மண்பாண்டத்தின் மகிமையைப் பற்றி தெரியமா?

மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது.
உணவில் சுவையைக் கூட்டக்கூடியது.

நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும்.
உணவும் எளிதில் செரிமானம் ஆகும்.

மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும்.
தண்ணீர் மிதமான குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும்.

இவ்வளவு அருமை, பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான நமது வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை என்பது வேதனை இல்லையா?

வெயிலுக்கு இதமா மண்பானை தண்ணீர் குடிக்கலாமே!

வெயிலோட தாக்கம் நாளுக்குநாள் அதிகரிச்சுக்கிடேதான் இருக்கு.
இந்த வெயிலில் இருந்து தப்பிக்க ஜூஸ், பழங்கள், நுங்கு, பதனீர், தர்பூசணி, வெள்ளரின்னு குளிர்ச்சியானத சாப்பிட்டுகிட்டுதான் இருக்கோம்.
என்னதான் சாப்பிட்டாலும், குடிச்சாலும் இந்த வெயிலுக்கு தண்ணீர்தான் அதிகமா குடிக்க வேண்டியிருக்கு.

இந்த நேரத்தில தண்ணீர் குடிக்கிறதும் உடலுக்கு ரொம்ப நல்லது.
வெயில் காலத்துல தண்ணீர ஜில்லுன்னு குடிக்கணும்தான் ஆசப்படுவோம்.
அதனால பிரிட்ஜ்ல வைச்சிருக்கிற தண்ணீர், ஜில்லுன்னு வாட்டர் பாக்கெட் போன்றவற்ற குடிக்கிறோம்.

இது அவ்வளவு நல்லது கிடையாது. பிரிட்ஜ்ல வைச்சிருக்கிற அதிக ஜில் தண்ணிய குடிக்கிறதால ஜலதோஷம் பிடிக்கவும், தலைவலி வரவும் வாய்ப்பிருக்கு.

இதை தவிர்க்க இயற்கையா ஜில்லுன்னு இருக்கும் மண்பானை தண்ணீரை குடிக்கலாம்.

மண்பானை தண்ணீர் மிதமான குளிர்ச்சியுடனும், சுவையாகவும் இருக்கும்.
உடலுக்கும் நன்மை தரக்கூடியது. பல இடங்கள்ல குழாய் பொருத்திய மண்பானைகள் விற்கப்படுகின்றன.

இந்த மண்பானைகளை வாங்கி நாமும் பயன்பெறலாமே.

இது மட்டுமல்ல உடலுக்கு தேவையல்லாத கிருமிகளை கொன்று தண்ணிரை சுத்தமாக்கும் சக்தி மற்றும் தண்ணிரில் இல்லாத உடலுக்கு தேவையான மினரல்சை கொடுக்கும் சக்தி இந்த மண் பானைக்கு உண்டு


Similar Threads: