Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree86Likes

5 Tips to stay Healthy-ஆரோக்கியத்துக்கு அருமையான 5 வழிகள்!


Discussions on "5 Tips to stay Healthy-ஆரோக்கியத்துக்கு அருமையான 5 வழிகள்!" in "Health" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  5 Tips to stay Healthy-ஆரோக்கியத்துக்கு அருமையான 5 வழிகள்!

  ஆரோக்கியத்துக்கு அருமையான 5 வழிகள்!

  சீராக பராமரிக்கக்கூடிய உடலைக் கொண்டே சிறந்த ஆரோக்கியம் பெற முடியும். அதன் மூலம்தான் அருமையான வாழ்க்கையை அனுபவிக்க முடியும். இதுதானே புத்திசாலித்தனம்?  இனிசிகரெட்டை தொட மாட்டேன்...
  மது அருந்துவதை அறவே விட்டு விடுவேன்...
  காபி, டீ குடிக்க மாட்டேன்...

  எண்ணெயில் வறுத்தெடுத்த பலகாரத்தை தொடவே மாட்டேன்...
  காலை 5 மணிக்கு எழுந்து இரவு
  9 மணிக்கு உறங்கச் சென்று விடுவேன்...
  தினமும் 2 மணி நேரத்துக்கு மேல் டி.வி. பார்க்க மாட்டேன்...

  ஆபீஸ் வேலைகளை வீட்டில் செய்யவே மாட்டேன்...
  லேப்டாப், மொபைலை இரவில் தொட மாட்டேன்...
  தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்வேன்...

  பரீட்சைக்கு முதல் நாள் மட்டுமே படிக்காமல், அன்றைய பாடங்களை அன்றன்றே படித்துவிடுவேன்...
  தினமும் காலை எழுந்து நடைப்பயிற்சி செய்வேன்... ஓட்டப்பயிற்சி செய்வேன்...

  - இப்படி ஒவ்வொரு புத்தாண்டின் போதோ, பிறந்த நாளின் போதோ பற்பல புத்தாண்டு உறுதிமொழிகளை
  (New Year/ Birthday Resolutions) எடுத்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால், ஜனவரி 31க்குள் அனைத்தும் தூள் தூளாகி, பழைய கதையை ஆரம்பித்து விடுகிறோமே?முன்பெல்லாம் கல்யாணம் அல்லது ஏதாவது குடும்ப விசேஷங்களுக்குத்தான் சாப்பாடு அயிட்டங்கள் தடபுடலாக இருக்கும். அதுவே பின்பு மெதுவாக மாதம் ஒருமுறை சம்பள தின பார்ட்டியாகி, வார இறுதி பார்ட்டி ஆகி, இப்போது தினசரி பார்ட்டியாக வளர்ந்து நிற்கிறது.

  இதனால் கட்டுப்பாடு இல்லாத உணவு வகைகளை உண்டு, நம் பெற்றோர் அளித்த அருமையான உடலை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறோம். இதில் இருந்து தப்பிக்க முடியாமல் பரிதவித்துக்
  கொண்டிருக்கிறது மனித இனம். பேணிப் பராமரிக்கக்கூடிய மனிதனின் வயிறு, இப்போது குப்பைத்தொட்டியாக மாறி வருகிறது. இதிலிருந்து மீண்டும் அழகான உடலையும், நல்ல ஆரோக்கியத்தையும், சிறப்பான வாழ்க்கையையும் பெறவே, இந்த சில அருமையான வழிகள்...

  1 உடற்பயிற்சிக் கூடம்

  வீட்டுக்கு அருகாமையில் உள்ள நல்ல உடற்பயிற்சிக் கூடத்தில் உடனடியாகச் சேருங்கள். குறைந்தது தினமும் 45 நிமிடங்கள், வாரம் 4 நாட்கள் பயிற்சி மேற்கொள்வதால் அதிக கொழுப்பை நீக்கலாம். அதோடு, தேவைக்கு அதிகமாக உடலில் தங்கி யுள்ள உணவுச் சேர்க்கையை எரித்து (Reduce or
  Burn Extra Calories) பயன் பெறலாம். பட்டினியாக - ஒருவேளை அல்லது இருவேளை சாப்பிடாமல் இருந்து எடை குறைக்க எண்ணுவது மடமையே. தசைகள் வலுவிழந்து உங்கள் உடலை மேலும் வாட்டி விடும் (An empty stomach can lead to muscle loss).

  2 ஆரோக்கிய உணவு

  நம் முன்னோர் கூறியபடி
  Eat breakfast like a king, lunch like a prince and dinner like a pauper என்பதைப் பின்பற்றுங்கள். அனைத்து வகை தானியங்கள், கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி, கோழி, மீன் என அனைத்தும் கலந்த சரிவிகித உணவு (Balanced Diet) எடுத்துக்கொள்வது அவசியம். அதிக அளவு அரிசி, மைதா வேண்டாம். சர்க்கரை அதிகம் உள்ள உணவு வகைகள், எண்ணெயில் வறுத்தெடுத்த பண்டங்கள், ஐஸ்க்ரீம், குளிர்பானங்களை குறைப்பது அல்லது சேர்க்காமலே இருப்பது நல்லது. 3 வேளை மூக்குப்பிடிக்கச் சாப்பிடுபவராக இருப்பின், அதையே 5 வேளைகளுக்கு சிறிது சிறிதாக சாப்பிடக் கற்றுக் கொள்வது ஆரோக்கியத்துக்கு உத்தமம்.

  3 நிறைய தண்ணீர்

  உங்களின் எடையை சீராக வைத்துக்கொள்வதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். இது உடலை சுத்தப்படுத்தும் பணியையும் செய்கிறது.

  4 எலும்புகளுக்கு கால்சியம்

  அதிக உழைப்பின் காரணமாக எலும்புகளின் சக்தி குறையத் தொடங்கும். அதனால் மருத்துவர் ஆலோசனையுடன் நேரடியாகவோ, உணவிலோ கால்சியம் எடுத்துக்கொள்வது எலும்புகளின் உறுதிக்கு அவசியம். எலும்புகள் உறுதி இல்லை எனில் தசைகள் வலிமை இழந்து, அவ்வப்போது பல பாகங்களில் தசைப்பிடிப்பு உண்டாகும்.

  5 ஆழ்ந்த உறக்கம்

  தூக்கமின்மையே இதயம், கிட்னி சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, பருமன், மன அழுத்தம் போன்ற பலவிதமான அபாயகரமான பிரச்னைகளுக்கு மூலகாரணம். நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் சிறந்த தியானத்துக்குச் சமமாகும். நல்ல உறக்கத்தால் உடல் உறுப்புகள் ஓய்வு பெறுகின்றன. ரத்த நாளங்கள் அமைதி அடைகின்றன. நீண்ட ஆயுளுக்கும், உடல் உறுதிக்கும் உத்தரவாதம் அளிக்கும் அருமையான டாக்டரே - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்!

  பட்டினி கிடந்து எடை குறைக்க எண்ணுவது மடமையே. தசைகள் வலுவிழந்து, உங்கள் உடலை மேலும்வாட்டி விடும்.எடையை சீராக வைத்துக் கொள்வதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும்.


  Similar Threads:

  Sponsored Links
  Last edited by chan; 19th Mar 2015 at 01:04 PM.

 2. #2
  kkmathy's Avatar
  kkmathy is offline Minister's of Penmai
  Real Name
  komathy
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  Malaysia
  Posts
  3,189

  Re: ஆரோக்கியத்துக்கு அருமையான 5 வழிகள்!

  அருமையான கருத்துக்கள் தோழி.

  பாஸ்ட் பூட் போல, பாஸ்ட் லைப் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த அவசர கதியில், நமது உடல் நலம் பற்றிய அக்கறை பலருக்கு இருப்பதில்லை.


 3. #3
  kkmathy's Avatar
  kkmathy is offline Minister's of Penmai
  Real Name
  komathy
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  Malaysia
  Posts
  3,189

  Re: ஆரோக்கியத்துக்கு அருமையான 5 வழிகள்!

  ஹாய் தோழிகளே,

  நமது தோழி லெட்சுமி(chan) ஆரோக்கியத்துக்கு அருமையான 5 வழிகள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை பகிர்ந்து இருக்கிறார். படித்து பாருங்கள் @Parasakthi @sumathisrini @sumitra @gkarti @jv_66 @kodiuma @femila @sujivsp @salma @RathideviDeva @malbha @saidevi @Dangu @shansun70 @thenuraj @jayakalaiselvi @Suganya Vasu @ashsuma @gowrymohan @rajisugu @Praba RK @kamatchi devi @amirtha mks @saveetha1982 @bharathi saravanan @porkodit @jeyanthy c,


 4. #4
  kodiuma's Avatar
  kodiuma is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  D.Uma Maheswari
  Gender
  Female
  Join Date
  Oct 2013
  Location
  sivakasi
  Posts
  4,660

  Re: ஆரோக்கியத்துக்கு அருமையான 5 வழிகள்!

  thank u for sharing lakshmi sis and thank u for tagging me mathy

  ramyaraj, salma, chan and 3 others like this.
  Stories Of Kodiuma  கதை பகுதி :
  ஒரு பூவின் ரகசியம் ..  கடவுள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் துன்பம் வந்தாலும் , அவர் நம்மை தாங்கும் அரணாய் இருந்து நம்மை காப்பார் ..


  GOD IS ALWAYS GREAT .. LET HIM SHOWER HIS BLESSINGS TO ALL .. 5. #5
  Dangu's Avatar
  Dangu is offline Ruler's of Penmai
  Gender
  Male
  Join Date
  Oct 2014
  Location
  CHROMEPET
  Posts
  10,950

  Re: ஆரோக்கியத்துக்கு அருமையான 5 வழிகள்!

  Thanks Komathy and Lakshmi for sharing this info.

  ramyaraj, salma, chan and 2 others like this.

 6. #6
  gkarti's Avatar
  gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,127

  Re: ஆரோக்கியத்துக்கு அருமையான 5 வழிகள்!

  Thanks for Tagging me Mathy Kadamai Patruken

  Well Lakshmi Kalakkureenga Ovooru Postum Wonderful Article.. TFS

  ramyaraj, salma, kkmathy and 2 others like this.

 7. #7
  ramyaraj's Avatar
  ramyaraj is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  RamyaRajan
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  bangalore
  Posts
  6,551
  Blog Entries
  6

  Re: ஆரோக்கியத்துக்கு அருமையான 5 வழிகள்!

  ஹாய் லக்ஷ்மி

  நான் ரொம்ப நாளாவே சொல்லனும்ன்னு நினைச்சேன். நீங்க ரொம்ப நல்ல விஷயங்களை.... முக்கியமா உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்கள் பெண்மை தோழிகளோட பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.

  நான் உங்க போஸ்ட் மூலமா நிறைய விஷயங்கள் தெரிஞ்சிருக்கேன். உங்கள் சேவை தொடரட்டும்.

  salma, kkmathy, sumitra and 2 others like this.
  Ramya Rajan
  “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

  வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

 8. #8
  salma's Avatar
  salma is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2011
  Location
  u.s
  Posts
  5,997

  Re: ஆரோக்கியத்துக்கு அருமையான 5 வழிகள்!

  Chan
  Thanx for valuable information ,.. @kkmathy
  Mathy Thanx for Tagging me...

  chan, sumitra, gkarti and 1 others like this.
  Sal

 9. #9
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,092
  Blog Entries
  11

  Re: ஆரோக்கியத்துக்கு அருமையான 5 வழிகள்!

  Sis Chan @chan thanks for this information and Madhi @kkmathy, for notifying me about this info.

  salma, chan and sumitra like this.

 10. #10
  saidevi's Avatar
  saidevi is offline Guru's of Penmai
  Real Name
  sarala devi
  Gender
  Female
  Join Date
  Mar 2014
  Location
  tn
  Posts
  5,086

  Re: ஆரோக்கியத்துக்கு அருமையான 5 வழிகள்!

  Thanks for sharing valuable information @chan.

  chan, sumitra and Suganya Vasu like this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter