புரதமே பிரச்னை ஆகுமா?


க்ளூட்டன்

‘‘புரதச்சத்து உடலுக்கு மிகவும் அவசியமானதுதான். ஆனால், புரதமே சிலருக்கு ஏற்றுக் கொள்ளாமல் பிரச்னையையும் உண்டாக்கிவிடலாம்’’ என்கிறார் உணவியல் நிபுணரான ஷைனி சுரேந்திரன். புரதம் எப்படி பிரச்னையாகும் என்று நாம் கேட்டதும், ‘இது Gluten intolerance என்ற புதிய பிரச்னை’ என்று விளக்கத் தொடங்குகிறார்.

‘‘கோதுமை, பார்லி, ஓட்ஸ், கம்பு போன்ற தானியங்களில் க்ளூட்டன் என்ற பசைத்தன்மை கொண்ட புரதம் உள்ளது. இந்த க்ளூட்டன் சிலரது உடலுக்கு ஏற்றுக்கொள்வதில்லை. கஞ்சியாக செய்து குடித்தாலும், மற்ற முறையில் எடுத்துக்கொண்டாலும் உடலுக்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிடும்.

இதைத்தான் க்ளூட்டன் இன்டாலரன்ஸ் என்கிறோம். மேற்கத்திய நாடுகளில்தான் க்ளூட்டன் பற்றி இதற்கு முன்பு பேசிக் கொண்டிருந்தார்கள். சமீபகாலமாக நம் நாட்டிலும் பலருக்கு இந்தப் பிரச்னை இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இது ஃபுட் அலர்ஜியா என்று நினைக்கலாம். குறிப்பிட்ட உணவு ஏற்றுக் கொள்ளாததுதான் ஃபுட் அலர்ஜி. க்ளூட்டன் இன்டாலரன்ஸ் என்பது உணவுப் பொருளில் இருக்கும் குறிப்பிட்ட சத்தினை உடல் தாங்கிக் கொள்ளாத நிலை. இது நுட்பமான வித்தியாசம் என்பதால் பலருக்கும் குழப்பம் ஏற்படுத்தும். இரண்டும் வேறுவேறு என்பதைப் புரிந்துகொண்டால் போதும்’’ என்பவர், க்ளூட்டனால் ஏற்படும் பிரச்னைகள் பற்றித் தொடர்கிறார். ‘‘க்ளூட்டனால் ஏற்படுகிற பிரச்னைகளை Gluten-related disorder என்கிறார்கள். இதை Celiac, Non-celiac gluten sensitivity என இரு வகைகளாகப் பிரித்துள்ளார்கள்.

பொதுவாக இந்த நோய் தானிய உணவுகளால்தான் வந்தது என்பதைக் கண்டறிவது கஷ்டம். ஆனால், வாந்திபேதி, மலச்சிக்கல், வாய்ப்புண், சிறுகுடல் பாதிப்பு, தசைகள் பலவீனமடைவது, ஒற்றைத் தலைவலி, உடல்சோர்வு, மூட்டு வலி என சில அறிகுறிகளின் மூலம் உணர்ந்துகொள்ள முடியும். ரத்தப் பரிசோதனையில் Celiac panel test என்ற பரிசோதனை செய்து பார்த்தால் க்ளுட்டன் இன்டாலரன்ஸை கண்டுபிடித்துவிடலாம். ரத்தப் பரிசோதனையில் செலியாக் ஆன்டிபாடிகள் காணப்பட்டால் Intestinal biopsy சோதனையின் மூலம் அதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

செலியாக் பிரச்னையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் சிறுகுடல் பாதிக்கப்பட்டு சுவர்கள் அரிக்கப்படும். இதனால், உணவு ஜீரணிப்பதும் சத்துகள் பிரிக்கப்படுவதும் நடக்காமல் போய்விடும். இதன் காரணமாக உடலில் எதிர்ப்புசக்தி குறைந்து பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கல்லீரல் பாதிப்பு, கீல்வாத மூட்டுநோய், தைராய்டு போன்ற நோய்களும் வரலாம்’’ என்கிறார் ஷைனி.

எப்படித் தவிர்ப்பது?

‘‘மேற்கத்திய நாடுகளில், ‘இது க்ளூட்டன் இல்லாதது’ என்றே தானிய பாக்கெட்டுகளில் அச்சிட்டு விற்பனை செய்கின்றனர். நம்நாட்டிலோ சமீபத்தில்தான் க்ளூட்டன் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால், உணவுப்பொருட்களில் சற்று விழிப்புணர்வோடு நாம் இருக்க வேண்டியது அவசியம். தென்னிந்திய உணவுகளான தோசை, இட்லி, இடியாப்பம், ஆப்பம், ரவா உப்புமா, சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் எந்தப் பிரச்னையும் இல்லை.


சத்துமாவு கஞ்சி, கோதுமை வகை உணவுகளையும் பாஸ்தா, பர்கர், பீட்சா ஆகிய ஜங்க் உணவுகளையும் கண்டிப்பாக தவிர்த்துவிட்டாலே போதும்...’’ என்கிறார் ஷைனி.தென்னிந்திய உணவுகளான தோசை, இட்லி, இடியாப்பம், ஆப்பம், ரவா உப்புமா,சிறுதானிய உணவுகளில் க்ளூட்டன் பிரச்னை இல்லை.


Similar Threads: