Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree21Likes
 • 8 Post By thenuraj
 • 4 Post By saveetha1982
 • 2 Post By lathabaiju
 • 1 Post By Priyathozhi
 • 1 Post By jv_66
 • 1 Post By riyaraj
 • 2 Post By thenuraj
 • 1 Post By thenuraj
 • 1 Post By srathi

ஹோட்டலில் சாப்பிட போறீங்களா....??-Read this before eating in the Hotels


Discussions on "ஹோட்டலில் சாப்பிட போறீங்களா....??-Read this before eating in the Hotels" in "Health" forum.


 1. #1
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

  ஹோட்டலில் சாப்பிட போறீங்களா....??-Read this before eating in the Hotels
  நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்...!


  இட்லி:
  **********

  பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க!  சோறு:
  **********

  தரமான சோறுன்னா, சோத்துப் பருக்கையை விரலில் வெச்சு மசிச்சா மை மாதிரி மசியணும். அப்பதான் அது வயித்துக்கு ஒண்ணும் செய்யாது. அப்படி இருந்தா கஸ்டமர்ஸ் நிறைய சாப்பிடுவாங்களே... அதுக்காகத்தான் பெரும்பாலான ஹோட்டல்ல முக்காப் பதத்துல சாதத்தை எடுத்துடுவாங்க. சாதம் பளிச்சுனு வெண்மையா இருக்கவும், லேட் ஆனாலும் காய்ஞ்சு போகாமல் இருக்கவும் சாதம் வேகும்போதே சுண்ணாம்புக் கல்லைத் துணியில் கட்டி சாதத்தில் போட்டுடுவாங்க. அன்லிமிட்டட்னு அகலமா போர்டுல எழுதி இருந்தாலும், இந்தச் சோற்றைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல நீங்க சாப்பிடவே முடியாது!  புரோட்டா:
  ****************

  பல ரோட்டுக் கடை ஹோட்டல்கள்ல மைதா மாவோட சோடா உப்பு கலந்து, அதுல கழிவு டால்டாவை ஒரு பங்கு மாவுக்குக் கால் பங்கு டால்டா கணக்குல (ஹோட்டலுக்குன்னே விக்கிற மலிவு விலை டால்டா!) கலந்து அடிச்சு அரை மணி நேரத்துல புரோட்டா சுடுவாங்க. புரோட்டா சும்மா பூ கணக்கா பொலபொலன்னு உதிரும். ஆனா, அத்தனையும் போங்கு புரோட்டா!  சால்னா :
  ***************
  சிக்கன் கடையில் பொதுவா நாம கொழுப்பு, ஈரல், குடல், தலை, தோல், இதெல்லாம் வாங்க மாட்டோம். அதேபோல மட்டன் கடையில குடலோட சேர்ந்து இருக்கிற ஒட்டுக்கொழுப்பு, ஒட்டுக்குடல் வாங்க மாட்டோம். இதை எல்லாம் தூக்கிப்போடாம ஓரமாக் குவிச்சுவெச்சிருப்பாங்க. பழக்கமான கடைக்காரரா இருந்தா விசாரிச்சுப் பாருங்க. 'ஹோட்டல்காரங்க மொத்தமா வாங்கிட்டுப் போயிடுவாங்கனு அவரும் யதார்த்தமா சொல்லிடுவார். அரைக் கிலோ கறியோட இதை எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாப் போட்டு தூக்கலா கறி மசாலா, மிளகாய்த் தூள், கொத்தமல்லித்தூள், கொஞ்சம் மரத்தூள் அல்லது குதிரை சாணத்தூள் கலந்து, அஞ்சு ஸ்பூன் அஜினாமோட்டா கலந்து கொதிக்கவெச்சா அரை அண்டா நிறைய திக்கான சால்னா ரெடி!
  ஒரு முக்கியமான எச்சரிக்கைங்க...
  ******************************************************

  தலையே போனாலும் சரி, (ரோட்டுக்)கடைகள்ல தலைக்கறி மட்டும் சாப்பிடாதீங்க. பொதுவாகவே செம்மறி ஆட்டோட தலையில புழுக்கள் இருக்கும். இது இயற்கையான விஷயம்தான். வீடுகளுக்கு வாங்குறப்ப பெரும்பாலும் வெள்ளாட்டுத் தலை தான் வாங்குவோம். செம்மறி ஆட்டுத் தலை வாங்கினாலும் கடைக்காரரு நம்ம கண்ணுல படாம தலையைக் கொதிக்கிற தண்ணில போட்டுட்டு, அப்புறம் அதை எடுத்து தரையில தட்டோ தட்டுன்னு தட்டி புழுவை எல்லாத்தையும் கொட்டிட்டுதான் மேலேயே எடுத்து வைப்பாங்க. அதை வீட்டுக்கு வாங்கிட்டுப்போய் நல்லா சுத்தம் பண்ணி சாப்பிடுவோம். ஆனா, மொத்தமா ஹோட்டலுக்கு விக்கிறப்ப எல்லாம் செம்மறி ஆட்டுத் தலையை இப்படி சுத்தம் பண்ண மாட்டாங்க. அப்படியே கைமாதான்.


  எல்லாத்தையும்விட முக்கியம், ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யறதுக்குனே பஜாரில் மளிகைப் பொருட்கள் குறைஞ்ச விலைக்கு கிடைக்குது. எல்லாமே கலப் படம். பாலீஷ் செய்யப்பட்ட இலவச ரேசன் அரிசியோட பொன்னி அரிசி கலந்து விக்கிறாங்க. உடைஞ்ச கழிவுப் பருப்பு, கேசரிப் பருப்பைத் துவரம் பருப்புடன் கலக்கிறாங்க. மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், டீத்தூளோட மரத் தூள், குதிரை சாணத்தையும் கலக் கிறது எல்லாம் சகஜமப்பா. நெய், எண்ணெய் வகைகளோட பன்றி, மாட்டுக் கொழுப்பு, வனஸ்பதி மற்றும் நாள்பட்ட கழிவு எண்ணெயையும் கலப்பாங்க.  சாதாரண ஹோட்டல் களிலும் கையேந்தி பவன் களிலேயுமே இப்படின்னா டாஸ்மாக் பார் பத்திச் சொல்லவே வேணாம். அதிலும் குறிப்பா, சென்னை பேச்சுலர் பாய்ஸ் ரொம்பக் கவனமா இருக் கணும்!


  Similar Threads:

  Sponsored Links

 2. #2
  saveetha1982's Avatar
  saveetha1982 is offline Penman of Penmai
  Blogger
  Yuva's of Penmai
  Real Name
  சவீதா லட்சுமி
  Gender
  Female
  Join Date
  Jan 2014
  Location
  Chennai
  Posts
  7,552

  re: ஹோட்டலில் சாப்பிட போறீங்களா....??-Read this before eating in the Hotels

  தேனு... கண்டிப்பாக எல்லாரும் படிக்க வேண்டிய ஒரு பதிவு... பயனுள்ள பகிர்வு... இதை பார்த்து ஹோட்டல் போறதை நிறுத்திக்கணும்... வெளியூரில் இருந்து வந்து வேலை செய்யும் திருமணமாகாத ஆண்கள் விலை மலிவாய் இருக்கிறதே என்று இப்படி கடைகளில் தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்...


  தோழமையுடன்...

  சவீதா முருகேசன்


  மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

  Stories of Saveetha


 3. #3
  lathabaiju's Avatar
  lathabaiju is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Tirupur
  Posts
  3,729

  re: ஹோட்டலில் சாப்பிட போறீங்களா....??-Read this before eating in the Hotels

  happaa Thenu,

  padikkumpothe vayithai kalakkuthe...

  nalla pathivu paa...

  Hotelil saappidaravanga kandippaa yosippaanga...

  thenuraj and riyaraj like this.
  அன்புடன்
  உங்கள் லதா பைஜூ...

  Stories of Latha Baiju

  எனது கவிதைப் பயணம்

  இருவரிக் கவிதைகள்

  "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

 4. #4
  Priyathozhi's Avatar
  Priyathozhi is offline Registered User
  Blogger
  Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  coimbatore
  Posts
  451
  Blog Entries
  1

  re: ஹோட்டலில் சாப்பிட போறீங்களா....??-Read this before eating in the Hotels

  Thank you for your valuable sharing friend

  thenuraj likes this.
  நிமிர்ந்த நன்னடை

  நேர்கொண்ட பார்வை
  நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்
  திமிர்ந்த ஞானச்செருக்கு

 5. #5
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  re: ஹோட்டலில் சாப்பிட போறீங்களா....??-Read this before eating in the Hotels

  Thanks for the caution, Thenu.

  thenuraj likes this.
  Jayanthy

 6. #6
  riyaraj is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Dec 2014
  Location
  sattur
  Posts
  36

  Re: ஹோட்டலில் சாப்பிட போறீங்களா....??-Read this before eating in the Hotels

  Thanks for sharing......

  thenuraj likes this.

 7. #7
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

  Re: ஹோட்டலில் சாப்பிட போறீங்களா....??-Read this before eating in the Hotels

  Quote Originally Posted by saveetha1982 View Post
  தேனு... கண்டிப்பாக எல்லாரும் படிக்க வேண்டிய ஒரு பதிவு... பயனுள்ள பகிர்வு... இதை பார்த்து ஹோட்டல் போறதை நிறுத்திக்கணும்... வெளியூரில் இருந்து வந்து வேலை செய்யும் திருமணமாகாத ஆண்கள் விலை மலிவாய் இருக்கிறதே என்று இப்படி கடைகளில் தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்...


  உண்மை தான் சவி....
  என்னதான் இருந்தாலும்... அந்த ஹோட்டல் உணவின் சுவை நம்மை கட்டி இழுத்து விடுகிறது... போக கூடாதுன்னு நினைச்சாலும்..., ஒரு நாள் தானே, என்ன ஆக போகிறதுன்னு நினைச்சுக்கிட்டு போறவர்கள் தான் அதிகம்...!!

  ஆனா இதையெல்லாம் படிச்ச பிறகு... கண்டிப்பா ஹோட்டல் போவதை நிறுத்தணும் or குறைத்துக் கொள்ளா வேண்டும்.


 8. #8
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

  Re: ஹோட்டலில் சாப்பிட போறீங்களா....??-Read this before eating in the Hotels

  Quote Originally Posted by lathabaiju View Post
  happaa Thenu,

  padikkumpothe vayithai kalakkuthe...

  nalla pathivu paa...

  Hotelil saappidaravanga kandippaa yosippaanga...


  தேங்க்ஸ் லதா...

  ஹாஹா...... படிக்கும்போதே வயித்தை கலக்குதா....!! அப்போ சாப்பிட்டா.....!!

  எல்லாருக்கும் விழிப்புணர்வு வரட்டும்னு தான் இந்த பதிவை போட்டேன்... !

  lathabaiju likes this.

 9. #9
  srathi's Avatar
  srathi is offline Registered User
  Blogger
  Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2011
  Location
  singapore
  Posts
  1,441
  Blog Entries
  18

  Re: ஹோட்டலில் சாப்பிட போறீங்களா....??-Read this before eating in the Hotels

  hi thenu
  nalla pathivu. neenga sonathu ellam unmai thaan aanalu cila makkal hotel virumbiga thaan irukanga.
  thanks for useful info

  thenuraj likes this.

 10. #10
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

  Re: ஹோட்டலில் சாப்பிட போறீங்களா....??-Read this before eating in the Hotels

  Quote Originally Posted by srathi View Post
  hi thenu
  nalla pathivu. neenga sonathu ellam unmai thaan aanalu cila makkal hotel virumbiga thaan irukanga.
  thanks for useful info


  ஆமா ரதி.... என்ன இருந்தாலும் ஹோட்டல் சுவை தனி தானே...!!
  அதனால் தான் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை.


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter