உணர்வுடன் உறங்கு -யோக நித்திரை -- Conscious Sleep

ஆச்சரியமாக இருக்கிறதா? உறக்க நிலையில் எப்படி விழிப்புணர்வுடன் இருக்க முடியும்? நாம் உறங்கிவிட்டாலும் நம் மனது விழிப்புணர்வுடன் இருக்கும்.

அதே போல, விழித்திருக்கும் போதும் உறக்க நிலையில் இருக்கும்படி மனதை பழக்கப்படுத்தலாம். மனதை ஒருமுகப்படுத்துவதால் இது சாத்தியம். இப்படி மனதை ஒருநிலைப்படுத்தி விழிப்புடன் இருக்கும் போதும் உறக்க நிலைக்கு எடுத்துச் செல்லும் ஒரு நுட்பமான பயிற்சிதான் யோக நித்திரை.

நம் உடலும் மனமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. உடலும் மனமும் இணைந்து செயல்படும் போதுதான் எந்தச் செயலும் முழுமையாக வெற்றிப் பெறும்.

யோக நித்திரை பயிற்சி காதால் கேட்டு உள்வாங்கி. மனத்தால் ஒருங்கிணைந்து செய்யக்கூடிய பயிற்சியாகும்.

இது புத்துணர்வு தருவதோடு மட்டுமல்லாமல் அமைதியும் உள்ளச் சமநிலையும் ஏற்படுத்தும் ஒரு அற்புத அனுபவம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Similar Threads: