Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree16Likes
  • 4 Post By chan
  • 2 Post By chan
  • 3 Post By chan
  • 1 Post By porkodit
  • 4 Post By chan
  • 1 Post By sumathisrini
  • 1 Post By gkarti

The Ideal Amount of Sleep for Each Age Group - தூக்கம் - எவ்வளவு நேரம் கட்டாயம் த&


Discussions on "The Ideal Amount of Sleep for Each Age Group - தூக்கம் - எவ்வளவு நேரம் கட்டாயம் த&" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    The Ideal Amount of Sleep for Each Age Group - தூக்கம் - எவ்வளவு நேரம் கட்டாயம் த&

    தூக்கம் - எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை ?

    சரியாகத் தூங்காவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு சரி நாம் போதிய அளவு தூங்கவில்லைஎன்று தெரியும்.
    ஆனால் எது போதிய அளவு தூக்கம்?


    இதற்கு விடை, "உங்கள் வயது என்ன என்பதில் தான் இருக்கிறது", என்கிறது வாஷிங்டனில் இருந்து இயங்கும் தேசிய தூக்க நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு.

    குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையைச் செய்யும் பழக்கமின்மை, மது மற்றும் காபி அல்லது பிற உடனடி சக்தி தரும் பானங்களை அருந்துவது போன்றவையும், அலாரம் கடிகாரங்கள் மற்றும், சூரிய வெளிச்சம் போன்றவை உடலில் தூக்கத்தை குறிப்பிட்ட நேரத்தில் வரவழைக்கும் இயல்பான உணர்வுக்கு இடைஞ்சல் தரும் என்கிறது இந்த ஆய்வு.

    தனிப்பட்ட மனிதர்களின் சொந்த வாழ்க்கை முறைதான் இந்த தூக்கத்துக்கான தேவைகளை புரிந்துகொள்ள உதவ முக்கியமான அம்சம் என்று கூறும் அமெரிக்க தேசிய தூக்க நிறுவனம் (The US National Sleep Foundation) ஆனால் ஒருவரது வயது என்ன என்பதைப் பொறுத்து பொதுவான பரிந்துரைகளைத் தரலாம் என்கிறது.



    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails The Ideal Amount of Sleep for Each Age Group - தூக்கம் - எவ்வளவு நேரம் கட்டாயம் த&-1423756586-3739.jpg  
    Last edited by sumathisrini; 16th Mar 2015 at 02:53 PM. Reason: External link removed

  2. #2
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: The Ideal Amount of Sleep for Each Age Group - தூக்கம் - எவ்வளவு நேரம் கட்டாயம் 

    வயதுக்கேற்ற தூக்கம்


    பிறந்த குழந்தைகள்
    (0 முதல் மூன்று மாதங்கள் வரை) : புதிதாக பிறந்த குழந்தைகள் நாளொன்றுக்கு 14லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும் ஆனால் 11லிருந்து 13 மணிநேரம் தூங்கினால் கூட போதும். ஒரு நாளுக்கு 19 மணி நேரங்களுக்கு மேல் தூங்கவிடக்கூடாது .

    குழந்தைகள் (4-முதல் 11 மாதம் வரை): தினசரி 12லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும், குறைந்த்து 10 மணி நேரங்கள் தூங்கினால் கூட போதும். ஆனால் 18 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது.

    தளிர்நடை பயிலும் குழந்தைகள் (1 லிருந்து 2 வயது வரை): தினமும் 11லிருந்து 14 மணி நேரங்கள் வரை தூங்க வேண்டும் . ஆனால் 9லிருந்து 16 மணிநேரங்கள் வரை தூங்கலாம்.

    பள்ளி செல்லும் முன் வயதுக் குழந்தைகள் (3 லிருந்து 5 வயது வரை) : தினமும் 10லிருந்து 13 மணி நேரங்கள் தூங்கவேண்டும் என்பது வல்லுநர்கள் பரிந்துரை, ஆனால் 8 மணி நேரங்களுக்கு குறைவாகவோ அல்லது 14 மணி நேரங்களுக்கு மேலாகவோ தூங்குவது பொருத்தமற்றது என்று கூறப்படுகிறது.

    பள்ளி செல்லும் வயது சிறார்கள் (6 லிருந்து 13 வயது வரை): ஒன்பது மணிநேரத்திலிருந்து 11 மணிநேரம் வரை தினமும் தூங்கவேண்டும் என்கிறது இந்த நிறுவனம். தினமும் 7 மணிநேரத்துக்குக் குறைவான அல்லது 12 மணிநேரத்துக்கு மேலான தூக்கம் ஆரோக்கியமானதல்ல என்றும் அது கூறுகிறது.

    பதின்பருவச் சிறார்கள் (14 முதல் 17 வயது வரை): பரிந்துரைக்கப்பட்ட தூக்க நேரம் என்பது 8லிருந்து 10 மணிநேரம் வரைதான். இந்த வயது சிறார்கள் தினமும் 11 மணி நேரங்களுக்கு மேலாகவோ அல்லது 7 மணிநேரங்களுக்கு குறைவாகத் தூங்குவது தவறு என்று எச்சரிக்கிறது இந்த நிறுவனம்.

    வயது வந்த இளைஞர்கள் (18 லிருந்து 25 வயது வரை): தினமும் 7லிருந்து 9 மணி நேரங்கள் வரை தூங்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் தூக்கம் 6 மணிநேரத்துக்குக் குறைவானதாகவோ அல்லது 11 மணி நேரங்களுக்கு மேலோ போகக்கூடாது.

    வயது வந்தவர்கள் (26லிருந்து 64 வயது வரை): மேலே குறிப்பிடப்பட்ட வயது வந்த இளைஞர்களுக்கான அதே பரிந்துரைதான் இவர்களுக்கும்.

    மற்ற வயது வந்தவர்கள் (65 வயது, அதற்கு மேல்): ஆரோக்கியமான தூக்கம் என்பது தினசரி 7லிருந்து 8 மணிநேரம் வரை, ஆனால் ஐந்து மணி நேரத்துக்குக் குறைவாகவோ அல்லது 9 மணிநேரத்துக்கு மேலோ போகக்கூடாது.

    porkodit and gkarti like this.

  3. #3
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: The Ideal Amount of Sleep for Each Age Group - தூக்கம் - எவ்வளவு நேரம் கட்டாயம் 

    தரமான தூக்கம், பரிந்துரைகள்

    தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த பல்வேறு பரிந்துரைகளையும் இந்த தேசிய தூக்க நிறுவன வல்லுநர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

    முதலில் , முக்கியமாக, தூக்கத்துக்கு முன்னுரிமை தரப்படவேண்டும் என்று கூறும் அவர்கள், ஆனால் இந்த ஆலோசனைகளையும் முக்கியமாகக் கருதுகிறார்கள்.

    அவை:

    1)தூங்கும் நேரம் ஒரு குறிப்பிட்ட, அட்டவணைப்படுத்தப்பட்ட நேரத்தில் அமையவேண்டும், வார இறுதி நாட்களில் கூட.

    2)படுக்கும் நேரத்தில் மனத்தை அமைதிப்படுத்தும் சில நடைமுறைகள்.

    3)தினசரி உடற்பயிற்சி

    4)படுக்கையறையில், சரியான வெப்பநிலை, ஒலி மற்றும் ஒளி அளவு

    5)சௌகரியமான படுக்கை மற்றும் தலையணைகள்.

    6)மது மற்றும் காபி போன்ற தூக்கத்தை “ஒளிந்திருந்து திருடும்” பொருட்கள்.

    7)மின்னணுவியல் கருவிகள் (கைத்தொலைபேசி, ஐ.பாட் போன்றவை) படுக்கப்போகுமுன் அணைக்கப்படவேண்டும்)




    Attached Thumbnails Attached Thumbnails The Ideal Amount of Sleep for Each Age Group - தூக்கம் - எவ்வளவு நேரம் கட்டாயம் த&-1423756759-5508.jpg  
    sumathisrini, sasee777 and gkarti like this.

  4. #4
    porkodit's Avatar
    porkodit is offline Minister's of Penmai
    Real Name
    Porkodi
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Tiruvannamalai
    Posts
    3,162

    re: The Ideal Amount of Sleep for Each Age Group - தூக்கம் - எவ்வளவு நேரம் கட்டாயம் 

    Nice info..........

    chan likes this.
    என்றும் அன்புடன் ,
    பொற்கொடி

  5. #5
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: The Ideal Amount of Sleep for Each Age Group - தூக்கம் - எவ்வளவு நேரம் கட்டாயம் 

    ஸ்மார்ட்போன், டேப்லட்களை வைத்திருப்பவர்களுக்கு

    ஸ்மார்ட்போன்கள், டேப்லட்களை இரவில் அணைத்துவிட்டுத் தூங்கவில்லை என்றால் தூக்கம் பாதிக்கப்படும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

    அமெரிக்க நாட்டின் வேதியியல் சங்கத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பிரையன் ஸோல்டோவ்ஸ்கி இது குறித்து கூறியிருப்பதாவது:-

    "நாம் இருக்கும் சூழல் இரவா அல்லது பகலா என்று அனிச்சையாக நாம் உணர்வதில் வெளிச்சத்தின் பங்கு முக்கியமானது. பொதுவாகவே, மாலை நேரம் செல்ல செல்ல புறச்சூழலில் சிவப்பு நிறம் அதிகரிக்கிறது. கண்ணின் ஆழப்பகுதியில் இருக்கும் செல்களில் உள்ள மெலனாப்சின் என்ற புரோட்டீன் மீது இந்த சிவப்பு நிறம் விழும்போது, ‘சூரியன் மறைந்துவிட்டது, என்று அந்த செல்கள், மூளைக்கு உத்தரவிடுகின்றன. எனவே, இரவு நேரம் என்றால் கண்ணில் சிவப்புநிற ஒளிதான் படவேண்டும்.

    இந்த செயல்பாட்டை ஸ்மார்ட்போன்கள், டேப்லட்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றிலிருந்து வெளியேறும் நீல நிற ஒளியானது தொடர்ந்து கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தால், ‘இன்னும் இரவு வரவில்லை’ என்ற தவறான தகவலைத்தான் கண் செல்கள், மூளைக்குக் கடத்தும். ஏனென்றால், நீலநிறம் என்பது அதிகாலை நேரத்திற்கு உரியது. ‘தூங்கியது போதும்’ என்று படுக்கையிலிருந்து நம்மை எழுப்பிவிடுவதற்கு தூண்டும்.

    எனவே, நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் கிடைக்க வேண்டும் என்றால் ஸ்மார்ட்போன், டேப்லட்களை அணைத்துவிட்டுப் படுங்கள். இல்லாவிட்டால் கண்ணில் படாதவகையில் தூரமாக வைத்துவிட்டாவது படுங்கள்" என்று அந்த ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.



    Attached Thumbnails Attached Thumbnails The Ideal Amount of Sleep for Each Age Group - தூக்கம் - எவ்வளவு நேரம் கட்டாயம் த&-1400679543-2282.jpg  

  6. #6
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    re: The Ideal Amount of Sleep for Each Age Group - தூக்கம் - எவ்வளவு நேரம் கட்டாயம் 

    Very useful article Lakshmi, thanks.

    chan likes this.

  7. #7
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,137

    Re: The Ideal Amount of Sleep for Each Age Group - தூக்கம் - எவ்வளவு நேரம் கட்டாயம் 

    Superb Lakshmi

    Nan Late ah than thoonguven.. But Tight Sleep irukkum Eppovum Enakku

    chan likes this.

  8. #8
    kamatchi devi's Avatar
    kamatchi devi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    KamatchiDeviSivaNarayanan
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Vellore
    Posts
    1,483
    Blog Entries
    1

    Re: The Ideal Amount of Sleep for Each Age Group - தூக்கம் - எவ்வளவு நேரம் கட்டாயம் 

    useful Info @ chan............


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter