Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

Effects of Testosterone on the Body - டெஸ்டோஸ்டிரான் உடலில் என்ன செய்யு


Discussions on "Effects of Testosterone on the Body - டெஸ்டோஸ்டிரான் உடலில் என்ன செய்யு" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Effects of Testosterone on the Body - டெஸ்டோஸ்டிரான் உடலில் என்ன செய்யு

    டெஸ்டோஸ்டிரான் உடலில் என்ன செய்யும்

    உஷா ஸ்ரீராம் நாளமில்லா சுரப்பி நிபுணர்



    கீச்சுக்குரலில் பேசிக் கொண்டிருந்த ராகேஷ், திடீரென்று, சில நாட்களாக கரகரத்த குரலில் பேச ஆரம்பித்தான். ‘‘நீயும் வயசுக்கு வந்துட்டியா?’’ எனப் பள்ளியில் சீனியர்கள் கிண்டலடிக்க ஆரம்பித்தார்கள். பார்க்கக் குட்டிப் பையன் போல் இருந்தவர்கள், விரைவில் குரல் மாறி, மீசை அரும்பத் தொடங்கி, வளர்ந்து நிற்பது, சமயங்களில் பெற்றோருக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றங்களுக்குக் காரணம் டெஸ்டோஸ்டிரான் (Testosterone) ஹார்மோன்.

    ஆண்களுக்கு விதைப்பையிலும் , பெண்களுக்கு மிகக் குறைந்த அளவில் சினைப்பையிலும் சுரக்கிறது. ஆண்களுக்கு, முடி வளர்வது முதல் விந்தணு உற்பத்தி வரை அனைத்துக்கும் மூலக்காரணி டெஸ்டோஸ்டிரான் தான். ஆண் குழந்தை பிறந்ததில் இருந்து, இந்த ஹார்மோன் கொஞ்சமாக கொஞ்சமாகச் சுரக்க ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் பருவ வயதை எட்டியதும், அதிக அளவு சுரக்கிறது. குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, மெள்ள மெள்ளக் குறையும்.


    டெஸ்டோஸ்டிரான் உடலில் என்ன செய்யும்?

    ரோமம் வளர்ச்சி, முகத்தில் மீசை, தாடி வளர்ச்சியைத் தூண்டும்.
    பதின் வயதில் ஆண்களின் குரல் மாறச் செய்யும்.
    உயரத்தை நிர்ணயிக்கும்.
    தசைகளின் சீரான வளர்ச்சிக்குக் காரணமாகும்.
    எலும்புகள் வளர்ச்சியடையத் துணைபுரியும்.
    இனப்பெருக்க மண்டலம் முதிர்வு அடைவது மற்றும் விந்தணுக்கள் உற்பத்தி அதிகரிப்பது ஆகியவற்றைச் செய்யும்.
    ஆண்கள் நேர்த்தியான உடல்வாகு பெற உதவும்.
    எதிர்பாலினம் மீது ஈர்ப்பு ஏற்படுத்தும்.
    செக்ஸ் தொடர்பான எண்ணங்களைத் தூண்டும்.


    டெஸ்டோஸ்டிரான் குறைவாகச் சுரந்தால், என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

    முடி உதிர்தல் அதிகரிக்கும்.
    தசைகள் பலவீனமடையும்.
    பால் உறவில் முழுமையாக ஈடுபட முடியாது விந்தணுக்கள் உற்பத்தி குறையும்.
    உடல் அடிக்கடி சோர்வடையும்.

    அடிக்கடி கோபம், அதிக அளவு மன அழுத்தம் இருக்கும்.


    தீர்வு?

    டெஸ்டோஸ்டிரான் சீராகச் சுரக்கிறதா என்பதை ரத்தப் பரிசோதனை மூலம் அறிய முடியும். ஆண்களின் இனப்பெருக்க உறுப்பில் அடிபடுதல், தலையில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியில் கட்டிவருதல், சில வகை மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது போன்ற காரணங்களால் டெஸ்டோஸ்டிரான் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். எந்தக் காரணத்தால் டெஸ்டோஸ்டிரான் குறைவாகச் சுரக்கிறது என்பதை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும். ஆண்களுக்கு 60 வயதான பிறகு, டெஸ்டோஸ் டிரான் சுரப்பது, மெள்ள மெள்ளக் குறையும். இதனால், 60 வயதுக்குப் பிறகு, பெரும்பாலான ஆண்களுக்கு செக்ஸில் நாட்டம் இருக்காது. மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே டெஸ்டோஸ்டிரான் சுரக்கவைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தியானம் செய்வது, டெஸ்டோஸ்டிரான் அளவை, சீராகச் சுரக்கவைக்க உதவும்.

    கவனம்:
    ஆணின் இனப்பெருக்க உறுப்பில் அடிபடுவதுதான் டெஸ்டோஸ்டிரான் குறைவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. கிரிக்கெட் முதலான விளையாட்டுக்களில் ஈடுபடும்போது, இனப்பெருக்க உறுப்பு அடிபட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது ஆண்கள், இனப்பெருக்க உறுப்பைப் பாதுகாக்கும் கார்டு அணிவது அவசியம்.

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 10th May 2015 at 04:28 PM.
    sumathisrini likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter