Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

தலைவலி மருந்துகள் - Medicines for Headache


Discussions on "தலைவலி மருந்துகள் - Medicines for Headache" in "Health" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  தலைவலி மருந்துகள் - Medicines for Headache

  தலைவலி மருந்துகள்

  குழந்தைகள் உள்பட ஒவ்வொரு மனிதனும் உணர்ந்திருக்கிற ஓர் உபாதை தலைவலி. ‘தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்று இதையே காரணம் காட்டி, ‘வாழ்க்கையில் வரும் இன்பதுன்பங்களை அனுபவிப்பவர்களுக்கு மட்டும்தான் அதன் வலியும் வேதனையும் தெரியும்’ என வாழ்வியலை விளங்க வைப்பதுண்டு.

  தலைவலி என்பது 5 சாதாரண காரணங்களால் வருகின்றன. இருப்பினும், மூளைக்கட்டி போன்ற மிக மோசமான நோய்களுக்கான ஆரம்ப அறிகுறியாகவும் அது இருக்கலாம். மருத்துவர்களும், மிக மோசமான தலைவலியாக இருந்தாலும், அது அன்றாட வாழ்க்கை நடவடிக்கையை பாதிப்பதாக இருந்தாலே தவிர, உயிர்க்கொல்லி நோயாக எடுத்துக் கொள்வதோ, நோயாளிகளை பயம் காட்டுவதோ இல்லை. மன அழுத்தம், மனப் பதற்றத்தினால் வரும் ஒற்றைத் தலைவலி மற்றும் அதிக மருந்துகள் எடுப்பதனால் வரும் தலைவலி போன்றவையே, இவற்றில் 90 சதவிகிதம்.

  தலைவலி சாதாரணமாக பின்வரும் காரணங்களால் ஏற்படக்கூடும்.

  1.தினம் 6லிருந்து 8 மணி நேரம் தூங்காததால் (Sleep deficit)...

  2.தேவையான அளவு தண்ணீர் பருகாததால், உச்சி வெயிலில் அலைவதால் (Dehydration)...

  3.வேளாவேளைக்கு உணவு அருந்தாமை யால் (Hypoglycemia)...

  4.கண்ணுக்கு அதிகப்படியான வேலை கொடுப்பதால்... டி.வி., செல்போன், கம்ப்யூட்டர், வாசித்தல் என கண் களைப்படைவதால்...

  5.கோபம், எரிச்சல், வருத்தம் போன்ற மன ஓட்டத்தினால்...


  இது மட்டுமல்ல... சில மருந்துகளோ, கிருமிகளால் வரும் காய்ச்சலோ, பல் கிருமிகளோ காரணமாகலாம். மூளையிலுள்ள ரத்தக்குழாய்களில் மாற்றம்
  மற்றும் ரத்தக்கசிவு, மூளையில் கிருமிகளின் தாக்கத்தாலோ (Malaria, T.B., Cysticercosis), தலையில் ஏற்படும் காயங்கள் (மூளையின் சுவர்களில் அல்லது மூளையில் ஏற்படும் காயம், ரத்தக்கட்டியால் ஏற்படும் அழுத்தம்), மூளையில் வரும் சாதாரண வீக்கத்தை (Benign) ஏற்படுத்தும் பரவாத, பரவும் கட்டிகள் (Malignant) அல்லது மற்ற இடங்களில் ஏற்பட்ட கட்டிகளின் இரண்டாம்நிலை பரவுதல் (Secondaries) என பல காரணங்கள் இருக்கலாம்.

  எந்த முக்கியமான காரணமும் இல்லாமல் 20-40 வயதுக்குள் வரும் தலைவலி 90 சதவிகிதம்... இது பிரச்னையில்லை. மீதி 10 சதவிகிதத்தில் வரும் தலைவலியை மருத்துவ பரிசோதனைகளால் வித்தியாசப்படுத்தி பார்ப்பது அவசியம். அதனால்தான் மீண்டும் மீண்டும் தலைவலியுடன் வரும் நோயாளி ஒரே குடும்பநல மருத்துவரிடம் பார்க்கும் போதோ, நரம்புமண்டல நிபுணர்களிடம் பார்க்கும் போதோ, மற்ற மருத்துவ பரிசோதனைகளுடன் மூளையில் கட்டி இருக்கிறதா என C.T. Scan, Brain M.R.I., மூளையில் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா என M.R. Angio Test எடுத்துப் பார்க்க வேண்டும். தலையில் கட்டியோ, நோயோ இல்லாத ஆயிரம் பேர்களை விட்டுவிடலாம். மூளையில் புற்றுநோய் உள்ள ஒருவரைக் கூட ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்காமல் விட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தினால்தான் செலவு மிகுந்த பரிசோதனைகளை எழுத வேண்டியுள்ளது.

  மன அழுத்தத்தினால் வரும் தலைவலி (Cluster headache), நரம்பு அழுத்தத்தினால் முன் முகத்தில் ஆரம்பித்து வரும் தலைவலி (Trigeminal Neuralgia), ஒற்றைத் தலைவலி (Migraine), அதிக வேலைப்பளுவினால் வரும் தலைவலி (Primary Cough headache) போன்றவை மிக அபாயமான காரணங்கள் இல்லாதவை. அவ்வப்போது மிதமாகவோ, தீவிரமாகவோ வந்துபோகும். கழுத்திலோ, தலையிலோ ஏற்படும் காயங்களாலோ, கிருமியினாலோ (Meningitis) ரத்தக் கசிவினாலோ, கட்டிகள், கண்ணில் வரும் அழுத்தத்தினாலோ வரும் தலைவலிகளுக்கு, காரணங்களை சரி செய்தால் மட்டுமே தலைவலியும் சரியாகும்.

  மூளையில் வலியை உணரும் தனியொரு அமைப்பு (Nociceptor) இல்லை. தலை, கழுத்துப் பகுதிகளில் மற்றும் தலைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில், மூளை நரம்புகளில் வலியை உணரும் சக்தி உண்டு. மூளையில் ரத்தக்குழாய்கள் விரிவது, சுருங்குவதைவிட, செரட்டோனின் போன்ற ெதாடு நரம்புகளைதூண்டும் வேதியியல் மாற்றங்களால் தலைவலி உணரப்படுகிறது.

  ஒருவருக்கு ஏற்கனவே தலைவலி இருக்கிறதா அல்லது புதிதாக உணரப்படுகிறதா? தலைவலி மட்டும் தனியாக இருக்கிறதா? அல்லது வேறு நோய் அறிகுறிகளும் வேதனையும் இருக்கிறதா? இதைப் பொறுத்தே நோய்க்கான காரணமும் தீர்வும் அமையும்.பொதுவாக தலைவலி என்று வரும்போது மூளையில் உணரப்படுவது, மூளையின் ரத்தக்குழாய் விரிவதாலோ, சுருங்குவதாலோ, மூளையின் உறுப்புகள் அழுத்துவதாலோ, மூளையின் உறைகள் அழுத்துவதாலோ ஏற்படும் உணர்வே.

  இதில் வாந்தி, மயக்கம், தலைச்சுற்று, வலிப்பு, பேச்சு குளறுதல், பார்வைமங்குதல், கால், கை இயக்கங்களில் மாற்றம் போன்றவற்றுடன் வரும் தலைவலியே மருத்துவருக்கு பரிசோதனைகளை செய்ய சொல்லும் அறிகுறிகளாகும். அல்லது நரம்பு சிறப்பு மருத்துவர்களை பார்க்க அறிவுறுத்தும் அறிகுறிகளாகும்.

  எந்த நோய் அறிகுறிகளும் இல்லாமல் இயல்பாகவே இருக்கும் பட்சத்தில், அது ஒற்றைத் தலைவலியா, மன அழுத்தத்தினால் வரும் தலைவலியா, பார்வை மாற்றங்களால் வரும் தலைவலியா, ஜுரத்தினால் வரும் தலைவலியா என மருத்துவர் நோயாளியிடம் கேட்டறிந்து அறிகுறிகளைப் பொறுத்து அறிவுரைகளுடன் மருந்துகளையும் பரிந்துரைப்பார். எல்லா தலைவலிகளுக்கும் E.C.G., C.T. Scan போன்றவை தேவையில்லை.

  ஆனால், அடிக்கடி நோய் வரும்போது, நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும்போது பரிசோதனைகள் அவசியம். நோயாளியின் பயத்துக்காக மட்டுமல்ல... நுகர்வோர் நீதிமன்றங்களில் மருத்துவர்களை
  பாதுகாப்பதும் பரிசோதனைகளே.

  பரிசோதனைகளின் முடிவில் நோய்க்கான காரணங்கள் அறியப்பட்டால் அதற்கான சிகிச்சை தரப்படும். அதே வேளையில் பொதுவான மூன்று காரணங்களால் வரப்படும் தலைவலி 1. மனஅழுத்தத்தால் (Cluster/Tension), 2. ஒற்றைத் தலைவலி (Migraine) மற்றும் 3. ஏற்கனவே கூறிய 5 காரணங்களால் வரும் தலைவலிகள்.

  பொதுவாக மேலே கூறிய காரணங்களால் வரும் தலைவலிக்கு சிலருக்கு தைலங்கள் தேய்த்தால் சரியாகலாம். சிலருக்கு சாதாரண பாராசிட்டமால் மாத்திரைகளிலேயே குணப்படுத்தலாம். சிலருக்கு நல்ல தூக்கம், சிலருக்கு பானங்கள் என அவரவர் அறிந்துகொண்ட சாதாரண செயல்முறைகளில் வலி குறையுமானால், அதுவே போதுமானது. மன அழுத்தத்தினால் வரும் தலைவலிக்கு மருத்துவரிடம் கலந்து பேசி தனியான மருந்துகள் தேவைப்படும்.

  மைக்ரேன் என்கிற ஒற்றைத் தலைவலியே உலக அளவில் மனிதர்களை முடக்கிப் போடும் 20வது முக்கியமான நோய். ஆசியாவில் 8 முதல் 12% பேருக்கு ஒற்றைத் தலைவலி இருப்பதாக அறியப்படுகிறது. தலைவலியுடன் வாந்தியும் இருக்கும். வெளிச்சம், இரைச்சல், தலைவலியை அதிகப்படுத்தும் தலைவலி வருவதற்கான அறிகுறிகள் (Aura) காணப்படும்.

  இதற்காக வாந்தியைக் குறைக்கும் மருந்துகள், தலைவலியைக் குறைக்கும் மருந்துகள், மன பயத்தை போக்கும் மருந்துகள் ஆகியவற்றுடன் மைக்ரேன் வராமல் தடுக்கும் மருந்துகளும் உள்ளன.தலைவலியைக் குறைக்கும் மருந்துகள்Paracetamol Brufen, Ergot, Tramadol, Aspirin, Mefenamic acid... இவை வயிற்றுவலி, நெஞ்செரிச்சல் தரவல்லவை. சிறுநீரகம், ஈரல் பாதிப்புள்ளவர்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆரம்பத்தில் Ergot மருந்துகள் Caffieine மருந்துகளுடன் வலியைக் குறைக்க உதவும்.

  வாந்தியைக் குறைக்கும் மருந்துகள் Prochlorperazine, Emesetமன பயத்தை போக்கும் மருந்துகள் Amitriptyline, Zolpidem, Alprazolam... இவை தூக்கம் தரவல்லவை. அடிமையாகும் வாய்ப்புண்டு.மைக்ரேன் தலைவலியை தடுக்கும் மருந்துகள்: Flunarizine-ca... செல்லுக்குள் செல்வதை தடுக்கும் மருந்து. இம்மருந்துக்கு தூக்கம் வரலாம். வாய் உளறல் போன்றவை காணப்படும். வாரம் 5 நாட்கள் வீதம் 3 மாதங்கள் வரை தரலாம். Propranolol, Cyproheptadine போன்ற மருந்துகளும் தரலாம் என்றாலும், ரத்தக்கொதிப்பு மற்றும் ஆஸ்துமா நோயாளிக்கு முன்னெச்சரிக்கையுடன் தரலாம்.

  வேளாவேளைக்கு உணவு, 6 முதல் 8 மணி நேர உறக்கம், மனதுக்குப் பிடித்த வேலை, போதுமென்ற மனம், ஆடம்பரம் இல்லாத வாழ்க்கை, பேராசை இல்லாத மனம் என வாழ்ந்தால் தலைவலி மட்டுமல்ல... ஏராளமான நோய்களை விரட்டி விடலாம்! வேளாவேளைக்கு உணவு,6 முதல் 8 மணி நேர உறக்கம், மனதுக்குப் பிடித்த வேலை, போதுமென்ற மனம், ஆடம்பரம் இல்லாத வாழ்க்கை, பேராசை இல்லாத மனம் என வாழ்ந்தால் தலைவலி போயே போச்சு!

  பேபி பெயின் கில்லர்?

  தலைவலி அல்லது வயிற்றுவலியால் அவதிப்படுகிற குழந்தைகளுக்கு பெயின் கில்லர் கொடுக்கலாமா?குழந்தை நல மருத்துவர் லஷ்மி பிரசாந்த்குழந்தைகளுக்கு வலி நிவாரணி மாத்திரைகள் கொடுக்கலாம். ஆனால், அதற்கு முன், குழந்தையின் உடலை தலை முதல் பாதம் வரை முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும். அதன்மூலம் குழந்தையின் நோய்க்கான காரணம் என்ன என்பதை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.

  அதன் பின்னர், எஃப்.டி.ஏ. ஒப்புதல் அளித்த வலிநிவாரணி மாத்திரைகள் குறித்த முழுத் தகவல்கள், அந்த மாத்திரைகளால் ஏற்படும் பின்விளைவுகள் ஆகியவற்றை முழுவதுமாக அறிந்த பதிவுபெற்ற மருத்துவர் பரிந்துரைக்கும் வலி நிவாரணி மாத்திரைகளை மட்டும் குழந்தைகளுக்கு ஏற்ற அளவு கொடுக்கலாம். சரியான முறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வலிநிவாரணி மாத்திரைகள், டாக்டர் பரிந்துரைக்காத மாத்திரைகளைக் கொடுக்கக் கூடாது.

  குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு, சைனஸ் பிரச்னை, மன அழுத்தம் காரணமாக தலைவலி உண்டாகலாம். அதற்கு பாராசிட்டமால் கொடுக்கலாம். வயிற்றுவலி மட்டும் இருந்தால் எந்த இடத்தில் வலி உள்ளது, வலியின் தன்மை ஆகியவற்றை பொறுத்து மாத்திரை கொடுக்கலாம்.


  மைக்ரேன் என்கிற ஒற்றைத் தலைவலியே உலக அளவில் மனிதர்களை முடக்கிப் போடும் 20வது முக்கியமான நோய். ஆசியாவில் 8 முதல் 12% பேருக்கு ஒற்றைத் தலைவலி உள்ளது.

  டாக்டர் மு.அருணாச்சலம்  Similar Threads:

  Sponsored Links
  Last edited by chan; 5th Jun 2015 at 03:00 PM.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter