Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 1 Post By chan
  • 1 Post By sumitra

Health Benefits of Pumkin - பரங்கிக்காய் சாப்பிடுங்க


Discussions on "Health Benefits of Pumkin - பரங்கிக்காய் சாப்பிடுங்க" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Health Benefits of Pumkin - பரங்கிக்காய் சாப்பிடுங்க

    பரங்கிக்காய் சாப்பிடுங்க

    பரங்கிக்காயில் வைட்டமின் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு. குளிர்ச்சி சுபாவம் இருப்பதால், இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும்; பித்தம் போகும்; பசியை தூண்டும்; சிறுநீர் பெருகும். இது வீரியபுஷ்டியை ஏற்படுத்துவதுடன், மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது.

    மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும். பரங்கிக்காயை பொறுத்தவரை வேண்டாத சில குணங்களும் உண்டு. அதாவது உடலில் கெட்ட ரத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது. இது ஜீரணம் ஆவதற்கு வெகு நேரம் வரை பிடிக்கும். வாத குணம் உள்ளது. ஆனாலும் இத்தகைய விபரீத குணங்களை சரி செய்வதற்கு சுக்கும், வெந்நீரும் சாப்பிட்டால் போதும்.
    பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப்படும் பொருமல், வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும். நோயுற்று இளைத்தவர்களும், நோயாளிகளும் இதை சாப்பிட வேண்டாம்.

    மணற்பாங்கான இடங்களில் விளையும், பரங்கிக்காய் மிகவும் சுவையாக இருப்பதுடன் கெட்டியாகவும் இருக்கும். பரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும். நல்ல சுவையுடனும் இருக்கும்.

    பரங்கிக்காயுடன் பருப்பு சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாப்பிடலாம். கறி செய்வதற்கும், சாம்பாரில் சேர்ப்பதற்கும் கூட, இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


    Similar Threads:

    Sponsored Links
    sumitra likes this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Health Benefits of Pumkin - பரங்கிக்காய் சாப்பிடுங்க

    Very useful information! thank you!

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter