பழங்களில் உள்ள விட்டமின்களும் கார்போஹைட்ரேட்டுக்களும் உடலுக்குத் தேவையான ஊட்டத்தினை வழங்குவதுடன் நிறை உணவிற்கும் உகந்ததாக உள்ளன. அப்பிளில் அதிகளவில் உள்ள விட்டமின் C தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் வளர்வதைத் தடுப்பதுடன் புற்றுநோய்க்கு எதிராகப் போரிட உதவி புரிகிறது. மலச்சிக்கல், டயரியா போன்ற பிரச்சினைகளுக்கு வாழைப்பழம் சிறந்தது.

ப்ளுபெர்ரீஸ் anti-cancerous, antiviral, anti-inflammatory உட்பட பல ஆரோக்கியப் பயன்பாடுகளைக் கொண்டது. மாம்பழம் விட்டமின் anti-cancerous, antiviral, anti-inflammatoryஅடங்கிய மற்றுமொரு பழமாகும். இங்கே உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான புத்துணர்ச்சி, ஆரோக்கியத்தைத் தரும் 10 பழங்கள் தரப்பட்டுள்ளன.


1. ஸ்ட்ரோபெர்ரிஸ்ட்ரோபெர்ரி பழங்களில் மிக அதிகளவில் எலஜிக் அசிட் மற்றும் அன்தோசியானைன்ஸ் அடங்கியுள்ளதால் அவற்றில் விட்டமின் C (95 மி.கி ஒரு கோப்பை) மற்றும் நார்ச்சத்து (3.8 கிராம் ஒரு கோப்பை) அதிகமாகக் காணப்படுகிறது.

2. அப்பிள்


ஒரு நபருக்கு ஒரு நாளைக்குத் தேவையான 20கி 30கி நார்ச்சத்தில் 3கி நார்ச்சத்து அப்பிளில் உள்ளது. அதிக நார்ச்சத்து இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

3. வாழைப்பழம்


பொட்டாசியம் அதிகம் அடங்கியுள்ள வாழைப்பழம் இதய ஆரோக்கியம் மற்றும் தசை செயற்பாட்டில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தோடு ஒவ்வொரு வாழைப்பழத்திலும் 2கி நார்ச்சத்து அடங்கியுள்ளது.

4. ப்ளக்பெர்ரீஸ்
ஒரு கோப்பை ப்ளக்பெரியில் மாத்திரம் 10கி நார்ச்சத்து அடங்கியுள்ளது.


5. செர்ரீஸ்செர்ரிப் பழங்களில் அதிகளவில் பெரிலைல் ஆல்கஹால் அடங்கியுள்ளது. விலங்கினங்களில் புற்றுநோய் ஏற்படுவதை இது தடுக்கிறது. இதயத்தைப் பாதுகாக்க உதவும் அன்தோசைனைன்ஸ் தான் செர்ரீப்பழங்களுக்கு அதன் நிறத்தைக் கொடுக்கிறது.

6. ப்ளுபெர்ரீஸ்


சிறுநீர்ப்பையில் ஏற்படும் பிரச்சினைகளைத் தடுக்க ப்ளுபெர்ரீஸ் உதவுகின்றன.

7. மாம்பழம்


விட்டமின் A மற்றம் 57மிகி விட்டமின் C அடங்கிய மாம்பழத்தில் போதுமான அளவு பீட்டா-கரோட்டீன் அடங்கியுள்ளது.

8. ஆரஞ்சுப் பழம்


ஒரு ஆரஞ்ச்சுப் பழத்தில் 50-70மி.கி விட்டமின் C, போலிக் அசிட் மற்றும் 52 மி.கி கல்சியம் அடங்கியுள்ளது.


9. திராட்சைப்பழம்


இதயத்தைப் பாதுகாக்கும் 3 பொருட்களைக் கொடுக்கிறது : ப்ளவொனைட்ஸ், அன்தோசியானைன்ஸ், ரெஸ்வெரெட்ரோல்

10. ரெஸ்பெர்ரீஸ்


ஒரு கோப்பையில் 8கி நார்ச்சத்து உள்ளதுடன் விட்டமின் C, எலஜிக் அசிட் மற்றும் அன்தோசைனைன்ஸ் அடங்கியுள்ளன.

Similar Threads: