Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 6 Post By chan
  • 1 Post By kkmathy
  • 1 Post By sumathisrini

Hidden Causes of Daytime Sleepiness - மதியத் தூக்கம்... நல்லதா? கெட்டதா?


Discussions on "Hidden Causes of Daytime Sleepiness - மதியத் தூக்கம்... நல்லதா? கெட்டதா?" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Hidden Causes of Daytime Sleepiness - மதியத் தூக்கம்... நல்லதா? கெட்டதா?

    மதியத் தூக்கம்... நல்லதா? கெட்டதா?

    ஹேமமாலினி, டயட்டீஷியன், சென்னை.

    மதியத்தில் குட்டித் தூக்கம் என்பது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு அளிக்கக்கூடியது. இதை ஆங்கிலத்தில் 'நேப்’ என்பார்கள். குட்டித் தூக்கத்துக்குப் பிறகு பிற்பகல் வேளையில் இன்னும் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். ஆனால், நம் வேலையையே பாதிக்கும் வகையில், மதியம் நீண்ட தூக்கம் ஏற்பட்டால், முதலில் அதனைச் சரிசெய்தாக வேண்டும். மதியத்தில் இப்படிப்பட்ட
    தூக்கம் வருவதற்கு சில

    காரணங்கள் உண்டு. காலையில் சாப்பிடாமல் வேலைக்குச் சென்றால், இதுபோல் தூக்கம் வர வாய்ப்பு உண்டு. காரணம், நாம் செயல்படத் தேவையான சக்தியை அளிக்கும் காலை உணவைத் தவிர்த்துவிட்டு உழைக்கிறோம். முதல் நாள் இரவுக்குப் பிறகு அடுத்த நாள் மதியம் திடீரென்று சாப்பிடும்போது உடலில் ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கும். குறிப்பாக, சர்க்கரை அளவு அதிகமாவதால் இன்சுலின் உற்பத்தி அதிகமாகும். அதிக அளவு இன்சுலினின் சுரப்பதால், தூக்கத்தைக் கொடுக்கக்கூடிய செரட்டோனின் ஹார்மோன் மூளையில் அதிகம் சுரக்கும்.

    இதனால் சோம்பலாக இருக்கும். இரண்டாவது நீங்கள் சாப்பிடுகிற மதிய உணவு எப்படி இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். மாவுச் சத்து அதிகம் இருக்கிற அரிசிச் சாதம் மட்டும் சாப்பிட்டாலும் இப்படித் தூக்கம் வரும். இதைத் தவிர்க்க வைட்டமின், புரதம், தாது உப்புக்கள், பருப்பு, காய்கறிகள் போன்ற எல்லாச் சத்துக்களும் கொண்ட சமச்சீர் உணவைச் சாப்பிட வேண்டும். தவிர, காஃபி அதிகம் சாப்பிடுகிறப் பழக்கம் இருந்தால், அதைத் தவிர்ப்பது நல்லது. காஃபி சாப்பிட்ட உடன் புத்துணர்வு ஏற்படுவதுபோல் தோன்றினாலும் அதன் பிறகு தூக்கத்தை ஏற்படுத்தும் குணம் கொண்டது.

    தேவையான அளவு தண்ணீர் அருந்தாமல் உடலில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதும் காரணமாக இருக்கலாம். தைராய்டு குறைபாடு இருப்பவர்களுக்கு இதுபோல் பகலில் தூக்கம் வரும். அதனால் சரியான அளவில் தைராய்டு இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். அதேபோல், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் பகலில் தூக்கம் வரும். முதல் நாள் இரவு நன்றாகத் தூங்காவிட்டாலும் இதுபோல தூக்கம் வரலாம். அளவுக்கு அதிகமான உடல் எடையும் பகல் தூக்கத்துக்கு ஒரு முக்கியக் காரணம்.


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 29th May 2015 at 09:10 PM.

  2. #2
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    re: Hidden Causes of Daytime Sleepiness - மதியத் தூக்கம்... நல்லதா? கெட்டதா?

    Good info, Latchmy.

    chan likes this.

  3. #3
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Hidden Causes of Daytime Sleepiness - மதியத் தூக்கம்... நல்லதா? கெட்டதா?

    ஓ... மதிய தூக்கத்துக்கு இவ்வளவு காரணங்கள் இருக்கா? பகிர்வுக்கு மிக்க நன்றி லக்ஷ்மி.

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter