உப்பின் அளவு
உப்பின் பெருமை பேச எத்தனையோ புகழ் மொழிகள் உண்டு. கடல் நீரிலிருந்து பெறக்கூடிய சோடியம் குளோரைடை யே உப்பாக உபயோகிக்கிறோம். ஒரு நாளுக்கு, ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு தேவை. ஆனால், எல்லோரும் அதிகமாகத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.

"எலக்ட்ரோலைட் பேலன்ஸ்' எனப்படுகிற, நமது உடலின் நீர் சமநிலைக்கு உப்பின் அளவு சரியாக இருக்க வேண்டியது முக்கியம். நாம் உண்ணும் உணவிலிருந்து சத்துக்களை உறிஞ்சிக்கொண்டு, கழிவுகளை வெளியேற்றும் வேலையை திசுக்கள் செய்கின்றன.

அந்தத் திசுக்களின் இயக்கத்தை சரியாகப் பராமரிக்க, பொட்டாசியம் மற்றும் சோடியம் என்கிற இரு உப்புகளுமே தேவை. இந்த இரண்டின் அளவும் சரியாக இல்லாவிட்டால், பிரச்னைகளை சந்திக்கத் தயாராகிறது உடல்.

உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் கூடும். இதயம் தொடர்பான பிரச்னைகள் வரும். உடல் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும். தொடர்ந்து அதிக உப்புள்ள உணவையே உட்கொள்கிறவர்களுக்கு, அதன் விளைவாக, சிறுநீரகக் கோளாறுகளும் வரலாம். உப்பு குறைவதால், குறைந்த ரத்த அழுத்தப் பிரச்னை வரும். தசைகள் பலமிழக்கும். நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.

சாதாரண நபர்களுக்கு, ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிராம். இதய நோய், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு 2 முதல் 5 கிராம் மட்டுமே அனுமதி. சோடியமும், பொட்டாசியமும் காய்கறிகள் மற்றும் பழங்களின் மூலமே நமக்குக் கிடைக்கின்றன.

உப்புக் கழிவானது, சிறுநீர் மற்றும் வியர்வையின் வழியே வெளியேற்றப்படுகிறது. சிறுநீரில் ஒரு நாளுக்கு, 10 முதல் 15 கிராம் வரை உப்பு வெளியேறினால், அது நார்மல். அதைவிட அதிகமானாலோ, குறைந்தாலோ பிரச்னையின் அறிகுறி.

சாதாரண பழுப்பு நிற உப்பே ஆரோக்கியமானது. சமையலுக்கும், கூடிய வரை கல் உப்பை யே பயன்படுத்தவும்.


Similar Threads: