Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By chan
  • 1 Post By chan

Health Tips


Discussions on "Health Tips" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Health Tips

    டிப்ஸ்...
    வயதானவர்களை அதிகம் பாதிக்கக்கூடியது, ஆஸ்டியோபொரோசிஸ் என்னும் எலும்பு அடர்த்திக் குறைவு நோய். மாதவிடாய் நிற்கும் சமயத்தில், 45 வயதுக்கு மேல் உள்ள பெண்களையும், 60 வயதுக்கு மேல் உள்ள ஆண்களையும், இந்த நோய் அதிகம் பாதிக்கும். மது குடிப்பவர்கள், சிகரெட் புகைப்பவர்களுக்கு இந்த நோய் முன்கூட்டியே வரும் வாய்ப்பு அதிகம். டெக்ஸா ஸ்கேன் செய்துபார்த்தால் மட்டுமே இதன் பாதிப்பை அறியமுடியும். ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின் - டி அளவை வைத்தும், இந்த நோயைக் கண்டுபிடிக்க முடியும்.

    40 வயதைக் கடந்த பெண்கள், வருடத்தில் மூன்று மாதங்களுக்கு கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். வைட்டமின் டி சத்துள்ள எள், கீரை வகைகள், பீட்ரூட், பாதாம், பிஸ்தா, முழு உளுந்து, பால் பொருட்கள், கடல் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    காலை மற்றும் மாலை வெயிலில் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், அந்தச் சமயத்தில் வெளியில் வந்து உட்கார்ந்தால்கூட போதுமானது.

    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini and sarjana ul like this.

  2. #2
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Health Tips

    டாக்டர் பாபு அப்துல்லா தரும் டிப்ஸ் இது

    ராமநாதபுரம்

    வெயில் காலம் என்பதால், காட்டன் உடைகளை அணியுங்கள். உணவில் காரத்தைக் குறைப்பது நல்லது. பழங்கள் அதிகமாகச் சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். செயற்கையான குளிர்பானங்களைத் தவிர்த்திடுங்கள்.

    உடல் ஆரோக்கியத்துக்கு, தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி அவசியம். ஒருமணி நேர சிம்பிள் உடற்பயிற்சிகளை வாரம் மூன்று நாட்களாவது செய்யுங்கள். 20 வயதுக்கு மேல் அசைவ உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள். எண்ணெயில் பொரித்த, ஜங் ஃபுட் உணவுகளைத் தொடாதீர்கள். குழந்தைகளுக்குக் காய்கறிகள், கீரைகள், மீன் என சத்தான உணவை, சின்ன வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். உடலில் பிரச்னைவந்தால், சுயமாக மருத்துவம் பார்க்காமல் டாக்டரைப் பாருங்கள்.

    சுற்றுப்புறத்தைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொண்டாலே, பல நோய்கள் நம்மை அணுகாது. மனதை அலைபாயவிடாமல், ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்ளுங்கள். புத்தகம் வாசிப்பதிலும், இசை கேட்பதிலும் கவனம் செலுத்தினால், நோ டென்ஷன்!

    Last edited by chan; 10th May 2015 at 04:33 PM.
    sarjana ul likes this.

  3. #3
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Health Tips

    மருத்துவர் கவிதா தரும் டிப்ஸ்!

    திருச்சி ஜி.வி.என் மருத்துவமனை

    கருதரிப்பதற்கு முன்னதாகவே ஃபோலிக் ஆசிட் (Folic Acid) மாத்திரையை எடுத்துக் கொள்வதால், குழந்தைக்கு ஏற்படும் பிறவி குறைபாடுகளைத் தவிர்க்க முடியும்.

    கருவுற்ற ஆரம்பத்திலேயே ஹீமோகுளோபின், தைராய்டு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு போன்ற அடிப்படை டெஸ்ட்களை அவசியம் செய்து கொள்ள வேண்டும்.

    கருவுற்ற தாய்மார்களுக்கு ரத்தசோகை ஏற்படுவது இயல்பு. இதனால், காய்கறிகள், கீரை மற்றும் பழ வகைகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
    ஆரம்பத்திலிருந்தே இரும்பு, கால்சியம் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

    கருவுற்ற காலத்தில் கட்டாயமாக மூன்று முறை ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும்.

    கருவுற்ற ஆரம்ப காலத்தில் கரு சரியாக கர்ப்பப்பையில் உள்ளதா என தெரிந்துகொள்ள வேண்டும்.

    18-20 வாரத்தில் முழுமையாக வளர்ந்த கரு, பிறவிக் குறைபாடு இல்லாமல் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    கருவுற்ற கடைசி மாதங்களில் கர்ப்ப காலத்திற்கு ஏற்ற வளர்ச்சி உள்ளதா என்றும், பனிக்குடம் நீர் சரியாக உள்ளதா என்றும் தெரிந்துகொள்ளும் ஸ்கேன் அவசியம் செய்துகொள்ள வேண்டும்.

    கருவுற்ற காலங்களில் அமைதியான மனநிலையில் இருப்பது அவசியம். தினமும் எட்டு மணி நேரம் உறங்க வேண்டும். மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும். 40 நிமிடங்கள் மிதமான நடைப்பயிற்சி செய்தல் வேண்டும்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter