மனித உடல் எனும் அதிசயம்இறைவனின் படைப்பில் மனித உடலும், மனித மூளையும், மிகப்பெரிய அதிசயமே. இப்படிப்பட்ட உடலையும், வாழ்வையும் முறையாக பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை. அந்த அதிசயங்களை படியுங்கள். உங்கள் உடலை பாதுகாக்கும் அக்கறை தானாகவே ஏற்படும்.

உங்கள் சுய அடையாளத்தின் வெறும் புகைப்படம் மட்டும் அல்ல.

உங்கள் கட்டை விரலில் ‘மை’ தடவி அச்செடுப்பார்கள். அந்த ரேகை ஒருவரின் அடையாளத்தின் துல்லியம். அது போலத்தான் உங்களது நாக்கும். அதன் வரிகள் ஒருவரின் துல்லிய அடையாளம்.

மனிதனின் தோல் துகள்கள் 6 லட்சம் வரை ஒரு மணி நேரத்தில் உதிர்ந்து கொட்டுகிறது. ஒரு வருடத்திற்கு 1.5 பவுண்ட் அளவு உங்கள் தோல் உதிர்கிறது.

ஒரு மனிதனுக்கு 70 வயது ஆகும்போது 105 பவுண்ட் தோல் உதிர்ந்திருக்கும்.

மனிதனின் உடலில் உள்ள எலும்பு மொத்தம் 206. ஆனால் சிறு குழந்தைகளுக்கு 350 எலும்புகள் இருக்கும். வயது கூடும் போது சில எலும்புகள் இணைந்து ஒரே எலும்பு ஆவதால் மனித எலும்பு கடைசியில் 206 எலும்பாகின்றது.

வயிற்றின் உட்பகுதியில் 3-4 நாட்களுக்கொரு முறை மெல்லிய சதை உருவாகிக் கொண்டிருக்கும்.

இல்லையெனில் வயிற்றில் சுரக்கும் ஆசிட்டினால் வயிறே செரித்து விடும்.

உங்கள் மூக்கினால் அறியும் 50 ஆயிரம் வாசனைகளை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும்.

மனிதனின் சிறு குடலின் நீளம் மனிதனை விட நான்கு மடங்கு நீளமுடையது. அதாவது 18-23 அடி நீளம் கொண்டது. ஆனால் இது வயிற்றில் அழகாக பொருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

பாக்டீரியா என்றாலே பயப்படுவோம்.

மனிதனின் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 32 மில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை தீமையற்றவை.

வியர்வையினால் உடலில் துர்நாற்றம் ஏற்படுகிறது. உங்கள் பாதத்திலிருந்து அதிகம் வியர்வை ஏற்படும். உங்கள் பாதங்களில் 5 லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 1 பைன்ட் வியர்வையை இது சுரக்கும்.

மனிதனின் தும்மல் மணிக்கு 100 மைல் வேகம் கொண்டது. எனவே தும்மும்போது கைக்குட்டை கொண்டு மூக்கு, வாயினை மூடி தும்முவது அவசியம்.

உடலில் உள்ள ரத்த குழாய்களின் மொத்த நீளம் சுமார் 60 ஆயிரம் மைல்கள். இருதயம் 2,000 காலன் ரத்தை, ரத்த நாளங்களில் அனுப்புகின்றது.

மனிதனின் உமிழ் நீர் சுரப்பதின் அளவு அவனது வாழ்நாள் காலத்தில் ஒரு நீச்சல் குளத்தை நிரம்பும் அளவானதாகும்.

சிலரின் குறட்டை காது பொறுக்கும் சத்தத்தை விட அதிகமாக இருப்பதால் அருகில் இருப்பவரின் காதுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம்.

உங்கள் கால் நகங்களை விட கை நகம் வேகமாக வளரும். 1/10 அங்குலம் அளவுக்கு ஒரு மாதத்தில் நகம் வளரும்.

ஏன் குழந்தைகளுக்கு தலை நிற்க சிறிது காலம் பிடிக்கிறது தெரியுமா? குழந்தையின் 4-ல் 1 பங்கு நீளத்தில் தலைப் பகுதி இருக்கின்றது.

வளர்ந்த பிறகு 8-ல் 1 பங்கு நீளத்தில் தலை இருக்கும்.

சுவாசம் இல்லாமல் சில நிமிடங்கள் இருப்பது எப்படி கடினமோ, அது போலத்தான் தூக்கம் இல்லாமல் சில நாட்களுக்கு மேல் விழிக்க முடியாது. தானாகவே தூங்கி விடுவர்.

உங்கள் உடலில் 25 சதவீதம் எலும்புகள் பாதத்தில் தான் உள்ளன.

இரும்பு போன்ற வலுவான மனித எலும்பு எடையில் மென்மையாக இருக்கும்.

மனித உடலில் உள்ள சுமார் 5.6 லிட்டர் ரத்தம் ஒரு நிமிடத்தில் மூன்று முறை உடலினுள் சுற்றி வருகின்றது. மிக நுண்ணிய ரத்த குழாய்களில் பத்தாவது சேர்ந்தால் தான் உங்கள் ஒரு முடியின் கனம் இருக்கும் என்றால், நுண்ணிய ரத்தக் குழாய்களின் அளவையும், அதில் ஓடும் ரத்தத்தையும் நினைத்துப் பாருங்கள்.

குழந்தைகளுக்கு கனவு என்பது தாய் வயிற்றில் இருக்கும் போதே வரும்.

வயிற்றில் இருக்கும் பாக்டீரியாக்களின் அளவை சொல்லி முடியாது. தாடி தான் ஆணுக்கு மிக வேகமாக வளரும் முடி. விட்டால் அவன் வாழ்நாளில் அது 30 அடி நீளம் கூட வளரும்.

மனிதனின் பல் பாறை போன்றது கடினமானது.

நாய்க்கு மனிதனை விட 20 மடங்கு மோப்ப சக்தி அதிகம்.

உங்கள் முன் கை (அதாவது முட்டி, மணிகட்டு நீங்கலாக) நீளமும் உங்கள் பாதத்தின் நீளமும் ஒன்று போல் இருக்கும்.

ஒருவரது வாழ்நாளில் அவர் உண்ணும் உணவு சுமார் ஆறு யானைகளின் எடையை கொண்டது.

மனித உடலில் 600 தசைகள் உள்ளன.

மனித கல்லீரலுக்கு சுமார் 500 வகையான வேலைகள் உள்ளன.

ஒரு சொட்டு ரத்தத்தில் 250 மில்லியன் செல்கள் உள்ளன.

ஆணைவிட வலியைத் தாங்கும் சக்தி பெண்ணுக்கு 9 மடங்கு அதிகம்.

உடலின் வலுவான தசை நாக்குதான்.

தும்மல் அதிவேகமாக இருந்தால் மார்பக எலும்பு கூண்டில் முறிவுகூட ஏற்படலாம். தும்மலை அடக்கினால் தலை கழுத்தில் உள்ள ரத்த குழாய்கள் பாதிக்கப்பட கூடும். உங்கள் உடலில் ஒவ்வொரு நொடியும் 25 மில்லியன் புது செல்கள் உருவாகின்றன.

உங்கள் நரம்பின் மூலம் செல்லும் செய்திகள் 400 கி.மீ./1 மணி என்ற வேகத்தில் சொல்கின்றன.

உங்கள் இருமலின் வேகம் 100 கி.மி./1 மணி ஆகும்.

உங்கள் இருதயம் நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சம் முறை துடிக்கின்றது. வருடம் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியன் முறை துடிக்கின்றது.

உங்கள் நுரையீரல் நாள் ஒன்றுக்கு 2 மில்லியன் லிட்டர் காற்றை சுவாசிக்கின்றது.

நீங்கள் புன்னகைத்தால் 36 தசைகளுக்கு பயிற்சியாகின்றது. நம் உடலின் ‘ஏசி’ மூக்குதான்.

காற்றை குளிர வைத்து சுத்தம் செய்து உள்ளே அனுப்புகின்றது.

உங்கள் உடலில் காப்பர், ஸிங்க், கால்சியம், கோபாலட், மங்கனீசு, பாஸ்பேட், நிக்கல், சிலிகான் போன்றவை உள்ளன.

உங்கள் புருவத்தின் முக்கிய வேலை என்ன தெரியுமா? கண்ணில் நெற்றி வியர்வை சிந்தாமல் தடுப்பதுதான்.

முப்பது வயதிலிருந்தே மனித உடல் சுருங்க ஆரம்பிக்கின்றது.

உங்கள் நுரையீரலின் அளவு ஒரு டென்னிஸ் கோர்ட் அளவாகும்.

அறுபது வயதை நீங்கள் அடையும் பொழுது நாக்கின் சுவை மொட்டுகள் 50 சதவீதம் குறைந்திருக்கும்.

* மனித உடலிலுள்ள கார்பனைக் கொண்டு சுமார் 9 ஆயிரம் பென்சில்கள் செய்யலாம்.

* உங்களால் கண்ணை திறந்து கொண்டு தும்ம முடியாது.

டாக்டர் கமலி ஸ்ரீபால்.