Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree43Likes

Details about Sleep- தூக்கம் பற்றிய விவரங்கள்


Discussions on "Details about Sleep- தூக்கம் பற்றிய விவரங்கள்" in "Health" forum.


  1. #11
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Details about Sleep- தூக்கம் பற்றிய விவரங்கள்

    மாணவர்களுக்கு தூக்கம் அவசியம்



    மாணவர்களுக்கு தினமும் ஒன்பது மணி நேரத் தூக்கம் அவசியம். பலர் பள்ளி முடிந்ததும் கோச்சிங் கிளாஸ், டியூஷன் என ஒன்பது மணிக்கு மேல்தான் வீட்டுக்கே வருகிறார்கள். பின்னர், இரவு நீண்ட நேரம் கண்விழித்துப் படிக்கிறார்கள். போதுமான அளவு தூங்காமல், அதிகாலை எழுந்து மீண்டும் பள்ளிக்குச் செல்கிறார்கள்.

    மாணவர்கள் நன்றாகத் தூங்கவில்லை எனில், வகுப்பில் தூக்கம் வரும். பாடம் புரிவதில் சிக்கல் மற்றும் தேர்வு எழுத சோம்பேறித்தனம் அதிகரிக்கும். எனவே, மாணவர்களைப் ‘படி...படி' என வற்புறுத்தி அவர்கள் தூங்கும் நேரத்தைக் குறைக்கக் கூடாது.

    மாணவர்கள் நன்றாக உறங்கி எழுந்தால்தான், படிப்பில் கவனம் செலுத்த முடியும். மாணவர்கள் எவ்வளவு நேரம் படிக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை, எவ்வளவு ஆழமாகப் படிக்கிறார்கள். அதை எப்படித் தேர்வில் வெளிக்காட்டுகிறார்கள் என்பதுதான் முக்கியம்.


    Sponsored Links
    salma and jv_66 like this.

  2. #12
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Details about Sleep- தூக்கம் பற்றிய விவரங்கள்

    இரவுப்பணி மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டியவை...

    இரவுப்பணி மேற்கொள்பவர்கள் அவர்களது உடலில் உள்ள உயிர் சுழற்சிக் கடிகாரத்தை இரவுப் பணிக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும். இரவுப் பணியில் இருப்பவர்கள் தாங்கள் வேலை செய்யும் நேரத்தைப் பகலாகக் கருதிக்கொள்ள வேண்டும். வேலை முடிந்து காலையில் வீட்டுக்குச் செல்லும்போது தங்களுக்கு அப்போதுதான் இரவு என மூளையில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.


    நைட் ஷிஃப்ட் டிப்ஸ்

    இரவு வேலை செய்பவர்கள், உடலில் வெளிச்சம் படாதவாறு வீட்டுக்குச் செல்வது நல்லது. பஸ் மூலம் வீட்டுக்குச் செல்பவர்கள் கைக்குட்டையை வைத்துக் கண்களை மறைத்தவாறு செல்லலாம். உறக்கக் கலக்கத்தில் செல்வதால் நேரிடும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க தனியாகச் செல்லாமல், நண்பர்களோடு சேர்ந்து செல்லலாம்.

    காலை வீட்டுக்கு வந்தவுடன் பால், பிரெட், பழங்கள் முதலான இரவு நேர உணவை உண்டுவிட்டு படுக்கையறைக்குச் செல்லவும்.

    படுக்கையறையில் சூரிய வெளிச்சம் வராதவாறு ஜன்னல்களை அடைத்துவைக்க வேண்டும். உடல் மேல் சூரிய வெளிச்சம் படாமல் தூங்கினால்தான் மெலட்டோனின் நன்றாகச் சுரக்கும். மேலும் செல்போனைக் கட்டாயம் தூரம் வைக்க வேண்டும்.

    மாலை நான்கு மணிக்கு எழுந்து, மாலை வெயிலில் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யவும், அப்போதுதான் வைட்டமின் டி சத்து உடலுக்குக் கிடைக்கும்.

    salma and jv_66 like this.

  3. #13
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Details about Sleep- தூக்கம் பற்றிய விவரங்கள்

    உடலில் வலி இருப்பவர்களுக்கு...
    உடலில் ஏற்படும் சிறு காயங்களால் வரும் தூக்கமின்மைப் பிரச்னை, சில நாட்களில் சரியாகிவிடும். மருத்துவர் பரிந்துரையுடன் வலி நீக்கும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். புற்றுநோய், சிறுநீரகக் கற்கள், தீராத மூட்டு வலி முதலான நோய் பாதிப்பின் காரணமாகத் தூக்கம் வராமல் தவிப்பவர்கள், தூக்க மாத்திரைகளை அவர்களே வாங்கிச் சாப்பிடக் கூடாது. உடலில் எந்த நோய் காரணமாக தூக்கமின்மை ஏற்படுகிறதோ, அந்த நோயைக் குணப்படுத்த வேண்டுமே தவிர, தூக்கத்திற்காக மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி, தியானம், பிடித்த பொழுதுபோக்கு போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், வலி உணர்வில் இருக்கும் கவனத்தைத் திசை திருப்ப முடியும். மன வலிமையை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

    salma and jv_66 like this.

  4. #14
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Details about Sleep- தூக்கம் பற்றிய விவரங்கள்

    நன்றாகத் தூங்க எளிய வழிகள்

    உடற்பயிற்சி அவசியம்

    உடற்பயிற்சி செய்யும்போது உடலில் உள்ள தசைகள் வலுவடையும். தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்கலாம். சிலர் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்துவிட்டு, உடல் சோர்வடையும் போது தண்ணீர் குடித்துவிட்டு படுத்து உறங்கி விடுவார்கள். இது மிகவும் தவறு. உடற்பயிற்சி வரைமுறையின்றி எல்லா நேரமும் செய்யக் கூடாது. படுக்கைக்குச் செல்வதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே உடற்பயிற்சி செய்துவிட வேண்டும்.


    ரிலாக்ஸ் ப்ளீஸ்

    தூங்குவதற்கு முன்னர் தேவையற்ற சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும்.

    மனதை அமைதிப்படுத்த பிடித்த இசையைக் கேட்கலாம்.

    டி.வியில் வன்முறை நிறைந்த படங்களையும், மனதில் குழப்பங்களைத் தோற்றுவிக்கும் சீரியல்களையும் பார்ப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    வீட்டில் உள்ளவர்களிடம் மனம்விட்டு அன்பாகப் பேசவேண்டும்.

    யோகா அல்லது தியானம் செய்யலாம். அதன் பிறகு, படுக்கைக்குச் செல்லுங்கள்.

    salma and jv_66 like this.

  5. #15
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Details about Sleep- தூக்கம் பற்றிய விவரங்கள்

    மனக் கடிகாரத்தை முறைப்படுத்துங்கள்



    உடல் என்பது இயந்திரம் போலத்தான். குறிப்பிட்ட நேரத்துக்கு இயக்கி, குறிப்பிட்ட நேரத்துக்கு ஓய்வு கொடுத்துவிட வேண்டும்.

    இரவு எத்தனை மணிக்கு உறங்கச் செல்ல வேண்டும் மற்றும் காலை எத்தனை மணிக்கு எழ வேண்டும் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
    தினமும் குறிப்பிட்ட நேரத்திற்குப் படுக்கைக்குச் செல்வதைப் பழக்கிக்கொண்டால், இரவு படுத்தவுடன் தூக்கம் வந்துவிடும்.

    வேலைகளை மாற்றுங்கள்

    படுக்கையில் படுத்தவுடன் தூக்கம் வரவில்லை, புரண்டு புரண்டு படுக்கிறீர்கள். அப்போதும் தூக்கம் வரவில்லையா? உடனே படுக்கையில் இருந்து எழுந்து அந்த அறையைவிட்டு வெளியேறி மற்றொரு அறைக்குச் சென்று உங்களுக்குப் பிடித்த புத்தகங்கள் படியுங்கள், பாடல்கள் கேளுங்கள். உங்களுக்குச் சோர்வாக இருப்பது போல தோன்றினால், உடனே மீண்டும் படுக்கைக்குச் சென்றுவிடுங்கள். தூக்கம் நன்றாக வரும்.

    உணவில் கவனம் தேவை

    இரவு, படுக்கைக்குச் செல்லும்போது எக்காரணம் கொண்டும் பசியுடன் செல்லக் கூடாது. உறங்கச் செல்வதற்கு, இரண்டு மணி நேரம் முன்பே, உணவை முடித்துவிட வேண்டும்.

    இரவு உணவில் ஃப்ரைடு ரைஸ் முதலான ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள், மசாலா மற்றும் காரம் நிறைந்த உணவுகள் மற்றும் செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துகொள்ளும் உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் அல்லது பழங்கள் இரவு உணவுக்கு ஏற்றவை.

    இரவு எப்போதும் நிறைய சாப்பிடாதீர்கள், அசைவ உணவுகளையும் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

    Last edited by chan; 31st Mar 2015 at 08:14 PM.
    salma and jv_66 like this.

  6. #16
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Details about Sleep- தூக்கம் பற்றிய விவரங்கள்

    மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்

    இரவு, படுக்கைக்குச் செல்வதற்கு அரை மணி நேரம் முன்பு மூச்சுப்பயிற்சி செய்வது உடலுக்கும் மனதுக்கும் நல்லது.
    தரையில் அமர்ந்தோ, சேரில் அமர்ந்தோ, படுக்கையில் அமர்ந்தோ மூச்சுப்பயிற்சி செய்யலாம். ஒன்று முதல் ஆறு எண்ணும் வரை முதலில் மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பிறகு, மெள்ள மெள்ள மூச்சுக்காற்றை வெளியே விடவேண்டும்.

    காஃபின், புகை, மதுவுக்குத் தடை!



    காபி, டீ, சாக்லேட், கோலா பானங்கள், டயட் கடைப்பிடிக்க எடுத்துக் கொள்ளும் செயற்கை மருந்துகள், சில வகை வலி நிவாரணி மாத்திரைகள் போன்றவற்றை உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள். இவற்றை உட்கொள்வதால் நரம்புகள் விழிப்படைகின்றன. நரம்புகள் ஓய்வெடுக்க நேரமாகும் என்பதால், தூக்கம் வராமல் தவிக்க நேரிடும்.


    புகைபிடிப்பவர்கள் உடலில் நிக்கோட்டின் என்ற வேதிப்பொருள் செல்வதால், இது தூக்கத்தைக் கெடுக்கும். குறைந்த நேரத்தில் தூக்கம் கலைந்து விழிப்பு வந்துவிடும்.


    இரவு நேரத்தில் ஆல்கஹால் உட்கொள்பவர்களுக்கு, நீண்ட நேரம் தூங்குவது போல உணர்வு இருக்கும். ஆனால் அவர்கள் ஆழ்ந்த நிலை தூக்கத்தை அடைவது இல்லை. இதனால் தூங்கி எழுந்தால் ஃப்ரெஷாக இருக்காது.


    இரவு உறங்கச் செல்வதற்கு முன் புகைபிடிப்பது,மது அருந்துவது, காபி அருந்துவது போன்றவற்றைத் தவிர்க்கவும்.


    salma and jv_66 like this.

  7. #17
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Details about Sleep- தூக்கம் பற்றிய விவரங்கள்

    சூரிய வெளிச்சம் வரும் வரை உறங்குங்கள்

    சூரியன் உதிக்கும் வரை உறங்குவதற்கும், சூரியன் உதிக்கும்போதே தூக்கம் கலைந்து எழுவதற்கும் பழகிக்கொள்ளுங்கள். இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை உறங்குவது நல்லது.

    படுக்கையில் மட்டும் தூங்குங்கள்


    இரவு படுக்கையில் படுத்தவுடன் சில நிமிடங்களில் தூக்கம் வராவிட்டால், வேறு அறைக்குச் சென்று மனதுக்குப் பிடித்ததை செய்யலாமே தவிர, வேறொரு இடத்தில் தூங்க முயலக் கூடாது. எப்போதும் படுக்கையைத் தவிர்த்து மற்ற இடங்களில் உறங்காதீர்கள். வேறு செயல் செய்யும்போது உறக்கம் வருவதுபோல தோன்றினால், உடனே மீண்டும் படுக்கைக்குத் திரும்புங்கள்.

    படுக்கையறை சுத்தம் அவசியம்
    படுக்கையறையை தினமும் சுத்தம் செய்வது அவசியம். மெத்தை விரிப்புகள், தலையணை போன்றவற்றை அவ்வப்போது நன்றாகத் துவைத்து பயன்படுத்தவும். வாசனைத் திரவியங்களை அதிகம் பயன்படுத்தக் கூடாது.

    படுக்கையறையில் குளிர்சாதன வசதி செய்திருந்தால், அறையில் நிலவும் வெப்பநிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். தூக்கத்தில் இருந்து எழுந்து ஏ.சி அறையில் வெப்பநிலையைக் கூட்டுவதையோ, குறைப்பதையோ தவிர்த்து, தூங்குவதற்கு முன்னரே மிதமான வெப்பநிலையில் ஏ.சி செட்டிங்குளை வைத்துவிட்டு உறங்குங்கள்.

    படுக்கையறையில் தொடர்ந்து பல நாட்கள் டி.வி பார்த்துக்கொண்டு உறங்குவதையோ, ரேடியோ அல்லது பாடல்களைக் கேட்டுக்கொண்டே உறங்குவதையோ தவிர்க்க வேண்டும். இல்லை எனில் டி.வி இல்லாவிட்டாலோ, பாடல்கள் கேட்காவிட்டாலோ தூக்கம் வராது. எனவே உங்களுக்குத் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படும்போது டி.வியை அணைத்துவிடுங்கள்.ரேடியோ, பாடல்கள் கேட்பதை நிறுத்திவிடுங்கள்.



    salma and jv_66 like this.

  8. #18
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Details about Sleep- தூக்கம் பற்றிய விவரங்கள்

    ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்

    உணவுக்கும் உறக்கத்துக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும் உணவுகள், அஜீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்தும் உணவுகளை தவிருங்கள். தூக்கம் கலைந்து கழிப்பறைக்கு அடிக்கடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், ஆழ்ந்த தூக்கம் வராது.


    இரவு, படுக்கைக்குச் செல்லும்போது பசி அதிகமாக இருந்தால், அரை டம்ளர் வெதுவெதுப்பான பால் குடியுங்கள்.

    இரவு நேர உணவு என்பது, நிறைந்த புரதச்சத்து, குறைந்த அளவு கொழுப்புச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் உள்ள உணவாக இருக்கட்டும்.

    கேக், க்ரீம் பிஸ்கட், பீட்சா, பர்கர், எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்கவும்.

    ஆபீஸ் டென்ஷனுக்கு தடா!

    அலுவலகத்தில் ஏற்பட்ட அவமானம், நிராகரிப்பு, சண்டை சச்சரவுகள் போன்றவற்றை வீட்டுக்குள் கொண்டுசெல்லாதீர்கள். செருப்பைக் கழட்டி வைக்கும் போதே, மனதில் உள்ள பாரங்களையும் இறக்கிவைத்துவிட்டு வீட்டுக்குள் நுழையுங்கள்.

    ஆபீஸ் டென்ஷனுடன் வருபவர்கள், இரவு நேரத்தில் குடும்பத்தோடு அமர்ந்து நகைச்சுவைக் காட்சிகள், கார்ட்டூன் போன்றவற்றை அரை மணி நேரம் பாருங்கள்.


    மனதை அமைதிப்படுத்தும் இசை கேட்டு, மனதை ஒருமுகப்படுத்துங்கள். இந்தப் பயிற்சிகளைச் செய்துவந்தால் மனம் அமைதியாகும்.

    தம்பதிகள் தங்களுக்குள் சண்டையிடுவதைத் தவிர்க்கவும். இரவு நேரத்தில் சர்ச்சைக்குரிய விஷயங்களை விவாதிக்காமல் உறங்கச் செல்லுங்கள்.

    salma and jv_66 like this.

  9. #19
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Details about Sleep- தூக்கம் பற்றிய விவரங்கள்

    இரவுக்காட்சி வேண்டாமே

    இரவு நேரத்தில் திரைப்படம் பார்ப்பதால் மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக நமது மூளை ஓய்வு எடுக்காமல் கவனித்துக் கொண்டே இருக்கும். மேலும் திரைப்படத்தின் தாக்கமும் மனதிலேயே இருக்கும்.

    வன்முறை நிறைந்த படங்கள், அமானுஷ்யம் மற்றும் பேய்ப்படங்கள் பார்ப்பது, மனதை சஞ்சலப்படுத்தும். இதனால் தூங்கும்போது அதிபயங்கரமான கெட்ட கனவுகள் வரலாம். இவை உறக்கத்தைப் பாதிக்கும். எனவே நைட் ஷோவைத் தவிருங்கள்.

    இரைச்சல் எரிச்சலை ஏற்படுத்தும்
    இரவு நேரத்தில் இரைச்சலான இடங்களில் இருப்பதைத் தவிருங்கள். இரவு நேரத்தில் இரைச்சல் எரிச்சலை ஏற்படுத்தும்.

    இரவு நேரத்தில் மென்மையான இசையைக் கேட்பதே சிறந்தது.

    இரவு நேரத்தில் கை,கால்களைப் பிடித்துவிட்டு மசாஜ் செய்து கொள்வது நன்றாகத் தூக்கத்தை வரவைக்கும்.



    Last edited by chan; 31st Mar 2015 at 08:19 PM.
    salma and jv_66 like this.

  10. #20
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: Details about Sleep- தூக்கம் பற்றிய விவரங்கள்

    செல்போனைத் தூர வையுங்கள்


    இரவு நேரத்தில் படுக்கைக்குச் செல்லும் 15 நிமிடங்களுக்கு முன்பே, செல்போனை அணைத்துவிடுங்கள். அல்லது சைலன்ட் மோடில் வைத்துவிடுங்கள்.

    செல்போனில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு, படுத்து உறங்குவதைத் தவிருங்கள். இரவு நேரத்தில் தொடர்ந்து ஹெட்போனை மாட்டிக்கொண்டு இசை கேட்டுக்கொண்டிருந்தால், கேட்கும் திறன் பாதிக்கப்படும்.

    செல்போனை படுக்கையில் இருந்து தள்ளி வையுங்கள். செல்போனை மிக அருகிலேயே வைத்துக்கொண்டு தூங்குவதால், செல்போனில் இருந்து வரும் கதிர்வீச்சு உடலில் உள்ள நரம்பு மண்டலத்தைத் தாக்கக்கூடும். எனவே செல்போனை தொலைவில் வைப்பது நல்லது.

    வாட்ஸ் அப், ஃபேஸ்புக் அவசியம் இல்லை


    இன்றைய இளைஞர்கள் பலர் இரவு நேரங்களில் செல்போனில் பேசிக்கொண்டோ, அல்லது வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிக்கொண்டோ, ஃபேஸ்புக்கில் அவர்களது போட்டோவுக்கும் ஸ்டேட்டஸுக்கும் எத்தனை லைக் விழுந்திருக்கிறது, எவ்வளவு கமென்ட் வந்திருக்கிறது, என செக் செய்துகொண்டோ இருக்கிறார்கள். இதனால் முறையாகத் தூங்குவது இல்லை. 10 மணி நேரத்திற்கும் அதிகமாகப் படுக்கையறையில் படுத்துக்கொண்டு இருக்கும் இளைஞர்கள், ஐந்து மணி நேரம்கூடத் தூங்குவது இல்லை. மேலும் ஆழ்ந்த தூக்கம் என்பதே அவர்களுக்கு இல்லை. எனவே, இளைஞர்கள் அடுத்த நாள் தங்களது கல்வி, வேலை சார்ந்த விஷயங்களில் மந்தத் தன்மையுடன் காணப்படுகின்றார்கள்.

    மாணவர்கள் தொடர்ந்து எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களில் கவனம் செலுத்துவதால், சரியாகத் தூங்காவிட்டால் அவர்களது கற்பனைத்திறன் மற்றும் அறிவுத்திறன் குறைந்துவிடும்.

    சித்த மருத்துவர் வேலாயுதம் தரும் டிப்ஸ்



    சித்த மருத்துவத்தின்படி அனைவருக்கும் 8 மணி நேரத் தூக்கம் அவசியம். தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு, மாத்திரை மருந்துகளின்றி எளிய வழிகள் சித்த மருத்துவத்தில் உண்டு.

    தினமும் ஒரு டீஸ்பூன் கசகசா எடுத்து, அதில் நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பிறகு, பசும்பாலில் கலந்து, படுக்கைக்குச் செல்லும் முன் அருந்துங்கள்.

    அமுக்கிராங்கிழங்கு சூரணம் ஒரு தேக்கரண்டி எடுத்து, பாலில் கலந்து அருந்த, தூக்கம் வரும்.

    வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடலுக்கு நல்லது.

    மருதாணிப் பூவை தலையணைக்கு அடியில் வைத்துத் தூங்கினால், நன்றாகத் தூக்கம் வரும்.

    மாலை நேரத்தில், வெதுவெதுப்பான நீரில் தலைக்குக் குளிக்க வேண்டும். படுக்கைக்குச் செல்வதற்கு நான்கு மணிநேரத்துக்கு முன்னர் குளிப்பது, தூக்கம் வர உதவும்.

    நன்றி டாக்டர் விகடன்

    Last edited by chan; 31st Mar 2015 at 08:21 PM.
    salma and jv_66 like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter