Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 3 Post By sumathisrini
  • 1 Post By gkarti
  • 1 Post By jv_66
  • 1 Post By sumathisrini

Scientific Reason Behind Purataasi Veg Diet!


Discussions on "Scientific Reason Behind Purataasi Veg Diet!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Scientific Reason Behind Purataasi Veg Diet!

    புரட்டாசி மாதம் நான் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன்? - அறிவியல் பூர்வமான தகவல்கள்!

    புரட்டாசி மாதம் வந்துவிட்டால் ஒரு நல்ல செய்தியும், ஒரு கெட்ட செய்தியும் காத்திருக்கும். நல்ல செய்தி அம்மாக்கள் தினந்தோறும் கோவிலுக்கு செல்வது, கெட்ட செய்தி வீட்டில் அசைவத்திற்கு தடை விதிப்பது. ஹோட்டலுக்கு சென்று சாப்பிடலாம் என்றால் கூட அம்மாவின் கோவம் கலந்த பாசமான கட்டளை நம்மை தடுத்துவிடும்.

    காலம் காலமாக சாம்பாரும், ரசமும் தான் தமிழ் மக்களை காப்பாற்றி வருகிறதாம் - ஆய்வில் தகவல்!

    வருடத்தில் 12 மாதங்கள் இருக்கும் போது ஏன் புரட்டாசி மாதம் மட்டும் அசைவம் சாப்பிடக் கூடாது? பெருமாளை வணங்க செல்வதனால் என்பதற்காகவா? பிறகு ஏன் வேறு மாதங்களில் கோவிலுக்கு செல்லும் போது அசைவம் சாப்பிடுகிறோம்? இந்தபுரட்டாசி மாத விரதம் மற்றும் அசைவம் ஒதுக்குவதன் பின்னணியில் அறிவியல் சார்ந்த காரணங்களும், உடல்நலம் சார்ந்த விஷயங்களும் உள்ளடங்கி இருக்கிறது....

    காலநிலை வேறுபாடு


    புரட்டாசி மாதத்தில் வெயிலும், காற்றும் குறைந்து, மழை ஆரம்பிக்கும் காலமாகும். ஆனால், பூமி குளிரும் அளவு மழை பொழிவு இருக்காது. மார்ச், ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடர்ந்து இருந்த வெப்பத்தை பூமி குறைக்க ஆரம்பிக்கும்.

    சூட்டை கிளப்பிவிடும்

    மழை ஆரம்பிக்கும் போது பூமியின் சூடு மெல்ல, மெல்ல குறைந்து, சூட்டை வெளியே கிளப்பிவிடும் காலம் இது. ஆகையால் இது வெயில் காலத்தை விடவும் கெடுதல்தரக்கூடியது.

    அசைவம் வேண்டாம்


    ஏற்கனவே, பூமியில் இருந்து உஷ்ணம் வெளிவருவதால், இந்த காலத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டையும் அதிகப்படுத்தி, உடல் நலத்தை சீர்கெடுக்கும்.

    வயிறு மற்றும் செரிமானம்


    இவ்வாறு சூடு அதிகரிப்பதால் வயிறு மற்றும் செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். இதை தவிர்ப்பதற்காக தான் புரட்டாசி மாதத்தில் அசைவம் வேண்டாம் என்று நமது முன்னோர்கள் ஒதுக்கி
    இருக்கிறார்கள்.

    காய்ச்சல், சளி பிரச்சனை


    சரியாக பெய்யாத மழை, மற்றும் தட்பவெப்பநிலை மாறுதல் போன்றவற்றால் நோய் கிருமிகள் தாக்கம் அதிகரித்து காய்ச்சல்,சளி போன்ற உடல்நல பிரச்சனைகள் உருவாக வாய்ப்புகள் அதிகம்,
    இதை துளசி கட்டுப்படுத்தும். இதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை தவிர்த்து விரதம் இருந்து, பெருமாளுக்கு உகந்த மாதமாய் வைத்து வழிப்பட்டு வந்துள்ளனர்.

    முன்னோர்களின் அறிவியல் ஞானம்

    வெறுமென எதையும் செய்யாமல், அதற்கு ஓர் கட்டுபாடுகள் வைத்து, மக்கள் அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று தான் இவ்வாறான செயல்களை முன்னோர்கள் செய்துள்ளனர். ஆன்மிகம் என்பதை தாண்டி, அதன் பின்னணியில் மருத்துவம்மற்றும் அறிவியல் இருப்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by sumathisrini; 30th Sep 2015 at 02:34 PM.
    jv_66, chan and gkarti like this.

  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,135

    Re: Scientific Reason Behind Purataasi Veg Diet!

    Superb Like Kaa.. TFS!

    sumathisrini likes this.

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Scientific Reason Behind Purataasi Veg Diet!

    Wonderful details

    sumathisrini likes this.
    Jayanthy





  4. #4
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Scientific Reason Behind Purataasi Veg Diet!

    Welcome friends .

    gkarti likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter