Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By Dangu

இளமைக்கு இதர காய்கறிகள்


Discussions on "இளமைக்கு இதர காய்கறிகள்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    இளமைக்கு இதர காய்கறிகள்

    இளமைக்கு இதர காய்கறிகள்

    அருணா ஷ்யாம்



    கீரை வகைகளும், கிழங்கு வகைகளும் மட்டுமே நம் உணவைச் சமச்சீராக்குவதில்லை. மேலே கூறப்பட்டுள்ள வகைகளுள் அடங்காத இதர காய்கறிகளை நாம் உட்கொள்ளும்போதுதான், உடலுக்குத் தேவையான நார்ச்சத்தும், மற்ற தாதுப் பொருட்களும் முழுமையாகக் கிடைக்கும். இதர காய்கறிகள் என்ற பிரிவில் முருங்கைக் காய், கத்தரிக்காய், பீர்க்கங்காய், வாழைப்பூ, பூசணிக்காய், பரங்கிக்காய் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

    Free radicals நம் உடலில் வளர்சிதை மாற்றங்களின் காரணமாக, தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இவை உடம்பிலிருந்து வெளியேற்றப்படவில்லை என்றால், உடம்பில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படும். இதனால் degenerature disease என்று கூறப்படும் நீரிழிவு நோய், இதய நோய், புற்று நோய் மற்றும் பலவகைப்பட்ட நோய்கள் வந்து தாக்கும் அபாயமும் உண்டு. இதைத் தடுத்து, நோய்களிலிருந்து விடுபட, இந்த இதர காய்கறிகள் என்ற குடும்பத்தைச் சார்ந்த காய்கறிகளுள் ஏதேனும் ஒன்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    காய்கறிகளின் இயற்கை நிறம், நச்சுப்பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகளால் ஆனது. இயற்கை நிறம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், வேறு எந்த உணவிலும் கிடைக்காத சத்துகள் கிடைக்கின்றன. உதாரணமாக, கத்தரிக்காயில் இருக்கும் ஃபீனால் என்ற ஆன்ட்டி ஆக்ஸிடென்ட், புற்று நோயைத் தடுக்கவல்லது.

    இந்த ஃபீனோலிக் அமிலம், சில நேரங்களில் கத்தரிக்காயில் அதிகமாக இருக்கும்போது, கசப்பான சுவை ஏற்படும். பூசணிக்காயில் பீட்டா கரோடின், குடைமிளகாயில் இருக்கும் கிரிப்டோசாந்தின், தக்காளியில் இருக்கும் லைகோஃபீன் ஆகியவை, உடம்பில் இருக்கும் நச்சுப் பொருட்களை நீக்கி, இளமையுடன் விளங்கச் செய்யும் அமிர்த உணவுகள்.

    ‘எதற்குமே நேரம் இல்லை’ என்று சலித்துக்கொள்ளும் இக்கால இளைஞர்களுக்கு, குறைந்தபட்சம் ஒருநாளைக்கு 250 கிராம் காய்கறிகளையாவது சாப்பிடுங்கள் என்பதுதான் என்னுடைய அறிவுரை.

    காய்கறிகளைச் சமைக்கும்போதும் மற்றும் சாப்பிடும்போதும் சில விதிமுறைகளைப் பின்பற்றினால், நாம் உட்கொள்ளும் உணவின் பயனை முழுவதும் அடையலாம். காய்கறிகளை நன்றாக கழுவிய பின்னரே நறுக்க வேண்டும். நறுக்கிய பின் கழுவினால், தண்ணீருடன் சத்துக்கள் வெளியேற்றப்படும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கும்போது சத்துகளின் வெளியேற்றமும் அதிகம் இருக்கும். நறுக்கிய காய்கறிகளை தண்ணீரில் ஊறவைப்பதும்கூடாது. அவ்வாறு செய்வதால், தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின் B, வைட்டமின் C ஆகியவை சில நிமிடங்களுக்குள்ளேயே வெளியேற்றப்படுகின்றன.

    சமைக்கும்போது அதிகமாகத் தண்ணீர் ஊற்றி, திறந்த பாத்திரத்தில் சமைக்கக்கூடாது. கீரை வகைகளைத் தவிர மற்ற காய்கறிகளை மூடிய பாத்திரத்தில் வைத்துத்தான் சமைக்க வேண்டும். ஏழு முதல் பத்து நிமிடத்துக்கு மேல் காய்களை வேகவிடக்கூடாது. காய்கறிகளை தண்ணீரில் வேகவைக்கும்போது எந்த அளவு தண்ணீர் உறிஞ்சப்பட்டு, வெந்த பதத்துக்கு வருமோ, அந்த அளவுதான் தண்ணீர் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெய்யில் வறுப்பதாலும் ஊட்டச்சத்துகள் அழிக்கப்படும்.

    காய்கறிகளை பரிந்துரைக்கப்பட்ட அளவில் தானியங்களுடனும், பருப்பு வகைகளுடனும் உட்கொண்டால்தான், தேவையான மைக்ரோ சத்துக்கள் கிடைக்கும்.

    உணவு அருந்திய பிறகு உடனே டீ, காபி என்று குடித்து, உணவை டாப் அப் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் டீ, காபியில் இருக்கும் காஃபீன் (caffine), வைட்டமின் சத்துகளையும், உப்புச்சத்துகளையும், உடம்பில் சேராமல் தடுத்துவிடும்.




    Sponsored Links
    Last edited by chan; 13th Sep 2015 at 07:12 PM.

  2. #2
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: இளமைக்கு இதர காய்கறிகள்

    Very useful info. Thanks Lakshmi.

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter