போர்த்தி படுத்தால் மூளை மந்தமாகும்முட்டாள்தனமாக நடந்து கொள்பவர்களை பார்த்து, "உனக்கு மூளை இருக்கா' என்றுதான் முதலில் திட்டுகிறோம். அனைத்து ஜீவராசிகளுக்கும் மூளை இருக்கிறது. ஆனால் அந்த மூளை சரியாக செயல்படுகிறதா என்பதுதான் முக்கியம். நம் மூளையின் சிறந்த செயல்பாட்டுக்கும், மோசமான செயல்பாட்டுக்கும் நாமே காரணமாகிறோம்.

நோய்களால் மூளைக்கு ஏற்படும் பாதிப்பு வேறு. மனித மூளையே, சிந்தனை, செயல்பாடுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதனால், தலையில் அடிப்பதை கூட, கண்டிப்பது வழக்கம். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த மூளையைதான், நம் செயல்பாடுகளால், பாதிப்படைய செய்கிறோம். அந்த செயல்பாடுகளை அறிந்து அவற்றை தவிர்ப்போம்:

காலை உணவை தவிர்ப்பது: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு, ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும், ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல், அழிவை ஏற்படுத்துகிறது.

அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுக காரணமாகிறது; மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகிறது.

புகை பிடித்தல்: மூளை சுருங்கவும், "அல்ஸைமர்ஸ்' வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
சர்க்கரை சாப்பிடுதல்: நிறைய சர்க்கரை சாப்பிடுவதால், புரோட்டீன் சத்து, உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

மாசடைந்த காற்று: மாசு நிறைந்த காற்றை சுவாசித்தால், நமக்குத் தேவையான ஆக்சிஜனை, பெறுவதில் சிரமம் ஏற்படும். மூளைக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
தூக்கமின்மை: நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது, மூளைக்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும்.

உறங்கும் முறை: தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமில வாயுவை அதிகரிக்க வைக்கிறது. இது, சுவாசிக்கும் ஆக்சிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்சிஜன் மூளையைப் பாதிக்கும்.

அதீத வேலை: உடல் நோயுற்ற காலத்தில், மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியான பின் மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

வேலை கொடுக்காமலிருத்தல்: மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

பேசாமல் இருப்பது: அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது. இப்படி பத்து விஷயங்களில் கவனம் செலுத்தினாலே, மூளை சுறுசுறுப்பாக இயங்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்
.

Similar Threads: