Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree97Likes

All Details about FIRST AID-முதல் உதவி செய்வது எப்படி?


Discussions on "All Details about FIRST AID-முதல் உதவி செய்வது எப்படி?" in "Health" forum.


  1. #61
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: All Details about FIRST AID-முதல் உதவி செய்வது எப்படி?

    sorry lakshmi,ippothaan intha thread paarthen.romba mukiyamana ,useful info koduthurukeenga.thanks for sharing.


    Sponsored Links
    chan likes this.

  2. #62
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All Details about FIRST AID-முதல் உதவி செய்வது எப்படி?

    முதலுதவி யாருக்கு? எப்போது? எப்படி?

    ஃபர்ஸ்ட் எய்டு கைடு


    ‘ம
    ழை, கைமாறு கருதிப் பொழிவது இல்லை. அந்த மழையைப்போல எதிர்பார்ப்பின்றி உதவ வேண்டும்’ என்கிறது வள்ளுவம். உதவிகளில் தலையாயது முதலுதவி. ஆபத்தில் இருக்கும் ஓர் உயிரைக் காப்பற்றுவது என்பது நமக்குக் கிடைக்கும் அர்த்தமுள்ள ஒரு வாய்ப்பு. அது நம் சமூகக் கடமைகளில் முக்கியமானது. ‘இந்தியாவில், ஒரு வருடத்துக்கு ஒரு லட்சம் பேரில் 4,000-க்கும் அதிகமானோர் போதிய முதலுதவி கிடைக்காமல் இறந்துபோகிறார்கள்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். முதலுதவி செய்ய ஆர்வம் இருந்தாலும், யாருக்கு, எந்த முதலுதவியை, எப்படிச் செய்ய வேண்டும் என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. முதலுதவி குறித்த விளக்கமான இந்தக் கையேடு, நமக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.


    முதலுதவிப் பெட்டி

    வீடு, வாகனங்கள், பணியிடம், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் முதலுதவிப் பெட்டி அவசியம் இருக்க வேண்டும். சில நூறு ரூபாய் மட்டுமே செலவாகும் முதலுதவிப் பெட்டி கைவசம் இருப்பது, விலை மதிப்பற்ற நமது உயிருக்குப் பாதுகாப்பு.


    வீட்டில் இருக்கவேண்டிய முதலுதவிப் பொருட்கள்

    1. ஆஸ்பிரின் 75 மி.கி
    மாரடைப்பின்போது ரத்தம் வேகமாக உறையும். இதனால், இதயத்துக்கு ரத்தம் செல்வதில் தடை ஏற்படும். ஆஸ்பிரின், ரத்தம் உறைவதைத் தடுக்கும். எனவே, மாரடைப்பு ஏற்படும் சமயங்களில், இது உதவும். வீட்டில் நான்கு மாத்திரைகள் எப்போதும் இருப்பது நல்லது.


    2. குளோப்பிடோகிரெல் 75 மி.கி
    இதுவும் மாரடைப்பு ஏற்படும் சமயங்களில் ரத்த உறைதல் ஏற்படுவதைத் தடுக்க உதவும் உயிர் காக்கும் மாத்திரையே.

    3. சில்வர் சல்ஃபாடயாஸைன் களிம்பு
    சிறிய தீப்புண்கள் ஏற்பட்டால், இந்த களிம்பை புண்கள் மேல் தடவலாம்.

    4. மர ஸ்கேல்
    கை முறிவு ஏற்பட்டால், முதலுதவி செய்யும்போது கட்டுப்போட இது உதவும்.

    5. கைக்குட்டை
    கட்டுப்போட உதவுவதில் கைக்குட்டைக்கு முக்கியப் பங்கு உண்டு. எனவே, சற்று பெரிதான இரண்டு மூன்று கைக்குட்டைகள் எப்போதும் முதலுதவிப் பெட்டியில் இருக்கட்டும்.

    6. காட்டன் பேட் (Guaze pod)
    ரத்தம் வரும்போது கட்டுப்போட, காட்டன் பேட் மிகவும் உதவியாக இருக்கும். இதன் மூலம் ரத்தம் வெளியேறுவதைத் தடுக்க முடியும்.



    Last edited by chan; 24th Nov 2015 at 12:51 PM.

  3. #63
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All Details about FIRST AID-முதல் உதவி செய்வது எப்படி?

    7. ஐஸ் பேக் (Ice bag)
    ஒத்தடம் கொடுக்கவும், சில நேரங்களில் குறிப்பிட்ட இடத்தில் ரத்தம் பாய்வதைக் கட்டுப்படுத்தவும், வீக்கம், வலி குறைப்பதற்கும் ஐஸ் பேக்கைப் பயன்படுத்தலாம்.

    8. குளுக்ககான் ஊசி
    சர்க்கரை நோயாளிகள் இருக்கும் வீடுகளில் அவசியம் இந்த ஊசியை வைத்துக்கொள்வது நல்லது. முதலுதவி செய்யும்போது, இந்த ஊசி உதவும்.


    9. பாரசிட்டமால் மாத்திரை

    காய்ச்சல் வந்தால் பாரசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். இரு நாட்கள் ஆகியும் காய்ச்சல் கட்டுப்படவில்லை எனில், மருத்துவரை அணுகுவது அவசியம்.


    ஆசனவாய் பாரசிட்டமால் (Paracetamol suppository)

    காய்ச்சலின்போது சில குழந்தைகளுக்கு உடலின் வெப்பநிலை மேலும் அதிகரித்து, வலிப்பு ஏற்படக்கூடும். அதைத் தவிர்க்கவும், வலிப்பு ஏற்பட்டால் உடல் வெப்ப நிலையைச் சட்டென குறைக்கவும், இந்த மாத்திரையை ஆசனவாயில் வைக்கலாம்.


    10. கிருமி நாசினி

    காயம்பட்ட இடத்தில் மருந்திடுவதற்கு முன், கிருமிகளை அழித்து, சுத்தம் செய்ய கிருமி நாசினி அவசியம். இது காயங்களில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுக்கும்.


    11.தெர்மா மீட்டர்

    சராசரி உடல் வெப்பநிலைக்கு மேல் ஒரு டிகிரிக்கும் அதிகமான காய்ச்சல் இருந்தால், அதைக் கண்டறிந்து உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல உதவும்.


    12. பருத்திப் பஞ்சு

    புண்கள், காயங்களில் கட்டுப்போடுவதற்கும், வெட்டுக்காயங்களின் போது ஏற்படும் ரத்தக்கசிவைக் கட்டுப்படுத்தவும் பருத்திப் பஞ்சு உதவும்.




  4. #64
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All Details about FIRST AID-முதல் உதவி செய்வது எப்படி?

    13. கத்தரிக்கோல்
    பிரத்யேகக் கத்தரிக்கோல் மூலமாகத்தான் முதலுதவிப் பொருட்களைக் கத்தரிக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப வெவ்வேறு சைஸ்களில் வாங்கிவைத்துக்கொள்ளலாம்.


    முதலுதவிகள்

    திடீர் இதயத்துடிப்பு முடக்கம் (Sudden cardiac arrest)


    *மாரடைப்புக்கும் ‘சடன் கார்டியாக் அரெஸ்ட்’ எனப்படும் திடீர் இதயத்துடிப்பு முடக்கத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

    *இதயத்துடிப்பு திடீரென முடங்குவதற்கு ‘சீரற்ற இதயத்துடிப்பு’ எனப்படும் அரித்மியா உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அதில் ஒரு காரணம்தான் மாரடைப்பு.

    *மாரடைப்பு வரும்போது அறிகுறிகள் தெரியும்; இதயத்துடிப்பு இருக்கும்.

    *மாரடைப்பு வந்தவர்கள் நெஞ்சுவலியைச் சுட்டிக்காட்டும் அளவுக்கு சுயநினைவோடுதான் இருப்பார்கள். எனவே, உடனடியாக அவர்களுக்கு ஆஸ்பிரின் மாத்திரைகள் கொடுத்துக் காப்பாற்றிவிடலாம்.

    *திடீர் இதயத்துடிப்பு முடக்கம், மாரடைப்பை விடவும் தீவிரமான சிக்கல். இது, ஏற்பட்டால் உடனடியாக சுயநினைவை இழந்து, மரணம் நேரிடலாம்.


    எப்படிக் கண்டுபிடிப்பது?

    திடீரென ஒருவர் நம் கண் முன் நிலைகுலைந்து விழுகிறார் எனில், உடனடியாகச் சில விநாடிகளுக்குள் அவரின் தோள்பட்டையைப் பிடித்து உலுக்க வேண்டும்.


    *எந்த உணர்ச்சியும் இன்றிக் காணப்பட்டால், அது திடீர் இதயத்துடிப்பு முடக்கமாக இருக்கலாம்.

    *அவரது கையில் நாடி பார்ப்பதோ, இதயத்துக்கு அருகில் காதைவைத்துச் சத்தம் கேட்கிறதா எனச் சோதனை செய்வதோ வேண்டாம். அவை எல்லாம் நேரத்தை வீணாக்கும் செயல்கள்.

    *ஒருவருக்குத் திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டால், அவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு ஒவ்வொரு நிமிடமும் 10 சதவிகிதம் குறைகிறது. அதாவது, 10-வது நிமிடம் அவர் நிரந்தரமாக உயிர் இழக்கக்கூடும்.

    *எனவே, உணர்ச்சியே இல்லை எனில், தாமதிக்காமல் உடனடியாக சி.பி.ஆர் எனும் முதலுதவியைச் செய்ய வேண்டும்.




  5. #65
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All Details about FIRST AID-முதல் உதவி செய்வது எப்படி?

    சி.பி.ஆர் (Cardiopulmonary Resuscitation)



    *சி.பி.ஆர் என்பது இதயத்துக்குச் செயற்கையாக உயிரூட்டல். பாதிக்கப்பட்டவரை ஒரு சமதளத்தில் உடனடியாகப் படுக்கவைக்க வேண்டும்.

    *அவரைச் சுற்றிக் கூட்டம்போட வேண்டாம். காற்றோட்டம் இருக்கட்டும். முதலில் அவரது சட்டை பட்டன்களை அவிழ்க்கவும்.

    *நெஞ்சின் மையப்பகுதியின் மீது, வலது அல்லது இடது உள்ளங்கையின் தடிமனான அடிப்பகுதியை வைக்க வேண்டும். இன்னொரு கையை அந்தக் கையின் மேல் வைத்து, இருகை விரல்களையும் இறுக்கமாகக் கோத்துக்கொள்ள வேண்டும்.


    *இப்போது, பாதிக்கப்பட்டவரின் நெஞ்சில் சுமார் ஐந்து செ.மீ ஆழத்துக்கு வேகமாக அழுத்தம் கொடுத்து, எடுக்க வேண்டும்.

    *ஒரு நிமிடத்துக்கு 100 முதல் 120 முறை இப்படி அழுத்தம் கொடுத்து ரிலீஸ் செய்ய வேண்டும்.

    *பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் உணர்வு வரும் வரையிலோ அல்லது அவசரஉதவிப் பிரிவில் பணியாற்றும் மருத்துவக் குழுவினர் வரும் வரையிலோ உங்களுக்குக் கடும் சோர்வு ஏற்படும் வரையிலோ, இந்த முதலுதவியைச் செய்துகொண்டே இருக்க வேண்டும்.

    *பாதிக்கப்பட்டவருக்குச் பக்கவாட்டில் அமர்ந்துதான் இந்த முதலுதவியைச் செய்ய வேண்டும்.


    குழந்தைகளுக்கான சி.பி.ஆர்

    *குழந்தைகளுக்கு, நெஞ்சுப்பகுதியில் கையின் அடிப்பகுதியை வைத்து அழுத்தம் கொடுக்கக் கூடாது.

    *குழந்தை பேச்சுமூச்சின்றி உணர்வில்லாமல் இருந்தால், குழந்தையின் நெஞ்சுப்பகுதியின் இரண்டு புறமும் கைவைத்துத் தூக்கி, நெஞ்சின் மையப்பகுதியில் இரண்டு கட்டை விரல்களாலும், 2-3 செ.மீ ஆழத்துக்கு மிதமாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    *ஒரு நிமிடத்துக்கு 30 தடவை அழுத்தம் கொடுத்து ரிலீஸ் செய்ய வேண்டும். 30 முறை நெஞ்சுப்பகுதியில் அழுத்தம் தந்தபின், இரண்டு முறை வாய் மற்றும் மூக்கின் மேல் உங்கள் வாய்வைத்து ஊதி, செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்.



    Last edited by chan; 24th Nov 2015 at 12:56 PM.

  6. #66
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All Details about FIRST AID-முதல் உதவி செய்வது எப்படி?

    மாரடைப்பும் திடீர் இதயத்துடிப்பு முடக்கமும்

    மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு, ஆஸ்பிரின் மாத்திரை நான்கைக் கொடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்.

    *மாரடைப்புக்காரர்கள் நெஞ்சு வலிக்கிறது எனக் கூறியபடியே பேச்சு மூச்சற்று சரிந்தால், அது திடீர் இதயத்துடிப்பு முடக்கமாக மாறி இருக்கக்கூடும். எனவே, அவர்களுக்கு சி.பி.ஆர் முதலுதவியைத் தாமதம் இன்றிச் செய்ய வேண்டும்.

    *தூக்குப்போட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றவர்கள், விஷம் சாப்பிட்டவர்கள், நீரில் மூழ்கியவர்கள், விபத்தில் மோசமாகக் காயம்பட்டவர்கள் என அனைவருக்குமே உயிர் பிரிவதின் கடைசி நிலை திடீர் இதயத்துடிப்பு முடக்கம்தான். எனவே, இந்த முதலுதவியைத் தேவையான சமயங்களில், சமயோஜிதமாக உணர்ந்து செய்ய வேண்டும்.

    *பெரியவர்களுக்கு வாய் வழியே சுவாசம் தர வேண்டிய அவசியம் இல்லை. சி.பி.ஆர் மட்டுமே போதுமானது.

    மாரடைப்பு


    மாரடைப்பு என்பது இதயத்துக்குச் செல்லும் கரோனரி ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதுதான்.

    *மாரடைப்பு ஏற்படும்போது, நெஞ்சுப் பகுதியில் ஒருவிதமான பாரம் இருக்கும்.

    *கழுத்து, இடது கைப்பகுதிகளில் வலி ஏற்படும். வியர்த்துக்கொட்டும், வேகமாக மூச்சுவாங்கும். (சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு இந்த அறிகுறிகள் தெரியாமல் போகலாம்.)

    *மாரடைப்பு அறிகுறிகள் தென்பட்டால், ஆஸ்பிரின் 75 மி.கி அளவு கொண்ட மாத்திரைகள் நான்கை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    *ஆஸ்பிரினில் கடித்துச் சாப்பிடும் வகையாக, டிஸ்பிரின் என்ற மாத்திரையும் இருக்கிறது.

    *மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால், ஆஸ்பிரின்/டிஸ்பிரின், குளோப்பிடோகிரெல் ஆகிய இரண்டும் தலா 300 மி.கி அளவுக்கு சாப்பிட்டுவிட்டு, மருத்துவமனைக்கு உடனடியாகச் செல்ல வேண்டும்.

    *ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகள் அடைப்பு மேலும் அதிகரிப்பதை மட்டுமே தடுக்கும்.

    *அடைப்பை சரிசெய்ய மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி போன்ற சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    *மாரடைப்பு ஏற்படுவதன் அறிகுறிகள் தெரிந்தால், வேகமாக நடக்கவோ, படிகளில் ஏறவோ கூடாது. சோடா குடிப்பதும் தவறு. இவற்றால் வலி கூடுமே தவிர, குறையாது.

    *மாரடைப்பு ஏற்பட்டால், யாரிடமாவது கன்சல்ட் செய்துவிட்டு பிறகு மருத்துவமனைக்குச் செல்லலாம் என நினைத்து, தாமதப்படுத்துவது தவறு.

    *இதயத்துக்கான மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு உடனடியாகக் சென்றால் மட்டுமே எளிதில் பிழைக்க முடியும்.

    Last edited by chan; 24th Nov 2015 at 12:58 PM.

  7. #67
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All Details about FIRST AID-முதல் உதவி செய்வது எப்படி?

    குழந்தைகளுக்கு ஏற்படும் திடீர் மூச்சுக்குழாய் அடைப்பு

    குழந்தைகளுக்கு மூச்சுக்குழாயில் உணவு அடைத்துக்கொள்ளும் பிரச்னை அதிக அளவில் இருக்கும். ஏனெனில், குழந்தைகள் நாணயங்கள், பட்டாணி, வாழைப்பழம் போன்றவற்றை விழுங்கிவிட வாய்ப்புகள் அதிகம். இதற்கு, சிலர் தலைகீழாகக் குழந்தைகளைப் பிடித்துத் தட்டுவார்கள். இது தவறு. இப்படிச் செய்யக் கூடாது.


    *ஒரு கையில் குழந்தையைச் சாய்வாகப் பிடித்துக்கொண்டு, இரண்டு விரல்களை வைத்து அதன் நெஞ்சுக்குழியில் ஐந்து முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். பின்னர், குழந்தையைத் திருப்பி வைத்து, உள்ளங்கையால் சில முறை முதுகில் தட்ட வேண்டும்.

    *மூச்சுத்திணறல் ஏற்படும்போது தலையில் தட்டுவதால் எந்தப் பயனும் இல்லை.

    *சிலர் குழந்தையின் வாய்க்குள் விரலை விட்டு உணவுப்பொருளை வெளியே எடுக்க முயலுவார்கள். இதனால், அந்தப் பொருள் மூச்சுக் குழாயின் உட்புறம் தள்ளிவிடப்படவும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் கவனம் தேவை.


    திடீர் மூச்சுக்குழாய் அடைப்பு

    புட்டு, அசைவ உணவுகள் போன்ற சில உணவுகளைச் சாப்பிடும்போது, சிலருக்குத் திடீரென மூச்சுக்குழாய் அடைத்துக்கொள்ளும். ஒருவருக்கு மூச்சுக்குழாய் அடைத்துக்கொண்டால், அதை சுட்டிக்காட்ட தானாகவே கழுத்துப்பகுதிக்குக் கை போகும். இந்த சமிக்ஞையை ‘யுனிவர்சல் சோக்கிங் ஸைன்’ என்பார்கள்.

    யாராவது, தன் கழுத்தைப் பிடித்தபடி தவித்துக்கொண்டிருந்தால், அவருக்குப் பெரும்பாலும் திடீர் மூச்சுக்குழாய் அடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து, முதலுதவி கொடுக்க வேண்டும்.

    *மூச்சுக்குழாய் அடைப்புப் பிரச்னையால் தவிப்பவரிடம், ‘மூச்சுக்குழாய் அடைத்திருக்கிறதா?’ என முதலில் கேட்க வேண்டும்.

    *அவர் கஷ்டப்பட்டு ‘ஆமாம்’ எனச் சொன்னால், பயப்படத் தேவை இல்லை. அவருக்கு ஆக்சிஜன் கிடைத்துக்கொண்டிருக்கும். அவரைப் ‘பேச வேண்டாம்’ எனக் கூறி, நன்றாக இருமச் சொல்லி வலியுறுத்துங்கள்.

    *ஒருவேளை சத்தம் வரவில்லை, தலையை மட்டும் ஆட்டுகிறார் எனில், அவர்களுக்கு ஹெய்ம்லிச் மேனியூவர் (Heimlich maneuver) எனும் முதலுதவியைச் செய்ய வேண்டும்.

    *பாதிக்கப்பட்டவருக்குப் பின்புறம் நிற்க வேண்டும். அவரது அடிவயிற்றின் தொப்புள் பகுதியில் இடது கையைக் குத்துவதுபோல வைக்க வேண்டும். வலது கையை இடது கையின் மேல் வைத்து, நன்றாக மேல்நோக்கி அழுத்தம் தந்து ரிலீஸ் செய்யவும். பாதிக்கப்பட்டவர் நார்மலாகும் வரை வேகமாக இப்படிச் செய்துகொண்டே இருக்க வேண்டும்.

    *முதலுதவி கொடுக்கத் தாமதப்படுத்தினால், நினைவு இழப்பு ஏற்பட்டு, சில நிமிடங்களில் இதயத்துடிப்பு நின்றுவிட வாய்ப்பு இருக்கிறது என்பதால், கவனம் தேவை.

    *ஒருவேளை மயக்கமாகிவிட்டார் எனில், திடீர் இதயத்துடிப்பு முடக்கமாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால், சி.பி.ஆர் முதலுதவி தருவது அவசியம்.


  8. #68
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All Details about FIRST AID-முதல் உதவி செய்வது எப்படி?

    வலிப்பு

    வலிப்பு வருபவர்களுக்கு அளிக்கும் முதலுதவிகளில் தவறானவையே அதிகம்.


    *வலிப்பு வந்தவரை சுற்றி கூட்டம் போடக்கூடாது.

    *விரைவாக மருத்துவமனைக்குக் கூட்டிச்செல்ல வசதி செய்து தர வேண்டும்.

    *கையில் சாவி குடுப்பது, செருப்பு கொடுப்பது போன்றவற்றைச் செய்யக் கூடாது.
    *அதேபோல அவரது கை, கால்களைப் பிடிக்கக் கூடாது. இதனால், பாதிக்கப்பட்டவருக்கு எலும்புகள், விலகவும் முறியவும் வாய்ப்புகள் உள்ளன.

    *சோடா, குளிர்பானம் போன்றவற்றைக் கொடுக்கக் கூடாது.

    *மூன்று முதல் ஆறு வயதுள்ள குழந்தைகளுக்கு வலிப்பு வரும்போது காய்ச்சல் இருந்தால், மென்மையான துணியைத் தண்ணீரில் நனைத்து, நன்கு பிழிந்த பின் குழந்தையின் உடலில் ஒற்றி எடுக்கலாம். இல்லை எனில், ஆசனவாயில் வைக்கும் பாரசிட்டமால் (சப்போசிட்டரி) மாத்திரையை வைத்து உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.


    *காய்ச்சல் இன்றி வலிப்பு வருகிறது எனில், நரம்புத் தொடர்பான பிரச்னையாக இருக்கக்கூடும். தாமதிக்காமல் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதே சிறந்தது.

    *நாக்கைக் கடித்துக்கொள்ளாமல் இருக்க, நமது கைகளை பற்களின் இடையில் வைப்பதோ, துணியையோ வேறு ஏதேனும் பொருளையோ வாயில் திணிக்க முயல்வதோ கூடாது.

    *இதனால், உதவி செய்ய முயல்பவருக்கு விரல்கள் கடிபடக்கூடும். சில சமயங்களில் விரல்களே துண்டாகக்கூடும்.

    *வலிப்பு நின்றவுடன் ஒருபுறமாக ஒருக்களித்துப் படுக்கவைத்து, மேற்புறம் உள்ள காலை மடக்கி வைத்துவிட்டு, ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும்.

    நாய்க் கடி, பூனைக் கடி, குரங்குக் கடி
    நாய்க்கடி, உயிரையே காவு வாங்கும் மோசமான பிரச்னை. வீட்டு நாயோ, தெரு நாயோ, தடுப்பூசி போடப்பட்டதோ, போடப்படாததோ எதுவாக இருந்தாலும், எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்.

    நாய்க்கடியால் ‘ரேபிஸ்’ என்ற வைரஸ் தொற்று ஏற்படக்கூடும். நாய்க்கடி போலவே பூனைக்கடி, குரங்குக்கடியாலும் ரேபிஸ் தொற்று ஏற்படும்.


    *கடிபட்ட இடத்தை சோப் போட்டு, குழாய் நீரில் நன்றாகக் கழுவிய பின் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

    *நாய்க்கடிக்கு, ரேபிஸ் தடுப்பூசி ஐந்துமுறை போடப்படும். கடித்த தினம் முதல், 3, 5, 7, 28வது நாட்களில் இந்தத் தடுப்பூசி போடப்படும்.

    *நாய் கடித்தால், தொப்புளைச் சுற்றி 28 ஊசிகள் போடும் காலம் எல்லாம் மலையேறிவிட்டது. கையிலேயே ஐந்து முறை ஊசி போட்டுக்கொண்டால் போதும்.

    *குழந்தையை நாய், பூனை பிராண்டினாலோ, கடித்தாலோகூட, இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது. ஏனெனில், உயிர்க்கொல்லியான ரேபிஸ் நோய்க்கு மருந்து இல்லை. தடுக்க மட்டுமே முடியும்.




  9. #69
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: All Details about FIRST AID-முதல் உதவி செய்வது எப்படி?

    பாம்புக் கடி

    பாம்புக் கடியைப் பொறுத்தவரை பல தவறான மூட நம்பிக்கைகள் மக்களிடம் இருக்கின்றன. பாம்பு கடித்த இடத்தை, வாயால் கடித்து, விஷத்தை உறிஞ்சி எடுத்துக் காறித்துப்புவது, பாம்பு கடித்த இடத்தில் நெருப்பு வைப்பது, கீறிவிடுவது போன்றவை எல்லாம் தவறான முதலுதவிகள்.

    *பாம்பு கடித்தால், நடக்கவோ ஓடவோ விடாமல் அப்படியே படுக்கவைக்க வேண்டும். ஏனெனில், ரத்த ஓட்டம் அதிகரித்தால், விஷம் உடல் முழுக்க வேகமாகப் பரவும்.

    *பாம்பு கடித்த இடத்திலிருந்து, மேலே 15 செ.மீ உயரத்தில், கைக்குட்டை, துணி, கயிறு போன்ற ஏதேனும் ஒன்றில் இறுக்கக் கட்டாமல், ஒரு விரல் நுழையும் அளவு இடைவெளி கொடுத்துக் கட்டலாம்.

    *கடிபட்ட காலை நகர்த்தவோ, மடக்கவோ கூடாது. எனவே, அதனை ஒரு கட்டையோடு சேர்த்துக் கட்டிவிடலாம்.

    *பாம்பு கடித்த இடத்தைச் சுற்றிலும், ஐஸ் கட்டிகள் கொண்டு ஒத்தடம் கொடுப்பது, நல்ல முதலுதவி. இதனால், அந்த இடத்தில் ரத்தம் உறையும் என்பதால், விஷம் ரத்தத்தில் கலப்பது ஓரளவு தடுக்கப்படும்.

    *சிலர், கடித்த பாம்பை அடித்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வார்கள். இதுவும் தவறு. பாம்பைப் பார்த்து எந்தவித சிகிச்சையும் கொடுக்கப்படுவது கிடையாது.

    *பாம்பை அடிக்க ஓடாமல், பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு விரைவாக கூட்டிச் செல்வதே சிறந்தது.


    பூச்சிக் கடி, தேனி கொட்டுதல், தேள் கொட்டுதல்

    பூச்சிக்கடியால் வலி மற்றும் அலர்ஜி ஏற்படும்.

    *தேனி கடித்தால், கடித்த இடத்தில் தேனியின் கொடுக்கைப் பிய்க்கக் கூடாது. அந்த இடத்தில் அழுத்தக் கூடாது.

    *தேனியின் கொடுக்கு வளைந்து இருக்கும். பிய்த்தெடுக்க முயலும்போது, கொடுக்கின் நுனியில் உள்ள விஷம் உடலுக்கு உள்ளே சென்றுவிட வாய்ப்பு உள்ளது.

    *ஒரு மெல்லிய அட்டையை (விசிட்டிங் கார்டு, சீட்டுக்கட்டு அட்டை) எடுத்து, தேனியின் கொடுக்கு இருக்கும் இடத்தில் வழித்துவிட (ஸ்க்ரேப்) வேண்டும்.

    *வலி இருந்தால், வலி மாத்திரை சாப்பிடலாம்.


    *கடித்த இடத்தில் ஐஸ் பேக் வைக்க வேண்டும். தேனி கடித்து, வெகு சிலருக்கு அலர்ஜி காரணமாக மூச்சுக்குழாய் வீக்கம் ஏற்படலாம். இதனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

    *ஐஸ் பேக் வைத்த பிறகு, விரைவாக மருத்துவமனை வந்து பரிசோதித்து, தேவைப்பட்டால் சிகிச்சை எடுப்பதன் மூலம், மரணத்தைத் தடுக்க முடியும்.

    *நம் ஊரில் உள்ள தேள்களில் உயிர் இழப்பை ஏற்படுத்தும் விஷம் இல்லை. எனவே, பயப்படத் தேவை இல்லை. ஐஸ் பேக் வைத்து, வலி நிவாரணி மாத்திரையைச் சாப்பிட்டுவிட்டு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

    *குழந்தைகளுக்கு தேள் கடித்தால், இதயத்துடிப்பில் பெரும் மாறுதல் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, உடனடியாக மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.



    Last edited by chan; 24th Nov 2015 at 01:08 PM.

  10. #70
    ishitha's Avatar
    ishitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    tirunelveli
    Posts
    2,088

    Re: All Details about FIRST AID-முதல் உதவி செய்வது எப்படி?

    worthful sharing TFS sis



    அன்புடன்...
    இஷிதா


    என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter