Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree23Likes

How to Protect the Bones?-எலும்பைக் காக்க எளிய வழிகள்!


Discussions on "How to Protect the Bones?-எலும்பைக் காக்க எளிய வழிகள்!" in "Health" forum.


  1. #11
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: How to Protect the Bones?-எலும்பைக் காக்க எளிய வழிகள்!

    ஆஸ்டியோபொரோசிஸ்

    பொதுவாக, 30 வயது வரையில் மனிதனுக்கு எலும்பு வளரும். அதன் பின்னர், வளர்வது நின்று தேய்மானம் ஆரம்பிக்கும். எனவே 30 வயது வரை உள்ளவர்களுக்கு, ஏதேனும் வளர்சிதை மாற்றக்



    குறைபாடுகள் இருந்தாலன்றி, ஆஸ்டியோபொரோசிஸ் வருவதற்கான வாய்ப்பு இல்லை. 30 வயதுக்கு மேற்பட்டவர்களில், ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள். காரணம், எலும்பில் படியும் கால்சியத்தின் அளவும், எலும்பின் அடர்த்தியும் ஹார்மோன்கள் சம்பந்தப்பட்டவை. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனும் ஆண்களுக்கு டெஸ்டிஸ்ட்ரோன் ஹார்மோனும்தான் எலும்பில் கால்சியம் படியும் பணியை சீராக இயக்குகின்றன.

    பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு, ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால், அவர்களின் உடலில் கால்சியம் உற்பத்தி குறைகிறது. இதனால், எலும்பில் படியும் கால்சியத்தின் அளவு குறைந்து, எலும்பின் அடர்த்தியும் குறைகிறது. மேல்நாடுகளில், மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஆண்டுதோறும் டெக்ஸா ஸ்கேன் இலவசமாகவே எடுக்கப்படுகிறது. எனவே, மெனோபாஸ் ஆன பெண்கள், தங்களின் எலும்பு அடர்த்தி மற்றும் ரத்தத்தில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி அளவுகளைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.



    தவிர்க்கும் வழிகள்:

    பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களும், கால்சியம் குறைவதால் ஆஸ்டியோபொரோசிஸ் நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களின் எலும்பும் தசைகளும் வலுவானதாக இருக்காது. இவர்கள் நடக்கும்போதோ, நிற்கும்போதோ, பலமின்றி அடிக்கடி கீழே விழுவார்கள். கீழே விழுந்தால், கண்டிப்பாக எலும்பு முறிந்துவிடும். எனவே, இவர்கள் கீழே விழாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    கட்டிலைச் சுற்றி 'பார்’ போல கம்பிகள் போடுதல், வாக்கிங் ஸ்டிக் உபயோகித்தல், வழுக்காத டைல்ஸ் பதித்தல், தரையில் கனமான விரிப்பை (மேட்) விரித்துவைத்தல், பாத்ரூம், டாய்லெட்டில் பக்கவாட்டுச் சுவர்களில் கம்பிகள் வைத்தல் போன்ற செயல்களால் விழுவதைத் தடுக்கலாம்.

    கீழே விழுந்தால், முதலில் பாதிக்கப்படுவது, தண்டுவட எலும்புகள், இடுப்பு எலும்பு மற்றும் கை, கால்களில் உள்ள நீளமான எலும்புகள் மற்றும் மணிக்கட்டு எலும்பு ஆகியவை.

    சிகிச்சை முறைகள்:
    ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் அனைத்துமே வருமுன் தடுக்கக் கூடியவை. ஆனால், வந்துவிட்டால், அதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு, இப்போது நவீன மருந்துகள் ஏராளமாக வந்துவிட்டன.

    மருந்தை ஆரம்பித்த 3 முதல் 6 வாரங்களுக்குள் நல்ல பலன் கிடைக்கும். கூடவே, ஊட்டச்சத்து மிக்க உணவும் அவசியம் தேவை. ஏற்கெனவே கூறியுள்ளது போல, பால் கண்டிப்பாக தினமும் அருந்தவேண்டும்.

    தானியங்கள் மற்றும் கீரை, புரோகோலி போன்ற பச்சை நிறக் காய்கறிகளையும் அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மீன் வகைகளில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிக அளவில் உள்ளன. அடிக்கடி உணவில் மீன் சேர்த்துக்கொள்ளலாம். இப்போது, 'ஃபோர்ட்டிஃபைடு’ செய்யப்பட்ட பழச்சாறு மற்றும் சாக்லேட் வகைகள் கிடைக்கின்றன.



    Sponsored Links
    Last edited by chan; 13th Apr 2015 at 03:19 PM.
    jv_66 likes this.

  2. #12
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: How to Protect the Bones?-எலும்பைக் காக்க எளிய வழிகள்!

    உணவுகள்:

    எலும்புகளை ஆரோக்கியமாகப் பராமரிப்பதில், உணவுக்கும் உடற்பயிற்சிக்கும்தான் முக்கியமான பங்கு உண்டு. கொழுப்புச் சத்துள்ள, டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகள், செயற்கை நிறமூட்டிகள், சுவைகள் கலந்த உணவுகள் போன்றவற்றை முடிந்தவரை தவிர்க்கவும்.

    பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கும் நாட்டுக் காய்கறிகள் எல்லாமே, எலும்பு, மூட்டு ஆரோக்கியத்துக்கு நல்லது.
    நிலத்துக்குக் கீழே விளையும் கிழங்கு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.
    மாவுச்சத்தையும் கொழுப்புச் சத்தையும் (முக்கியமாக, எண்ணெய்ப் பதார்த்தங்கள்) தவிர்த்து, புரதச்சத்தை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    முருங்கைக் கீரையும், முருங்கைக்காயும் மிகவும் நல்லது. அடிக்கடி உணவில் சேர்க்கலாம்.
    பால், பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற கொட்டைப் பருப்பு வகைகள், முட்டை போன்ற உணவுகள் எலும்புக்கு வலு சேர்க்கும்.

    எலும்பு உறுதிக்கு, வெறும் உணவுப் பழக்கம் மட்டுமே போதாது. தினமும் உடற்பயிற்சி செய்தல் மிக அவசியம். கால் மணி நேரம் முதல் அரை மணி நேரம் வரையாவது கண்டிப்பாகச் சில பயிற்சிகள் செய்ய வேண்டும்.

    எலும்பு ஆரோக்கியத்துக்கு உணவு எவ்வளவு முக்கியமோ, உடற்பயிற்சியும் அவ்வளவு முக்கியம். நமது உடலில் தினசரி நாம் அதிகமாக உபயோகப்படுத்தும்,
    எலும்பு மற்றும் மூட்டுக்களுக்கான சில எளிய உடற்பயிற்சிகளை டாக்டர் ராஜா விளக்குகிறார். எல்லாப் பயிற்சிகளையுமே தினமும் காலை அல்லது மாலையில் 5 முதல் 10 முறை செய்யலாம். வெறும் வயிற்றில் செய்வது நல்லது. பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன்பு, எளிய மூச்சுப் பயிற்சி செய்து 'ரிலாக்ஸ்’ செய்தபிறகு செய்யலாம்.


    jv_66 and fatima15 like this.

  3. #13
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    re: How to Protect the Bones?-எலும்பைக் காக்க எளிய வழிகள்!

    கழுத்தில் வரும் நோய்கள்
    கழுத்து எலும்புத் தேய்மானம்
    கழுத்துத் தசை இறுகுதல்
    கழுத்தில் வலி
    இவற்றிலிருந்து நிவாரணம் பெறக் கழுத்துப் பயிற்சிகள்...


    jv_66 likes this.

  4. #14
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: How to Protect the Bones?-எலும்பைக் காக்க எளிய வழிகள்!








    Last edited by chan; 13th Apr 2015 at 03:23 PM.
    jv_66 and fatima15 like this.

  5. #15
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: How to Protect the Bones?-எலும்பைக் காக்க எளிய வழிகள்!



    fatima15 likes this.

  6. #16
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: How to Protect the Bones?-எலும்பைக் காக்க எளிய வழிகள்!




  7. #17
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: How to Protect the Bones?-எலும்பைக் காக்க எளிய வழிகள்!




  8. #18
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: How to Protect the Bones?-எலும்பைக் காக்க எளிய வழிகள்!




  9. #19
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: How to Protect the Bones?-எலும்பைக் காக்க எளிய வழிகள்!

    கெண்டைக்கால் வளைக்கும் பயிற்சி:
    மல்லாந்து படுத்து, ஒரு காலை லேசாக முட்டியை மடக்கி வைத்துக்கொள்ளவும்.
    ஒரு துண்டைக்கொண்டு பாதத்தை மேலே இழுக்கவும். 10 விநாடிகள் அதே நிலையில் இருக்கவும்

    .


    இந்தப் பயிற்சிகள் மட்டுமின்றி, சாதாரணமாகவே கைகளைச் சுழற்றுதல், கைகளைத் தூக்கி இறக்குதல், விரல்களைப் பிரித்து மூடுதல், தோள்பட்டையைச் சுழற்றுதல், கால்களைத் தூக்கி வைத்திருந்து கீழே வைத்தல், கால் விரல்களை மடக்கி நீட்டுதல், விரல்களால் ஒரு துணியைப் பற்றி எடுத்து, மீண்டும் விடுதல்... இப்படி சிறுசிறு பயிற்சிகளை, அன்றாட வேலைகளுக்கு இடையில் செய்துகொள்வது, மூட்டு மற்றும் எலும்புகளுக்கான உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter