Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree15Likes
  • 3 Post By chan
  • 2 Post By sumitra
  • 4 Post By chan
  • 3 Post By Uma manoj
  • 2 Post By repplyuma
  • 1 Post By salma

Preventing food poisoning - ஃபுட் பாய்சனை தவிர்ப்பதற்கான 12 வழிகள


Discussions on "Preventing food poisoning - ஃபுட் பாய்சனை தவிர்ப்பதற்கான 12 வழிகள" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Preventing food poisoning - ஃபுட் பாய்சனை தவிர்ப்பதற்கான 12 வழிகள

    ஃபுட் பாய்சனை தவிர்ப்பதற்கான 12 வழிகள்..



    மாசுபட்ட உணவு உட்கொண்ட எல்லோருக்கும் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது. அதிலும் சில நேரங்களில் உண்ணும் உணவை உற்பத்தி செய்யும் பொழுது அல்லது செயலாக்கத்தின் பொழுது உணவானது தூய்மைக்கேடு அடைகிறது. இதனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உணவு நஞ்சாகிவிடுகிறது. மேலும் சிலருக்கு அரைகுறையாக சமைத்த, முறையாக சமைக்காத உணவினால் அல்லது உணவு பொருட்கள் போதுமான முறையில் சமைக்கப்படாததால் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது.

    இன்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஃபுட் பாய்சன் நடைபெறுவதற்கு காரணங்கள், முறையற்ற விதத்தில் உணவைத் தயாரிப்பது, சேமிப்பது மற்றும் சமைப்பதாகும். எனவே, உணவை சரியான முறையில் எவ்வாறு தயார் செய்வது, சமைப்பது மற்றும் சேமிப்பது என்பதை புரிந்து கொண்டால், ஃபுட் பாய்சன் என்னும் ஆபத்தை குறைக்க முடியும்.

    இப்போது ஃபுட் பாய்சனை தடுக்க உதவும் சில சிறந்த வழிகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பின்பற்றி ஃபுட் பாய்சனிலிருந்து விடைபெறுங்கள்.

    கைகளை சுத்தமாக வைக்கவும்
    எப்பொழுதும் உணவு தயாரிக்கும் முன்பு, வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சோப்பை கொண்டு கைகளை கழுவ வேண்டும்.

    சுத்தமான சமையலறை
    சமைக்கும் சமையலறை மற்றும் அதன் பாத்திரங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பாக்டீரியாக்கள் பரவாமல் பாதுகாக்கவும்
    சமைக்கப்படாத மற்றும் சமைத்த உணவிற்கு என்று தனித்தனி வெட்டும் பலகைகளைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் சமைக்கப்படாத உணவில் இருக்கும் பாக்டீரியாக்கள், சமைத்த உணவுப் பொருளைத் தாக்கி, பாக்டீரியாவை பரவச் செய்யும். எனவே இதில் அதிகம் கவனம் தேவை.

    சுத்தமான காய்கறி மற்றும் பழங்கள்
    பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்போ அல்லது அவற்றைக் கொண்டு வேறு ஏதாவது தயாரிப்பதற்கு முன்போ தண்ணீரில் கழுவ வேண்டும்.

    உறைந்த பொருள்களை தவிக்கவும்
    சமைப்பதற்கு முன்பு உணவுப் பொருளை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், அவற்றின் உறை நிலையை முழுமையாக குறைக்க வேண்டும்.

    செல்லப்பிராணிகள்
    உண்ணும் உணவை செல்லப்பிராணிகளிடமிருந்து சற்று விலக்கியே வைத்திருக்க வேண்டும்.

    நன்கு சமைத்த உணவு
    உணவுகள் முற்றிலும் சமைக்கப்பட்டதா? என்பதை உறுதி செய்த பின்னர், உணவை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.

    உணவில் கவனம் தேவை
    சமைத்த உணவிற்கும், சமைக்கப்படாத உணவிற்கும் இடையில் தொடர்பை தவிர்க்கவும். அதாவது பச்சை இறைச்சி, கோழி மற்றும் மீனை குளிர்சாதன பெட்டியின் கீழ் பகுதியிலும், சமைத்த உணவை மேல் பகுதியிலும் வைக்கவும்.

    சரியாக பராமரிக்கவும்
    உணவுப் பொருள் விரைவில் கெட்டுப் போகின்றதாக இருந்தால், அவற்றை 5°C அல்லது அதற்கும் குறைவான வெப்பநிலையில் வைத்து பராமரிக்க வேண்டும்.

    சுத்தமான இடத்தில் உணவுகளை வைக்கவும்
    பெட்டியில் அடைத்த உணவுப் பொருட்களை சுத்தமான அல்லது குளிர்ந்த இடத்தில் வைக்கவும்.

    துர்நாற்ற உணவுகளை தவிர்க்கவும்
    உணவில் துர்நாற்றம் அல்லது பூஞ்சை இருந்தால், அந்த உணவை அறவே தவிர்க்க வேண்டும்.

    தேதி பார்க்கவும்
    எப்பொழுதும் உணவு பொருளை வாங்குவதற்கு முன்பும், அதன் உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதியை சரிபார்க்கவும்.


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 29th Apr 2015 at 02:50 PM.
    salma, repplyuma and sumitra like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Preventing food poisoning - ஃபுட் பாய்சனை தவிர்ப்பதற்கான 12 வழிக&#

    really great collection of various methods to get ourselves saved from adulteration of food articles! thank you @chan

    salma and chan like this.

  3. #3
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Preventing food poisoning - ஃபுட் பாய்சனை தவிர்ப்பதற்கான 12 வழிக&a

    ஃபுட் பாய்சன் ஆனா கவலைப் படாதீங்க! வீட்ல மருந்திருக்கு

    பண்டிகை என்றாலே பலகாரம் அதிகம் சாப்பிடுவார்கள். அதுவும், நெய், எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் வயிறு பிரச்சினையாகிவிடும். அதேபோல் ஒன்றுக்கு ஒன்று ஒத்துக்கொள்ளாத பொருட்களை சேர்த்து சாப்பிடுவதன் மூலமும் ஒவ்வாமை ஏற்பட்டு சிலருக்கு ஃபுட் பாய்சன் ஆகிவிடும் வாய்ப்பும் உள்ளது.

    இதனால் பண்டிகை நாளும் அதுவுமாக வயிற்றுவலி, டயாரியா என்று படுத்துக்கொள்வார்கள். மருத்துவமனைக்கு ஓடினால் கையில் இருக்கும் பணத்தை பெரிதாக கறந்துவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார்கள். எனவே நாம் உண்ட உணவு ஜீரணமாகாவிட்டாலோ, விஷமாகிவிட்டாலோ வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே நிவாரணம் தேடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

    இஞ்சியிருக்க பயமேன்


    உணவில் ருசியை அதிகரிக்க அன்றாட சமையலில் இஞ்சி பயன்படுத்துகிறோம். இது மிகச்சிறந்த விஷ முறிவு மருந்து. இது அனைத்து வகையான ஜீரணக்கோளாறுகளையும் சரி செய்யும். ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன் சிறிதளவு இஞ்சிச் சாறு கலந்து குடித்தால் எந்த விஷமாக இருந்தாலும் ஓடிவிடும். வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.

    அகத்தை சீராக்கும் சீரகம்

    உடலின் உள்ளே உள்ள ரத்தத்தை சுத்தம் செய்யும் என்பதனால்தான் இதற்கு சீர் அகம் என்று கூறுகின்றனர். எனவே பாத்திரத்தில் மூன்று டம்ளர் தண்ணீரை நன்கு காய்ச்சி அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சீரகத்தைப் போட்டு மூடிவைத்தால் அதில் சாறு இறங்கிவிடும். அந்த தண்ணீரை பருகினால் வயிறு உபாதைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

    தெய்வீக மூலிகை துளசி

    வயிறு மற்றும் தொண்டை தொடர்பான தொற்றுக்களுக்கு துளசி இலை சிறந்த மருந்தாக செயல்படுகிறது. துளசி இலையை நன்கு அரைத்து அந்த சாறில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் அடுத்த சில மணிநேரங்களில் வயிறு, தொண்டை தொடர்பான நோய்கள் குணமடையும்.

    வாழைப்பழம், ஆப்பிள்

    பொட்டாசியம் சத்து நிறைந்த வாழைப்பழம் மிகச்சிறந்த விஷ முறிவு மருந்தாக செயல்படுகிறது. வாழைப்பழத்தை நன்கு அடித்து கூழ் போல மாற்றி ஷேக் செய்து சாப்பிடலாம்.இதேபோல் ஆப்பிள் சிறந்த விஷ முறிவு பழமாகும். இது நெஞ்செறிச்சல் இருந்தாலும் நீக்கும். ஆப்பிளில் உள்ள சத்தான என்சைம்கள் டயாரியாவை உண்டாக்கும் பாக்டீரியாவை அழித்து வயிறு வலியை குணமாக்கும்.

    விஷத்தை முறிக்கும் எலுமிச்சை
    எலுமிச்சையில் உள்ள அமிலம் விஷ உணவில் இருந்த கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டவை. எனவே ஃபுட் பாய்சன் ஏற்பட்டு வயிறு வலியால் அவதிப்படுபவர்களுக்கு எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஜூஸ் குடிக்க தரலாம். லெமன் டீ குடிக்க கொடுத்தாலும் சிறந்த நிவாரணம் கிடைக்கும். இதேபோல் புதினா டீ தயாரித்து கொடுத்தாலும் வயிற்றினை சுத்தப்படுத்தி விஷத்தை முறித்துவிடும்.

    தண்ணீர் குடிங்க
    ஃபுட் பாய்சனால் டயாரியா ஏற்பட்டு உடம்பில் உள்ள நீர்ச்சத்து குறைந்து கொண்டே வரும். எனவே உடம்பின் நீர்ச்சத்தை தக்கவைக்க அவ்வப்போது தண்ணீர் குடிப்பது அவசியம். இதனால் விஷமும், பாக்டீரியாக்களும் விரைவில் வெளியேற்றப்படுவதோடு உடல் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும்.


  4. #4
    Uma manoj is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    5,416

    Re: Preventing food poisoning - ஃபுட் பாய்சனை தவிர்ப்பதற்கான 12 வழிக&a

    அருமையான மருத்துவ குறிப்புக்கள்..நன்றி தோழி...

    salma, repplyuma and chan like this.

  5. #5
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: Preventing food poisoning - ஃபுட் பாய்சனை தவிர்ப்பதற்கான 12 வழிக&a

    மிக உபயோகமான தாங்கவல்கள் Chan ..நன்றி ..

    salma and chan like this.
    - உமா உதய்

  6. #6
    salma's Avatar
    salma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    u.s
    Posts
    5,997

    Re: Preventing food poisoning - ஃபுட் பாய்சனை தவிர்ப்பதற்கான 12 வழிக&a

    Valuable Information Dear,.. Thanx Chan....

    chan likes this.
    Sal

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter