Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
 • 2 Post By chan

வெந்தயம் - Fenugreek


Discussions on "வெந்தயம் - Fenugreek" in "Healthy and Nutritive Foods" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  வெந்தயம் - Fenugreek

  வெந்தயம்

  கு.சிவராமன் - சித்த மருத்துவர்

  தமிழன் உணவில் கூடுதல் அக்கரையுடன் சேர்க்கப்படும் வெந்தயம், கசப்புதான். ஆனால், அந்த கசப்பு கொண்டுள்ள மருத்துவ செய்திகள் அத்தனையும் இனிப்பு. சர்க்கரை நோயில் இருந்து, தலைமுடி உதிர்வு வரை அழகும் ஆரோக்கியமும் பரிமாறும் இந்த அதிசய விதைகள், சின்னஞ்சிறு நல மாத்திரைகள்.

  கிரேக்கர்களால் இந்தியாவுக்குள் நுழைந்த வெந்தயம், சித்த, ஆயுர்வேத மருந்து என்பதுடன், தமிழர் உணவில் பெரும் ஆளுமையைப் பெற்ற மணமூட்டியும்கூட. நாட்பட்ட, தொற்றாத வாழ்நாள் நோய்க் கூட்டங்களான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தல், இதய நோய்கள் மற்றும் புற்று நோய் என அனைத்துக்கும் பயன்தரும் ஒரு மணமூட்டி, வெந்தயம் மட்டும்தான்.

  “நாரில்லா உணவு நலம் தராது” என்ற புது மருத்துவ மொழி உலாவும் இன்றைய சூழலில், ‘வேகன்’ உணவாளர்களுக்கு அதிக நார்ச்சத்து தரும், ஒரே உணவு வெந்தயம் மட்டுமே. நார்ச்சத்தில் உள்ள இரு வகை நார்களான கரையும் நார், கரையாத நார் இரண்டுமே வெந்தயத்தில் உண்டு.

  கரையும் நார் இதய ரத்தத் தமனிகளில் சேரும் கொழுப்பைக் குறைக்க உதவும். கரையாத நாரில் இரு முக்கிய பயன் உள்ளன. ஒன்று, மலத்தை எளிதில் கழியவைக்கும். இன்னொன்று உணவோடு வரும் சர்க்கரை ரத்தத்தில் வேகமாகக் கலப்பதைத் தடுக்கும்.

  மேற்கத்திய நாடுகள், வெந்தயத்தின் கசப்பை நீக்கி, சத்தை எடுத்து, ரொட்டிகளிலும் கேக்குகளிலும் பயன்படுத்தி, ரத்த கொழுப்பைக் கட்டுக்குள்வைக்கத் துவங்கியுள்ளனர். வெந்தயத்தின் ஹார்மோன்களைச் சீராக்கும் தன்மையால், ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் ஊட்டும் உணவாகவும் உலகின் பல பாரம்பர்ய மருத்துவ முறைகள் பதிவுசெய்து இருக்கின்றன.


  மாதவிடாய் கால வலியான சூதகவலிக்கு (Dysmenorrhea) நவீன மருத்துவம் பல்வேறு காரணங்களைக் கண்டறிந்துள்ளது. சாதாரண ரத்தசோகை முதல், கர்ப்பப்பை உள் சவ்வு, கர்ப்பப்பைக்கு வெளியேயும் வளர்ந்து தொல்லை தரும் எண்ட்ரோமெட்ரோசைஸ் (Endometriosais) முதல் அடினோமயோசிஸ் (Adenomyosis) வரை பல காரணங்கள் பெண்ணுக்கு அதிகபட்ச வலியைத் தந்து, சராசரி வாழ்வைச் சிதைக்கின்றன.

  வெந்தயத்தின் ‘டயாஜினின்’ சத்து, பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் போல் செயல்படும் வேதிச் சத்து. மாதவிடாய் வலிக்கு காரணம் ஏதாவது இருப்பினும், வெந்தயப் பொடி இந்த டயாஜினின் சத்தைக்கொண்டு, கர்ப்பப்பையை வலுவாக்கி, ஹார்மோன்களைச் சீராக்கி, வலியை நிரந்தரமாகப் போக்கும் கைகண்ட மருந்து.  இதன் லேசான இசிவகற்றித் தன்மையால், மாதவிடாய் வலியில் உடனடியாகவும், வலி நீக்க ஒரு பக்க விளைவில்லாத மருந்தாகவும் உதவுகிறது வெந்தயம். மாதவிடாய் வரும் முந்தைய ஐந்து நாட்களில், வெந்தயப் பொடியோ, வெந்தயக் களியோ, வெந்தய தோசையோ, வெந்தயம் சேர்த்த குழம்போ சாப்பிடுவது வலியைக் குறைத்திட நிச்சயம் உதவும். ‘பித்த உதிரம் போகும்; பேராக் கணங்களும் போகும்; வீறு கயம் தணியும்’ என அகத்தியர் குணவாகடம் பாடி உள்ளது வெந்தயத்தை பற்றித்தான்.

  வாய் துர்நாற்றம், வியர்வை துர்நாற்றம் இரண்டுக்கும் வெந்தயம் பயன்படும். வெந்தயத்தை வெந்நீரில் சில நேரம் ஊறவைத்து பிறகு, வெறும் வயிற்றில் அருந்த, குடலின் ஜீரண சுரப்புகளைச் சீராக்குவதன் மூலம், வாய் துர்நாற்றத்தை நீக்க உதவிடும்.

  பாலூட்டும் தாய்மார்கள், வெந்தயத்தைக் கைக்குத்தல் புழுங்கல் அரிசிக் கஞ்சியில் சேர்ததுச் சாப்பிட, பால் சுரப்பு கூடும். வெந்தயமும் கருணைக்கிழங்கும் சேர்த்துச் சமைத்து சாப்பிட்டால், மெலிந்து இருக்கும் உடல் வலிமையுறும் என்கிறது சித்த மருத்துவம்.

  தலை முடி உதிர்வைத் தடுக்கும் தைலங்களில் வெந்தயம் தவறாமல் இடம் பெறும். உடல் சூடு அதிகமாக உள்ளவர்களுக்கு முடி உதிர்தல் மிக முக்கியப் பிரச்னை. வெந்தயத்தை அரைத்துத் தலையில் அப்பி, சிறிது நேரம் ஊறவைத்து, பிறகு தலை முழுக, கண்களும் தலையும் குளிரும். தலைமுடி உதிர்வது நீங்கும்.

  வெந்தய ஆய்வுகள்!
  சர்க்கரையின் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளோர் (Impaired glucose tolerance stage), வெறும் வெந்தயத்தை லேசாக வறுத்துப் பொடித்துக்கொண்டு, காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டுவர, சர்க்கரை நோயைத் தாமதப்படுத்தும் என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.

  ரத்தக் கொழுப்பில் ஒரு வகையான ட்ரைகிளிசரைட்ஸ் (Triglycerides) அளவைக் குறைக்கவும் இதே முறை பயனளிக்கும். வெந்தயத்தில் உள்ள 4 ஹைட்ரோ ஐசோலியூசின் (4 HO-ILE) சத்து, இன்சுலின் சுரப்பைத் தூண்டி, ஆரம்பக்கட்ட சர்க்கரை நோயாளிக்குப் பயனாவதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இன்னும் சில ஆய்வுகள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க, வெந்தயம் ஈரல் நொதிகளைத் தூண்டிச் சுரக்கவும் உதவுகிறது என அறிவித்துள்ளன.


  Similar Threads:

  Sponsored Links
  Last edited by chan; 13th Oct 2015 at 02:46 PM.
  Vimalthegreat and krrishna like this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter