பர்ஸ்... பணம் அல்ல பாதிப்பு!

நம்மில் பலருக்கும் இருக்கும் பழக்கம்தான் அது. இன்றுபாரபட்சமில்லாமல் எல்லோரையும் பாடாகப்படுத்திக் கொண்டிருக்கும்முதுகுவலிக்கு அதுவும் ஒரு காரணம் என்பதை மருத்துவர்கள்அறிவுறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்...அது... பேன்ட் பாக்கெட்டின் பின்னால் பர்ஸ் வைப்பது!பர்ஸ் எப்படி முதுகுவலிக்கு காரணமாகிறது? எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவரான கிருஷ்ணகுமார் விளக்குகிறார்.

‘‘முதுகுவலி வராமல் இருக்க வேண்டுமானால் நிற்பது, நடப்பது, அமர்வது என எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக, உட்காரும்போது சரியான முறையில் அமர வேண்டும். பின்பக்கம் முதுகுக்கு சாய்மானம் இருக்க வேண்டும். கைகளை அதற்குரிய இடத்திலும் (Hand rest), கால்களை அதற்குரிய இடத்திலும் (Foot rest) வைக்க வேண்டும்.

இதுதவிர நாம் அமரும்போது சரிசமமான இடத்தில், சரிசமமான முறையிலேயே அமர வேண்டும். பர்ஸை பின்பாக்கெட்டில் வைத்துக்கொண்டு உட்காரும்போது, சமம் இல்லாமல் ஏறுக்கு மாறாக உட்கார்கிறோம். அதிலும், இன்றைய காலகட்டத்தில் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட், விசிட்டிங் கார்ட், பணம் என்று பெரிய லக்கேஜையேஒவ்வொருவரும் சுமந்துகொண்டிருக்கிறோம். இதுபோன்று, தடிமனான பர்ஸ் மேல் உட்காரும்போது நம்முதுகெலும்பின் சமநிலை குறைந்து வளைகிறது.

நீண்ட நேரம், நீண்ட நாட்களாக இதே முறையில் அமர்பவர்களுக்கு முதுகில் வளைவு ஏற்படும். நாளடைவில் உட்காரும் க்ளுட்டியல் பகுதியில் (Gluteal region) அதிக அழுத்தம் ஏற்பட்டு சியாட்டிக் (Sciatic) என்ற முக்கிய நரம்பு பாதிப்படையும். இதனால் கால் பகுதி மரத்துப்போவது, குடைவது போன்ற உணர்வுகள் வரும். கால்களில் வலி வருவதும் இதனால்தான். இதையே Sleeping foot என்கிறார்கள். இது உடனடியாக ஏற்படும் பிரச்னை.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, எந்த இடத்தில் முதுகெலும்பு வளைகிறதோ, அந்த இடத்தில் தேய்மானம் அதிகமாகும். இதனால் முதுகில் உள்ள Sciatica என்ற முதுகெலும்பு நரம்பு பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக காலிலும் முதுகிலும் வலிஏற்படும். இது முதலில் சொன்ன Sciatic அல்ல.பேன்ட் பாக்கெட்டில் பர்ஸ் வைக்கிறஎல்லோருக்கும் இந்தப் பிரச்னை வராது.

பர்ஸ் மீது யார் உட்கார்கிறார்களோ அவர்களுக்குத்தான் இந்தப் பிரச்னை வரும். இது நாம் அணிகிற பேன்ட்டை பொறுத்தும் மாறும். சாதாரண பேன்ட் அணிகிறவர்களுக்கு பெரும்பாலும் இந்தப் பிரச்னை வருவதில்லை. ஏனெனில், உட்காரும்போது பர்ஸ் கொஞ்சம் நகர்ந்துகொள்ளும். ஆனால், ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகள் அணியும்போதுபர்ஸின் மேலேயே உட்கார வேண்டியிருக்கும்.

கடினத் தன்மை கொண்ட பர்ஸாகஇருந்தால் இன்னும் அதிகமான பிரச்னை ஏற்படும். அலுவலகத்தில் அமரும்போது மட்டுமல்ல... பைக் ஓட்டும்போதும் இதைக் கவனிக்க வேண்டும். தான் எதன் மீதுஉட்கார்ந்திருக்கிறோம் என்பது ஒருவருக்கு நிச்சயம் தெரியும். அதனால், பர்ஸில்உட்கார்ந்திருப்பதை உணர்ந்தால் அந்தப் பழக்கத்தை உடனடியாக மாற்ற வேண்டும். பர்ஸை முன் பாக்கெட்டில் வைப்பது இன்னும் சிறந்த வழி!’’தடிமனான பர்ஸ் மேல் உட்காரும் போது நம் முதுகெலும்பின் சமநிலை குறைந்து வளைகிறது.நீண்ட நேரம், நீண்ட நாட்களாக இதே முறையில் அமர்பவர்களுக்கு முதுகில் வளைவு ஏற்படும்.


Similar Threads: