ஆரோக்கிய மூடநம்பிக்கைகள்


சி.டி. ஸ்கேனால் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் உள்ளனவா?
வாய்ப்புகள் நிறைய உள்ளன. இதயம் தொடர்பாகச் சி.டி. ஸ்கேன் பரிசோதனையை ஒரே ஒரு முறை செய்துகொண்ட 300 பெண்களில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளவராக உள்ளார். 600 ஆண்களில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பற்கள் வெண்மையாவதற்குச் சாப்பிட வேண்டிய உணவு வகைகள் எவை?
ஆப்பிள், பாதாம், முந்திரி போன்ற கொட்டைகள், பச்சைக் காய்கறிகள், காளான், ஸ்டிராபெர்ரி, வெங்காயம், சிட்ரஸ் பழங்கள் போன்றவை வாயிலுள்ள பாக்டீரியாக்களைக் குறைக்கின்றன. பற்களைக் கறையாக்குபவை வாயிலுள்ள பாக்டீரியாக்கள்தான்.

டயட் சோடா என்ற பெயரில் வரும் குளிர்பானங்கள் உண்மையில் உடல் எடையை அதிகப்படுத்தாதவையா?

அமெரிக்காவில் 80 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சாதாரணச் சோடா குளிர்பானங்களைவிட, டயட் சோடா பருகுவதால் உடல் எடை அதிகரிப்பதாகவே முடிவுகள் வெளியாகியுள்ளன.

பிரைட் ரைஸ் மற்றும் பிரெஞ்ச் பிரைஸுக்குத் தொட்டுக் கொள்ளப்படும் கெட்ச் அப் உடலுக்கு நல்லதா?
கெட்ச் அப்பில் சக்திவாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடண்டான லைக்கோபீன் உள்ளது. அதேநேரம் நாம் சாப்பிடும் கெட்ச் அப்பில் மூன்றில் ஒரு பங்கு பழச் சர்க்கரையும் (பிரக்டோஸ்), ஒரு டேபிள் ஸ்பூன் கெட்ச் அப்பில் 160 மில்லிகிராம் உப்பும் உள்ளன. அதனால் கெட்ச் அப்பில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது.

Similar Threads: