Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

மாஸ்டர் ஹெல்த் செக்கப் - Master Health Checkup


Discussions on "மாஸ்டர் ஹெல்த் செக்கப் - Master Health Checkup" in "Health" forum.


 1. #11
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: மாஸ்டர் ஹெல்த் செக்கப் - Master Health Checkup

  இடை அளவு
  இடுப்பு மற்றும் அதற்கு மேல் தொப்புள் மேலே வைத்து இடை, இடுப்பு அளவுகளைக் கணக்கிடுவார்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் வர இருக்கும், மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம். உடல் பருமன் போன்ற வியாதிகளைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம். அவை வராமல் தடுக்க ஆலோசனை பெறலாம். இடையளவு கூடக்கூட ஆயுள் அளவு குறையக்கூடும்.
  ஆண்களுக்கு 90 செ.மீ.க்கு கீழும் பெண்களுக்கு 80 செ.மீ.க்கு கீழும் இருப்பது நலம்.
  மார்பு விரியும் தன்மையைப் பரிசோதித்து, நுரையீரல் நோய்கள், மார்பு எலும்பு வடிவம் (கூன், கோணல், குழிவு, பீப்பாய், குறுகிய அகன்ற மார்பு) ஆகியவற்றில் ஏற்படும் வியாதிகளை பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

  வயிற்று ஸ்கேன்

  இரைப்பை, கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுநீரகங்கள், குடல், ரத்தக் குழாய்கள், சவ்வுகள், சிறுநீர்ப்பை, ப்ராஸ்டேட் சுரப்பி, கர்ப்பப்பை, என வயிற்றின் அனைத்து உள்உறுப்புகள் பற்றியும், அவற்றின், எடை, அளவு, அமைப்பு, ரத்த ஓட்டம், செயல்பாடு, 1 மி.மீட்டருக்கு மேல் உள்ள நீர்க் கட்டிகள், புற்று நோய், நோய்த் தொற்றுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
  கல்லீரல் பரிசோதனை
  கல்லீரலானது, குளுக்கோஸ், ஆல்புமின் புரதங்கள், ரத்தத்தை உறையவைக்கும் முக்கியப் பொருட்கள், மருந்துகளைச் செரிமானம் செய்து வெளியேற்றுதல், உணவில் கொழுப்புப் பொருள்களைச் செரிமானம் செய்தல், புரத, மாவு, கொழுப்புச் சத்துக்களைச் சேர்த்துவைத்தல் போன்ற உயிர் காக்கும் மிக அத்தியாவசியமான பணிகளைச் செய்துவருவதால், கல்லீரல் செயல்பாட்டைப் பரிசோதிப்பது மிகவும் முக்கியமானது. அதில் ஏதாவது நோய்த் தொற்று, சேதம், காமாலை, அறிகுறி இருக்கிறதா எனப் பரிசோதித்து அறிவார்கள்.
  Sponsored Links

 2. #12
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: மாஸ்டர் ஹெல்த் செக்கப் - Master Health Checkup

  சிறுநீரகப் பரிசோதனை
  இரண்டு சிறுநீரகங்களின் அளவு, ரத்த ஓட்டம், செயல்திறன், உடலின் கழிவுகளை வெளியேற்றும் திறன் போன்றவற்றை, யூரியா, கிரியேட்டினின் பரிசோதனை மூலம் தெரிந்துகொள்வார்கள்.

  கண்
  பார்வைத்திறன் குறைபாடுகளான கிட்டப் பார்வை, தூரப் பார்வை, நிறக் குருடு, மாலைக்கண் நோய், கண்புரை, விழித்திரைக் குறைபாடுகள், நாள்பட்ட சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.  காது

  கேட்கும் திறன், சவ்வின் தன்மை, தலைச் சுற்றல், கிறுகிறுப்பு, தள்ளாட்டம், தொண்டையில் ஏற்படும் பாதிப்புகள், தொண்டை, மூக்கில் சதை வளர்ச்சி, நோய்த் தொற்றுகள் பற்றி ஆராய்ந்து சிகிச்சைக்குப் பரிந்துரைப்பார்கள்.

  தோல்
  சொரி, சிரங்கு, தேமல், படை, அரிப்பு, தடிப்பு, நிறம் மாறிய இடங்கள், வெண்மை, கருமை, சிவப்புப் புள்ளிகள், மருக்கள், சொரசொரப்பான முதலை அல்லது மீன் செதில் போன்ற தோல், நிறம் மாறுதல், முகப்பரு, கால் ஆணி, போன்ற பாதிப்புகளுக்கான சிகிச்சைகள் அனைத்திற்கும், தோல் நோய் நிபுணர் ஆலோசனை தருவார்.

  ஸ்கேன் சிடி ஸ்கேன்
  சிடி ஸ்கேன் என்பது கம்ப்யூடட் டோமோகிராபி என்பதன் சுருக்கம். முப்பரிமாணம் உள்ள உறுப்பைப் பல கோணங்களிலும் படம் எடுத்து, அதை ஒருங்கிணைத்து, இரு பரிமாணப் படங்களாகத் தருவதுதான் சிடி ஸ்கேன் செய்யும் பணி.
  மென்மையான திசுக்கள், இடுப்புப் பகுதி, ரத்தக் குழாய்கள், நுரையீரல், வயிறு, எலும்புகள் மற்றும் மூளை போன்ற பகுதிகளில், அதிக அளவு விவரங்கள் தேவைப்படும் சமயத்தில், சிடி ஸ்கேன் பயன்படுத்தப்படுகிறது.
  பலவகை புற்றுநோய்களையும், கட்டிகளையும் கண்டறிவதற்கு ஸ்கேன் பேருதவியாக இருக்கும். ஒரு கட்டியின் துல்லியமான அளவு மற்றும் இருப்பிடம், அது எந்த அளவுக்கு அருகில் இருக்கும் திசுக்களைப் பாதித்திருக்கிறது என்பன போன்ற விவரங்கள் சிடி ஸ்கேன் மூலம் தெரியும்.
  உள்உறுப்புகள் மற்றும் ரத்தக் குழாய்களில் வீக்கமோ அல்லது கட்டிகளோ இருப்பதையும் சிடி ஸ்கேன் காண்பிக்கும்.
  கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகங்களில் காயங்களோ, கட்டிகளோ இருந்தால் தெரிந்துவிடும். கதிரியக்கம் அளிக்க வேண்டிய இடத்தையும், பையாப்சி எனப்படும் திசு அகழ்வு செய்ய வேண்டிய இடத்தையும் துல்லியமாகக் காட்டிவிடும்.
  புற்றுநோய், நிமோனியா மற்றும் மூளையில் அடிபட்டு ரத்தக் கசிவு, உடைந்துபோன எலும்புகள் போன்றவற்றை ஆய்வு செய்ய சிடி ஸ்கேன் சிறந்தது.
  எலும்பு நோய்கள், எலும்பு அடர்த்தி, மற்றும் முதுகெலும்பின் தன்மை ஆகியன தெரியவரும். பக்கவாதம், சிறுநீரகச் செயல் இழப்பு, போன்றவற்றுக்குக் காரணமான குறைபாடுள்ள ரத்தக் குழாய்களின் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். 3. #13
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: மாஸ்டர் ஹெல்த் செக்கப் - Master Health Checkup

  எம்.ஆர்.ஐ ஸ்கேன்
  எம்.ஆர்.ஐ ஸ்கேன் என்பது மேக்னடிக் ரிசோனன்ஸ் இமேஜிங் என்பதன் சுருக்கம். இதுவும் சிடி ஸ்கேன் போன்றதுதான் என்றாலும், சில வேறுபாடுகள் உள்ளன.
  எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் காந்தமும் ரேடியோ அலைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
  எலும்புகளையும் தசைகளையும் இணைக்கும் நாண்கள் எம்.ஆர்.ஐ.ஸ்கேனில்தான் தெரியும்.
  முதுகுத் தண்டுவட ஆய்வு, மற்றும் மூளைக்கட்டி போன்றவற்றிற்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சிறந்தது.
  பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி பெட் ஸ்கேன் என்று அழைக்கப்படும் இந்தப் பரிசோதனை முறையில் பாதிப்பு இல்லாத சிறிய அளவில் கதிர்வீச்சை வெளியிடும் பொருள் உடலின் உள்ளே செலுத்தப்படும். இந்த கதிர்வீச்சானது எஃப்.டி.ஜி என்ற ஒரு வகையான சர்க்கரை.
  உடலில் செல்கள் இயங்க சர்க்கரைத் தேவை. புற்றுநோய் உள்ளிட்ட உடலின் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு சர்க்கரையின் தேவை இயல்பைவிட மிக அதிகமாக இருக்கும்.
  இப்படி பாதிப்பு உள்ள இடங்களில் இந்த சர்க்கரையானது ஒன்றுசேர்ந்து கதிர்வீச்சை வெளியிடும். அதை கம்ப்யூட்டர் உதவியுடன் வரைபடம் ஒன்றைத் தயாரித்து எந்த இடத்தில் பாதிப்பு உள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்டறியலாம்.
  இந்தக் கருவியின் மூலம் புற்றுநோய் பாதிப்பை மட்டுமின்றி, உறுப்புக்களின் தோற்றம், அவற்றின் செயல்பாடு, ரத்த ஓட்டம், ஆக்சிஜன் பயன்பாடு, சர்க்கரை பயன்பாடு உள்ளிட்டவற்றையும் கண்டறியலாம்.
  உடலினுள் செலுத்தப்பட்ட கதிர்வீச்சு வெளியிடும் சர்க்கரையானது ஒன்றரை மணி நேரத்தில் செயல் இழந்துவிடும். 12 மணி நேரத்தில் இது உடலில் இருந்து வெளியேறிவிடும்.
  கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், குழந்தைகள் தவிர்த்து யாருக்கு வேண்டுமானாலும் இந்த ஸ்கேன் செய்யலாம்


 4. #14
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: மாஸ்டர் ஹெல்த் செக்கப் - Master Health Checkup

  புற்றுநோய் கண்டறியும் ரத்தப் பரிசோதனை
  ஒரே ஒரு துளி (3மி.லி.) ரத்தம் போதும். அதைக்கொண்டு கர்ப்பபை புற்றுநோய், கருமுட்டை, பெருங்குடல், கணையம், பித்தப்பை, கல்லீரல், தைராய்டு, ரத்தம், ப்ராஸ்டேட், மார்பகம், எலும்பு, வயிறு, சிறுநீரகம், ரத்தக் குழாய் உள்ளிட்ட 25 வகையான புற்றுநோய்கள் ஒருவருக்கு உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும்.
  புற்றுநோய் மார்க்கர் என்று ஒன்று உள்ளது. பிராஸ்டேட் புற்றுநோய் உள்ளதா என கண்டறிய பி.எஸ்.ஏ என்ற மார்க்கர் உள்ளது. பொதுவாக ரத்தப் பரிசோதனையில் இதன் அளவு 5க்கு கீழ் இருக்க வேண்டும். ஆனால் ஆறுக்கு மேல் சென்றால், ஏதோ ஒரு பிரச்னை உள்ளது என்று அர்த்தம்.
  ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு, நோய்த் தொற்று காரணமாகவும் இந்த அளவு அதிகரிக்கலாம். எனவே, ஆன்டிபயாட்டிக் கொடுத்து மீண்டும் பரிசோதனை செய்யப்படும். இப்படி ஆரம்ப நிலையிலேயே பிரச்னையைக் கண்டறிவதன் மூலம் மிகப்பெரிய பாதிப்புகளில் இருந்து தப்பலாம்.
  கருமுட்டைக்கு சிஏ125, பெருங்குடலுக்கு சி.ஈ.ஏ, வயிறுக்கு சி.ஏ72.4 என்று மார்க்கர்கள் உள்ளன. இவற்றைக்கொண்டு புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதை எளிதில் கண்டறிந்துவிடலாம். அப்படியே புற்றுநோய் இருப்பது தெரியவந்தால் அதை உறுதிப்படுத்த, மேற்கொண்டு பரிசோதனைகளுக்கு பரிந்துரைக்கப்படும்.


 5. #15
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: மாஸ்டர் ஹெல்த் செக்கப் - Master Health Checkup

  மகளிருக்கான சிறப்புப் பரிசோதனை பேப் பரிசோதனைகள்

  ஓரிரு நிமிடங்களில் பெண் உறுப்பு மற்றும் கர்ப்பப்பையின் திசுக்களைச் சேகரித்து ஆய்வு நடைபெறும்.
  பெண்களுக்கு வரக்கூடிய கர்ப்பப்பைப் புற்றுநோய் மற்றும் இதர நோய்த் தொற்றுகளின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறியலாம்.
  21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுதோறும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது.

  மேம்மோகிராம்


  பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா எனக் கண்டறியும் பரிசோதனை இது. மார்பகத்தை எக்ஸ்ரே எடுத்துப் பரிசோதிப்பார்கள். வலி இருக்காது.
  40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுதோறும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது. இப்படிப் பரிசோதித்துக்கொள்ளும் பெண்களில் சுமார் 10% பேருக்குத்தான் மேல்சிகிச்சை தேவைப்படும். அதிலும் மிகச் சிலருக்குத்தான் மார்பகப் புற்றுநோய் இருக்கும். மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்துவது எளிது.

  கவனிக்க...
  அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்த பிறகு ஒரு பொது மருத்துவ நிபுணர் உங்களைப் பரிசோதித்து தேவைப்படும் ஆலோசனைகளை வழங்குவார்.
  உணவு ஆலோசகரின் பங்கு முழு உடல் பரிசோதனையில் மிகவும் முக்கியமானது. அநேகமாக எல்லோரும் அவரின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டியிருக்கும்.

  முழு உடல் பரிசோதனை மூளைக்கு இல்லையா?
  முழு உடல் பரிசோதனையில், எல்லாப் பரிசோதனைகளும் செய்கிறார்கள். ஆனால், மூளைப் பரிசோதனை மட்டும் ஏன் செய்வதில்லை? என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழதான் செய்யும்.
  ''மூளை நன்கு செயல்படுபவர்கள் மட்டும்தான் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வார்கள்.'' என்றார் டாக்டர்.
  மருத்துவர் சொல்வதுபோல், எல்லோருமே சிந்தித்து செயல்படவேண்டிய முக்கியமான விஷயம் இது. நிச்சயம் ஆரோக்கியம் நம்மை அரவணைக்கும். நோய் வருமுன் காப்போம். செலவைக் குறைப்போம்.

  நன்றி டாக்டர் விகடன்

  Last edited by chan; 10th Apr 2015 at 01:47 PM.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter