காரச் சிகிச்சைகாரம் என்ற சுவை நாக்கில் பட்டால் நாக்குக் காற்றுப் பிரணனாக மாற்றி உடல் முழுவதும் பரவச் செய்கிறது, காற்றுப் பிராணன் மூலமாக வேலை செய்யும் உறுப்புகள் நுரையீரல், பெருங்குடல். இதன் வெளி உறுப்பு மூக்கு. இதன் உணர்ச்சி துக்கம்.


மூக்கும் நுரையீரலும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருக்கும். மூக்கைப் பெரிதுபடுத்திப் பார்த்தால் நுரையீரல் போலவும் நுரையீரலைச் சிறிது படுத்தி பார்த்தால் மூக்கு போலவும் தோன்றும் மூக்குக்கும் நுரையீரலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது, அதே போல் பெருங்குடலுக்கும் நுரையீரலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. மலச்சிக்கல் ஒருவருக்கு இருக்குமானால் அவரின் நுரையீரலில் குறை உள்ளது என்று பொருள்.

அதாவது அவர் சுவாசிக்கும் காற்றில் குறை உள்ளது என்று அர்த்தம். நுரையீரல் கெட்டுப்போனால் மட்டுமே மலச்சிக்கல் வரும், அதே போல மலச்சிக்கல் யார் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆஸ்துமா, வீசிங், நெஞ்சுசளி போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும், இப்படிமூக்கிற்கும், நுரையீரலுக்கும், பெருங்குடலுக்கும் தொடர்புள்ளது. எனவே ஆதுமா நோயாளிகள் மலச்சிக்கலை சரி செய்வதன் மூலமாக ஆஸ்துமாவை குணப்படுத்தலாம் மலச்சிக்கல் நோயாளிகள் நுரையீரலுக்கு சரியான காற்றைக் கொடுப்பதன் மூலமாக மலச்சிக்கலை குணப்படுத்தாலம்.


துக்கமான செய்திகளை நாம் கேட்கும் பொழுது துக்கத்தில் ஒரு நிமிடம் மூச்சு பேச்சு இல்லாமல் உறைந்து நின்று விட்டேன் என்று கூறுவோம். ஏனென்றால் துக்கம் என்ற உணர்ச்சி உடலிலுள்ள காற்றுப் பிராணனை அதிகமாகச் சாப்பிட்டுத் தீர்த்துவிடும். உடலில் காற்றுப் பிராணனில் ஏற்படும் குறைதான் ஒரு நிமிடம் மூச்சு பேச்சு இல்லாமல் நாம் அதிர்ச்சியில் இருப்பது. சிலருக்குத் தங்களுடைய நெருங்கிய உறவினர்களோ. நண்பர்களோ இறந்து விட்டால் அந்தத் துக்கத்தின் காரணமாக இந்த விஷயத்தையே நினைத்து நினைத்து துக்கப்படும் பொழுது அவர்களுக்கு ஆஸ்துமா, வீசிங் நோய்கள் சீக்கிரமாக வந்துவிடும்.


எனவே காரத்திற்கும், காற்றுப் பிராணனுக்கும், நுரையீரலுக்கும், பெருங்குடலுக்கும், துக்கத்திற்கும் சம்பந்தம் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சம்பந்தங்களை புரிந்து கொண்ட ஒரு மருத்துவரால் தான் இந்த உறுப்புகளில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும். இது போல உறுப்புகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் சம்பந்தம் உள்ளது என்ற விஷயம் தெரியாத மருத்துவர்கள் பல வருடங்களாக மருந்து மாத்திரை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள் ஆனால் எந்த நோயும் குணமாகாது,

ஆஸ்துமா நோயாளிகள் சில சமயங்களில் அதிகப்படியான மூச்சு வாங்கும் பொழுது காரமான ஊறுகாய் . குறுமிளகு போன்றவற்றைச் சாப்பிடுவதால் உடனே அவர்களுக்கு அந்த ஆ துமா தீவிரம் குறையும், ஆனால் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கும் காரமான பொருட்களைச் சாப்பிடகூடாது என்று கூறுவார்கள், கண்டிப்பாக இது ஒரு தவறான அறிவுரை. யார் நுரையீரலுக்கு அதிகமாக வேலை கொடுக்கிறார்களோ,

அவர்களுக்குக் காரம் என்ற பிராணன் தேவைப்படும்.
பேச்சாளர்கள். சொற் பொழிவாளர்கள், பேராசிரியர்கள், வாத்தியார்கள், போன்றவர்கள் அதிகமாகப் பேசிக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு நுரையீரலில் தான் அதிக வேலை, எனவே நுரையீரல் உடலிலுள்ள காற்றுப் பிராணனை தீர்த்து விடும். எனவே அவர்களது நாக்கு என்ற மருத்துவர் காரம் என்ற சுவை மூலமாகக் காற்றுப் பிராணனை எடுப்பதற்காக அதிகமாக காரத்தைச் சாப்பிட தூண்டுவார். எனவே தயவு செய்து உங்கள் நாக்கு எவ்வளவு காரம் கேட்டாலும் உங்கள் மனதிற்கு பிடித்திருக்கிறதோ அந்த அளவு காரத்தை தயவு செய்து சாப்பிடுங்கள்.


மலச் சிக்கலுக்கும் நுரையீரல் சம்பந்த பட்ட ஆஸ்துமா, வீசிங், நோய்களுக்கும் பாட்டி வைத்தியத்தில் சின்ன வெங்காயம், கருப்பு மிளகு, துளசி இலை, கற்பூர வள்ளி இலை, இஞ்சிச் சாறு போன்றவற்றைக் கொடுப்பது வழக்கம். இவை அனைத்தும் காரம் உள்ள பொருள்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதற்காக ஆஸ்துமா மலச்சிக்கல் உள்ளவர்கள் அளவுக்கு அதிக காரம் சாப்பிட்டாலும் நோய் பெரிதாகும்.

எனவே அளவாக சாப்பிடவேண்டும் அதற்கு தான் நாம் ஒரு அளவை கொடுத்துள்ளோம் உங்கள் நாக்கு எவ்வளவு காரம் தேவைப் படுகிறது என்று கூறுகிறதோ அந்தக் காரம் உங்களுக்கு அளவான காரம், எனவே ஒரே வீட்டில் ஒவ்வொருவருக்கும் வேறு வேறு காரம் தேவைப்படும். எனவே காரம் சாப்பிடுபவர்கள் அனைவருக்கும் நோய் வரும் என்ற எண்ணத்தை தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள் அளவாகச் சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்!!

Healer's Basker