கொழுப்பைக் குறைக்கும் தேங்காய்!
நம் அன்றாட சமையலில் தேங்காய்க்கு முக்கிய இடம் உண்டு. சமையலில்
முக்கிய பங்கு வகிக்கும் தேங்காய் பல்வேறு நோய்களையும் குணப்படுத்தும் வல்லமை படைத்தது. ஞாபகசக்தி பெறுவதற்கு தேங்காய், பாதாம்பருப்பு, வேர்க்கடலை போன்றவற்றை அவ்வப்போது மென்று சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

இதேபோல் வாய்ப்புண், வயிற்றுப்புண்ணால் அவதிப்படுபவர்கள் காலை உணவுக்கு முன்னதாக தேங்காயை வெறுமனே மென்று சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். தேங்காய்ப்பாலுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம், கண் எரிச்சல், மூலச்சூடு போன்றவை நீங்கும். கொழுப்பு குறைய வேண்டுமானாலும் தேங்காயை அப்படியே மென்று சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.

நீரிழிவு, இதயநோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தேங்காயை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல. மற்றபடி ரத்தத்தை சுத்திகரிக்கவும், எலும்பு வளர்ச்சியை தூண்டவும், நரம்புத்தளர்ச்சி பாதிப்பை போக்கவும் தேங்காய் நல்ல பலன் தரக்கூடியது.

Similar Threads: