Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine October! | All Issues

User Tag List

Like Tree61Likes

78 மருத்துவர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்


Discussions on "78 மருத்துவர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்" in "Health" forum.


 1. #1
  chan's Avatar
  chan is online now Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  15,932

  78 மருத்துவர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்

  78 மருத்துவர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்!

  மறுபக்கம்
  மருத்துவர்களை தெய்வமாக மதிக்கும் சமூகம் நம்முடை யது. எண்ணிக்கையில் அடங்கா மனிதர்களுக்கு மறு உயிர்ப்பு வழங்கும் மருத்துவர்கள் மீதான மகத்தான நம்பிக்கையின் அடிப்படையில்தான் நாம் உயிர்த்திருக்கிறோம். இப்படிப்பட்ட மக்கள் சேவையையே தங்கள் வாழ்க்கைமுறையாகக் கொண்டுள்ளனர் நம் மருத்துவர்கள்.  இருப்பினும், வணிகமயமாகி வரும் மருத்துவ உலகின் சில மர்மங்களையும் வெளிப்படுத்த வேண்டி யதும் நம் கடமையே எனும் எண்ணத்தில் தீவிரமாகச் செயல்படுகிறார் டாக்டர் அருண் கட்ரே. அவரது நோக்கமும் நமது நோக்கமும் முறையான மருத்துவர்களுக்கு எந்தக் களங்கமும் ஏற்படுத்துவதில்லை. இந்தப் புரிதலோடு டாக்டர் அருண் கட்ரேவோடு பேசுவோம்...


  ‘‘இந்தியன் மெடிக்கல் அசோசியேஷனோட எங்க ஊர் கிளை சிறப்பா இயங்கிட்டிருந்தது. மருத்துவர்களாகிய நாங்க எங்களோட சொந்தச் செலவுல வருஷத்துக்கொரு முறை ‘சி.எம்.இ (Continuing Medical Education) ஒர்க்ஷாப்ஸ் நடத்திட்டிருந்தோம். 95ம் வருஷம் மருந்து கம்பெனிகள் மெல்ல உள்ளே வந்தாங்க. அதுக்கு முன்னாடி வரைக்கும் ஒர்க்ஷாப்ல எந்த விஷயத்தைப் பத்திப் பேசறதுங்கிறதை நாங்க முடிவு பண்ணிட்டிருந்தோம். மருந்து கம்பெனிகள் வந்ததும், அவங்களோட புது மருந்துகளை பிரபலப்படுத்தற மாதிரியான விஷயங்களைப் பேச வச்சாங்க.

  டாக்டர்ஸுக்கு செலவே இல்லாம, ஆல்கஹாலோட கிடைச்சது இந்த ஒர்க்ஷாப். அதன் பிறகு சி.எம்.இ. சார்பா அத்தனை ஒர்க்ஷாப்புகளையும் மருந்து கம்பெனி காரங்களே நடத்தினாங்க. ‘வருஷத்துக்கு ஆயிரம் ரூபாயை உங்க சொந்த செலவுலேருந்து ஒதுக்கி, இந்த ஒர்க்ஷாப்பை நடத்தக் கூடாதா?னு நான் எதிர்ப்பு தெரிவிச்சப்ப, அதைக் கண்டுக்காம, மருந்து கம்பெனிகளுக்கு சாதகமா நடந்துக்க ஆரம்பிச்சாங்க டாக்டர்ஸ். அது பிடிக்காம நான் ஐ.எம்.ஏலேருந்து வெளியே வந்துட்டேன். இப்ப எங்க ஊர்ல எல்லா ஒர்க்ஷாப்புகளும் மருந்து கம்பெனிகளால நடத்தப்படுது...

  ‘‘நடுராத்திரி 2 மணிக்கு எந்த பேஷன்ட் எந்த ஆஸ்பத்திரிக்கு வழி கேட்டாலும் தெரியாதுனுதான் சொல்வாங்க இங்க உள்ள ஆட்டோ டிரைவர்ஸ். அவங்களுக்கு கமிஷன் கொடுக்கிற குறிப்பிட்ட அந்த ஆஸ்பத்திரிக்கு மட்டும்தான் கூட்டிட்டுப் போவாங்க. டாக்டர்ஸ்கிட்டருந்து கமிஷன் கேட்கற லிஸ்ட்ல இப்ப ஆட்டோகாரங்களும் சேர்ந்துட்டாங்க...

  ‘‘அப்பென்டிஸ்னு சொல்ற குடல்வாலை நீக்கிற ஆபரேஷன் இப்ப சகஜமா செய்யப்படுது. தேவையே இல்லாட்டாலும் செய்யறாங்க. கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சையை கேன்சர் வந்துடும்னு பயமுறுத்திச் செய்ய வைக்கிறாங்க. அரசாங்க மருத்துவமனைகள்லேருந்து பேஷன்டுகளை பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பற வகையில கவர்மென்ட் ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு விசுவாசமா இருக்கிற கொடுமையும் நடக்குது...

  ‘‘டாக்டர்களுக்கு மருந்து கம்பெனிகள் எல்லா வசதிகளோடவும் வெளிநாட்டு ட்ரிப்புக்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறாங்க. அங்கே போய் மருத்துவம் சம்பந்தமா ஏதோ படிக்கிற மாதிரி நடிச்சா போதும். ஒரே கெமிக்கலை வச்சுத் தயாரிக்கிற மாத்திரை, மருந்துகளோட விலை கம்பெனிக்கு கம்பெனி வேறுபடறது ஏன்?

  ஒரு நடிகையை வச்சு சோப் விளம்பரம் எடுத்தா, ஏகப்பட்ட பெண்களை அந்த சோப்பை வாங்க வைக்க முடியும்கிற வியாபார உத்தி, இப்ப மருந்து கம்பெனிகளுக்கும் வந்திருச்சு. ‘பிரபல மருத்துவர்களே எங்க மருந்துகளைப் பரிந்துரைக்கிறாங்கÕனு விளம்பரப்படுத்தறாங்க. பிரபலமாகாத அந்த டாக்டர்களுக்கும் அது பெரிய வாய்ப்பு.

  சீனியர் டாக்டர்களே கூட ஒண்ணு, ரெண்டு மாத்திரைகள்ல சரியாகக்கூடிய பிரச்னைகளுக்கு தேவையே இல்லாம 10 மாத்திரைகளை எழுதிக் கொடுக்கிறாங்க. மருந்து கம்பெனிகள்தான் இந்த விஷயத்தைப் பிரபலப்படுத்தினாங்கன்றதுல சந்தேகமே இல்லை...‘‘நோயாளி இறந்து போய் பல மணி நேரம் ஆன பிறகும்கூட, அவங்களை வென்டிலேட்டர்லயே வச்சு உயிரோட இருக்கிற மாதிரி காட்டற டாக்டர்ஸ் இருக்காங்க. சொந்தக்காரங்களோட கோபமெல்லாம் தணிஞ்ச பிறகுதான் இறந்து போன விஷயத்தையே சொல்வாங்க..

  ‘‘ஹைவேஸ்ல ஆக்சிடென்ட் நடந்துட்டா போதும். ஏழெட்டு பேர் அந்த இடத்துக்கு ஓடி, சம்பந்தப்பட்ட ஆளை தனக்குத் தெரிஞ்ச ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கிறதுலயே குறியா இருப்பாங்க. அந்த இடத்துல விபத்துக்குள்ளான வரைக் காப்பாத்தணும்கிற நோக்கத்தைவிட, தான் விசுவாசமா உள்ள ஆஸ்பத்திரியையும் டாக்டர்ஸையும் காப்பாத்தணும்கிற எண்ணம்தான் மேலோங்கி இருக்கும்...

  ‘‘எனக்கு எப்படி ஒரு ஆட்டுக்குட்டி சிக்கினது தெரியுமா? அதை எப்படி காவு வாங்கினேன் தெரியுமா... இதெல்லாம் டாக்டர்ஸோட பார்ட்டிகள்ல சர்வசாதாரணமா காதுல விழற டயலாக்ஸ். ‘சீசன் ரொம்ப மந்தமா இருக்கு...னு ஒரு டாக்டர் பேசிக்கிட்டா, ஊர்ல மக்கள் எல்லாரும் ஆரோக்கியமா இருக்கிறதா அர்த்தம்...

  இவை அத்தனையும் மருத்துவர்களின் வாக்குமூலங்கள். மும்பை, பூனா, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை என இந்தியா முழுவதிலும் உள்ள பெரிய, சிறிய நகரங்களைச் சேர்ந்த 78 மருத்துவர்கள் தங்கள் துறையில் தொடர்ந்து கொண்டிருக்கிற அத்துமீறல்களை, அக்கிரமங்களைப் பற்றி இப்படி பகிரங்கப்படுத்தியிருக்கிறார்கள். ‘Voices of Conscience From The Medical Profession' என்கிற தனது புத்தகத்தில் இப்படி மருத்துவர்களின் மனசாட்சியைப் பதிவு செய்திருக்கிறார் பூனாவை சேர்ந்த மகப்பேறு மருத்துவரும், எழுத்தாளருமான டாக்டர் அருண் கட்ரே.

  வணிகமயமாகிக் கொண்டிருக்கிற மருத்துவத் துறை யில், அபூர்வமாக சில மருத்துவர்கள் நேர்மையாக இருக்க விரும்பினாலும் இருக்கவிடாத சூழலையும், மருந்து கம்பெனிகள், இடைத் தரகர்கள், லாபம் ஒன்றே நோக்கமாகச் செயல்படும் மரத்துப் போன மருத்துவர்கள் என எல்லாவற்றையும் தைரியமாகப் பதிவு செய்திருக்கிறது புத்தகம். பெயருடன் சிலரும், பெயர் தவிர்த்து பலரும்!

  ‘‘மருத்துவத்துறையைப் போல வேற எந்தத் துறையும் சந்தோஷத்தையும் திருப்தியையும் கொடுக்காதுங்கிற நம்பிக்கையிலதான் இந்தத் துறைக்கே வந்தேன். கின்வாட் என்ற பழங்குடி நகரத்துல ஒன்றரை வருஷம் பிராக்டிஸ் பண்ணிட்டிருந்தேன். ஆரம்ப காலம் ரொம்பவே திருப்தியானதா இருந்திருக்கு. பிரைவேட் டாக்டர்ஸே பேஷன்ட்டுகளை என்கிட்ட அனுப்பியிருக்காங்க. எனக்கு பணம் அதிகம் வந்ததில்லை. ஆனாலும், ஆத்ம திருப்தி கிடைச்சது. ஒரு பெண்ணுக்கு அவசரமா சிசேரியன் பண்ணணும்... அவங்களோட ஹீமோகுளோபின் அளவோ வெறும் 6தான். சுற்றுவட்டாரத்துல ரத்த வங்கி கிடையாது. ஆனாலும், அந்தச் சூழ்நிலையை ரிஸ்க் எடுத்து சமாளிச்சேன்.

  மக்கள் என் மேல வச்சிருந்த நம்பிக்கையும், சக மருத்துவர்களோட சப்போர்ட்டும்தான் காரணம். ஆனா, நாசிக்ல உள்ள மகப்பேறு மருத்துவர்களும், மருத்துவமனைகளும் பேக்கேஜ் என்ற பேர்ல ஆஃபர் அறிவிச்சாங்க. என்கிட்ட அனுப்பப்பட்ட பேஷன்ட்டுகள் அந்த மருத்துவமனைகளுக்கு திருப்பப்பட்டாங்க.

  பத்தே நிமிஷ நடையில பார்த்துடக்கூடிய நான் பக்கத்துலயே இருக்க, ராத்திரி 2 மணிக்கு ஒரு நோயாளியை 67 கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற இன்னொரு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்னங்கிற கேள்வி வந்தது. திரும்ப வந்து என்னை சந்திச்ச நோயாளிகளோட அனுபவங்களும் கஷ்டங்களும் பண விரயங்களும் என்னை யோசிக்க வச்சது.

  மும்பை மெடிக்கல் காலேஜ்ல புத்திசாலியான மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பலர், எதிர்பார்த்தபடி ரிசல்ட் வரலைனு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. செல்வாக்குள்ள டாக்டர்ஸ் தங்களோட பிள்ளைங்களுக்கு கோல்ட் மெடல் கிடைக்க ஏற்பாடு பண்ணின காட்சிகள் எனக்குள்ள பயங்கர வேதனையைக் கொடுத்தது. ரொம்ப நேர்மையா உழைக்கணும்கிற எண்ணம் உள்ள என்னோட டாக்டர் நண்பர்கள் பலருக்கும் மருத்துவ வணிகச் சந்தையோட விஷப்போக்கு வெறுப்பை கொடுத்தது.

  பல நாட்கள் நாங்க எல்லாரும் இதைப் பத்திப் பேசியிருக்கோம். எத்தனை நாளைக்குத்தான் நமக்குள்ளேயே இதையெல்லாம் பேசிக்கிட்டிருக்கிறது, வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தா என்னனு யோசிச்சேன். எல்லாருமே உண்மையா பேச சம்மதிச்சாங்க. இப்படி 20 வருஷங்களா என்னை உறுத்திக்கிட்டிருந்த பல சம்பவங்கள்தான் இந்தப் புத்தகத்துக்கான அடிப்படை...
  பரபரப்பைக் கிளப்பியிருக்கும் புத்தகத்தின் பின்னணியுடன் பேசுகிறார் டாக்டர் அருண் கட்ரே.

  வெறும் ஆறே மாதங்களில் இந்தப் புத்தகத்தை முடித்ததாகச் சொல்கிற டாக்டர் அருண் கட்ரேவுக்கு மருத்துவர்களை மனம் திறக்கச் செய்தது சவாலான காரியமாகவே இருந்ததையும் பகிர்கிறார்...

  ‘‘ஒரு காலத்துல சேவையா இருந்த மருத்துவம் சமீப காலங்கள்ல மருத்துவர்களோட பேராசையாலயும் வணிக நோக்கத்தாலயும் மாறிப் போயிருந்ததுல வெறுத்து, வெதும்பிப் போயிருந்தேன். எனக்குப் பல வருஷங்களா தெரிஞ்ச டாக்டர்ஸ்லேருந்து பேச ஆரம்பிச்சேன். அவங்க அவங்களுக்குத் தெரிஞ்சவங்களை அறிமுகப்படுத்தினாங்க.

  ஜன் ஸ்வஸ்த்ய அப்யான் என்ற நெட்வொர்க் மூலமாகவும் நிறைய மருத்துவர்களோட தொடர்பு கிடைச்சுப் பேசினேன். என் புத்தகத்துக்காக இந்தியா முழுக்க நான் சந்திச்சுப் பேசின டாக்டர்ஸ் எனக்கு மறுபடி நம்பிக்கை கொடுத்தாங்க” என்கிற டாக்டர் கட்ரே, மராத்திய மொழியில் விருது வென்ற எழுத்தாளரும் கூட.

  ‘‘மருத்துவத்தையும் எழுத்தையும் சமமா பார்க்கறேன். என்னோட முதல் நாவல், மருத்துவத் துறை மாணவர்களுக்கு தங்க மெடல் கொடுக்கிறதுல நடக்கிற ஊழல்களைப் பத்தினது. நிறைய விருதுகளையும் பாராட்டு களையும் பெற்றது‘‘ என்பவரின் அத்தனை படைப்புகளுமே சமூக அக்கறையுடன் எழுதப்பட்டவை.

  ‘‘லஞ்சமும் ஊழலும் பெருகிப் போன இந்த சமூகத்துல நாம மட்டும் நீதி, நேர்மைனு பேசிட்டிருக்கிறது பைத்தியக்காரத்தனமா இல்லை‘னு என் மனைவி கூட அடிக்கடி கேட்பாங்க. என்ன செய்ய? என்னால விலை போக முடியாது.

  என்னோட நோக்கம் ஏழை நோயாளிகளோட ஆரோக்கியம். தன்னோட ஆரோக்கியம் குறித்த உரிமைகள் மற்றும் அது பத்தின விழிப்புணர்வு மக்களுக்கு முழுமையா இல்லை. தனியார் மருத்துவமனைகளுக்குப் போகறவங்களுக்கு ஒருவிதமான பயம் இருக்கு. நோய் சரியானா போதும்கிற எண்ணத்துல மவுனமா இருந்துடறாங்க. உரிமைகளைப் பத்தி அவங்களுக்கு தெளிவு இல்லை.

  சுத்தமான குடிதண்ணீர் கிடைக்கிறது எப்படி சாத்தியமாகிறதில்லையோ, அது போலத்தான் இருக்கு ஆரோக்கியமான உடல்நலமும். ஆரோக்கியமின்மைக்கும் நோய்கள் பெருகினதுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு 50 சதவிகி தம் காரணம். ஒரு பிரிவு மக்கள் பசியால வாடறாங்க. இன்னொரு பிரிவு ஜங்க் உணவுகள் சாப்பிட்டு பருமனால அவதிப்படறாங்க. பொதுநல மருத்துவமனைகள்ல வேலை பார்க்க ஆட்கள் பஞ்சம்...

  மருந்துகளுக்குப் பஞ்சம்... இன்னொரு பக்கம் லஞ்சம். தனியார் மருத்துவ மனைகள் மக்களோட பணத்தை சுரண்டறதாகவும், கட்டுப்பாடுகள் இல்லாமலும் இருக்கு. இந்தியாவுல யுனிவர்சல் ஹெல்த் கேர் முறை வர்றதுதான் இது எல்லாத்துக்குமான தீர்வு. ஆனா, அதுக்கு நிறைய காலம் ஆகும்.

  அதுவரைக்கும் சீர்திருத்தப்பட்ட கிளினிகல் எஸ்டாப்ளிஷ்மென்ட் ஆக்ட் வரணும். இப்ப உள்ள சட்டத்துல நிறைய இடைவெளி இருக்கு. மருத்து வர்களையும் மக்களையும் பிரதிநிதிகளா கொண்ட குறைதீர்க்கும் கமிட்டி, மாவட்ட அளவுகள்ல உருவாக்கப்படணும். நோயாளிகளோட பிரச்னைகளைத் தீர்க்கிறதுலேருந்து, மருந்துகளோட விலை நிர்ணயம் வரைக்கும் பல விஷயங்களையும் அது செய்யணும். ஸ்டான்டர்ட் ட்ரீட்மென்ட் விதிமுறைகள் முறைப்படுத்தப்படணும்.

  இந்தப் புத்தகத்துக்காக நான் சந்திச்ச டாக்டர்ஸ் சிலரோட சேர்ந்து வணிகமயத்தை எதிர்த்து, நெறிமுறையான பகுத்தறிவான மருத்துவச் சேவைக்கான நேஷனல் நெட்வொர்க் ஒன்றை ஆரம்பிக்கிற திட்டம் இருக்கு. என் லட்சியம் நிறைவேறும் வரை ஓயப் போறதில்லை... உறுதிமொழியை இன்னொரு முறை உறுதி செய்கிறார் மாண்புமிகு மருத்துவர்! 20 வருஷங்களா என்னை உறுத்திக் கிட்டிருந்த பல சம்பவங்கள்தான் இந்தப் புத்தகத்துக்கான அடிப்படை...டாக்டர்ஸ் சிலரோட சேர்ந்து வணிக மயத்தை எதிர்த்து, நெறிமுறையான பகுத்தறிவான மருத்துவச் சேவைக்கான நேஷனல் நெட்வொர்க் ஒன்றை ஆரம்பிக்கிற திட்டம் இருக்கு...

  Similar Threads:

  Sponsored Links
  Last edited by chan; 30th Mar 2015 at 12:43 PM.

 2. #2
  kkmathy's Avatar
  kkmathy is offline Minister's of Penmai
  Real Name
  komathy
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  Malaysia
  Posts
  2,900

  Re: 78 மருத்துவர்களின் அதிர்ச்சி வாக்குமூலம&am

  ஹாய் தோழிகளே,

  நமது தோழி லெட்சுமி(chan) மருத்துவ உலகத்தில் நடக்கும் அவலங்களைப் பற்றி, டாக்டர் அருண் கட்ரே என்பவர் எழுதி இருக்கும் புத்தகத்தை பற்றிய ஒரு சில விளங்கங்கள் குடுத்து உள்ளார். படித்து பார்த்து இது போல நடக்கும் தில்லுமுல்லுகளில் இருந்து, நம்மை சிறிதேனும் காப்பாற்றிக் கொள்வோம்.@Parasakthi @sumathisri @chan,@Sumitra @jv_66 @gkarti @Sriramajayam ,@kodiuma @femila @sujivsp,@salma @RathideviDeva @malbha,@saidevi @Dangu @shansun70,@jayakalaiselvi @Suganya Vasu @ashsuma,@rajisugu @Prabha RK, @kamatchi devi @amirtha mks @saveetha1982 @bharathi saravanan @savithree @porkodit @jeyanthy c

  Last edited by kkmathy; 30th Mar 2015 at 10:03 PM.

 3. #3
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  42,332

  Re: 78 மருத்துவர்களின் அதிர்ச்சி வாக்குமூலம

  Neeya Naana lla Kooda Ipadi oru Topic Pochu lla.. Hmm Naama than Alert ah irukkanum...

  malbha, chan, kkmathy and 3 others like this.

 4. #4
  femila's Avatar
  femila is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2012
  Location
  Miracle World
  Posts
  3,764

  Re: 78 மருத்துவர்களின் அதிர்ச்சி வாக்குமூலம

  OMG....! Its very shocking to hear even auto drivers, people who are n the accidental area are dng such a sin..

  I have heard tat thy used to do forgery n giving treatment and do all those nonsnse after a patient expires..

  But ithulaiyum nallavanga irukathan seiyuranga athayum namma accept pannithan aganum.

  And regardng gold medal.. we cant stop this anywhr..  My Stories : CLICK CLICK
 5. #5
  femila's Avatar
  femila is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2012
  Location
  Miracle World
  Posts
  3,764

  Re: 78 மருத்துவர்களின் அதிர்ச்சி வாக்குமூலம&am

  Thanks mathi sis and lakshmi sis.. useful sharing..

  chan and Sriramajayam like this.


  My Stories : CLICK CLICK
 6. #6
  salma's Avatar
  salma is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2011
  Location
  u.s
  Posts
  5,852

  Re: 78 மருத்துவர்களின் அதிர்ச்சி வாக்குமூலம

  Ippadi ellaam nadakkirathai ninaichaalae payamaa irukku...

  Sal

 7. #7
  jash's Avatar
  jash is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  saradheya
  Gender
  Female
  Join Date
  Feb 2013
  Location
  madurai
  Posts
  12,744

  Re: 78 மருத்துவர்களின் அதிர்ச்சி வாக்குமூலம

  hai chan

  thanks for sharing....

  DR. arun katrae yoda latchiyam niraivera vaalthukkal and seekiram niraiveranumnu kadavultta vendikkuren... appo thaan makkal tappipaanga intha madiri pana veri pidicha drs ta irunthu...

  doctorungalae ippadi thaan... niraya unmai sambavam moolamum kelvipattiruken...


 8. #8
  Priyathozhi's Avatar
  Priyathozhi is offline Registered User
  Blogger
  Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  coimbatore
  Posts
  448
  Blog Entries
  1

  Re: 78 மருத்துவர்களின் அதிர்ச்சி வாக்குமூலம

  என்ன ஒரு பயங்கரம் இப்படியும் நடக்கிறதா? கடவுளே

  chan and Sriramajayam like this.
  நிமிர்ந்த நன்னடை

  நேர்கொண்ட பார்வை
  நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்
  திமிர்ந்த ஞானச்செருக்கு

 9. #9
  gita's Avatar
  gita is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  kavi
  Gender
  Female
  Join Date
  Apr 2012
  Location
  salem
  Posts
  3,426

  Re: 78 மருத்துவர்களின் அதிர்ச்சி வாக்குமூலம

  oh my god...ipppadiyumaa nadakum???

  chan and Sriramajayam like this.


  with regards

  Kavi.....

  "DONT WORRY.....BE HAPPY............" 10. #10
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Golden Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  66,077
  Blog Entries
  1584

  Re: 78 மருத்துவர்களின் அதிர்ச்சி வாக்குமூலம

  Naanum Kelvi patten, but inthalavuku Naan ethir paarkavillai.
  TFS Friend.


  Thx 4 Tagging @kkmathy  porkodit, chan and kkmathy like this.
  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.


  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!


  விசு @ Visu.,
  PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
  PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
  PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter
<--viglink-->