Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

ஞானப்பற்கள்! - Wisdom Teeth


Discussions on "ஞானப்பற்கள்! - Wisdom Teeth" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    ஞானப்பற்கள்! - Wisdom Teeth

    ஞானப்பற்கள்!



    ஆங்கிலத்தில் விஸ்டம் டூத் என்று அழைக்கப்படும் ஞானப்பற்களுக்கு எதற்காக இந்த பெயர் வந்தது என்பது யாருக்குமே தெரியாத ஒரு விஷயம். ஒருவேளை சுயம்புவாகவே அது ஞானத்தை பெற்றுவிட்டது போலும்.

    கடைவாயில் தோன்றும் கடைசி இரண்டு பற்கள்தான் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவை 18 வயதுக்கு மேல் தலைக்காட்ட ஆரம்பிக்கின்றன. அப்போது இடநெருக்கடி காரணமாக அப்படியும், இப்படியும், வளைந்தும் நெளிந்தும் இவை முளைப்பதால் சிலருக்கு கடுமையான வலி ஏற்படுத்தக்கூடும்.

    சிலருக்கு இந்த பற்கள் முளைக்காமல் கூட போகும். வெகு சிலருக்கு 4 ஞானப்பற்கள் உருவாக வேண்டிய இடத்தில் கூடுதலாக மேலும் 2 பற்கள் கூட இருக்கும். இது பிறவிக் கோளாறு.

    பெரும்பாலானவர்களுக்கு 4 ஞானப்பற்கள்தான் இருக்கும். இவை முளைப்பதற்கு சம்பந்தப்பட்ட இடத்தில் சரியான இடவசதி இருந்தால், எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கும். சிலருக்கு ஞானப்பற்களுக்கு அடுத்துள்ள பற்கள் இடத்தை அடைத்திருக்கும் பட்சத்தில் சிக்கல் ஏற்படும்.


    இதற்கு தற்காலிக வலி நீக்கிகளை டாக்டர்களிடம் ஆலோசனைப் பெற்று பயன்படுத்தலாம். இதேபோல், சிலருக்கு ஈறுகள் தடித்து இருந்தால், அந்த இடத்தில் பற்கள் முளைக்க வழி இல்லாமல் போகும். இதுபோன்றவர்கள் டாக்டர்களிடம் சிகிச்சை பெறலாம். அவர்கள், பற்கள் முளைப்பதற்கு தேவையான அளவுக்கு ஈறுகளை சரி செய்வார்கள்.

    சமைக்காத உணவுகளை உண்பவர்களுக்கு ஞானப்பற்கள் சிறப்பாக இருந்துள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதாவது அவர்களுக்கு இடவசதி பிரச்னை இல்லாததால், இப்பற்கள் சிறப்பாக வளர்ந்து தங்கள் இடத்தை பிடித்துள்ளனர். எஸ்கிமோக்களுக்கு இதனால்தான் தாடைகள் பெரிதாக காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால், சமைத்த உணவுகளை உண்பவர்களுக்கு தாடை சுருங்கி இருப்பதால், அவர்களுக்கு ஞானப்பற்கள் முளைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இன்றைய நவீன பல் மருத்துவத்தில் சிறப்பான சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. இதனால் ஞானப்பற்கள் பிரச்னை பெருமளவு களையப்பட்டுள்ளது என்றால் அது மிகையாது. ஞானப்பற்கள் முளைப்பதில் உள்ள சிக்கல்களை நவீன எக்ஸ்ரே மூலம் துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 25th Mar 2015 at 09:04 PM.
    sumathisrini likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter