டயட்டில் இருப்பவரா நீங்கள்

ஆண்களை விட உடல் எடை பற்றி பல மடங்கு அதிகம் கவலை கொள்பவர்களும், கவனம் கொள்பவர்களும் பெண்கள் தான். வெளி தோற்றத்தின் மேல் அதீத அக்கறை காட்டுவதில் பெண்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். அதனால் கொஞ்சம் உடல் எடை கூடினாலும் டயட் மேற்கொள்கிறேன் என எதையாவது பின்பற்ற தொடங்கிவிடுவார்கள்.

பெண்கள் உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் தங்களுக்கே தெரியாமல் பல தவறுகளை செய்கின்றனர். அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளப்படும் எந்த ஒரு உணவும் உங்கள் உடலுக்கு கெடுதல் தரும் என்பதை பெண்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் உங்கள் உடலிற்கு தேவையான உணவுகளை அறவே ஒதுக்குவதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆலிவ் எண்ணெய் உடல் நலத்திற்கு நல்லது தான். ஆனால் நிறைய பெண்கள் தங்களது உணவுக் கட்டுப்பாட்டில் அளவிற்கு அதிகமாக ஆலிவ் எண்ணெயை சேர்த்துக் கொள்கின்றனர். இதனால் உடல் எடை குறையாது, அதிகம் தான் ஆகும். ஆலிவ் எண்ணெயை 1 டீஸ்பூன் அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.

சில பெண்கள் தங்களது உணவுக் கட்டுப்பாட்டில் பெரும்பாலான சத்துமிக்க பழங்களையும், அதில் கொழுப்புச்சத்து இருக்கிறது என தவிர்த்து விடுகின்றனர். பழங்களில் உள்ள அனைத்து சத்துகளும் உடலுக்கு தேவைப்படுகிறது என்பதை பெண்கள் உணர வேண்டும்.

ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை மற்றும் தர்பூசணி போன்ற உணவுகள் உங்கள் உணவுக் கட்டுப்பாட்டிற்கும் நல்லது, உங்கள் உடல் நலத்திற்கும் நல்லது.

குறைந்த உணவு, நிறைய உடற்பயிற்சி பெண்கள் தங்களது உணவுக் கட்டுப்பாட்டில் செய்யும் மிகப்பெரிய தவறு, உடல் எடையை குறைக்கிறேன் என்று குறைவாக உணவு சாப்பிடுவது மற்றும் அதிகமாக உடற்பயிற்சி மேற்கொள்வது. உடற்பயிற்சி மேற்கொண்டால் அதற்கு ஏற்ப உணவை சாப்பிடுவதும் அவசியம். குறைவான உணவை உட்கொண்டு அதிக உடற்பயிற்சி செய்தால், வாந்தி, மயக்கம் ஏற்படும்.

பெண்களுக்கு பிடித்த உணவுகளில் நட்ஸ் முதன்மையாக இருக்கிறது. நட்ஸை அவர்கள் ஒருவகையில் உணவுக் கட்டுப்பாட்டிற்காக சாப்பிடுகிறார்கள் என கூறுவதை விட நொறுக்கு தீனியாக சாப்பிடுகின்றனர் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். வெறும் நட்ஸ் உணவு மட்டும் சாப்பிடுவது உங்கள் உடல் எடையை குறைத்துவிடாது. உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் உள்ளடங்கிய உணவுகளையே உட்கொள்ள வேண்டியது அவசியம்.

திணை மற்றும் தானிய வகை உணவுகளை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்
Similar Threads: