Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

லவங்கப்பட்டை


Discussions on "லவங்கப்பட்டை" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    லவங்கப்பட்டை

    லவங்கப்பட்டை


    சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன்

    சமையலில் வாசனைக்காகவும், சுவைக்காகவும் நாம் சேர்க்கும் லவங்கப்பட்டைக்கு பல்வேறு மருத்துவ குணங்களும் உள்ளன. லவங்கப்பட்டை நம் நாட்டில் பல இடங்களில் விளையக்கூடியதுதான். எனினும் திருநெல்வேலி மாவட்டம், கேரளா போன்ற இடங்களிலும் இலங்கையிலும் அதிகம் விளைகிறது. சீனத்திலும் இது வெகுவாகப் பயிராகிறது.

    லவங்கப்பட்டை மரம் 30 அடி உயரம் வரையில் வளரக்கூடியது. இதனுடைய பட்டை கனமுள்ளதாகவும், நீளமாகவும், வாசனையுடையதாகவும், பட்டையின் உள்ளே நார் மிகுதியாகவும் இருக்கும். ‘கருவாப்பட்டை’ என்றும் அழைக்கப்படும் லவங்கப்பட்டை வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, அதிசாரபேதி, வாந்தி,

    சீதபேதி, ரத்தப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் திறன் கொண்டது. பிரசவ வலி குறைபாடு, மாதவிலக்கு பிரச்னைகள், நாள்பட்ட இடுப்புவலிகளை குணப்படுத்த லவங்கப்பட்டை பயன்படுகிறது. மேலும் வயிற்றுவலி, பல் வலி, நாக்கு வாதம் முதலியவற்றையும் குணப்படுத்தும் வல்லமையும் இதற்கு உண்டு.

    இனிப்புச் சுவை பெற்றது லவங்கப்பட்டை என்பதால் கசப்பான மருந்துகளுடன் சேர்த்துக் கொடுப்பது மருத்துவர்களின் வழக்கம். காய்ச்சலால் அவதிப்படுவோர்க்கு சுறுசுறுப்பைத் தரும் பொருட்டு லவங்கப்பட்டை சூரணத்தை அனுபானமாகக் கொண்டு மற்ற மருந்துகளைச் சேர்த்துக் கொடுப்பதும் உண்டு.

    சன்ன லவங்கப்பட்டை, பெரிய லவங்கப்பட்டை, காட்டுக் கருவாப்பட்டை என சில வகைகள் இதில் உள்ளன. கருவாப்பட்டையை வாலையில் இட்டு வடித்து எண்ணெய் எடுப்பது உண்டு. எண்ணெயும் கருவாப்பட்டை போலவே வாசனையும் ருசியும் பெற்றிருக்கும். இந்த கருவாப்பட்டை எண்ணெய் பல் வலி, மூட்டு வலி, தலைவலிக்கு மேற்பூச்சு மருந்தாக உதவும்.

    லவங்கப்பட்டையின் தாவரப்பெயர் Cinnamomum zeylanicum என்பதாகும். இதை ஆங்கிலத்தில் Cinnamon என்று குறிப்பிடுவது உண்டு. ஆயுர்வேதத்தில்
    ‘தாருச்சினி’, ‘வராங்கா’, ‘உட்கடா’ போன்ற பெயர்களால் குறிப்பர். ‘தார்சினி’ என்பது இதன் அரபுப் பெயர் ஆகும்.

    ‘தாதுநட்டம் பேதி சருவவிஷயம்
    ஆகிய நோய்
    பூதகிர கஞ்சிலந்திப் பூச்சிவிடஞ் - சாதிவிடம்
    ஆட்டுமினாப் போடிருமல் ஆகியநோய்க்
    கூட்டமறஓட்டுமில வங்கத் துரி...’

    என்று அகத்தியர் தனது பாடலில் லவங்கப்பட்டை பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, தாது நட்டம், விந்துக் குறைபாடுகள், வயிற்றுப்போக்கு, விஷக்கடிகள், ஆஸ்துமா, இருமல், வயிற்றுக்கடுப்பு ஆகியன ஒழிந்து போகும் என்பது மேற்கண்ட பாடலின் பொருள் ஆகும்.லவங்கப்பட்டை பாக்டீரியா நுண்கிருமிகளை அழிக்கும் வல்லமை பெற்றது,

    ரத்தம் உறையாத பிரச்னையைத் தீர்க்கக் கூடியது, புண்களை ஆற்றக்கூடியது, செரிமானத்தைத் தூண்டக்கூடியது, பூஞ்சைக் காளான்களைப் போக்கக்கூடியது, அமில எரிவை அடக்கக்கூடியது, வாந்தியை நிறுத்தக்கூடியது, விஷக்காய்ச்சலைப் போக்கக்கூடியது. மேற்பூச்சாகப் பயன்படுத்த பல் வலி, நரம்பு பிரச்னைகள், மூட்டுவலிகள் ஆகியவற்றையும் குணமாக்க வல்லது.

    125 கிராம் லவங்கப்பட்டையில் பின்வரும் சத்துகள் அடங்கியுள்ளன.
    மாவுச்சத்து 101 கிராம்,
    புரதச்சத்து 5 கிராம்,
    நீர்ச்சத்து 13.3 கிராம்,
    சாம்பல் 4.5 கிராம்,
    பைட்டோ ஸ்டிரால் 32 மி.கி.,
    நார்ச்சத்து 66 கி,
    சர்க்கரை சத்து 2.7 கிராம்
    மற்றும் கொழுப்பு 1.5 கிராம்,
    ஒமேகா-3 கொழுப்பு அமிலம் 14 மி.கி.,


    ஒமேகா 6 கொழுப்பு அமிலம் 55 மி.கி.,
    வைட்டமின் ஏ, சி, ஈ, கே போன்றவை அடங்கியுள்ளன.
    இதனுடன் தாது உப்புகளான சுண்ணாம்பு 1.3 கிராம்,
    இரும்பு 10 மி.கி.,
    மெக்னீசியம் 75 மி.கி.,
    பாஸ்பரஸ் 80 மி.கி.,
    சோடியம் 12 மி.கி.,
    துத்தநாகம் 2.3 மை.கி.,
    செம்பு 423 மை.கி.,
    மாங்கனீஸ் 22 மி.கி.,
    செலினியம் 3.9 மை.கி. ஆகியனவும் அடங்கியுள்ளன.


    லவங்கம் ஒரு சக்தி வாய்ந்த நுண் கிருமி நாசினி. லவங்கப்பட்டையினின்று எடுக்கப்படும் எண்ணெயில் 40 முதல் 50% வரை ‘சின்னமால் டீ ஹைட்’ எனும் வேதிப்பொருள் நிறைந்திருப்பதே இதற்குக் காரணமாகும். லவங்கப்பட்டை வயிற்றுக்கோளாறை சரி செய்யவல்லது. அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு மட்டுமின்றி வயிற்றை அடைத்தது போல் இருக்கும் உணர்வையும் லவங்கப்பட்டை சீர் செய்ய வல்லது. உணவுப் பாதையில் ஏற்பட்ட புண்களை ஆற்றி செரிமானத்தையும் சீர் செய்கிறது.

    புற்றுநோய்க் கட்டிகள் உள்பட பல்வேறு கட்டிகளையும் குணமாக்கும் திறன் கொண்டது லவங்கப்பட்டை. நவீன ஆய்வுகள் லவங்கப்பட்டை ரத்தப் புற்றுநோயையும் ‘லிம்ப்போமா’ என்னும் புற்றுநோயையும் கூட குணப்படுத்தவல்லது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

    லவங்கப்பட்டையில் ‘மாங்கனீஸ்’ என்னும் தாது உப்பு அதிக அளவு இருப்பதால் மூட்டு வலியைக் குணப்படுத்துகிறது. மாங்கனீஸ் எலும்புகளை பலப்படுத்தக்கூடியது. மேலும் ரத்தத்தையும் இணைப்புத் திசுக்களையும் பலப்படுத்தவல்லது. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு மாங்கனீஸ் இன்றியமையாததாக விளங்குகிறது. எலும்புகளின் பலவீனத் தினை தடுக்கும் உன்னத சக்தியை லவங்கப்பட்டை பெற்றுள்ளது.

    லவங்கப்பட்டை பொடியை நீரில் ஊற வைத்து சிறிது நேரம் கழித்து தெளிந்த நீரைக் கொண்டு சமையல் அறை மேடை, தொட்டி, குளிர்சாதனப்பெட்டி, கதவின் கைப்பிடி போன்ற பல்வேறு பொருட்களைக் கழுவுவதால் அவற்றின் மேற்படிந்திருக்கும் கிருமிகள் துடைத்து அழிக்கப்பட்டு தூய்மை பெறுகின்றன. ரசாயன திரவங்களைக் கொண்டு கையைச் சுத்தப்படுத்துவதால் சிலருக்கு கைகளில் புண்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவர்கள் லவங்கப்பட்டை நீரால் கழுவுவது மிகவும் பாதுகாப்பானது ஆகும்.

    லவங்கப்பட்டை சோர்வைப் போக்கக்கூடிய ஆன்டி ஆக்சிடன்ட்டாகவும் விளங்குகிறது. இதிலுள்ள சத்து தன்னிச்சையாக செயல்பட்டு புற்றுநோயை
    உண்டாக்கும் கிருமிகளை சேர ஒட்டாமல் தவிர்க்கின்றது. லவங்கப்பட்டை ரத்தத்தை நீர்மைப்படுத்தும் தன்மையையும் பெற்றிருக்கிறது.

    இதனால் ரத்த ஓட்டம் தடையின்றி இயங்க வகை செய்கிறது. மாரடைப்புக்குக் காரணமாகத் திகழும் ரத்தம் உறைந்து ஏற்படும் அடைப்புக்கு வழி இல்லாத வகையில் ரத்த ஓட்டத்தைத் துரிதப்படுத்துகிறது. லவங்கப்பட்டையில் இருக்கும் ‘கௌமாரின்’ என்னும் வேதிப் பொருள் இப்பணிக்கு உதவுகிறது. இந்த ‘கௌமாரின்’ ஈரலைப் பாதிக்கக்கூடியது என்பதால் அளவோடு பயன்படுத்த வேண்டும்.

    காலில் ஏற்படும் புண்கள், நகம் மற்றும் கால் விரல்களின் இடுக்குகளில் ஏற்படும் பூஞ்சைக் காளான்கள் ஆகியவற்றை லவங்கப்பட்டைத் தைலம் குணப்படுத்தக் கூடாது. லவங்கப்பட்டை கெட்ட கொழுப்புகள் ரத்தத்தில் சேராவண்ணம் பாதுகாப்பாக நிற்கிறது.லவங்கப்பட்டைமருந்தாகும் விதம்...

    *ஒரு பங்கு லவங்கப்பட்டையோடு மூன்று பங்கு காசுக்கட்டி சேர்த்து எண்பது பங்கு நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி இதனின்று 15 முதல் 20 கிராம் வரையில் தினம் மூன்று வேளை உள்ளுக்குக் கொடுத்துவர காலரா குணமாகும்.

    *லவங்கப்பட்டையோடு சோம்பு, சுக்கு, வாயுவிடங்கம், கிராம்பு ஆகியவை வகைக்கு நான்கு கிராம் என சேர்த்துக் குடிநீராகக் காய்ச்சி வடிகட்டி 20 முதல் 30 கிராம் வரையில் அன்றாடம் இரண்டு வேளை குடித்துவர வயிற்றுவலி, வயிற்றுப்பிடிப்பு, வயிற்றுப்புண், குன்னம், பூச்சிக்கடி முதலியன குணமாகும்.

    *லவங்கப்பட்டையின் சூரணத்தை 75 மி.கி. முதல் 250 மி.கி. வரையில் உள்ளுக்குக் கொடுப்பதால் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சேரும் கொழுப்பு ஆகியன குறையும்.

    *சீதபேதியின் போது லவங்கப்பட்டை சூரணத்தினை 750 மி.கி. அளவு நெய்யுடன் குைழத்து சாப்பிடுவதால் குணம் கிடைக்கும்.

    *லவங்கப்பட்டை, ஏலரிசி, சுக்கு இவற்றை சம அளவு எடுத்துப் பொடித்து வைத்துக் கொண்டு 250 மி.கி. முதல் 750 மி.கி. வரை உள்ளுக்கு உபயோகப்படுத்துவதால் வாந்தி, வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, கழிச்சல், வயிற்றுக்கடுப்பு ஆகியன போகும்.

    *லவங்கப்பட்டையை பொடித்து நீரிலிட்டு கொதிக்க வைத்து போதிய சூட்டில் வாய் கொப்புளிக்க பல் வலி போகும். வாய் நாற்றம் விலகி பற்கள் ஆரோக்கியம் பெறும்.உணவில் மணமும் சுவையும் சேர்ப்பதற்கென எண்ணி இருந்த நமக்கு அது இவ்வளவு மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது என நினைக்கையில் வியப்பாகத்தானே உள்ளது! மாரடைப்புக்குக் காரணமாகத் திகழும் ரத்தம் உறைந்து ஏற்படும் அடைப்புக்கு வழி இல்லாத வகையில் ரத்த ஓட்டத்தைத் துரிதப்படுத்துகிறது லவங்கப்பட்டை.


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 21st Sep 2015 at 02:23 PM.
    Dangu likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter