பல்ஸ் பேலன்ஸிங்

‘பல்ஸ் பேலன்ஸிங்’ என்ற புதிய சிகிச்சை முறையை உருவாக்கியிருக்கிறார் அக்குபங்சர் மருத்துவரான உமா வெங்கடேஷ். அக்குபங்சருக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

‘‘நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களிலிருந்து உருவானதே நம் உடல். இதன் அடிப்படையில் நம் உடலுக்குத் தேவையான சக்தியும் பஞ்சபூதங்களிலிருந்தே கிடைக்கிறது. பிரபஞ்சத்திலிருக்கும் இந்த சக்தி நம் உடலுக்குள் தடையில்லாமல் சென்று வர வேண்டும். இந்த சக்தி ஓட்டத்தின் பாதையில் அடைப்பு ஏற்படுவதால்தான் ஆரோக்கியக்குறைவு உண்டாகிறது. எந்த இடத்தில் சக்தியின் ஓட்டம் தடைபடுகிறதோ, அந்த இடத்தில் ஊசியின் மூலம் தடையை நீக்கும் முறைதான் அக்குபங்சர்.

தலைவலிக்கு இந்த மாத்திரையைசாப்பிட்டால் சரியாகிவிடும் என்ற ஆங்கில மருத்துவம்போல, தலைவலியை உண்டாக்கும் இடத்தில் ஊசியைச் செலுத்தினால்
குணமாகிவிடலாம். ஆனால், தலைவலி ஏன் உருவாகிறது என்ற மூல காரணத்தை (Root cause) அறிந்து, அதே அக்குபங்சர் ஊசியை செலுத்தும் முறையின் மூலம் நிரந்தரமாகத் தீர்வு காண வைக்கும் முறையே பல்ஸ்பேலன்ஸிங் (Pulse balancing)...’’பல்ஸ் பேலன்ஸிங் முறையை எப்படி உருவாக்கினீர்கள்?

‘‘அக்குபங்சர் மருத்துவம் படித்து முடித்த பிறகு, 10 ஆண்டுகளாக அக்குபங்சர் மருத்துவராகத்தான் நான் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தேன். மருந்துகள், பக்கவிளைவுகள் இல்லாத எளிமையான சிகிச்சை முறை அக்குபங்சர்.

ஆனால், அக்குபங்சர் உள்பட எல்லா மருத்துவத்திலும் நோய்களைத் தற்காலிகமாகவே தீர்க்கிறோம். நிரந்தரமாகத் தீர்வு காண முடியாதா என்று ஆய்வுகள் செய்தபோதுதான் பல்ஸ் பேலன்ஸிங் என்ற நாடியை சமன்படுத்தும் சிகிச்சை முறையை கண்டுபிடித்தேன்.

நாடி என்பது நம் ஆரோக்கியத்தைச் சுட்டிக் காட்டும் துடிப்புஎன்பது எல்லோருக்கும் தெரியும். நமக்குள் சீராக இல்லாமல் ஏறுமாறாக துடித்துக் கொண்டிருக்கும் நாடியை சமன்படுத்திவிட்டால் நமக்குள் இருக்கும் பஞ்சபூதங்களை சமன்படுத்திவிடலாம். இதன்மூலம் நம் உடலுக்குள் இயல்பான சக்தி ஓட்டம் இருக்கும். ஆரோக்கியக் குறைவு ஏற்படாது. இந்த சிகிச்சை முறையைப் பற்றி மருத்துவ இதழ்களில் எழுதியிருக்கிறேன்.

நிறையகருத்தரங்கங்களிலும் பேசியிருக்கிறேன்...’’ இது எப்படி சாத்தியம்?‘‘இதற்கு இயற்கைக்கும் நமக்கும் இருக்கும் உறவு பற்றி நாம் கொஞ்சம் புரிந்துகொள்ள வேண்டும். சுவரில் சிமென்ட் பகுதி சேதமடைந்திருந்தால் சிமென்ட்டை வைத்தேதான் அதை சரி செய்கிறோம். செங்கல் உடைந்திருந்தால் செங்கல்லை வைத்தே சமன்படுத்த வேண்டும்.

உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது, தாகம் என்ற வடிவத்தில் நம் உடல் தண்ணீரை கேட்கிறது. அதேபோல, நம் உடலில் எந்தப்பகுதியில் சக்தி ஓட்டம் தடைபட்டிருக்கிறதோ, அந்த இடத்தில் நாடியை சமன்படுத்தினால் குணப்படுத்திவிடலாம். உடல்நலம் மட்டும் இல்லாமல் மனநலம் சம்பந்தப்பட்ட குறைபாடுகளுக்கும் பல்ஸ் பேலன்ஸிங் மூலம் நல்ல தீர்வு காண முடியும்...’’பல்ஸ் பேலன்ஸிங்கின் அவசியம் என்ன?

‘‘ஒரே தரம் கொண்ட இரண்டு ரோஜா செடிகளில் ஒன்றை கடற்கரை மணலிலும், இன்னொன்றை நல்ல மண்ணிலும் நட்டு வைக்கிறோம். கடற்கரை மணலில் இருக்கும் செடிக்கு என்னதான் உரம் வைத்தாலும், தண்ணீர் ஊற்றினாலும் நன்றாக வளர்ந்து பூக்கும் என்று சொல்ல முடியாது. நல்ல மண்ணில் வைத்த செடியை சரியாகப் பராமரிக்காவிட்டாலும் நன்றாக வளர்ந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.

மண்ணின் தரத்தை கவனிக்காமல் மேலோட்டமாக உரம் வைப்பதிலும், தண்ணீர் ஊற்றுவதிலும் கவனம் செலுத்துவதைப்போல, நம் உடலின் அடிப்படையான பிரச்னைகளை சரி செய்யாமல் மருந்துகளும் மாத்திரைகளும் எடுத்துக்கொள்கிறோம் என்பதே என்னுடைய கருத்து. அடிப்படையை சரி செய்வதற்கு பல்ஸ் பேலன்ஸிங் உதவும்...’’

இதனால் மற்ற சிகிச்சைகள்தேவையில்லையா?‘‘அப்படி சொல்லவில்லை. நாடியை சீராக்கிவிட்டால் நாம் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் சிகிச்சையின் முழுப் பலனும் கிடைக்கும். குணமாகும் வேகமும் அதிகமாகும். எதிர்காலத்திலும் குறிப்பிட்ட பிரச்னை வராமலும் தவிர்க்க முடியும். பல்ஸ் பேலன்ஸிங் சிகிச்சையில் மருந்துகளோ பக்கவிளைவுகளோ கிடையாது. ‘மருந்தற்ற சிகிச்சைகளை செய்யத் தடை ஏதும் இல்லை’ என்று நம் சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதனால், பல்ஸ் பேலஸன்ஸிங்கை தைரியமாக செய்து கொள்ளலாம்...’’ என்கிறார் உமா வெங்கடேஷ்.


Similar Threads: