"ட்ரை' பண்ணுங்க...!
இன்றைய தலைமுறையினர் மத்தியில், இயந்திரத்தனமான வாழ்கை முறையால், இறுக்கமான மன நிலையிலேயே நாட்களை கழிக்க வேண்டியுள்ளது. நாம் அன்றாட உண்ணும் உணவுப் பொருட்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து உண்பதால், மனதை எப்போதும் புத்துணர்ச்சியுடன் கையாள முடியும்.

ஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. நரம்புகளை சீராக வைக்க உதவுகிறது. அதிகப்படியான வைட்டமின் 'சி' இருப்பதால், சாப்பிட உடன் புத்துணர்வு தென்படும்.

வாழைப்பழம்: வாழைப்பழத்தில், பொட்டாசியம், மக்னீசியம் அதிகம் உள்ளது. இதில் உள்ள இயற்கை இனிப்பானது, ரத்தத்துக்கு ஒரு புத்துணர்வை ஏற்படுத்தி, ரத்தத்தை சீராக பாய வைக்கும். கார்போஹைட்ரேட், மனதை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.

சூரியகாந்தி விதை: சூரியகாந்தி விதைகளில், செலினியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. இதில் உள்ள அமினோ ஆசிட், மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கும்.

தக்காளி: தக்காளியில் எவ்வளவு தான் மற்ற நன்மைகள் நிறைந்தாலும், மூளைக்கு ஏற்ற உணவுப் பொருட்களில் தக்காளியும் ஒன்று. இவற்றில் "லைகோபைன்' என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அது மூளைக்கு ஏற்படும் பிரச்னையை தடுக்கும்.

முட்டை: முட்டையில் ஜிங்க், வைட்டமின் "பி', அயோடின், ஒமேகா- 3 பேட்டிக் ஆசிட் மற்றும் புரோட்டின் உள்ளன. இப்பொருட்கள் அனைத்துமே, மூளையின் ஆரோக்கியத்துக்கு ஏற்றது. மேலும், இவை புத்துணர்வான மனநிலையையும் வைக்க உதவும்.

பால் பொருட்கள்: பால் பொருட்களில் புரோட்டீன் அதிகம் இருக்கிறது. பொதுவாக, புரோட்டீனானது அமினோ ஆசிட்டுகளால் ஆனது.
இவை, உடலில் உள்ள சக்தியை அதிகரிப்பதோடு, மனநிலையையும் அமைதியாக வைக்கும். பால், சீஸ், தயிர் உட்கொள்ளலாம்.


Similar Threads: