின்றது. அதிக அளவு வைட்டமின் ‘டி’ ரத்தத்தில் அதிக கால்ஷியம், உடல், மன வளர்ச்சி குறைவு, வயிற்று குமட்டல், வாந்தி இவற்றினை ஏற்படுத்தும்.

    வைட்டடமின் ஈ :

    வைட்டமின் ஈ உடலில் வைட்டமின் ஏ,சி, சிகப்பு அணுக்கள் நல்ல அமினோ அமிலங்கள் இவற்றை காக்கின்றது. நல்ல பழங்கள், காய்கறிகள் மூலமே இவற்றைப்பெற முடியும் என சமீபத்திய ஆய்வுகள் வலியுறுத்துகின்றன. சூரிய காந்தி எண்ணெய், சோயாபீன்ஸ், பழங்கள், காய்கறிகள், கொட்டைகள் இவைகள் மூலம் வைட்டமின் ஈ சத்து கிடைக்கின்றது. ஆணும், பெண்ணும் 14 வயதிற்கு மேல் 15 மைகி அளவு அன்றாடம் வைட்டமின் ஈ பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.

    வைட்டமின் கே :

    வைட்டமின் கே பாக்டீரியாவால் குடலில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படுகின்றது. ரத்தம் கெட்டிப்பட, எலும்பின் ஆரோக்கியம், ரத்தம், எலும்பு, சிறுநீரகம் இவற்றிக்கான புரதம் அளிக்க உதவுகின்றது. முட்டை கோஸ் பச்சை முட்டைகோஸ், காலிப்ளவர், பச்சை நிற இலைகள், தாவர எண்ணெய் இவற்றிலிருந்து வைட்டமின் கே கிடைக்கின்றது. போதுமான அளவு வைட்டமின் கே உடலில் இல்லை எனில் சிறு காயத்திலும் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். தொடர் வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு வைட்டமின் கே. குறைபாடு ஏற்படும். மிக அதிக அளவு வைட்டமின் கே; திசுக்களுக்கும் கல்லீரலுக்கும் பாதிப்ப ஏற்படுத்தும்.

    தெரிந்துகொள்ளுங்கள்....

    * கொழுப்பில் கரையும் வைட்டமின் ஏ,டி,ஈ,கே இவை நீண்ட காலம் உடல் சேகரிப்பில் இருக்கும்.

    * லீட்டா கரோட்டினை உடல் வைட்டமின் ‘ஏ’வாக மாற்றும். இது காய்கறி பழங்களில் அதிகம் உள்ளது.

    * குறைவான வைட்டமின் டி, உடலுக்கு தேவையான சூரிய வெளிச்சம் இன்மை இவை இன்றைய மருத்துவ பொதுநல கவலையாக உள்ளது. வைட்டமின் ஈ உடலின் பாதுகாப்பு.

    * குடலில் உள்ள பாக்டீரியாக்களால் உருவாகும் வைட்டமின் கே, கீரைகளில் அதிகம் உள்ளது.

    Last edited by chan; 10th May 2015 at 04:03 PM.

  9. #59
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    வைட்டமின் சி வந்த கதை!




    வைட்டமின்களில், உலக வரலாற்றில் இடம் பிடித்த வைட்டமின் எது? என்று கேட்டால், வைட்டமின் சி என்றுதான் பதில் சொல்ல வேண்டும். நோயாளிகளுக்கு மருந்து கொடுத்தால் மட்டுமே நோய் சரியாகும் என்று நம்பிக்கொண்டிருந்த காலம் அது. அந்த நேரத்தில், சில நோய்களை உணவு கொடுத்தும் குணப்படுத்தலாம் என்று ஒரு புதிய வழியைக் கண்டுபிடிக்க உதவியது இந்த வைட்டமின்தான். வைட்டமின் சி நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு வைட்டமின். இதை நம் உடலால் தயாரிக்க முடியாது. உண்ணும் உணவிலிருந்தும் மாத்திரை, மருந்துகள் மூலமும்தான் பெற முடியும். ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யா ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

    முட்டைக்கோஸ், தக்காளி, காலிஃபிளவர், பப்பாளி, மாம்பழம், அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி, முளை கட்டிய தானியங்கள், கீரைகள், பச்சைநிறக் காய்கறிகள் ஆகியவற்றிலும் இது மிகுந்துள்ளது. வைட்டமின் சி செய்யும் மிக முக்கியப் பணி, ரத்தத்தில் புரோலின் (Proline) எனும் அமினோ அமிலத்திலிருந்து ஹைட்ராக்சி புரோலின் (Hydroxyproline) எனும் வேதிப்பொருளைத் தயாரித்து அளிப்பது. இந்த வேதிப்பொருள் கொலாஜென் (Collagen) எனும் புரதம் தயாரிக்க உதவுகிறது. ஒரு கட்டிடத்தில் செங்கற்களை ஒட்ட வைக்க சிமென்ட்டைப் பயன்படுத்துகிறோம் அல்லவா? அதுபோல இந்தக் கொலாஜென்தான் உடலில் உள்ள எல்லா செல்களையும் ஒன்றுடன் ஒன்று இணைக்கிறது; ரத்தக்குழாய்த் திசுக்களை திடப்படுத்துகிறது; எலும்புத் திசுக்களை வலுப்படுத்துகிறது; பற்களையும் ஈறுகளையும் இணைத்துப் பாதுகாக்கிறது.

    உடலில் ரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்தி ஆவதற்கும், உடல் திசுக்களில் ரத்தக்கசிவு உண்டாகாமல் பார்த்துக் கொள்வதற்கும் கொலாஜென் தேவை. உடலில் வைட்டமின் சி போதிய அளவில் இல்லையென்றால், கொலாஜென் உற்பத்தி குறைந்து விடும். அப்போது மேற்சொன்ன பணிகளை உடலால் மேற்கொள்ள முடியாது. மேலும் இது உடலில் நோய்த் தடுப்பாற்றலை ஊக்குவிக்கிறது. வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுக்கிருமிகளிடமிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது.

    அடிபட்ட காயங்கள், புண்கள், தீக்காயங்கள், அறுவை சிகிச்சைப் புண்கள் போன்றவற்றை விரைவில் குணப்படுத்துகிறது. ரத்தக் கொழுப்பைக் குறைக்கிறது; ரத்த அழுத்தம் அதிகமாவதைத் தடுக்கிறது; அண்மையில் இது மாரடைப்பையும் தடுக்கிறது என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள். வைட்டமின் சி பற்றாக்குறையால் ஏற்படும் ஒரு முக்கிய நோய், ஸ்கர்வி (Scurvy). இது பல், ஈறு, தோல், ரத்தக்குழாய், எலும்பு போன்ற பல உறுப்புகளைப் பாதிக்கின்ற நோய். பாதிக்கப்படும் உறுப்பைப் பொறுத்து உடலில் அறிகுறிகள் தோன்றும்.

    கண்ணில் விழிவெண்படலத்தில் ரத்தப்புள்ளிகள் தெரியும். மூக்கிலிருந்து ரத்தம் கொட்டும். சிறுநீரில் ரத்தம் வெளியேறும். மலம் ரத்தம் கலந்து போகும். எலும்புகள் பலவீனமாக இருக்கும்; மூட்டுகள் சரியாக இணையாமல் இருக்கும். அப்போது நாம் லேசாகத் தரையில் விழுந்துவிட்டால்கூட கை, கால் எலும்புகள் முறிந்துவிடும். அல்லது எலும்பு மூட்டுகளில் ரத்தக்கசிவு உண்டாகி, வீங்கி வலிக்கும். இப்படி ஏற்படுகிற பல பிரச்னைகளுக்கும் இப்போது வைட்டமின் சி மாத்திரைகளைக் கொடுத்து குணப்படுத்துகிறார்கள். இந்த மருந்தைக் கண்டுபிடித்த விதமும் ஒரு வரலாற்று சுவாரஸ்யம்தான். கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டிற்கும் பதினெட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட 300 ஆண்டுகளில் உலகில் சுமார் 20 லட்சம் பேர் ஸ்கர்வி நோயால் உயிரிழந்திருப்பார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். அப்படி இறந்தவர்களில் பெரும்பாலோர் கடலில் பயணம் செய்தவர்கள் அல்லது மாலுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    1498ஆம் ஆண்டில் வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வந்தபோது அவருடைய கப்பலில் மூன்றில் இரண்டு பங்கு பேர் இந்த நோயால் இறந்துவிட்டனர் என்று வரலாறு கூறுகிறது. இந்தக் கொடூர இறப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் ஜேம்ஸ் லிண்ட் (James Lind) எனும் இங்கிலாந்து மருத்துவர். இவர் 1747ம் ஆண்டில் இங்கிலாந்து கடற்படையில் மருத்துவராகப் பணி செய்தபோது தன் கப்பலில் பயணம் செய்தவர்கள் அனைவருக்கும் உணவு இடைவேளைகளில் ஆரஞ்சுப் பழச்சாறு அல்லது எலுமிச்சைப் பழச்சாறு தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதன் காரணமாக அவருடைய கப்பலில் பயணம் செய்தவர்களுக்கு ஸ்கர்வி நோய் ஏற்படவில்லை. மரணங்களும் நிகழவில்லை. அதேநேரத்தில் மற்ற கப்பல்களில் பயணம் செய்தவர்கள் ஆயிரக்கணக்கில் இறந்துகொண்டிருந்தனர். இதனை அடிப்படையாகக் கொண்டு, 1753ம் ஆண்டில் ஸ்கர்வி நோயைத் தடுக்க வேண்டுமானால் நிறைய ஆரஞ்சுப் பழச்சாறு அல்லது எலுமிச்சைப் பழச்சாறுகளைச் சாப்பிட வேண்டும் என்று ஆலோசனை கூறினார், லிண்ட்.

    அதை ஆதாரமாக வைத்து 1785ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து ராயல் நேவியைச் சேர்ந்த அனைத்துக் கப்பல்களிலும் பயணிகளுக்கு ஆரஞ்சுப் பழச்சாறு கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டது. இதன் பலனால் அக்கப்பல்களில் பயணம் செய்தவர்களுக்கு ஸ்கர்வி நோய் ஏற்படவில்லை. 1930ல் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஆல்பர்ட் ஸென்ந்த் க்யோர்கி (Albert Szent - Gyorgi) எலுமிச்சையிலிருந்து ஓர் அமிலத்தைப் பிரித்தெடுத்து ஹெக்சூரோனிக் அமிலம் (Hexuronic acid) என்று பெயரிட்டார். அதை ஸ்கர்வி நோயாளிகளுக்குக் கொடுத்துப் பார்த்தார். நோய் குணமானது. பின்னாளில் அதற்கு வைட்டமின் சி என்று பெயர் வந்தது. இப்படி வைட்டமின் சியைக் கண்டுபிடித்த பெருமை க்யோர்கிக்கு வந்தது. அதற்காக அவர் 1937ம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றார். அதன் பின்னர், ஹாஒர்த் (Haworth) என்பவர் வைட்டமின் சியின் வேதி அமைப்பைக் கண்டறிந்தார். அவர் ஹெக்சூரோனிக் அமிலம் என்ற பெயரை நீக்கிவிட்டு அஸ்கார்பிக் அமிலம் (Ascorbic Acid) என்று பெயரிட்டார். இவருக்குப் பிறகுதான் வைட்டமின் சி மாத்திரை மற்றும் திரவ மருந்துகள் வேதியியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தன. இன்றைக்கும் பல கோடி பேருக்கு ஆரோக்கியம் தந்து உதவுகின்றன.



  10. #60
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    மன அழுத்தத்தை குறைக்கும் வைட்டமின் ‘டி'


    உயிர்ச்சத்துகளில் வைட்டமின் டி முக்கியமானது. அதேநேரம் அதிகக் கவனம் செலுத்தப்படாத வைட்டமின்களில் ‘டி'யும் ஒன்று.

    வைட்டமின் டி என்பது எலும்புக்கும் பற்களுக்கும் அத்தியாவசியம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான பல உயிர்வேதியியல் செயல்பாடுகளுக்கும், இந்த வைட்டமின் மிகவும் அடிப்படையானது என்பது தற்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.

    வைட்டமின் டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோஸிஸ், ரிக்கட்ஸ், இதய நோய், புற்றுநோய், மல்ட்டிபிள் ஸ்கிளரோஸிஸ், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஜலதோஷத்தை விரட்டுவதிலும் மன அழுத்தத்தைச் சமாளிப்பதிலும் வைட்டமின் டி உதவுவதாகக் கூறப்படுகிறது.

    மற்ற வைட்டமின்களைப் பொறுத்தவரை நமது வழக்கமான உணவுப் பொருட்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். வைட்டமின் ‘டி'யைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சிக்கல்தான். வைட்டமின் ‘டி'யைப் பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம்.

    சூரிய ஒளி
    நமது வாழ்க்கை முறை என்பது பெரும்பாலும் நான்கு சுவர்களுக்குள் அமைந்துவிட்டது. வீட்டுக்கு அல்லது அலுவலகத்துக்கு வெளியே ஒரு 20-25 நிமிடங்கள் நம் கை மீது வெயிலோ அல்லது திறந்தவெளிக் காற்றோ படும்படி இருந்தாலே போதும், வைட்டமின் டி கிடைக்கும்.

    மதிய உணவு நேரத்தின்போது அலுவலக வளாகத்துக்கு வெளியே சற்று நடந்துவரலாம். அதேபோல் குழந்தைகளையும் வெளியே விளையாட ஊக்குவிக்கலாம். இப்படிச் செய்யும் அதேநேரத்தில் அதிகப்படியாக வெயிலில் இருந்துவிடவும் கூடாது. அதனாலும் பாதிப்பு ஏற்பட நேரிடும்.

    எண்ணெய்த்தன்மையான மீன்கள்
    நமது வழக்கமான உணவிலிருந்து தினசரி நமக்குத் தேவைப்படும் வைட்டமின் ‘டி'யைப் பெறுவது கடினம் என்பதால் காளா, சூரை, கானாங்கெளுத்தி போன்ற மீன்களைக் கொண்டு நமது தேவையைப் பூர்த்திசெய்துகொள்ளலாம். மூன்று காளா துண்டுகள், நமது தினசரி வைட்டமின் ‘டி’ தேவையில் 80% பூர்த்தி செய்துவிடும்.

    முட்டை
    முட்டைகளிலிருந்தும் வைட்டமின் டி சத்தைப் பெறலாம். ஒரு முட்டையிலிருந்து ஒரு மைக்ரோகிராம் அளவில் வைட்டமின் ‘டி'யைப் பெறலாம். மாட்டு ஈரலில் புரதச்சத்து, இரும்புச் சத்து போன்றவை மட்டுமல்ல, வைட்டமின் ‘டி'யும் காணப்படுகிறது.


    Last edited by chan; 10th Aug 2015 at 10:41 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter