Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree16Likes

Healthy Tips to follow while Taking FOOD -உணவு உண்ணும்போதுகடைபிடிக்க வேண்


Discussions on "Healthy Tips to follow while Taking FOOD -உணவு உண்ணும்போதுகடைபிடிக்க வேண்" in "Health" forum.


  1. #11
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    உணவைப் பற்களால் நன்றாகக் கூழ் போல அரைத்த

    உணவைப் பற்களால் நன்றாகக் கூழ் போல அரைத்து உண்ண வேண்டும்.

    - ஹீலர் பாஸ்கர்


    நாம் சாப்பிடும் பொழுது உணவைப் பற்களால் நன்கு அரைத்துச் சாப்பிட வேண்டும். உணவைப் பற்களால் அரைக்காமல், நொறுக்காமல் யார் யாரெல்லாம் குண்டு குண்டாக அப்படியே விழுங்குகிறார்களோ, அவர்களுடைய வயிறு அவர்களை ஒரு கேள்வி கேட்கும். அரைப்பதற்கு என்னிடம் பல்லா இருக்கிறது? அல்லது வயிற்றில் என்ன மிக்ஸி போல் பிளேடுகளா உள்ளன? அல்லது வயிற்றில் கிரைண்டர் போல் கல் இருக்கிறதா? என்று வயிறு நம்மைப் பார்த்துக் கேட்கும்.

    வயிற்றில் பற்களும் இல்லை, பிளேடுகளும் இல்லை, கல்லும் இல்லை. பிறகு நாம் சாப்பிடும் உணவை வயிறு எப்படி ஜீரணம் செய்கிறது என்றால், வயிறு என்பது ஒரு குடம் போல. வயிற்றில் Hydrocloric Acid (HCL) என்ற அமிலம் சுரக்கும். இந்த அமிலம்தான் உணவை ஜீரணம் செய்கிறது. இந்த அமிலத்தின் சக்தி என்னவென்றால், நம் வயிற்றில் பசிக்கும் பொழுது சுரக்கும் பிசிலி அமிலத்தை எடுத்து ஓர் இரும்பின் மேல் ஊற்றினால் இரும்பே உருகும். நம் உள்ளங்கையில் ஊற்றினால் உள்ளங்கையில் ஓட்டை விழுந்து விடும். இப்படி இரும்பையே உருக்கும் சக்தி வாய்ந்த அமிலம் தான் ஒவ்வொரு முறை பசிக்கும் பொழுதும் நம் இரைப்பையில் உற்பத்தியாகிறது.


    இரும்பை உருக்கும் அமிலம் இரைப்பையை ஒன்றும் செய்யாதா என்று சந்தேகம் வரும். இரைப்பையிலிருக்கும் இந்த அமிலத்திற்கு இடையே முயூக்கஸ் என்ற ஒரு சளிப்படலம் இருக்கும். இந்தச் சளிப்படலம் தான் அமிலத்தை இரைப்பையுடன் சேராமல் இரைப்பைக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்கிறது. பசி எடுத்த பிறகு நீண்ட நேரமாகச் சாப்பிடாமல் இருந்தால் வயிற்றில் சுரந்த அமிலம், தான் சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காமல் இந்த முயூக்கஸ் சளிப்படலத்தைச் சாப்பிட ஆரம்பிக்கும்.

    இப்படிப் பசி எடுத்து சாப்பிடாமல் வயிற்றைக் காயப் போடும் நபர்களுக்குச் சிறிது காலத்துக்குப் பிறகு இந்த அமிலம் சளிப் படலத்தைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் இரைப்பையைத் தொடும். இரும்பை உருக்கும் அமிலம் இரைப்பையைத் தொட்டவுடன் இரைப்பை பாதித்துப் புண் ஏற்படும். அப்பொழுது அதி பயங்கரமாக வயிற்று வலி ஏற்படும். இதையே அல்சர் என்று கூறுவார்கள்.


    அல்சர் வராமல் இருப்பதற்கு நேரம் நேரம் ஒழுங்காக நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று உலக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் யார்யாரெல்லாம் நேரம் நேரம் பார்த்து ஒழுங்காகச் சாப்பிடுகிறீர்களோ உங்களுக்கு தான் அல்சர் வரும். நேரம் பார்த்துச் சாப்பிட்டால் அல்சர் வரும். பசி எடுத்துச் சாப்பிட்டால் அல்சர் குணமாகும். நேரம் பார்த்துச் சாப்பிடுவதற்கும் பசி எடுத்துச் சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. உதாரணமாக காலை பத்து மணிக்கு ஒருவர் உணவு சாப்பிடுகிறார். அவர் எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார்.

    பகல் 2மணி ஆனவுடன் அவர் சரியான நேரம் பார்த்துப் பசி இல்லாத போது சாப்பிட்டால் என்ன ஆகும்? ஏற்கெனவே ஜீரணமாகாத உணவு வயிற்றில் இருக்கும் பொழுது அதுவும் கெட்டுப் போகும். புதிதாக சாப்பிடப் போகும் புதிய உணவும் கெட்டுப் போகும். இதே போல் காலை பத்து மணிக்கு ஒருவர் உணவு எடுத்துக் கொள்கிறார். அதிக வேலை செய்கிறார். பகல் பன்னிரண்டு மணிக்கு நன்றாகப் பசிக்கிறது. இவர் நான் நேரம் பார்த்துதான் சாப்பிடுவேன் என்று இரண்டு மணி வரை தாமதமாகக் காத்திருந்தால் இந்த இரண்டு மணி நேரத்தில் அமிலம் இரைப்பையைப் புண்ணாக்க வாய்ப்பு உள்ளது. எனவே நேரம் பார்த்துச் சாப்பிடுவது நோய். பசி எடுத்துச் சாப்பிடுவது ஆரோக்கியம்.


    உலக மருத்துவர்கள் நேரம் பார்த்துத் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். தயவு செய்து நேரம் பார்த்து யாரும் சாப்பிடாதீர்கள். பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடுங்கள். எனவே சாப்பிடும் பொழுது பற்களால் நன்றாக அரைத்து மென்று பிறகு விழுங்க வேண்டும்.


    நாம் பொதுவாகப் பற்களுக்கு வேலை கொடுப்பதே கிடையாது. குண்டு குண்டாக விழுங்கி விடுகிறோம். நாம் மொத்தம் 40 முறை கையால் எடுத்துச் சாப்பிடுவோம் என்று வைத்துக் கொள்வோம். முதல் நான்கு முறை சாப்பிட்ட உணவு பற்களுக்கு வேலை கொடுக்காமல் குண்டு குண்டாக வயிற்றில் சென்றடைவதால் வயிற்றில் நாற்பது கைக்கு வேண்டிய சாப்பாட்டை ஜீரணம் செய்வதற்காக வைத்துள்ள அமிலம் முதல் நான்கு வாய் உணவிற்கே தீர்ந்து விடுகிறது.

    ஏனென்றால் பற்கள் செய்ய வேண்டிய வேலையை அமிலம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, நாம் முதலில் சாப்பிடும் நான்கு வாய் உணவு மட்டுமே நல்ல ரத்தமாக மாறுகிறது. அதன் பிறகு சாப்பிடும் 36வாய் சாப்பாடு வயிற்றில் அமிலம் இல்லாததால் கழிவுப் பொருளாகவும், மலமாகவும் மாறுகிறது. மேலும் தொப்பை வருவதற்கும் உடல் பருமன் அடைவதற்கும் ஒரே ஒரு காரணம் பற்களுக்கு வேலை கொடுக்காதது மட்டும்தான்.


    வயிற்றில் அமிலம் இருக்கும் பொழுது சாப்பிடும் உணவு ஜீரணமாகிறது. தொப்பையாக மாறுவது கிடையாது. வயிற்றில் அமிலம் தீர்ந்த பிறகு சாப்பிடும் உணவு ஜீரணமும் ஆவதில்லை. தொப்பையாகவும் மாறுகிறது. உடல் பருமனுக்கும் இதுவே காரணம். எனவே, பற்களுக்குத் தயவு செய்து வேலை கொடுங்கள். ஓர் உணவைப் பற்கள் எவ்வளவு நேரம் மென்று கூழ் போல அரைத்த பிறகு வயிற்றுக்குள் அனுப்புகிறதோ அந்த அளவுக்கு வயிற்றிலுள்ள அமிலத்துக்கு வேலை குறைவாகும்.

    குறைந்த அமிலத்தின் மூலமாக உங்கள் உணவை ஜீரணம் செய்துவிட்டு மீதமுள்ள அமிலங்கள் அடுத்து வரும் உணவுகளுக்குத் தயாராக இருக்கும். எனவே நாம் சாப்பிடுகிற குழம்பு, ரசம், மோர், பாயசம், பீடா ஆகிய அனைத்து உணவும் ஜீரணமாக வேண்டும் என்றால் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு வாய் உணவையும் நன்றாக மென்று கூழ் போல் அரைத்துப் பின்னர் விழுங்க வேண்டும்.


    நம்மில் பலர் தொப்பை மற்றும் உடல் பருமனுக்காக நடைப்பயிற்சி (Walking) செல்வது வழக்கம். 4கி.மீ. வாக்கிங் சென்று வந்து பின்னர் நான்கு முட்டை பப்ஸ் சாப்பிட்டால் எப்படி உடல் இளைக்கும்? சிலர் புதிய டெக்னாலஜி மூலமாக (வைபரேட்டர்) Viberator Machine வயிற்றில் மாட்டிக் கொண்டும் Viberator மிஷினில் ஏறி நின்று கொண்டும் எலக்ட்ரானிக் முறையின் மூலமாக அதிர்வுகள் மூலமாக உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள்.

    பசி இல்லாமல் எதற்காகக் கண்டதைச் சாப்பிட வேண்டும்? பின்னர் ஏன் வைபரேட்டரில் ஆட வேண்டும்? பசி எடுத்துச் சாப்பிட்டால் தொப்பையும் இருக்காது. உடல் பருமனும் இருக்காது. பிறகு ஏன் நமக்கு இந்த வீர விளையாட்டுகள். எனவே நம் சிகிச்சையில் உடல் பருமனைக் குறைப்பதற்கும் தொப்பையைக் குறைப்பதற்கும் சுலபமான வழி பற்களுக்கு வேலை கொடுப்பதுதான்.


    உங்கள் எடையை இன்று பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். நாம் கூறிய முறைப்படி உணவைச் சாப்பிடுங்கள். கண்டிப்பாக ஒரு மாதத்தில் உங்கள் எடை பல கிலோ குறையும். நீங்கள் வாக்கிங் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வைபரேட்டர் மெசின் பயன்படுத்தத் தேவையில்லை. ஏற்கெனவே ஒரு வேளைக்கு ஐந்து சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நபராக நீங்கள் இருந்தால் இப்பொழுது ஏழு சப்பாத்தி சாப்பிட்டும் உங்கள் உடல் எடையைக் குறைக்கலாம்.

    அதிகமாகச் சாப்பிடுவதால் உடல் பருமனாகிறது என்பது தவறான கருத்து. குறைவாகச் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பதும் தவறான கருத்து. பற்களுக்கு அதிக வேலை கொடுப்பதன் மூலமாக அதிகமாகச் சாப்பிட்டும் எடையைக் குறைக்கலாம்.

    நம் சிகிச்சையில் உங்கள் மனத்துக்குப் பிடித்த அனைத்து உணவுகளையும் பற்களுக்கு நன்றாக வேலை கொடுத்துக் கூழ் போல அரைத்து உண்ணுவதன் மூலமாக மனத்திற்குப் பிடித்தமான அனைத்து உணவுகளையும் தாராளமாகச் சாப்பிட்டே உடல் எடையைக் குறைக்க முடியும்.


    நம் சிகிச்சையில் முதலில் தொப்பை குறையும். உடல் எடை குறையும். பிறகு தான் நோய்கள் குணமாகும். எனவே நம் சிகிச்சையைப் பயன்படுத்தும் பொழுது உடல் எடை குறைவு ஏற்பட்டால் தயவு செய்து பயப்படாதீர்கள். உங்கள் எடை எவ்வளவு குறைகிறதோ அந்த அளவிற்கு உங்கள் உடம்பில் கழிவு இருந்தது என்று பொருள். நம் சிகிச்சையைச் செய்யும்பொழுது யாருடைய உடல் எடை குறையவே இல்லையோ நீங்கள் கழிவு இல்லாத மனிதராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

    உங்கள் எடை சிறிது சிறிதாகக் குறையும். பின்னர் ஒரு குறிப்பிட்ட நாளிலிருந்து சில மாதங்களுக்கு ஒரே எடை இருக்கும். அப்பொழுது புரிந்து கொள்ளுங்கள். அதுதான் உங்கள் உண்மையான ஆரோக்கியமான உடலின் எடை. பிறகு மீண்டும் உங்களின் எடை கொஞ்சம், கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டே வரும். இப்பொழுது அதிகமாகும் இந்த எடை ஆரோக்கியமான எலும்புகளும், நரம்புகளும், தசையினால் உருவாக்கப்பட்ட ஆரோக்கியமான உடம்பு. இப்படி அதிகமாகும் உடல் எடை இனி குறையாது.


    எனவே தயவு செய்து ஒரு கையில் உணவை எடுத்து வாயில் வைத்தால் குறைந்தது பத்து அல்லது பதினைந்து முறை நன்றாக மென்று கூழ் போல் செய்து எச்சில் கலந்து விழுங்குவதன் மூலமாக வயிற்றுக்கு உதவி செய்யுங்கள். பற்களில் மெல்வது மூலமாக வயிற்றின் வேலையைக் குறைத்து விட்டால் வயிறு ஆரோக்கியமாக இருக்கும், சந்தோஷமாக இருக்கும். வயிறு சந்தோஷமாக இருந்தால்தான் நோய்கள் குணமாகும். நாம் ஆரோக்கியமாக இருப்போம்.


    Sponsored Links
    jv_66 likes this.

  2. #12
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: உணவைப் பற்களால் நன்றாகக் கூழ் போல அரைத்

    Nice sharing Lashmi.


  3. #13
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: "சுவையை ரசித்து, ருசித்துச் சாப்பிட வேண

    Nice sharing.

    chan likes this.

  4. #14
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: சாப்பிடும் பொழுது ஏப்பம் வந்தால் என்ன ச

    Nice Info.

    chan likes this.

  5. #15
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: குளித்தால் முக்கால் மணி நேரத்திற்குப் 

    ​Nice Info.


  6. #16
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: எதைச் சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது?

    .............


  7. #17
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Healthy Tips to follow while Taking FOOD -உணவு உண்ணும்போதுகடைபிடிக்க வேண்

    Very useful informations.

    chan likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter