உணவு

ஃபேக்ட் +


*40 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விடவும், இப்போது சிக்கனில் 266 சதவிகிதம் கொழுப்பு அதிகம்.

*வேறு வழி அற்ற அவசர காலங்களில், ரத்த பிளாஸ்மாவுக்கு மாற்றாக தேங்காய் தண்ணீர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

*உலகில் கிட்டத்தட்ட பாதி உணவுகள் வீணாக்கப்படுகின்றன.

*கேரட் முன்னொரு காலத்தில் பர்பிள் நிறத்தில் இருந்தது.

*ஒருபோதும் கெட்டுப்போகாத ஒரே உணவு தேன். 3 ஆயிரம் ஆண்டுகளுக்குக்கூட தாக்குப் பிடிக்குமாம்!

*உலகில் அதிகமாகத் திருடப்பட்ட பொருள் பாலாடைக்கட்டி (சீஸ்).

*அறிவியல் கொள்கை அடிப்படையில் பீனட் பட்டரை வைரமாக மாற்ற முடியும்! வேர்க்கடலையைக் கொண்டு டைனமைட் உருவாக்க முடியும்!

*தாய்ப்பாலை தவிர அனைத்து ஊட்டச்சத்துகளையும் அள்ளித்தரும் ஒற்றை உணவு வேறு எதுவும் இல்லை!

*விமானத்தில் உண்ணப்படும் உணவுகள் அவ்வளவு சுவையாக இருப்பதில்லை. காரணம்... பறக்கும் போது நம் சுவை உணர்வும் வாசனை உணர்வும் 20-50 சதவிகிதம் குறைந்து விடுகின்றன.

*உலகெங்கும் ஊட்டச்சத்துள்ள உணவுகளின் விலை சமீபகாலமாக அதிகமாகி வருகிறது. ஜங் ஃபுட் எனப்படும் வேண்டாத உணவுகளின் விலையோ குறைவாக இருக்கிறது. கிட்டத்தட்ட 10 மடங்கு வித்தியாசம்!
Similar Threads: