Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 1 Post By chan
  • 1 Post By saveetha1982

அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!


Discussions on "அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!

    அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!

    நம் உடம்பு ஒரு வித்தியாசமான அமைப்புடையது. எங்கோ ஓரிடத்தில் நோய் இருக்கும். அதற்கான அறிகுறி எங்கேயோ தென்படும். நம் உடம்பில் மறைந்திருக்கும் அந்த மாதிரியான அறிகுறிகள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.



    *உங்கள் சருமம் சுத்தமாகவும் அரிப்பில்லாமலும் இருக்கலாம். ஆனால், உங்களுக்கு பாதவலியோ, குதிகால் வலியோ இருக்கும் பட்சத்தில் அது சோரியாஸிஸ் வாதமாக இருக்கலாம். கை, கால் விரல்களில் ஏற்படும் வீக்கம் சோரியாஸிஸ் வாதத்தின் அறிகுறியாக இருக்கலாம் என்று தேசிய சோரியாஸிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    *அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறதா? அது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம். சர்க்கரை நோயாளிகளின் உடம்பில் இருக்கும் ரத்த சர்க்கரையை நிர்வகிக்க கிட்னி போராட்டம் நடத்தும் போது அதை சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடுகிறது. அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி இருக்கிறது.

    *ஐஸ்கட்டிகளை பார்த்தால் உங்களுக்கு வாய் ஊறுகிறதா? உங்களுக்கு ரத்த சோகையாக இருக்கலாம் என அமெரிக்க மருத்துவ இதழின் ஆய்வு தெரிவித்துள்ளது. தொண்டைவலி மற்றும் வீக்கம் கூட ரத்தசோகையின் அறிகுறியாக இருக்கலாம்.

    *நாக்கில் உலக வரைபடம் போல கண்ட வடிவில் வெள்ளை திட்டுகள் இருந்தால் அது சீலீயாக் நோயின் அறிகுறியாக இருக்கலாம். அதனால் உங்கள் நாக்கில் ஏற்படும் இந்த வித்தியாசத்தை உதாசீனப்படுத்தாதீர்கள் என்கிறது இத்தாலியன் ஆய்வு ஒன்று.

    *48 மணி நேரத்துக்கு பிறகும் உங்கள் விக்கல் நிற்காமல் தொடருமானால் கேன்சரின் அறிகுறியாக இருக்கலாம். நரம்பு மண்டலம் தான் விக்கலை கட்டுப்படுத்தும். கேன்சர் அதனை பாதிக்கும் போது இத்தகைய பிரச்னை ஏற்படும்.

    *குளிர்காலத்தில் குளிர்ச்சியை அடிக்கடி உணர்வீர்கள். கடும் வெயில் காலத்தில் உங்கள் உடம்பில் குளிரும் தன்மையை உணர்ந்தால் அது தைராய்டின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறது தெற்கு இல்லினாயிஸ் பல்கலைக்கழகம்.

    *சருமத்துக்குக் கீழே ஏற்படும் கட்டிகள் ஆர்த்ரைட்டிஸின் முதல் அறிகுறியாக இருக்கலாம் என்கிறது ஆய்வு ஒன்று. திசுக்களால் உருவாகி வால்நட் அளவுக்கு பெரிய அளவில் உங்கள் கை, கால் முட்டிகளுக்கு அருகில் உருவாகி இருந்தால் அலெர்ட் ஆகுங்கள்.


    Similar Threads:

    Sponsored Links
    saveetha1982 likes this.

  2. #2
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!

    லட்சுமி... நல்ல பகிர்வு... நோய் பற்றி அறிகுறிகள் பதிவுக்கு நன்றி... இன்னொரு விஷயம் சொல்லணும்ப்பா... நம்மோட உடம்புல எங்கயோ ஏதோ ஒண்ணு நடக்கறதுக்கு அறிகுறி காய்ச்சல் மூலமா காட்டும்ன்னு கேள்வி பட்டிருக்கேன்... காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் இருந்தால் உடம்பை மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெறுவது நலம்...

    அதை உணர்வுபூர்வமா நான் உணர்ந்தேன்... முதல் டைபாய்டு காய்ச்சல் வந்துச்சு... அதுக்கு சிகிச்சை எடுத்தும் கூட காய்ச்சல் குணமாகவே இல்லை... அதுக்கு பின்னாடி முதுகு வலி வந்துச்சு, மூச்சிறைப்பு இருந்தது... மருத்துவரிடம் சென்றால் நுரையிரலில் நீர் சேர்ந்திருக்கிறது என்றார்... உடனே நீரை வெளியில் எடுத்தனர் அதன் பின்னே காய்ச்சல் நின்றது... கவனம் தோழிகளே வெறும் காய்ச்சல் தானே என்று சாதாரணமாக இருந்து விட வேண்டாம்... இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடருமானால் மருத்துவரை அணுகவும்...


    chan likes this.
    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter