Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree97Likes

All Details about FIRST AID-முதல் உதவி செய்வது எப்படி?


Discussions on "All Details about FIRST AID-முதல் உதவி செய்வது எப்படி?" in "Health" forum.


  1. #21
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: How to Treat Some First Aid Emergencies - காக்க...காக்க..!முதல் உதவி இதுதான்

    வாகன விபத்து:
    விபத்து நடந்த இடத்தில், அடிபட்டவரைச் சுற்றிக் கூட்டமாக நிற்பதைத் தவிர்த்து, காற்றோட்டமான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
    இடிபாடுகளுக்குள் அல்லது இரண்டு வாகனங்களுக்கு இடையே சிக்கி இருந்தால், மிக மிகக் கவனமாக, தலையில் கழுத்தில் அடிபடாமல் அவரை மீட்க வேண்டும்.
    சுவாசம் எப்படி இருக்கிறது என்பதைப் பரிசோதிக்க வேண்டும். இதயத் துடிப்பு இருந்து, மூச்சு வரவில்லை என்றால், ஒரு கையை நெஞ்சின் மேல்வைத்து, மறு கையால் அதன் மேல் வைத்து அழுத்திக்கொடுத்தால், தடைபட்ட சுவாசம் வந்துவிடும்.




    அடிபட்டவர் வாந்தி எடுத்தால், வாயைத் துடைத்துவிட்டு ஒருபக்கமாகத் திருப்பிப் படுக்கவைக்க வேண்டும்.
    குடிக்க எதுவும் தர வேண்டாம். முக்கியமாக சோடா கொடுக்கவே கூடாது. முகத்தில் தண்ணீர் தெளிக்கலாம். துணியைவைத்து அழுத்தி, ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த வேண்டும்.
    அடிபட்டவருக்கு நினைவு இருக்கிறதா என்று பார்க்க, பேச்சுக் கொடுக்க வேண்டும். நினைவு இல்லையெனில், நரம்பியல் மருத்துவர் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வது நல்லது.




    எல்லாவற்றையும் மிக வேகமாக, அதேசமயம் பதற்றமின்றிச் செய்ய வேண்டும். தண்டுவடத்தில் அடிபட்டது போலவே யூகித்துக்கொண்டுதான் கையாள வேண்டும்.
    கவனமாகப் படுக்கவைத்து, தலையை ஒரு பக்கமாகத் திருப்பிவைத்து, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.


    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails All Details about FIRST AID-முதல் உதவி செய்வது எப்படி?-p69ze.jpg   All Details about FIRST AID-முதல் உதவி செய்வது எப்படி?-p69zf.jpg  
    jv_66 likes this.

  2. #22
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: How to Treat Some First Aid Emergencies - காக்க...காக்க..!முதல் உதவி இதுதான்

    முதல் உதவிப் பெட்டியில் இருக்க வேண்டிய பொருட்கள்:
    ஒரு ஜோடி சுத்தமான கையுறைகள், டிஸ்போஸபிள் ஃபேஸ் மாஸ்க், ஸ்டெரிலைஸ்டு காட்டன் ரோல், ஸ்டெரிலைஸ்டு டிரெஸ்ஸிங் துணி, ரோலர் பேண்டேஜ், நுண்ணிய துளைகள் கொண்ட, ஒட்டக்கூடிய டேப், தரமான ஆன்டிசெப்டிக் லோஷன் (ஸாவ்லான், டெட்டால் போன்றது), பெட்டாடைன் (Betadine) ஆயின்மென்ட், துரு இல்லாத கத்தரிக்கோல், குளுகோஸ், எலெக்ட்ரால் போன்ற நீர்ச் சத்துக்கான பவுடர் பாக்கெட்டுகள், பாரசிட்டமால் மாத்திரை, வலி நீக்கும் மாத்திரை மற்றும் அவரவர் குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையைப் பொருத்து, ரத்த அழுத்தத்துக்கான மாத்திரை, அன்டாஸிட் ஜெல் போன்றவை.


    கவனம்...!
    முக்கியக் குறிப்புகள்:
    முதல் உதவிப் பெட்டியோ, மற்ற மருந்துகளோ... குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.


    குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பார்க்கக்கூடிய இடத்தில் முதல் உதவிப் பெட்டி இருக்க வேண்டும். சிவப்பு நிறத்தில் 'ப்ளஸ்’ குறியிட்ட பெட்டி என்றால், யாருமே பார்த்ததும் எடுக்க முடியும்.





    அதைப் பூட்டிவைக்கக் கூடாது. எமர்ஜென்சி சமயத்தில் சாவியைத் தேடுவதால், வீண் டென்ஷனும் கால விரயமும் உண்டாகும்.


    உபயோகித்த மருந்துகள் மற்றும் பொருள்களுக்குப் பதிலாக மீண்டும் வாங்கிவைத்துவிட வேண்டும்.


    காலாவதி ஆன மருந்துகளை, தேதி பார்த்து உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.


    குடும்ப மருத்துவர், அவசர சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் தொலைபேசி எண்களை ஒரு சீட்டில் குறித்து அந்தப் பெட்டிக்குள்ளேயே வைத்திருப்பது அவசியம்.



    Attached Thumbnails Attached Thumbnails All Details about FIRST AID-முதல் உதவி செய்வது எப்படி?-p69zg.jpg   All Details about FIRST AID-முதல் உதவி செய்வது எப்படி?-p69zh.jpg  
    jv_66 likes this.

  3. #23
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: How to Treat Some First Aid Emergencies - காக்க...காக்க..!முதல் உதவி இதுதான்

    கற்கலாம் முதல் உதவி:
    FRT (First Responder Training program)

    ஓர் ஆபத்தையோ விபத்தையோ பார்க்கும்போது, ஓடிப்போய் உதவி செய்வது மனித இயல்பு. முதலில் விபத்தைப் பார்க்கும் நபர்தான் 'First responder’. அவர் செய்யும் முதல் உதவிதான் அங்கே முக்கியமானது. அந்த முதல் உதவி சிகிச்சைகளையே முறைப்படி கற்றுக்கொண்டு செய்யும்போது, உயிர் காக்கும் முயற்சி இன்னும் அர்த்தமுள்ளதாகும்.



    முதல் உதவி செய்வதற்கு யார் வேண்டுமானாலும் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். அதற்கான ஒரு நாள் பயிற்சி அளிக்கிறது, அவசர கால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். விபத்து மற்றும் அனைத்து அவசர காலப் பிரச்னைகளுக்குமான முதல் உதவிகளை, இங்கே செய்முறைப் பயிற்சியுடன் கற்றுத்தருகிறார்கள். சான்றிதழுடன் கூடிய இந்த ஒரு நாள் பயிற்சிக்குக் கட்டணம் ரூ. 608. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் நிர்வாகம் விரும்பினால், இவர்கள் அங்கேயே சென்று பயிற்சி அளித்தும் வருகின்றனர்.

    நன்றி டாக்டர் விகடன்


    Attached Thumbnails Attached Thumbnails All Details about FIRST AID-முதல் உதவி செய்வது எப்படி?-p69zi.jpg  
    jv_66 likes this.

  4. #24
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: How to Treat Some First Aid Emergencies - காக்க...காக்க..!முதல் உதவி இதுதான்

    பயனுள்ள.... அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்... நன்றி லக்ஷ்மி


  5. #25
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    re: How to Treat Some First Aid Emergencies - காக்க...காக்க..!முதல் உதவி இதுதான்

    Very good info, Latchmy

    chan likes this.

  6. #26
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: How to Treat Some First Aid Emergencies - காக்க...காக்க..!முதல் உதவி இதுதான்

    அவசியம் படிக்கவும்

    @jv_66; @Parasakthi ;@thenuraj ; @Dangu; @ashsuma; @shrimathivenkat ;@ sumathisrini; @kkmathy; @gkarti ; @kiruthividhya;@ jayakalaiselvi; @spmeyyammaisp06; @umasaravanan; @rsakthi1974;@rajisugu




  7. #27
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    All Details about FIRST AID-முதல் உதவி செய்வது எப்படி?

    முதல் உதவி செய்வது எப்படி?



    ந்தியாவில் விபத்துகளால் உயிர் இழப்பவர்களில் 80 சதவிகிதம் பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் பலியாகிறார்கள். சமீபத்தில் அதிரவைத்த புள்ளிவிவரம் இது. இத்தகைய விபத்தில் சிக்கியவர்களுக்கு முறையான முதல் உதவி கிடைத்திருந்தால், அவர்கள் நிச்சயம் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு முதல் உதவி என்பது தேவையானதாகவும், பலருக்கும் தெரியாததாகவும் இருக்கிறது.

    ஆபத்தான தருணங்களில் எத்தகைய முதல் உதவிகளைச் செய்வது, பயம் நீக்கி எப்படி தன்னம்பிக்கை ஊட்டுவது, உயிரைக் காப்பாற்ற எத்தகைய வழிமுறைகளை மேற்கொள்வது என இந்த இணைப்பு இதழில் விரிவாக விளக்குகிறார்கள் பொதுநல மருத்துவர்கள் கு.கணேசன், ஏ.பிரபு, இதய நோய் சிகிச்சை நிபுணர் நாராயணஸ்வாமி மற்றும் 'அலெர்ட் அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் திரிவேதி ஆகியோர். உயிரைக் காக்கும் உன்னதப் பணிக்கு இந்த இணைப்பிதழ் நிச்சயம் உங்களைத் தயாராக்கும்.



    Attached Thumbnails Attached Thumbnails All Details about FIRST AID-முதல் உதவி செய்வது எப்படி?-p69.jpg   All Details about FIRST AID-முதல் உதவி செய்வது எப்படி?-p70.jpg  
    jv_66 and Dangu like this.

  8. #28
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: முதல் உதவி செய்வது எப்படி?

    முதல் உதவி என்றால் என்ன?

    காயம் அல்லது நோய் காரணமாக உடல் நலப் பாதிப்பு அடைந்த ஒருவருக்கு, முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை, இருப்பதை வைத்துக்கொண்டு, அவசரநிலைப் பராமரிப்பை மேற்கொண்டு உயிரைக் காப்பாற்றுவதே முதல் உதவி. காயங்கள் மோசமான நிலையை அடையாமல் தடுப்பதும் முதல் உதவியே.
    முதல் உதவி செய்யும்போது தவிர்க்க வேண்டியவை:


    ஒருவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்றால், உடனடியாக அவரைச் சூழ்ந்துகொண்டு நிற்பது தவறு. காற்றோட்டத்திற்கு வழி செய்ய வேண்டும்.

    ஒருவர் மயக்க நிலையை அடைந்துவிட்டால், அவருக்கு சோடா, தண்ணீர் போன்றவற்றைக் கொடுக்கக் கூடாது. தண்ணீரானது உணவுக் குழாய்க்குப் பதில், மூச்சுக் குழாய்க்குள் சென்று அடைத்து, அதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உருவாகும்.

    கை, கால்களில் ரத்தம் வந்துகொண்டு இருந்தால், ரத்தம் வரும் பகுதியை மேல் நோக்கி உயர்த்திப் பிடித்து, ஒரு துணியால் அந்த இடத்தை அழுத்திப் பிடித்துக் கட்ட வேண்டும். இதனால் ரத்தப்போக்கு குறையும்.

    முதல் உதவியில் இருக்கும் அடிப்படை விஷயங்கள்:
    முதலில், பாதிப்பு அடைந்தவர் உணர்வுடன் இருக்கிறாரா என அவரின் இரண்டு பக்கத் தோள்களின் மீதும் தட்டிப் பரிசோதிக்க வேண்டும்.

    மற்றவர்களை உதவிக்கு அழையுங்கள். இதனால், பாதிப்பு அடைந்த நபரை உடனடியாகக் காப்பாற்றுவதுடன், உங்களுக்கு இருக்கும் மனப் பதட்டத்தையும் தணித்துக்கொள்ள முடியும்.

    ஆம்புலன்ஸ் அல்லது அவசர உதவிக்கு 108 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுங்கள்.

    ஆம்புலன்ஸ் வர எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பொருத்து முதல் உதவி செய்வதற்கு முயற்சியுங்கள்.

    ஆம்புலன்ஸ் உதவி மிக விரைவாகக் கிடைக்கும் என்றால், அவர்கள் வரும் வரை காத்திருங்கள். நேரம் ஆகும் என்றால் அல்லது நிலைமை மோசம் அடைந்தால், அவருக்கு 'கேப்’ (CAB - C: CIRCULATION, A:AIRWAY, B:BREATHING) எனப்படும், அடிப்படை விஷயங்கள் உள்ளதா எனப் பார்க்க வேண்டும். அவை, ரத்த ஓட்டம், சுவாசப் பாதையில் அடைப்பு, சுவாசம் உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.

    இந்த மூன்று சோதனைகளும் அடிப்படையானவை. எந்த வகையான பாதிப்பாக இருந்தாலும் இந்த மூன்று சோதனைகளையும் செய்த பின்னரே, முதல் உதவி செய்ய வேண்டும்.



    sucharitha, jv_66, kkmathy and 2 others like this.

  9. #29
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: முதல் உதவி செய்வது எப்படி?

    எப்படிச் செய்ய வேண்டும்?

    ரத்த ஓட்ட சோதனை:

    பாதிப்பு அடைந்தவரை சம தளத்தில் படுக்கவைத்து அவரது குரல்வளையின் மத்தியில் இருந்து, வலது அல்லது இடதுபக்கமாக இரண்டு அங்குலம் அளவு தள்ளி இதயத்திற்கு மிகவும் நெருக்கமான பகுதியில், உங்களது இரண்டு விரல்களை வைத்தால், ரத்த ஓட்டம் இருப்பதை உணர முடியும்.

    சுவாசப் பாதை சோதனை:

    பாதிப்பு அடைந்தவரை சமதளத்தில் படுக்கவைத்து அவர்
    நெற்றியின் மீது ஒரு கையை வைத்துக்கொண்டு மறு கையால் தாடையைச் சிறிது மேல் நோக்கி உயர்த்தவும். இதனால் சுவாசப் பாதையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் சீராகும்.

    சுவாச சோதனை:

    பாதிப்பு அடைந்தவரை சமதளத்தில் படுக்க வைத்து வாய் அருகே உங்களது காது மடல்களைக் கொண்டுசென்று, சுவாசத்திற்கு உரிய ஏதேனும் சத்தம் வருகிறதா என்பதைக் கவனிக்கவேண்டும். அதே சமயம், பாதிப்பு அடைந்தவரின் மார்பு ஏறி, இறங்குகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

    இந்தப் பரிசோதனையில் பாதிப்பு அடைந்தவருக்குச் சுவாசம் இருப்பது தெரிய வந்தால், உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து, சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும்.

    ஒருவேளை சுவாசம் இல்லை என்றால், சி.பி.ஆர் (Cardio-pulmonary Resuscitation) எனப்படும் இதய செயற்கை சுவாசமூட்டல் முதல் உதவியைச் செய்ய வேண்டும்




    sucharitha, jv_66, kkmathy and 2 others like this.

  10. #30
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: முதல் உதவி செய்வது எப்படி?

    சி.பி.ஆர். இதய சுவாசமூட்டல்:
    பாதிப்பு அடைந்தவருக்கு சுவாசம் நின்றுபோனாலோ, நாடித்துடிப்பு இல்லாமல் இருந்தாலோ, சி.பி.ஆர். செய்வதன் மூலம் அவரது உடலில் ரத்த ஓட்டத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியும். இதனால் ஆக்சிஜன் இழப்பால் ஏற்படும் இறப்பு மற்றும் மூளை சேதத்தையும் தடுக்க முடியும்.





    எப்படிச் செய்வது?


    பாதிப்பு அடைந்தவரைச் சமதளத்தில் படுக்கவைத்து, அவருக்குப் பக்கவாட்டில் அமர்ந்துகொண்டு, இடது மார்புப் பகுதியில், நம்முடைய இரண்டு கைகளின் உள்ளங்கைப் பகுதியை ஒன்று சேர்த்து அரை செ.மீ. அளவுக்கு மென்மையாக அழுத்த வேண்டும்.

    மூன்று முறை அழுத்திய பிறகு அவரது வாயோடு வாய்வைத்துக் காற்றை ஊத வேண்டும். (மீட்பு சுவாசம் பார்க்கவும்) இதேபோன்று தொடர்ந்து செய்ய வேண்டும்.

    அழுத்தும்போது வேகமாக அழுத்தினால் விலா எலும்பு உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே கவனம் தேவை.

    குழந்தைகளுக்கு: குழந்தைகளுக்கு சி.பி.ஆர். முதல் உதவி செய்யும்போது, உள்ளங்கையைக் கொண்டு அழுத்தம் கொடுக்காமல், இரண்டு விரல்களால் கொடுக்க வேண்டும். அதேபோல 15 முறை மட்டும்தான் அழுத்தம் தர வேண்டும்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter