பித்தப்பை ஆரோக்கியமாக...

இந்தியாவில் பித்தப்பைக் கற்கள் பிரச்னை இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதுவும் நகர்ப்புற மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்’ என்கிறார்கள் மருத்துவர்கள். கல்லீரலின் கீழே இருப்பது பித்தப்பை. இது, கல்லீரல் சுரக்கும் செரிமான நொதியை (பித்தம்), தன் பைக்குள் சேமித்துவைக்கும் முக்கிய வேலையைச் செய்கிறது. சாப்பிட்ட பிறகு, செரிமானத்துக்குப் பெரும் உதவிபுரிவது பித்தப்பை.

கொழுப்பு, கொழுப்புப் படிவங்கள் போன்ற துகள்கள் ஆகியவை அதிகமாகி கற்களாக உருவாகின்றன. இது வலியை ஏற்படுத்தும். இதனால், வலது பக்க வயிறு வலிக்கும். இதற்குத் தீர்வு தருகிறது ஒரு பானம்.

பித்தப்பை கற்களைக் கரைக்கும் டிரிங்க்!

தேவையானவை:ஆப்பிள் - 1, ஃபிளாக்ஸ் விதைப் பொடி - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், தேன் - 2 டீஸ்பூன்.

செய்முறை: ஆப்பிள் மற்றும் ஃபிளாக்ஸ் விதைப் பொடியுடன் சிறிது நீர் கலந்து, அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன், எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து அருந்த வேண்டும்.
பலன்கள்:
மூன்று மாதங்கள் இந்த பானத்தை அருந்திவர, சிறிதாக இருக்கும் கற்கள் கரைந்துவிடும். இந்தக் காலங்களில், கொழுப்புச்சத்து, எண்ணெய் உணவுகளைத் தவிர்ப்பது அவசியம்.

உடலில் நீர்ச்சத்து பூர்த்தியாவதால், கற்கள் உருவாகாமல் தடுக்கும். வளர்சிதை மாற்றம் இயல்பாக, கொழுப்பு கட்டுக்குள்வர, ஆரோக்கியமான பித்தம் சுரப்பது அவசியம். ஆரோக்கியமான பித்தத்தைச் சுரக்க இந்த டிரிங்க் உதவும்.

கொழுப்பைக் கரைத்து உடலைப் பாதுகாக்கும். கல்லீரலின் ஆரோக்கியமும் மேம்படும்.

இந்த டிரிங்க்கில் உள்ள ஒமேகா 3 பித்தப்பையை ஆரோக்கியமாக்கும். சத்துக்களைக் கிரகிக்கும் தன்மை சீராக நடைபெறும். கற்களால் உண்டாகக்கூடிய வலி குறையும். தொடர்ந்து குடித்துவந்தால் வலியும் இருக்காது.

பித்தப்பைக்கு ஏற்ற உணவுகள்: பயறு, விதைகள், நட்ஸ், கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், புரோகோலி, பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள், வெங்காயம், ஆப்பிள், வாழை, அன்னாசி.

Similar Threads: