புற்றுநோய்: எதைச் சாப்பிடலாம்? எதைச் சாப்பிடக் கூடாது?

குளிர்பானங்களில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப் பொருட்கள் உள்ளனவா?
பெரும்பாலான கருப்பு நிறம் கொண்ட கோலா பானங்களில், கேரமல் வண்ணம் பயன்படுத்தப்படுகிறது. அந்தக் கேரமல் வண்ணத்தில்தான் புற்றுநோயை ஏற்படுத்தும் மெத்தில்இமிடாசோல்(4-MEI) வேதிப்பொருள் இருக்கிறது. பிரபலக் குளிர்பானங்களில் டின் ஒன்றுக்கு 29 மைக்ரோகிராம் மெத்தில்இமிடாசோல் உள்ளது.

புற்றுநோயைத் தவிர்க்க எதை யெதைச் சாப்பிட வேண்டும்?
சர்க்கரையை முற்றாகத் தவிர்க்க வேண்டும். சமச்சீரான ஊட்டச்சத்து உணவைச் சாப்பிட வேண்டும். பச்சைக் காய்கறிகள், புரக்கோலி போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆப்ரிகாட் (சர்க்கரை பாதாமி) உலர் பழத்தை நாள்தோறும் எடுத்துக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஏழு ஆப்ரிகாட் சாப்பிட்டால் புற்றுநோய் ஆபத்திலிருந்து விடுபடலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வைட்டமின் சி-யை எடுத்துக்கொள்வது ஆயுளை விருத்தி செய்யுமா?
வைட்டமின் சி-யை அதிக அளவில் உட்கொள்வதால், ஆறு ஆண்டுகள் வரை ஆயுளை நீட்டிக்க வாய்ப்புண்டு. வைட்டமின் சி-யை உணவுடன் எடுத்துக்கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் குறைவு. பெண்களுக்கு 40 சதவீதம் மாரடைப்பு வாய்ப்பு குறைகிறது. ஒரு நாளைக்கு 300 மில்லிகிராம் வைட்டமின் சி, நம் உடலுக்குப் போதும். நம் ஊரில் சாதாரணமாகக் கிடைக்கும் பெரு நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.

நீண்ட ஆயுளைப் பெறுவதற்கும் உடற்பயிற்சி செய்யும் நேரத்துக்கும் தொடர்பு உண்டா?
தினசரி 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு நீண்ட ஆயுள் உள்ளிட்ட நல்ல பலன்கள் கிடைக்கின்றன. ஆனால், 45 நிமிடங்கள் உடற்பயிற்சி என்பது அதிகபட்ச ஆரோக்கியப் பலன்களை அளிக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினசரி மூன்று மணி நேரம் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள்கூட, தினசரி 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்பவர்கள் பெறும் ஆரோக்கியப் பலன்களை அடைவதில்லை.

20-ம் நூற்றாண்டில் மனிதனின் ஆயுள் அதிகரித்துள்ளதா?
1900 வரை உலக அளவில் சராசரி மனித ஆயுட்காலம் 49 ஆண்டுகளாகவே இருந்தது. நூற்றாண்டில் இறுதியில் 79 வயதாகச் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது.

உயர் ரத்தஅழுத்தம் பார்வையைப் பாதிக்குமா?
பாதிக்கும். நிரந்தரமாகப் பார்வையைப் பறிக்கவும் கூடும். கண்அழுத்தத்தை சரியாக நிர்வகிக்கும் கண்ணின் திறனை உயர் ரத்தஅழுத்தம் பாதிக்கும். கண்ணில் நீண்டகாலம் அழுத்தம் நிலவினால் பார்வை நரம்பு பாதிக்கப்படலாம். இதனால் கிளாகோமா ஏற்படும்.

உலகம் முழுவதும் கருத்தரிப்பு குறைபாடு அதிகரித்துள்ளதா?
வேதிப் பொருட்களாலும் ஊட்டச்சத்தற்ற உணவு வகைகளாலும் கருவளம் பாதிக்கப்பட்டுள்ளது. குறைப் பிரசவம் மற்றும் கருத்தரிப்பு குறைபாடுகள் காரணமாகச் சராசரியாக நான்கில் ஒரு தம்பதி குழந்தையில்லாமல் அவதிப்படுகின்றனர். மனித ஆரோக்கியத்தின் அடையாளங்களுள் ஒன்றாகக் கருவளம் கருதப்படுகிறது.


Similar Threads: