Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

பல் கொஞ்சம் கவனம், எப்போதும் புன்னகை! பிர&am


Discussions on "பல் கொஞ்சம் கவனம், எப்போதும் புன்னகை! பிர&am" in "Health" forum.


 1. #11
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: பல் கொஞ்சம் கவனம், எப்போதும் புன்னகை! பி&#

  பற்களின் பகைவன்
  புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் பற்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கும்பகோணத்தைச் சேர்ந்த பல் மருத்துவர் பி.பிரகாஷ் விளக்குகிறார்:
   இன்று உலக அளவில் தவிர்க்கக் கூடிய மரணங்கள் அதிகமானதற்கு புகையிலைப் பழக்கம் மிக முக்கியக் காரணம். புகை பிடிப்பதாலும், புகையிலைப் பொருட்களை மெல்லுவதாலும் வாய் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

   புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு வாயின் வெப்பநிலை அதிகரிக்கும். வாயில் உள்ள திசுக்கள் மாற்றம் ஏற்பட்டு உலர்ந்து போய் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் மிக எளிதில் பூஞ்ஜை மற்றும் வைரஸ் போன்ற நுண்ணுயிர் தொற்று ஏற்படலாம்.

   புகைப்பவர்களுக்கு மற்றவர்களைவிட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு ஆறு மடங்கு அதிகரிக்கும்.

   புகைபிடிப்பவர்களுக்கு ஈறு நோய் வருவதற்கான வாய்ப்பு இரு மடங்கு அதிகம். ஈறு வீக்கம், பல் ஆடுவது, ஈறுகளில் சீழ், ரத்தம் போன்ற பிரச்னைகள் வரலாம். புகைப்பிடிப்பதால் பற்களில் கறை ஏற்படும்.


  செய்யக்கூடியவை:

   சாப்பிட்டதும், ஒரு மணி நேரம் கழித்து, அவசியம் பல் துலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்

   தூங்கச் செல்வதற்கு முன்பு பல் துலக்க வேண்டும்

   புகைத்தல், மது அருந்துதல் கைவிடுங்கள்.

   போதுமான அளவுக்கு தண்ணீர் அருந்துங்கள்.

   உணவு சாப்பிடும் நேரத்தில் மட்டும் இனிப்பு சாப்பி டுங்கள்.

   ஜூஸ் செய்து குடிப்பதற்குப் பதிலாக பழங்களைக் கடித்து சாப் பிடுங்கள்.

   ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பால் பொருட்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

   குளிர்பானம் குடிப் பதைத் தவிருங்கள். இல்லையெனில், ஸ்ட்ரா பயன்படுத்துங்கள்.

  குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தியுங்கள்.


  செய்யக் கூடாதவை:

   எவ்வளவு கோபமாக் இருந்தாலும் 'நறநற’வெனப் பல்லைக் கடிக்காதீர்கள்

   நகத்தைக் கடிக்கக்கூடாது. அதன் மூலம் கிருமிகள் வாய்க்கு சென்று வியாதிகளைப் பரப்பிவிடும்.

   பல்லை அழுத்தித் தேய்க்காதீர்கள்.

   பாட்டில் மூடி போன்ற கடினமான பொருட்களை பல்லால் கடித்துத் திறக்க முயற்சிக்காதீர்கள். பற்களுக்கு சேதம் ஏற்படுத்துவதுடன், உதடுகளிலும் கீறல் அல்லது காயம் ஏற்படலாம்.

  மேற்சொன்ன ஆலோசனைகளைப் பின்பற்றினால், ஆரோக்கியமான புன்னகை உங்கள் வசம்.

  தவிர்க்க வேண்டியவை:
  கார்பனேட்டட் கோலா குளிர்பானங்களில் உள்ள அமிலத்தன்மையானது பல்லின் எனாமலைப் பாதிக்கும்..

  நொறுங்க தின்றால்... பல்லுக்கு ஆயுசு!

  பல் வலி, பல் ஆடும் பிரச்னை உள்ளவர்கள் காய்கறி, பழங்களை அப்படியே கடித்துச் சாப்பிடும்போது, பல்லில் விரிசலை ஏற்படுத்தி, விழவும் செய்துவிடும். எனவே, கடிக்க ஏற்ற வகையில் சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக மென்று சாப்பிடுங்கள்.

  'ஷாக்’லெட்
  பல்லில் ஒட்டிக்கொள்ளக் கூடிய கடினமான சாக்லெட்களில் உள்ள இனிப்பு நீண்ட நேரத்துக்கு நம் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும். இதனால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு பற்கள் பாதிக்கப்படுவதால், இவற்றை தவிர்ப்பது நல்லது.

  உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் பாப்கார்ன்: சிப்ஸ் துகள்கள் பல் இடுக்குகளில் சிக்கிக்கொள்ளும்போது அதைச் சிதைக்கும் பாக்டீரியாக்கள் அமிலத்தை வெளியேற்றி பற்சிதைவுக்கு வழிவகுக்கிறது. பாப்கார்ன் கவரின் அடியில் பொரியாத சில சோள விதைகள் இருக்கும். மிகக் கடினமான இந்த விதைகளைக் கடிக்கும்போது, பல்லுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.

  உலர் பழங்கள்: திராட்சை, பேரீட்சை போன்ற உலர் பழங்களை சாப்பிட்டதும் பல்லின் இடுக்குகளில் நன்கு ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டவை. இவற்றை, சாப்பிட்டதும் பல்லைச் சுத்தம் செய்ய மறந்துவிடக் கூடாது.


  Sponsored Links
  Last edited by chan; 5th Apr 2015 at 02:11 PM.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter