Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
 • 4 Post By chan

Health benefits of taking Oil Bath -எண்ணெய் குளியல் ஏராள நன்மைகள்!


Discussions on "Health benefits of taking Oil Bath -எண்ணெய் குளியல் ஏராள நன்மைகள்!" in "Health" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Health benefits of taking Oil Bath -எண்ணெய் குளியல் ஏராள நன்மைகள்!

  எண்ணெய் குளியல் ஏராள நன்மைகள்!

  'துடைச்சு வெச்ச குத்துவிளக்கு மாதிரி இருக்கா பாரேன்...’ என்று சொல்வதற்கேற்ப, அந்தக் காலத்தில் பார்க்கும் அத்தனை பெண்களுமே மாசு மரு இல்லாத பொலிவுடன் பளிச்சென இருப்பார்கள். தினமும் தலைக் குளியல், வாரம் தவறாமல் எண்ணெய்க் குளியல் என குளத்தில் முங்கிக் குளிக்கும் சுகமே அலாதிதான். ஆனால், இன்றோ எங்கு பார்த்தாலும், எண்ணெய் இல்லாத தலைதான் தெரிகிறது. 'தலைவலி வரும்... ஜலதோஷம் பிடிக்கும்... முகத்தில் எண்ணெய் வடியும்... தலைமுடியை அலசுவதே கஷ்டம்...'' என்று எண்ணெய்க் குளியலைத் தவிர்த்துவிடுகின்றனர் இன்றைய இளைய தலைமுறையினர்.

  உடலுக்கும் மனதுக்கு ஆரோக்கியம் தரும் எண்ணெய் குளியலின் அவசியத்தை எடுத்துச் சொல்கிறார் சித்த மருத்துவர் பத்மப்ரியா.

  'தினமும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை 'தின ஒழுக்கம்’ என்கிறது சித்த மருத்துவம். இந்தக் குளியல் தரும் பலன்கள் எண்ணில் அடங்காது. நமது சருமம்தான், உடலில் பெரிய அளவிலான உறுப்பு. பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப, சுற்றுச்சூழல் உஷ்ணமானாலும், குளிர்ச்சியானாலும் தோல்தான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். தோல், எண்ணெயை உறிஞ்சும் தன்மைகொண்டது.

  மாசுக்களால் பாதிப்பு
  சுற்றுச்சூழல் மாசு காரணமாக, வெளியில் இருந்து வந்து குவியும் தூசு தோலின் மீது படிந்துவிடும். இந்தத் தூசு எல்லாமே, தண்ணீரில் கரைவது இல்லை. சோப்பு போட்டுக் குளிப்பது வெளிப்புற அழுக்கைப் போக்குமே தவிர, சருமத்தின் உள் ஊடுருவிய அழுக்கு, தூசியைப் போக்காது. அழுக்கு அப்படியே படிந்து, அழகைக் குலைத்து, சரும நோய்களை ஏற்படுத்திவிடும். இந்த வகை தூசுக்கள் கண்ணுக்குத் தெரியாது. வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம், சருமத்தைப் பொலிவுடன் வைத்திருந்தனர் நம் முன்னோர்கள். 'சனி நீராடிய’ அந்தக் காலத்தில் சரும நோய் என்பதே கிட்ட நெருங்காமல் இருந்தது. ஆனால், இன்றோ, தீபாவளிப் பண்டிகை நாளில்கூட எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விட்டு, ஷாம்பூ போடுவது வழக்கமாகிவிட்டது. இது நல்லது அல்ல. ஆரோக்கியத்தைப் பெருமளவு பாதிக்கும். தூசு, அதிக உஷ்ணம் இவற்றால் உடல் பாதிக்காமல் இருக்க, தினமுமேகூட, உடலிலும் தலையிலும் எண்ணெய் தேய்த்து, தலைக்குக் குளிப்பது அவசியமாகிவிட்டது.  ஏராள நன்மைகள்

  உடல் உறுப்புகள் பாதிக்கும். தோல், கல்லீரல், எலும்பை இணைக்கும் பகுதிகள், தசைகள், தோலில் உள்ள திசுக்கள் பாதிப்புக்கு உள்ளாகும். 'இன்சோம்னியா மஸ்குலர் பெயின்’ என்ற தூக்கமின்மை பாதிப்பு ஏற்படும். விரைவிலேயே வயோதிகத் தோற்றத்தை தரும். ரத்த சம்பந்தமான பிரச்னைகள் வரும். மேலும், அடிக்கடி உணர்ச்சிவசப்படுதல், கவலை, எரிச்சல், சோர்வு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் தலைதூக்கும். உடலில் உஷ்ணம், பித்தம் அதிகரிக்கும். பொதுவாக, உடலினுள் இருக்கும் சூடுதான் நோயை அதிகரிக்கச் செய்கிறது. உள்ளுக்குள் உஷ்ணம் அதிகமாகும்போது வைரல் இன்ஃபெக்ஷன் ஏற்படும். காமாலை, அல்சர், வைரல் நோய்கள், வயிற்றுவலி, கண் நோய்கள் என வரிசைகட்டி வரும்.

  மனம் லேசாகும்
  சருமத்தில் எண்ணெய்ப் பசை இருந்தால்தான் சூரியனிலிருந்து வரும் வைட்டமின் டி சத்தை உடல் கிரகிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதிலும், எண்ணெயை உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்யும்போது நிணநீர் சுரப்பிகள் சுறுசுறுப்பாகச் செயல்படும். மன அழுத்தம் குறையும். நீர்க்கடுப்பைப் போக்கும். உடலினுள் இருக்கும் உஷ்ணமானது வெளியேறிவிடும். அதனால்தான், எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று, உடல் சூடாகவே இருக்கும். இதை, 'உடல் சூட்டைக் கிளப்பிவிட்டுட்டுச்சு...’ என்று பலரும் எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல் இருந்துவிடுவார்கள். உடலின் உள் உறுப்புகள் குளிர்ச்சியாக இருக்கும் என்பதுதான் நிதர்சன உண்மை.

  வேர்க்குரு, தேமல், படை, சிரங்கு போன்ற சருமப் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும். வாரம் இருமுறை குளிப்பதன் மூலம் சருமம் நல்ல பொலிவைப் பெறும். மன அமைதி கிடைக்கும். கண்ணும் உடலும் குளிர்ச்சியடையும். பேன், பொடுகுத் தொல்லை இருக்காது. முடி நன்றாக வளரும். முன்னந்தலையில் வழுக்கை விழாது. எப்போதும் ஒருவிதப் புத்துணர்ச்சி இருக்கும். சரும வறட்சி நீங்கும். உடல் எடையைக் குறைப்பதற்கும் எண்ணெய்க் குளியல் உகந்தது.

  எப்படிக் குளிக்க வேண்டும்
  ஓரளவு வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். அடிக்கும் வெயிலுக்கு, உஷ்ண தேகம் உள்ளவர்கள் ஒரு நாள் விட்டு ஒருநாள்கூட எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.
  ஆஸ்டியோபொரோசிஸ், வாதம், மூட்டு வலி பிரச்னை இருப்பவர்கள், ஆயில் மசாஜ் செய்து குளிப்பது நல்லது. சைனஸ், சளித் தொல்லை இருப்பவர்கள், கடைகளில் 'சுக்கு தைலம்’ வாங்கித் தேய்த்துக் குளிக்கலாம். வேர்க்குரு இருந்தால் 'அருகம்புல் தைலம்’, 'வெட்டிவேர் தைலம்’ தடவிக் குளிக்கலாம். குளித்து முடித்து வந்ததும், தலையை நன்றாக ஈரம் போகத் துடைக்கவேண்டும்.


  யாருக்கெல்லாம் தேவை இல்லை

  காய்ச்சலுடன் இருக்கும் கர்ப்பிணிகள், நோய்வாய்ப்பட்டவர்கள், அடிபட்டு உள் காயம்பட்டவர்கள், மாதவிடாய் பிரச்னை உள்ளவர்கள், நாள்பட்ட நோயாளிகள், புற்றுநோயாளிகள், உடலில் அதீத வலி இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்றே எண்ணெய்க் குளியலை மேற்கொள்ளலாம். மசாஜ்
  செய்யவே கூடாது.  வீட்டிலேயே தயாரிக்கலாம்

  2, 3 கைப்பிடி அருகம்புல்லுடன் 2 ஸ்பூன் கார்போக அரிசி, 10 கிராம் வெட்டிவேர் சேர்த்து அரைத்து, தேங்காய் எண்ணெயில் கலந்துவிடவேண்டும். இந்த எண்ணெயை மிதமான தீயில் புகை வரும் வரை காய்ச்சி எடுக்க வேண்டும். இந்த எண்ணெயை உடல் முழுவதும் தடவி, தலைக்கு சீயக்காய் மற்றும் உடலுக்கு பயத்த மாவைத் தேய்த்து அலசலாம்.

  விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என மூன்று எண்ணெய்களையும் சமமாகக் கலந்து உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து ஊறவிட வேண்டும். சீயக்காயுடன் பாசிப்பருப்பு சேர்த்து அரைத்த நலங்கு மாவைத் தேய்த்து அலசினால் உடல் குளுமையாகும். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் 'சந்தனாதித் தைலம்’ வாங்கியும் தேய்த்துக் குளிக்கலாம்.

  எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று வெளியில் அதிகம் அலையக் கூடாது. உடலின் வெளிப்புறம் உஷ்ணம் இருப்பதால், மேலும் சூடு சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும்.

  அதிகக் குளிர்ச்சியான ஐஸ்க்ரீம், ஃப்ரிட்ஜில் இருக்கும் ஜூஸ் வகைகளைச் சாப்பிடக் கூடாது. சட்டென சளி பிடிக்கலாம்.

  உடலை எப்போதும், சீரான வெப்பநிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். அப்படி இருந்தாலே எந்த நோயும் நெருங்காது.

  Similar Threads:

  Sponsored Links
  Last edited by chan; 15th May 2015 at 09:08 AM.

 2. #2
  priyankasubu is offline Citizen's of Penmai
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  coimbatore
  Posts
  551

  re: Health benefits of taking Oil Bath -எண்ணெய் குளியல் ஏராள நன்மைகள்!

  very useful tips sis.......


 3. #3
  sarayu_frnds's Avatar
  sarayu_frnds is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  sakthi
  Gender
  Female
  Join Date
  Aug 2011
  Location
  Bodinayakanur
  Posts
  6,751

  re: Health benefits of taking Oil Bath -எண்ணெய் குளியல் ஏராள நன்மைகள்!

  very usefull information

  SARAYU

  " BETTER LIFE IS NOT BECAUSE OF LUCK, BUT
  BECAUSE OF HARD WORK..........."


  ON GOING STORY - நலங்கிட வாரும் ராஜா......

  Sarayu's Stories

 4. #4
  saidevi's Avatar
  saidevi is offline Guru's of Penmai
  Real Name
  sarala devi
  Gender
  Female
  Join Date
  Mar 2014
  Location
  tn
  Posts
  5,086

  re: Health benefits of taking Oil Bath -எண்ணெய் குளியல் ஏராள நன்மைகள்!

  மிகவும் பயனுள்ள பகிர்வு lashmi .


 5. #5
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Health benefits of taking Oil Bath -எண்ணெய் குளியல் ஏராள நன்மைகள்!

  பகிர்வுக்கு நன்றி .

  Jayanthy

 6. #6
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,546

  Re: Health benefits of taking Oil Bath -எண்ணெய் குளியல் ஏராள நன்மைகள்!

  Thanks for the useful article Lakshmi.


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter