Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By chan
  • 1 Post By kkmathy

சுடச் சுட நடப்பதென்ன...


Discussions on "சுடச் சுட நடப்பதென்ன..." in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    சுடச் சுட நடப்பதென்ன...

    சுடச் சுட நடப்பதென்ன...
    வயிறே வணக்கம்...
    சிலருக்கு உணவு சுவை யாக மட்டுமிருந்தால் போதாது... சூடாகவும் இருக்க வேண்டும். விரைவு உணவகங்களில் சட்டியில் இருந்து வறுத்த நூடுல்ஸை தட்டில் கொட்டி, கொதிக்கும் புகை குறையாமல் அள்ளிச்சாப்பிடுபவர்கள் அதிகம். காபி முதல் ஐஸ்க்ரீம் (சூடான ஃப்ரைடு ஐஸ்க்ரீம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?) வரை அனைத்தையும் ஆவி பறக்க ருசிக்கிற பழக்கம் சரியானதுதானா? லேப்ராஸ்கோபிக் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் வாணி விஜய் அவர்களிடம் பேசினோம்...

    ‘‘மிதமான சூட்டில் உணவுகளை சாப்பிடுவதே நல்லது. கொதிக்க கொதிக்க உணவுகளை உள்ளே தள்ளி னால் உணவுப் பாதையில் உள்ள மியூகோசா படலம் பாதிப்படையும். மியூகோசா படலம்தான் நாம் சாப்பிடும் உணவுகளை எளிதாக குடலுக்கு கொண்டு செல்ல உதவுகிறது.

    உணவுப்பாதையின் உணவுக்குழல் ஆரம்பித்து குடல் வரை இருக்கிறது மியூகோசா படலம்.இது பாது காப்பு அரணாகவும் விளங்குகிறது. சூடான உணவுகள் அதை பாதிப்படையச் செய்வதால் எளிதில் அல்சர் வர வாய்ப்புண்டு.

    ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டால் அதுவே எதிர்காலத்தில் புற்று நோயாகவும் மாறலாம். வாயில் உணவை வைத்தவுடன் உமிழ்நீர் சுரக்க ஆரம்பிக்கும். அங்கிருந்தே உணவு செரிமானத்துக்கான படிநிலைகள் ஆரம்பித்து குடலுக்கு செல்லும் போது முடிவடைகிறது. சூடான உணவுகள் சாப்பிட்டால் செரிமானத்துக்கான படிநிலையிலும் பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. வாயிலும் வயிற்றிலும் புண்களை வரவழைக்கும். குளிர்காலத்தில், உடல்நலம் இல்லாமல் இருக்கும் போது சுடுதண்ணீர்தான் குடிக்க வேண்டியிருக்கும்.

    குடிக்கும் அளவுக்கு நன்றாக ஆற்றி, சூடு ஆறியவுடன் மட்டுமே குடிக்கவேண்டும். ஒருவருக்கு சூடாக இருப்பது இன்னொரு வருக்கு சூடாக இல்லாமல் இருக்கலாம். இவ்வளவு செல்சியஸ் சூட்டில் தான் குடிக்கவேண்டும் எனத் துல்லியமாக சொல்லவும் முடியாது. உணவை தட்டில் கொட்டி சற்று ஆறியவுடன் சாப்பிடுவதே சிறந்தது. அதே போல காபி அதிகமாக குடிப்பவர்களுக்கும் மியூகோசா படலம் பாதிப்படையும்.

    காபியில் உள்ள கஃபைன் என்ற வேதிப்பொருள் மியூகோசாவை அழற்சி அடையச் செய்யும். எனவே, இரண்டு தடவைக்கு மேல் காபி குடிக்காமல் இருப்பது நல்லது. அதையும் அளவான சூட்டில் குடிப்பதே பாதுகாப்பானது.”“அதிக சூடான உணவுகளை சாப்பிடுவதால் எளிதில் அல்சர் வர வாய்ப்புண்டு. ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டால் அதுவே எதிர்காலத்தில் புற்றுநோயாகவும் மாறலாம்.”


    Similar Threads:

    Sponsored Links
    kkmathy and Vaisri02 like this.

  2. #2
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: சுடச் சுட நடப்பதென்ன...

    Very useful info, Latchmy.

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter