Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
 • 4 Post By chan
 • 1 Post By Dangu

Health Benefits of Walking - நடந்தால் நோய்கள் பறந்தோடும்!


Discussions on "Health Benefits of Walking - நடந்தால் நோய்கள் பறந்தோடும்!" in "Health" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Health Benefits of Walking - நடந்தால் நோய்கள் பறந்தோடும்!

  நடந்தால் நோய்கள் பறந்தோடும்!  “நடப்பது” எல்லோருக்கும் பிடித்தமான விஷயம் தான். ஆனால், கடைபிடிப்பதில் தான் சிலர் கோட்டை விடுகிறார்கள். நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற அறிவுரைகளாக இருந்தாலும் சரி, இப்போதைய டாக்டர்கள் அடிக்கடி சொல்லும் விஷயமாக இருந்தாலும் சரி, அதில் உணவுக்கு அடுத்தபடியாக, நடப்பதைக் குறித்து கண்டிப்பாக சொல்லப்பட்டிருக்கும். நடப்பதற்கு சோம்பேறிப்பட்டுக் கொண்டு உடலை நோய்களின் பிறப்பிடமாக ஆக்கிக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அதே போல், “நடந்து நடந்து” உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்பவர்களும் இங்கு தான் இருக்கிறார்கள்.


  • நடப்பதால் இதயத்துடிப்பு சீராகிறது. ஒரே சீரான மூச்சு வெளிப்படுவதால் இதயம் வலுப்பெற்று தசைநார்கள் வலுவடைகின்றன. உடல் உறுப்புகள் நன்கு இயங்குகிறது.
  • வியர்வை நன்கு வெளியேறி, உடலில் உள்ள தேவையற்ற அழுக்குகள் வெளியே தள்ளப்படுகின்றன. உடல் லேசாகி வலிமை பெறுகிறது.
  • காற்றை நன்கு உள்வாங்கி வெளியிடுவதால் நுரையீரல் நன்கு செயல்பட்டு, சுவாசம் சார்ந்த நோய்களைப் போக்குகிறது.
   நடப்பதால் நரம்புகள் பலமடைகிறது.
  • மூளை புத்துணர்வு பெறுகிறது. ஞாபக சக்தி அதிகரிக்கிறது.
  • எலும்புகள், பலப்பட்டு தசைகள் சுருங்கி விரிகிறது. உடலில் தங்கியுள்ள அதிகமான அதாவது, இடுப்பு, கை, கால், அடிவயிறு, தொடை ஆகிய இடங்களில் உள்ள தேவையற்ற தசைகள் கரைகின்றன.
  • தூக்கம் வரவில்லை என்று புலம்பி தள்ளாமல் இருக்கவும். புரண்டு படுத்து மோட்டு வளையை வெறித்துக் கொண்டு இருக்காமல் படுத்தவுடன் தூங்கவும் நடைபயிற்சி உதவுகிறது. கவலை, சோகம், மகிழ்ச்சி எதுவாக இருந்தாலும் அதை தூக்கி தலையணைக்கட்டியில் வைத்து விட்டால் நித்திராதேவி நிம்மதியாக நம்மை வந்து தழுவிக் கொள்வாள்.
  • உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். முதுமையைத் தள்ளிபோகச் சொல்லி விட்டு இளமை என்றும் நம்முடன் இணையாக நடக்கும்.
  • கை, கால் மூட்டுவலி நீங்கும். செரிமான சக்தி அதிகரித்து, நன்கு பசி எடுக்கும்.
  • வாத பித்த கபத்தின் செயல்பாடுகள் சீராக இருக்கும்.
  • உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மட்டுமின்றி மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் நடப்பதால் நிற்காமல் ஓடிப்போகும்.
  • பரந்து விரிந்த வானத்தையும் வெண்மேகத்தையும் காணும் போது நம்முடைய மணமும் விசாலமானதாக மாறும். உச்சி முதல் உள்ளங்கால் வரை இரத்த ஓட்டம் ஒரே சீராக இயங்கும்.
  • உடலும் மனமும் இளமையாகவும் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
  • ஆஸ்துமா, நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் குணமாகும்.
  • முதுகு கூன் விழாமல் நிமிர்ந்து நிற்கும். தன்னம்பிக்கைத் தரும்.
  • இடுப்பு சதைகள் மறையும். உடலில் உள்ள அசுத்தம் முழுவதும் வியர்வை மூலம் வெளியேறும்.
  • உடலில் உள்ள அதிகப் படியான கொழுப்பு குறைந்து உடல் உறுதியடையும்.
  • நாள் முழுவதும் எவ்வளவு உழைத்தாலும் சோர்வு இருக்காது.
  • உடலிலுள்ள திசுக்களுக்கு உயிர்க்காற்று நிறைய கிடைக்கிறது. மன இறுக்கம் குறைந்து தன்னம்பிக்கை பிறக்கும்.
  • சிந்திக்கும் ஆற்றல் பெருகும். உடல் முழுவதும் மின்சாரம் பாய்வது போல் அற்புத உணர்வு பரவும்.
  • மாலை வெயிலில் தினமும் நடந்தால் தோல் நோய்கள் வராது.
  • மற்ற எல்லா உடற்பயிற்சிகளையும் விட, நடைப்பயிற்சியே மிகவும் எளிமையானது. சிறந்தது. டாக்டர், மருந்து, மாத்திரை, காசு செலவில்லாதது நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி முடிந்து வியர்வை அடங்கிய பிறகு சுமார் 10 நிமிடங்களுக்கும் பிறகு பானங்கள் அருந்தலாம்.
  • குளிர்ந்த நீரில் தலைக்கு ஊற்றிக் குளிக்க வேண்டும். இதனால் தலையில் உள்ள சூடு மறையும். தலைக்குத் தண்ணீர் ஊற்றிக் குளிக்காமல், உடம்பில் மட்டும் படுமாறு குளித்தால் உடலின் சூடு முழுவதும் தலைக்குச் சென்று ஏதேனும் நோய் வரலாம்.
  • நடைப்பயிற்சியின் போது உடலிலுள்ள 72000 நாடி நரம்புகளுக்கும் இரத்தம் பாய்ந்து சுறுசுறுப்பு அடைகிறது.
   உடல் இளமையாக இருக்கும். மனதில் உற்சாகம் பெருகும்.

  நடந்தால் இத்தனை பலன்கள் கிடைக்கும் போது… இனிமேலும் ஏன் சோம்பித்திரிய வேண்டும். நடக்கத் தொடங்குங்கள்.

  Similar Threads:

  Sponsored Links
  Attached Thumbnails Attached Thumbnails Health Benefits of Walking - நடந்தால் நோய்கள் பறந்தோடும்!-walking.jpg  

 2. #2
  Dangu's Avatar
  Dangu is offline Ruler's of Penmai
  Gender
  Male
  Join Date
  Oct 2014
  Location
  CHROMEPET
  Posts
  10,950

  re: Health Benefits of Walking - நடந்தால் நோய்கள் பறந்தோடும்!

  Thanks for the nice info.

  saidevi likes this.

 3. #3
  saidevi's Avatar
  saidevi is offline Guru's of Penmai
  Real Name
  sarala devi
  Gender
  Female
  Join Date
  Mar 2014
  Location
  tn
  Posts
  5,086

  re: Health Benefits of Walking - நடந்தால் நோய்கள் பறந்தோடும்!

  Useful Info Lashmi.


 4. #4
  kkmathy's Avatar
  kkmathy is offline Minister's of Penmai
  Real Name
  komathy
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  Malaysia
  Posts
  3,189

  Re: Health Benefits of Walking - நடந்தால் நோய்கள் பறந்தோடும்!

  Very useful info, Latchmy.


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter