Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree41Likes

வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?


Discussions on "வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?" in "Health" forum.


  1. #61
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    வலுவான உடலுக்கு வைட்டமின் சி!

    டலுக்கு சரிவிகித ஊட்டச் சத்துள்ள உணவு, மிக அவசியம் என்பது டாக்டர்கள் சொல்லும் ஆரோக்கிய அறிவுரை. சரிவிகித ஊட்டச் சத்து என்றால், எவ்வளவு என்பதில்தான் பலருக்கும் சந்தேகம். குறிப்பிட்ட அளவில் புரதச் சத்து, கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, தாதுச் சத்து மற்றும் வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் சேர்ந்ததுதான் சரிவிகித ஊட்டச் சத்து. எல்லாச் சத்துக்களுமே முக்கியமானவை என்றாலும், உடல் செல்களின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுவதற்கும் வைட்டமின் சி மிகவும் அவசியம்.

    வைட்டமின் சி என்பது நீரில் கரையக்கூடிய வைட்டமின். 'வைட்டமின் டி’-யைப்போல் இதை நம் உடல், உற்பத்தி செய்வதில்லை. நீரில் கரையக்கூடியது என்பதால், சேமித்து வைக்கவும் முடியாது. எனவே, பெரியவர்கள் தினசரி 60 மி.கி. அளவுக்கு வைட்டமின் சி எடுத்துக்கொள்ள வேண்டும். எலுமிச்சை, நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதுதவிர, வேறு எந்தெந்த உணவுப் பொருள்களில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது என்பது பற்றி காரைக்குடியைச் சேர்ந்த டயட்டீஷியன் செல்வராணியிடம் கேட்டோம்.

    'நோய் எதிர்ப்பு சக்திக்கும், கொலாஜன் என்ற புரத உற்பத்திக்கும் வைட்டமின்- சி மிகவும் அவசியம். இந்த கொலாஜன்தான் லிகமென்ட் என்று சொல்லக்கூடிய எலும்பு மூட்டு சவ்வுகள், ரத்தக் குழாய்கள், தசைகளுக்கு உதவுகிறது. மேலும், நம் சருமம் மற்றும் இதர உறுப்புக்களின் ஆரோக்கியத்துக்கும் காரணமாக இருக்கிறது. இது, மிகச்சிறந்த ஆன்டிஆக்சிடன்ட் ' என்றவர், இதர காய்கறி - பழங்களில் வைட்டமின் சி எவ்வளவு உள்ளது என்று பட்டியலிட்டார்.


    ஆரஞ்சு

    100 கிராம் ஆரஞ்சுப் பழத்தில் 80 மி.கி. அளவில் வைட்டமின் சி உள்ளது. இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சருமம் பொலிவடையும். வளரக்கூடிய எலும்புகள், தசை நார்கள், ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் ஆரஞ்சு முக்கியமான பங்கு வகிக்கிறது.

    வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச் சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா- கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. மேலும், கலோரி அளவு குறைவாக இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போர், தினமும் சேர்த்துக்கொள்வது நல்ல பலனைத் தரும். அதுமட்டுமின்றி, ஆரஞ்சுப் பழத்தின் வாசமே மனநிலையை சந்தோஷமாக மாற்றும்.


    பப்பாளி

    விலை மலிவானதும் எல்லாக் காலங்களிலும் கிடைக்கக்கூடியதுமான பப்பாளியில் வைட்டமின் ஏ சத்துடன், வைட்டமின் சி-யும் நிறைவாக உள்ளது. 100 கிராம் பப்பாளியில் 60 மி.கி. வைட்டமின் சி இருக்கிறது. நாள் ஒன்றுக்குத் தேவையான அளவு வைட்டமின் சி, 100 கிராம் பழத்திலேயே கிடைத்துவிடும். இதுதவிர பொட்டாசியம், கால்சியம் போன்ற தாது உப்புக்களும் அதிகம் உள்ளன.


    கொய்யா


    கொய்யாப் பழ ரகத்துக்கு ஏற்றபடி அதிகபட்சமாக 228 மி.கி. வரையில் வைட்டமின் சி உள்ளது. இது செல்களைப் பாதுகாத்து, புற்றுநோய் செல் உருவாவதற்கான வாய்ப்பைக் குறைப்பதுடன், இதர செல்களில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

    புற்றுநோய் செல்களுக்கு எதிராகப் போராடும் ஆற்றலை, செல்களுக்கு அளிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. வைட்டமின் சி தவிர்த்து இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இதனால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க இது பெரிதும் உதவும்.


    குடமிளகாய்

    இதில், வைட்டமின் சி இருக்கிறது. இதுதவிர, குடமிளகாயில் உள்ள வைட்டமின் ஏ, சி, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும். பார்வைத் திறனுக்கு உதவுவதுடன், இளமையிலேயே கண் தொடர்பான பிரச்னைகளை அண்ட விடாமலும் காக்கும். சாதாரண மிளகாயைவிட இதில் சதைப் பற்று அதிகம். மிதமாகப் பயன்படுத்தினால் அஜீரணத்தைப் போக்க உதவும். மேலும் கூந்தலின் ஆரோக்கியத்தைக் காத்து நுனியில் பிளவு ஏற்படுவதைத் தடுக்கிறது. காய்கறி சாலட் மற்றும் சூப்களில் பயன்படுத்தலாம்.

    ஒரு நாளைக்கு எவ்வளவு தேவை? பச்சிளம் குழந்தைகளுக்கு: 35 மி.கி., வளர் இளம் பருவத்தினருக்கு: 50 மி.கி., பெரியவர்களுக்கு: 70-75 மி.கி. கர்ப்பிணிகளுக்கு: 80-85 மி.கி. தாய்ப்பால் புகட்டும்போது: 120-125 மி.கி.


    Sponsored Links
    Last edited by chan; 2nd Sep 2015 at 11:14 AM.

  2. #62
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    வைட்டமின் சீக்ரெட்ஸ்...

    ஷைனி சுரேந்திரன், ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன் மற்றும் டயட்டீஷியன்

    நம் உடல் ஆரோக்கியத்துக்கு உடலுக்குள் ஏற்படும் வளர்சிதை மாற்றம் மிகவும் அவசியம்.

    பார்வைக்கு வைட்டமின் ஏ வைட்டமின் ஏ என்பது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின். நாம் உண்ணும் உணவுகளில் இருக்கும் வைட்டமின் ஏ சத்து, உடலில் உள்ள கொழுப்புகளால் உறிஞ்சப்பட்டு, கல்லீரலில் சேமித்துவைக்கப்படும். அவை, உடலின் செல்களுக்குத் தேவைப்படும்போது பயன்படுத்தப்படும்.



    உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    கண்ணில் உள்ள ரெட்டினா பகுதியில் இருக்கும் செல்களுக்கு, ரெட்டினால் என்ற ஊட்டச்சத்து அவசியம். ரெட்டினால் நிறைந்த உணவுகளைச் சாப்பிடும்போது, பார்வை தெளிவடைவதோடு, ரெட்டினாவைப் பாதிக்கும் கண் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் குறையும்.

    ரெட்டினொயிக் அமிலம், உடலில் வளர்ச்சிக்கான ஹார்மோன் சீராக சுரக்க உதவுகிறது. வளர்இளம் பருவத்தினருக்கு வைட்டமின் ஏ அவசியம் தேவை.

    குறைந்த வெளிச்சத்தில் பார்வைத்திறன் குறையும் பிரச்னையான மாலை கண் நோயில் இருந்து காப்பாற்றும் ஆற்றல், வைட்டமின் ‘ஏ’-க்கு மட்டுமே உண்டு.

    தோல் பொலிவு அடைவதற்கும், புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் உடலுக்குக் கிடைக்கவும் வைட்டமின் ஏ துணை புரிகிறது. மேலும், வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது.

    எவ்வளவு வைட்டமின் ஏ தேவை?

    ரெட்டினால் மற்றும் பீட்டாகரோட்டின் ஆகிய வைட்டமின் ஏ சத்துக்கள், நேரடியாக உணவில் இருந்து கிடைக்கின்றன. ஆண்கள், பெண்கள் இருவருக்குமே ஒரு நாளைக்கு சுமார் 2400 மை.கி அளவுக்கு பீட்டாகரோட்டின் தேவை அல்லது 600 மை.கி அளவுக்கு ரெட்டினால் தேவை.

    பாலூட்டும் தாய்மார்களுக்கு தினமும் 3800 மை.கி பீட்டாகரோட்டின் தேவை.

    காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றில் பீட்டாகரோட்டின் அதிகமாக இருக்கும்.

    பால், மீன், முட்டை, வெண்ணெய், சீஸ், ஆடு, மாடு, கோழியின் கல்லீரலில் ரெட்டினால் அதிகம் இருக்கிறது.

    ஏதேனும் நோய்வாய்ப்பட்டவர்கள், வைட்டமின் ஏ சத்து குறைவால் அவதிப்படுபவர்கள் மருத்துவர் பரிந்துரை பெயரில் வைட்டமின் ஏ மாத்திரைகளைச் சாப்பிடலாம்.

    ஆரோக்கியமாக இருப்பவர்கள் உணவின் மூலம் வைட்டமின்- ஏ வைப் பெறுவதே சிறந்தது.



    வைட்டமின் ஏ அதிகமானால்?

    மற்ற வைட்டமின்களைப் போல அல்லாமல் வைட்டமின் ஏ கொழுப்பில் கரைந்து, கல்லீரலில் சேகரிக்கப்படுகிறது. வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை ஒருவர் அன்றாடம் சாப்பிட வேண்டிய அளவைத் தாண்டி, அதிகமாக தினமும் உண்டால், உடலில் வைட்டமின் ஏ அதிகமாகி, காய்ச்சல், தலைவலி, பசியின்மை, தூக்கமின்மை, தோல் எரிச்சல், ரத்த சோகை, வாந்தி முதலான பக்கவிளைவுகள் ஏற்படும். எனவே, அளவுடன் சாப்பிட வேண்டும்.


    எது வைட்டமின் ஏ?

    ரெட்டினால் (Retinol), ரெட்டினல் (Retinal), ரெட்டினொயிக் அமிலம் (Retinoic Acid), பீட்டாகரோட்டின் ஆகிய சத்துக்களின் வெவ்வேறு வடிவங்கள்தான் வைட்டமின் ஏ.

    Last edited by chan; 22nd Sep 2015 at 02:13 PM.

  3. #63
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    வைட்டமின் டி
    வெயிலில் இருந்து கிடைக்கக்கூடிய வைட்டமின் என்றால் எல்லோருக் கும் தெரியும் அது ‘வைட்டமின் டி’ என்று. எலும்பு உறுதி, மூட்டுவலி என எலும்பு தொடர்பான பிரச்னைக்கு மட்டும் அல்ல, உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் வைட்டமின் டி மிகவும் அவசியம்.

    இது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின். இதனால், உடலில் சேமித்துவைக்கப்பட்டு, தேவையானபோது பயன்படுத்தப்படும். மற்ற வைட்டமின்களைவிட ‘டி’ மிகவும் ஸ்பெஷலானது. இது ஒரு ப்ரோ ஹார்மோனாகவும் செயல்படுகிறது. பல்வேறு நோய்களுக்கான அடிப்படைக் காரணங்களில் வைட்டமின் டி குறைபாடும் ஒன்றாக இருக்குமா என உலகம் முழுக்க பல்வேறு மருத்துவ விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி செய்துவருகின்றனர்.

    நம் உடலில் உள்ள எலும்புகளில் பல கோடி புது செல்கள் தினமும் அழிந்து, புது செல்கள் பிறக்கின்றன. குழந்தைப் பருவத்தில், சிறியதாக இருக்கும் எலும்புகள், வயது அதிகரிக்கும்போது பெரிதாகிறது. எலும்பின் இந்த வளர்ச்சிக்கு கால்சியம் சத்து அவசியம் தேவை. கால்சியத்தை எலும்புகள் கிரகிக்க வைட்டமின் டி தேவை. வைட்டமின் டி இல்லை என்றால், கால்சியம் கிரகிக்கப்படாமல் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும். இதனால், எலும்புகள் பலவீனம் அடையும்.

    வைட்டமின் டி குறைபாட்டால் என்னென்ன நிகழும்?
    எலும்பின் உறுதித்தன்மை குறையும். குழந்தைகளுக்கு, கால்சியம் சத்து கிடைக்காததால், எலும்பு வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும், எலும்பு முறையற்ற வகையில் வளரும். சில இடங்களில், விநோதமாக நீட்டிக்கொண்டும், சில இடங்களில் சுருங்கியும் காணப்படலாம்.

    குழந்தைகளுக்கு வைட்டமின் டி குறைபாட்டால் வரும் இந்த நோய்க்கு ‘ரிக்கெட்ஸ்’ என்று பெயர்.

    பெரியவர்களுக்கு, எலும்புகள் முறையில்லாமல் வளரும் நோயான ஆஸ்டியோமலேசியா, எலும்பு அடர்த்திக் குறைதல் நோயான ஆஸ்டியோபொரோசிஸ் போன்ற நோய்கள் வரும். எலும்பு மூட்டு இணைப்புகளில் கீல்வாத நோயான ஆர்த்ரைடிஸ் வர வைட்டமின் டி குறைபாடு ஒரு முக்கியக் காரணம்.

    ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்க உதவும் ஹார்மோன் இன்சுலின். இன்சுலின் சீராக சுரக்கக் காரணமான பான்கிரியாடிக்-பி எனும் செல், வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்படும். இதனால், இன்சுலின் சுரப்பில் பிரச்னை ஏற்பட்டு, சர்க்கரை நோய் வர வாய்ப்பு இருக்கிறது. கல்லீரல், கணையம், பெருங்குடல், மார்பகப் புற்றுநோய் போன்றவை வருவதற்கும் வைட்டமின் டி குறைபாடு ஒரு காரணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

    வைட்டமின் டி எவ்வளவு தேவை?
    வைட்டமின் டி உடலில் அதிகமாகவும் இருக்கக் கூடாது, குறைவாகவும் இருக்கக் கூடாது. அதனால், தினமும் சீரான அளவு வைட்டமின் டி பெறுவதே சிறந்தது. ஒரு நாளைக்குக் குழந்தைகளுக்கு 200 - 400 இன்டர்நேஷனல் யூனிட் (இ.யூ), வளர் இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களுக்கு சுமார் 400 இ.யூ வரை தேவை.

    வைட்டமின் டி பெறுவது எப்படி?
    கோடையில் காலை 7.30 முதல் 9 மணி வரை மற்றும் மாலை 4.30 - 6 மணி வரை நிலவும் சூரிய வெளிச்சம் அரை மணி நேரம் வரை உடலில் பட்டால் போதும்.
    மழைக்காலங்களில் காலை 11 முதல் மதியம் 3 மணி வரை நிலவும் வெயில் நேரத்தில் அரை மணி நேரம் உலவலாம். வைட்டமின் டி குறைபாட்டை, ரத்தப் பரிசோதனை மூலம் அறிய முடியும். நம் உடலில் வைட்டமின் டி 30 நேனோகிராம் /மி.லி என்ற அளவைவிட அதிகமாக இருக்க வேண்டும். அதற்குக் குறைவாக இருந்தால், மருத்துவர் பரிந்துரைப்படி, வைட்டமின் டி மாத்திரை எடுத்துக்கொள்ளலாம்.

    எதில் எவ்வளவு?
    1 கப் (250 மி.லி) பசும் பால் - 103 - 105 இ.யூ.
    1 கப் சோயா பால் - 88 இ.யூ.
    முக்கால் கப் (175 கிராம்) யோகர்ட் - 58 - 71 இ.யூ.
    முட்டையின் இரண்டு மஞ்சள்கரு - 57 - 88 இ.யூ.
    75 கிராம் சமைத்த மீன் - 351- 497 இ.யூ.

    எதில் கிடைக்கிறது?
    வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து அதிக அளவிலும், சில வகை உணவில் இருந்து சிறிதளவும் கிடைக்கிறது. வைட்டமின் டி-யில் பல வகைகள் உள்ளன. அவற்றில் வைட்டமின் டி2, டி3-யில் இருந்துதான், உடலுக்குத் தேவையான வைட்டமின் டி பெறப்படுகிறது.

    வைட்டமின் டி2
    தாவர வகை உணவுகளில் இருந்து எர்கோஸ்டீரால் (Ergosterol) என்ற சத்து ப்ரோ வைட்டமின் டி2-வாகக் கிடைக்கிறது. இது உடலில் சென்று முதலில் எர்கோகால்சிஃபேரோல் (Ergocalciferol) எனும் நிலைக்குச் சென்று, வைட்டமின் டி2-வாக மாறுகிறது. பின்னர், இந்த டி2-வை நம்முடைய உடல் டி3-ஆக மாற்றி சேமித்துவைக்கிறது.

    வைட்டமின் டி3
    சூரிய ஒளியில் இருந்துவரும் புற ஊதாக் கதிர் - பி நம் சருமத்தில்படும். அந்தக் கதிரை சருமம் கல்லீரலுக்கு அனுப்பும். அங்கு சில ரசாயன மாற்றங்கள் நடந்து, சிறுநீரகத்துக்கு அனுப்பப்படும். அங்குதான், உடல் பயன்படுத்தக்கூடிய வகையில் 1,25 டைஹைட்ராக்சி வைட்டமின் டி-ஆக மாற்றப்பட்டு, பின்னர் உடல் பயன்படுத்தக்கூடிய வைட்டமின் டி-யாகச் செயல்படும்.

    Last edited by chan; 4th Oct 2015 at 07:35 PM.

  4. #64
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    வைட்டமின் பி1 - தயமின்


    ளர்சிதைமாற்றச் செயல்பாடு சீராக நடப்பதிலும், உண்ணும் உணவில் இருந்து ஆற்றலை சரியான முறையில் பெறுவதிலும், கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவை உடலில் கிரகிக்கப்படுவதிலும், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. வைட்டமின் பி, நீரில் கரையக்கூடியது; இதை நம்முடைய உடலால் சேமித்துவைக்க முடியாது. எனவே, இந்த வைட்டமின்களை நாம் தினமும் உணவின் மூலம் பெறுவது அவசியம். வைட்டமின் பி காம்ப்ளக்ஸில் முதலில் நாம் பார்க்கப்போவது ‘பி1’ என்று சொல்லக்கூடிய தயமின்.

    *மூளைச் செயல்பாடு மற்றும் செரிமானச் செயல்பாட்டில் தயமின் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாம் சாப்பிடும் உணவில் உள்ள புரதத்தை, உடல் பயன்படுத்திக்கொள்வதற்கு ஏதுவாக மாற்றுவதில் முக்கியப் பங்காற்றுகிறது.

    *நரம்பு மண்டலம் மற்றும் இதய ரத்தக் குழாய் (கார்டியோ வாஸ்குலார்) பகுதிகளில் ஏற்படும் ‘பெரிபெரி’ என்ற நோய்க்கு முக்கியக் காரணம், தயமின் குறைபாடுதான். பெரிபெரியில் இரண்டு வகைகள் உள்ளன.

    *பசியின்மை, கை, கால்களில் திடீரென ஏற்படும் கூச்ச உணர்வு, உணர்வின்மை ஆகிய பிரச்னைகள் உலர் பெரிபெரி நோய் (Dry beriberi) வகையைச் சேரும்.

    *சீரற்ற இதயத்துடிப்பு, மூச்சுவிடுதலில் தொந்தரவு, இதயத்தசைகள் வலுவிழத்தல் ஆகிய பிரச்னைகள் ஈரமான பெரிபெரி நோய் (Wet beriberi)என்ற வகையைச் சேரும்.


    *கண்ணில் ஏற்படும் வலி, உடலில் ஏற்படும் ஒரு வகையான எரிச்சல், கவனக்குறைவு, ஞாபகமறதி, இதயத்துடிப்பு அதிகமாக இருப்பது, மலச்சிக்கல், வயிற்றுவலி போன்றவற்றுக்கு தயமின் குறைபாடு மிக முக்கியக் காரணம்.

    *ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்துவது, டீ, காபி அதிகம் அருந்துவது, ஆல்கஹால் எடுத்துக்கொள்வது போன்றவற்றால், நாம் சாப்பிடும் உணவில் இருந்து தயமின் சத்து உடலுக்குப் போய்ச்சேருவதில் தடை ஏற்படுகிறது.

    *தொடர்ந்து தயமின் உடலுக்குக் கிடைக்கவில்லை எனில், நரம்புக் கோளாறுகள் அதிகரிக்கும். எனவே, ஆன்டிபயாடிக் மருந்துகள், டீ, காபி போன்றவற்றை அளவாக எடுத்துகொள்ள வேண்டும். ஆல்கஹாலை அறவே தவிர்க்க வேண்டும்.

    எதில் இருந்து தயமினைப் பெறுவது ?
    *அரிசி, கோதுமை, சிறுதானியங்கள் போன்றவற்றில் தயமின் அதிக அளவு இருக்கிறது. குறிப்பாக, இந்த தானியங்களின் வெளிப்புற அடுக்கில்தான் தயமின் சத்து அதிகமாக உள்ளது.

    *அரிசியை பாலீஷ் செய்யும்போது, இந்தச் சத்து வெளியேற்றப்படுகிறது. பாலீஷ் செய்யாத கைக்குத்தல் அரிசி, பழுப்பு அரிசியில் இந்தச் சத்து அதிக அளவில் உள்ளது.

    *நட்ஸ் வகைகளிலும் தயமின் உள்ளது. குறிப்பாக, நிலக்கடலையில் தயமின் அதிக அளவு நிறைந்திருக்கிறது. மாவுச்சத்து நிறைந்த பொருட்கள் அனைத்திலுமே தயமின் அதிக அளவு இருக்கும். ஏனெனில், இந்த தயமின்தான் உடலில் மாவுச்சத்தின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது.

    *தயமின் நமது உணவில் நிறைந்திருக்கிறது. பாரம்பர்ய உணவுகளான சிறுதானியங்களை நிறையச் சேர்த்துக்கொள்வது நல்லது.


  5. #65
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    வைட்டமின் பி7 (பயோட்டின்)
    உணவு
    யோட்டின்’ எனப்படும் வைட்டமின் பி7-ஐ `முடிக்கான வைட்டமின்’ என்றும் சொல்லலாம். இதற்கு, வைட்டமின் எச் அதாவது ஹேர் (hair) வைட்டமின் என்றுகூட ஒரு பெயர் உண்டு. இன்றைக்கு 20 வயதிலேயே முடி கொட்டும் பிரச்னை அதிகரித்திருக்கிறது. முடி கொட்டுவதற்குச் சுற்றுச்சூழல், நீர், ஊட்டச்சத்துக் குறைபாடு, தவறான வாழ்க்கைமுறை, மனஅழுத்தம் எனப் பல காரணங்கள் உள்ளன. ஊட்டச்சத்தைப் பொறுத்த அளவில் முக்கியமானது வைட்டமின் பி7 குறைபாடு.

    வைட்டமின் பி7, நீரில் கரையக்கூடிய வைட்டமின். இது துணை என்சைமாகவும் செயல்படுகிறது. மூளையின் செயல்பாட்டுக்கு பேஃட்டி அமிலங்கள் இன்றியமையாதவை. நாம் சாப்பிடும் முட்டை போன்ற உணவுகளில் இருக்கும் பேஃட்டி அமிலங்களை உடல் கிரகிப்பதற்கு பயோட்டின் துணைபுரிகிறது. சர்க்கரை நோயாளிகள் மற்றும் நகங்கள் சிறிது சிறிதாகத் தானாகவே உடையக்கூடிய பிரச்னை (Brittle Nails) உள்ளவர்களுக்கு, பயோட்டின் பரிந்துரைக்கப்படுகிறது.

    பயோட்டின், வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. நரம்பு மண்டலங்களின் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய டயாபடிக் நியூரோபதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளில் பயோட்டின் பயன்படுகிறது.

    எதில் பயோட்டின் இருக்கிறது?

    பயோட்டின் பெரும்பாலான உணவுகளில் சிறிதளவு இருக்கிறது. எனினும், முழு கோதுமை, மைதா கலக்காத கோதுமை பிரெட், முட்டை, பால் பொருட்கள், வேர்க்கடலை, சோயா நட்ஸ், கீரைகள், சாலமன் மீன், கோழி இறைச்சியில் சற்று அதிக அளவு உள்ளது.

    பயோட்டின் சப்ளிமென்ட் சாப்பிடலாமா?

    உணவுகளில் இருந்தே இந்தச் சத்தை நாம் பெற முடியும். இந்தியாவில் பயோட்டின் சத்துக் குறைபாடு மிகமிகக் குறைவு என்பதால், கவலைப்படத் தேவை இல்லை. கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் மட்டும் மருத்துவர்கள் பரிந்துரைத்தால் பயோட்டின் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.


    பயோட்டின்... கவனம் தேவை!

    சில மருந்துகளின் வீரியத்தை பயோட்டின் குறைத்துவிடும் என்பதால், பயோட்டின் மாத்திரை எடுப்பதற்கு முன்னர் மருத்துவர் ஆலோசனை பெறவேண்டியது அவசியம். முட்டையைச் சமைக்காமல் பச்சையாகக் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, பயோட்டின் சத்து உடலில் தங்காது. இதனால், பயோட்டின் குறைபாடு ஏற்பட்டு முடி கொட்டுதல், நகங்கள் உடைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, முட்டையை வேகவைத்தோ அல்லது அரைவேக்காடாகவோ, ஆம்லெட்டாகவோ சாப்பிடலாம்.



  6. #66
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

    பி12

    வைட்டமின் பி குடும்பத்தில் மிகவும் முக்கியமானது `பி12’ என சொல்லப்படும் சயனோகோபாலாமின். தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின் என்பதால், தினசரி உணவில் இதை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தவறான உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறை காரணமாக இந்த வைட்டமின் குறைபாடு பிரச்னை உலகம் முழுவதும் காணப்படுகிறது.

    உடல்பருமனாக இருப்பவர்கள், வேகமாக உடல் எடையைக் குறைப்பதற்காக பல்வேறு தவறான டயட் முறைகளைப் பின்பற்றுவதால் இவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படுகிறது. முற்றிலும் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கும் இந்தக் குறைபாடு வருகிறது.

    வைட்டமின் பி12 அசைவ உணவுகளிலும், பால் பொருட்களிலும் மட்டுமே இருக்கிறது. இந்த இரண்டையும் அறவே தவிர்ப்பதால்தான் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படுகிறது. நமது குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாதான் இந்த வைட்டமினை உடல் பயன்படுத்த உதவுகிறது.


    ஏன் வைட்டமின் பி12 நமக்கு தேவை?

    புரதச்சத்தை உடலுக்கு ஏற்ற வகையில் மாற்றும் நடைமுறைக்கு அவசியம்.

    ரத்தம், ஆக்சிஜனைக் கொண்டுசெல்லும் பணியைச் சிறப்பாகச் செய்யத் தேவை.

    உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருவதில் இந்த வைட்டமின் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    நரம்பு மண்டலங்களின் இயக்கத்துக்கும் பயன்படுகிறது. நல்ல நினைவுத்திறன் இருக்க இந்த வைட்டமின் தேவை.

    மரபணு தொகுப்புகள் ஆரோக்கியத்துக்கு (DNA Synthesis) சயனோகோபாலமின் பயன்படுகிறது.


    வைட்டமின் பி12 குறைபாடு


    உடல்நலக் குறைவு ஏற்படும் சமயங்களில் உடலில் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படுகிறது. குறிப்பாக இரைப்பை மற்றும் குடல் பகுதியில் எதாவது தொந்தரவுகள் ஏற்பட்டால், எளிதில் இந்த வைட்டமின் குறைபாடு வரும். நுண்ணூட்டச்சத்துக்கள் குறைந்த உணவுகளை உட்கொள்வது, புற்றுநோய், ஹெச்.ஐ.வி பாதிப்பு மற்றும் கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்களுக்கும் இந்தக் குறைபாடு பொதுவாகக் காணப்படுகிறது.

    ஆல்கஹால் அருந்துவது, புகைப்பிடிப்பது ஆகிய செயல்கள் இந்த வைட்டமின் கிரகிக்கப்படும் செயல்பாட்டை பாதிக்கின்றன.


    வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால் என்ன நிகழும்?


    தலைமுடி வலுவிழக்கும்.

    எக்சீமா என சொல்லப்படும் தோல் தடித்து அரிப்பு மற்றும் ரத்தம் கசிதல் பிரச்னை ஏற்படும்.

    சூடான அல்லது குளிர்ந்த பொருட்களைச் சாப்பிட்டால் வாயில் கூச்சஉணர்வு (Sensitivity) ஏற்படும்.

    எரிச்சலான உணர்வு அதிகமாக இருக்கும்.

    மனப்பதற்றம் மற்றும் மன அழுத்தம் ஏற்படும்.

    உடல் வழுவிழந்து, ஆற்றல் இல்லாத உணர்வு இருக்கும்.

    மலச்சிக்கல் ஏற்படும்.

    தசைகளில் வலி ஏற்படும்.

    நரம்பு மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

    மிகவும் மோசமான அளவில் குறைபாடு ஏற்பட்டால், ரத்த சிவப்பணுக்கள் குறைந்து ரத்த சோகை ஏற்படும்.



    ஊசி மூலமாக சயனோ கோபாலமினை எடுத்துக்கொண்டால் உடலில் அலர்ஜி, மூச்சுத்திணறல் ஏற்படலாம். மேலும், முகம் சிவந்துபோதல், கை, பாதம், காலில் வீக்கம் ஏற்படலாம்.


    Last edited by chan; 31st Mar 2016 at 12:14 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter